Tuesday, June 1, 2010

தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்திரு இளையராஜா அவர்களுக்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 'இசைஞானி ' , 'மேஸ்ட்ரோ', 'பத்மஸ்ரீ ' ,'பத்மபூசன்', 'டாக்டர்', 'ராகதேவன்','இசை அரசன்' .....இப்படி எந்தப் பட்டத்தை உங்கள் பெயருக்கு முன்னால் போட்டாலும் 'யானைப்பசிக்கு சோளப்பொரி' போலத்தான் இருக்கும் என்பதால் திரு இளையராஜா என்பதே பொருத்தமானதாக இருக்குமென்று நினைக்கிறேன். உங்கள் இசையை விபரிக்க எனக்கு இசையறிவு போதாது,ஆனால் உங்களது பாடல்கள் இல்லாமல் எனது எந்தவொரு நாளும் நிறைவடைந்தது கிடையாது. உங்களை சிலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர் என்கிறார்கள், ஆது உண்மையாகவே இருக்கட்டும்; அந்த குண்டுச்சட்டிக்குள் நீங்கள் ஓட்டிய குதிரையின் குழம்படியை ரசித்து முடிக்கவே எனக்கு இந்தப்பிறவி நிச்சயம் போதாது.எத்தனை நாள் என் தனிமையை உடைத்து என்னை ஆகாயத்தில் பறக்கவைத்திருப்பீர்கள் என்பது எனக்குத்தான் தெரியும். சிலவருடங்களுக்கு முன்புவரை ரஜினியை திரையிலோ / புகைப்படத்திலோ பார்த்தால் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும், ஆனால் இப்போதெல்லாம் உங்களது பாடலையோ குரலையோ கேட்டால் அதே புத்துணர்ச்சி ஏற்ப்படுகிறது. இன்றுகூட அதிகமான வேலைப்பழுவால் ஏற்ப்பட்ட உடற்களைப்பை   வெறும் பத்தே நிமிடத்தில் போக்கியது "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் " மற்றும் "தாலாட்டும் பூங்காற்று நான் அல்லாவா " என்கின்ற தங்களுடைய இரு பாடல்கள்தான். இன்று எனக்குள் ஒன்றாக கலந்துவிட்ட உங்கள் இசைக்கு பரிசாக என்னால் எதை தரமுடியும் ? கண்ணீர்த்துளிகளையும் நன்றி என்ற வார்த்தையையும் தவிர!

காலத்தால் அழியாத இசையை எமக்குத்தந்த உங்களுக்கு நீங்கள் விரும்பும் அமைதியும் நிம்மதியும் சாந்தமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

10 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

ராஜாவின் பிறந்த நாளுக்கு இசை வாழ்துக்கள்

ராஜாவின் பழைய பாடல் ஒவ்வொன்றும் முத்துக்கள்

சிறப்பான பதிவு ஜீவதர்சன்

மாணவன் said...

இன்று இசைத்துறையில் இசையாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இசைப்பிதாமகனை வாழ்த்த வயதில்லை...
வனங்குகிறேன் இசையின் கடவுளை....

"நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா "
"கோட்டை இல்லை கொடியுமில்லை அப்பவும் நீ ராஜா "

நன்றி ஜீவதர்ஷன் சார் .........

S Maharajan said...

இசைப்பிதாமகனை வாழ்த்த வயதில்லை...
வனங்குகிறேன்

ALHABSHIEST said...

எத்தனையோ நாட்கள் என்னை தூங்க வைத்த அந்த ஞான தேசிகன் நீடுழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

chosenone said...

ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
நல்ல பதிவு !
ஆனால் யாரது நடுவுல "தூரதர்சன் "? sorry.... ஜீவதர்சன் ?
அவர்தான் இந்த கடைக்கு சொந்தக்காரரா ?

தமிழ் அமுதன் said...

"நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா "
"கோட்டை இல்லை கொடியுமில்லை அப்பவும் நீ ராஜா "


சிறப்பான பதிவு ஜீவதர்சன்

கோபிநாத் said...

\\அந்த குண்டுச்சட்டிக்குள் நீங்கள் ஓட்டிய குதிரயை ரசித்து முடிக்க எனக்கு நிச்சயம் இந்தப்பிறவி போதாது.
\\

வரிக்கு வரி வழிமொழிக்கிறேன்.....இசை தெய்வத்துக்கு என்னோட மனமார்ந்த வணக்கங்கள் ;)

r.v.saravanan said...

காலத்தால் அழியாத இசையை எமக்குத்தந்த உங்களுக்கு நீங்கள் விரும்பும் அமைதியும் நிம்மதியும் சாந்தமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

chosenone said...

ஓகே !!!ஓகே !!!வாழ்த்துக்கள் .

எப்பூடி.. said...

@ ஹாய் அரும்பாவூர்

@ DJ.RR.SIMBU.BBA-SINGAI

@ S Maharajan

@ Siva

@ தமிழ் அமுதன்

@ கோபிநாத்

@ r.v.saravanan


உங்கள் அனைவரதும் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

.............................................

chosenone

//ஆனால் யாரது நடுவுல "தூரதர்சன் "? sorry.... ஜீவதர்சன் ?

அவர்தான் இந்த கடைக்கு சொந்தக்காரரா ?//

இல்லை, இந்த கடையின் மூன்று பங்குதாரர்களில் ஒருவர்.

............................................

chosenone

//ஓகே !!!ஓகே !!!வாழ்த்துக்கள் .//

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)