Tuesday, May 25, 2010

திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் vs விஜய்

நண்பர்களுக்கு வணக்கம் , ஐம்பது நாட்களுக்கு பின்னர் மீண்டும் பதிவுலகத்தில்இணைகின்றேன். சில பல காரணங்களுக்காக (ரொம்ப சீடியசா ஒன்றுமில்லை ) கடந்த ஐம்பது நாட்களாக எழுதவில்லை.இன்றிலிருந்து மீண்டும் ஏதாவது கிறுக்கலாமென்று நினைக்கிறேன். மின்னஞ்சல் மூலமாகவும் பின்னூட்டல்மூலமாகவும் 'எப்பூடியை' விசாரித்த நண்பர்களுக்கு நன்றிகளும் உங்களுக்கானபதிலை தராததற்காக மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.

முதலாவது மேட்டரே தளபதியை பற்றித்தான் எழுதணும் என்கிறபோது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு, சரி இந்த வாட்டி விஜய் பக்கம் இருக்கிற நியாயத்தையும் கொஞ்சம் பார்க்கணும் என்கிற முடிவோட எழுத ஆரம்பிக்கிறேன்,ஆனால் கடைசியில் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாக மாறினால் நான் பொறுப்பில்லை.விஜய்க்கு ரெட்காட் போடுமளவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வந்துள்ள நிலையில் சங்கத்தின் தரப்பில் சிறிது நியாயம்கூட இருப்பதாக எனக்கு படவில்லை. விஜயின் இறுதி ஐந்து படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்திருப்பதால் நஷ்டஈடு கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அந்த ஐந்து படங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்திருந்தால் (இது முழுக்க முழுக்க கற்பனையே ) வந்த லாபத்தில் ஒரு பகுதியை விஜய்க்கு கொடுத்திருப்பார்களா? முதல்ப்படம் சரியாக போகாவிட்டால் எதற்காக இரண்டாவது படத்தை பெரியதொகை கொடுத்து வாங்கினார்கள்? சரி இரண்டாவதோடாவது நிறுத்தியிருக்கலாமே எதற்காக மூன்று, நான்கு,ஐந்து என்று தொடர்ந்தும் விஜயின் படங்களுக்கு பணத்தை போட்டார்கள்? ஏதாவதொருபடத்தில் போட்டதை பிடிக்கலாமென்றுதானே ? அவர்களுக்கு தாம் நொண்டிக்குதிரைக்குதான் பணத்தை கட்டினார்கள் என்று இப்போதுதான் தெரிந்ததா? அப்படி இருந்தாலும் தவறு குதிரைமீதா? பணத்தை கட்டியவன்மீதா?திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரே: கொஞ்சம் சிந்தித்து பாருங்க, "வேட்டைக்காரன் மாபெரும் வெற்றி வேணுமிண்ணா வினயோகஸ்தர்களை கேட்டுப்பாருங்க" என்று அழாக்குறையா சண் பிச்சர்சில ஒரு அண்ணாத்தை சொன்னாரே, அவரு மனசு எம்புட்டு பாடுபடும் என்பதை சிந்தித்துபார்த்தீர்களா? விஜய் படங்கள் வெற்றியடயாவிட்டாலும் வசூலுக்கு குறைச்சலில்லை என்று ஒப்புக்கு சப்பாணி பாடும் விஜய் ஆதரவு நண்பர்களை பற்றி ஓரளவேனும் சிந்தித்தீர்களா? பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பதுபோல 'ஆதி'யிலிருந்து 'சுறா'வரைக்கும் விஜயின் ஆறு தோல்விப்படங்களையும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்றுகூறி தன்னையும் சிறுபிள்ளைகளையும் ஏமாற்றி வந்தாரே எஸ்.எ.சி, அவரைப்பற்றியாவது சிந்தித்துப்பார்த்தீர்களா? இப்படி எதையுமே சிந்திக்காமல் தயவுசெய்து தன்னிச்சையாக முடிவெடுக்காதீர்கள்.விஜய் அவர்களே: நீங்கதான் ஒன்றுவிடாமல் ரஜினியை கொப்பிஅடிப்பவர் ஆயிற்றே, எதற்காக நஷ்டத்தை கொடுப்பதில் மட்டும் ரஜினியை கொப்பிஅடிக்காமல் உள்ளீர்கள் ? நஷ்டத்தை குடுத்தா அப்பா கோவிச்சுக்குவாரா? சரி அதவிடுங்க, இப்பிடி ஐந்து படம் தொடர்ந்து தோற்றதற்கே இன்றைய உங்களது ரசிகர்கள் நொந்து போயிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்களது வரலாறு தெரியாது என்றுதான் பொருள்.'பிரன்ஸ்' வெற்றியில் இருந்து 'திருமலை' வெற்றிவரைக்கும் இடைப்பட்ட இரண்டு வருடத்தில் பத்ரி,ஷாஜகான் , தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதியகீதை என்று ஏழு படங்கள் தங்கள் காலைவாரிய வரலாற்றை கூறி இப்பொது ஐந்து படங்கள்தானே காலைவாரின என்று ரசிகர்களை தைரியப்படுத்துங்கள். ஒருவேளை சங்கம் ரெட்காட் போட்டுவிட்டால் நடிக்காமல்மட்டும் விட்டுவிடாதீர்கள், திரையரங்கில்லை என்றாலென்ன திருட்டு vcd யில் உங்களது காவியங்களை பார்த்து ரூம்போட்டு சிரிக்கும் கோடானகோடி ரசிகர்களும், உங்களை காமடிபீசாக்கி தங்களது kits ஐ எகிரவைக்கும் எம்மைப்போன்ற பதிவர்களையும் ஏமாற்றிவிடாதீர்கள்.

விஜய் ரசிகர்களுக்கு: "உன்னையெல்லாம் எழுதென்று யார் வெத்திலை வச்சு கூப்பிட்டது" , "இதுக்கு நீ எழுதாமலே இருந்திருக்கலாம்" போன்ற வசனங்கள் வரவேற்கப்படுகிறது, கெட்டவர்த்தைகளும் வரவேற்க்கப்படுக்ன்றன , ஆனால் பிரசுரிக்கப்பட மாட்டாது. எதுதிட்டுவதாயிருந்தாலும் நேரடியாக திட்டலாம், குடும்பத்தினருக்கு வரும் திட்டுக்கள் அனைத்தும் உங்களது குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக மீண்டும் வழங்கப்படும்.

வாசகர்களுக்கு : இனி ஒரு மாதத்திக்கு விஜய்பற்றிய எந்த செய்திகளும் பிரசுரிக்கப்படமாட்டாது.

25 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

Take it easy policy ..... ha,ha,ha...

ஊர்சுற்றி said...

:)

ஹாய் அரும்பாவூர் said...

சிங்கம் புறப்பட்டு விட்டது அப்புறம்
எப்பூடி நண்பா சௌக்கியமா ?
மீண்டும் உன் தொடர் வெற்றிக்கு வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

ஆரம்பமே கருவாட்டு(சுறா) நாயகர் பற்றியா கலக்குறே

தொடர்ந்து எழுத வாழ்துக்கள்

CINEMA GALLARY said...

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

பெண்மணி said...

vijay pathi anagarigamaka eluthum neer nagareegamana vimarsanakalai eluthavum enpathu remba over

rkajendran2 said...

உங்கள் பதிவு மிகவும் அருமை. தொடரவேண்டும் உங்கள் சேவை.
//கஜேந்திரன், சிவகாசி

சதீஷ் said...

//இனி ஒரு மாதத்திக்கு விஜய்பற்றிய எந்த செய்திகளும் பிரசுரிக்கப்படமாட்டாது.//

இப்படி சொன்னா எப்பூடி????
நாளைக்கே இளைய தளபதி கட்சி ஆரம்பிப்பது பற்றி ஆரம்பிப்பார். அப்போ என்ன செய்வீர்கள்?

அகல்விளக்கு said...

சூப்பர் மாமே ...

:-)

ஜெய் said...

சூப்பர்.. :)

chosenone said...

இவ்வளவு நாள் நீங்கள் எழுதாததற்கு அன்பான விஜய் ரசிகர்களின் வெறிபிடித்த மிரட்டல் தான் காரணமாமே .....ஆமாவா ???

அதனால் தான் முதல் பதிவிலேயே விஜய் க்கு ஆர்த்தி எடுத்து உசுருக்கு guarantee பன்னுரீங்கலாமே ....அப்புடியா ???

ஆமாமா ! பதிவேழுதரதுகு உசுரு ரொம்ப முக்கியம் தலீவா !
ஹஹஹா :)

WELCOME BACK gharrr(சிங்கம்) !!!!!

{{{இரும்பு கோட்டை . மு. சி . படம் பார்த்திங்களா ?}}}

chosenone said...

சினிமா வியாபாரம் பொறுத்தவரையில் நீங்கள் சொல்வது 100% உண்மை ...புத்திக்கி தெரிகிறது ! ஆனால் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே!....

இச்செய்தி கேட்டதும் ......
"ங்கொய்யாலே 3-4 வருஷமா எங்களயெல்லாம் கண்ணு காத்து வழியா பேதி புடுங்க வச்ச சனியன் ஒழிஞ்சாண்டா !!!"
இப்போதைக்கி எங்கள் குல தெய்வம் "தி . உ . சங்கம் " தான் .....
சாமியேய் தி . உ . ச!!!!!

kk samy said...

ஒரு மனிதன் வெற்றியடைந்தால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதும், தோல்வியடைந்தால், உதாசீனப்படுத்துவதும் திரையுலக வரலாறு.
அந்த வரலாற்றில், தங்களை போன்ற
"ஜால்ரா" க்ளுக்கு நிச்சயம் இடம் உண்டு.

"மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது"

Paarvai said...

//-- எதுதிட்டுவதாயிருந்தாலும் நேரடியாக திட்டலாம், குடும்பத்தினருக்கு வரும் திட்டுக்கள் அனைத்தும் உங்களது குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக மீண்டும் வழங்கப்படும். ---//

இவ்வளவு நல்லவரா இருக்கீகளே

அ.ஜீவதர்ஷன் said...

@ Chitra

@ ஊர்சுற்றி

@ ஹாய் அரும்பாவூர்

@ CINEMA GALLARY

@ rkajendran2

@ அகல்விளக்கு

@ ஜெய்

@ Paarvai


உங்கள் அனைவரது வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

அ.ஜீவதர்ஷன் said...

@ k

//vijay pathi anagarigamaka eluthum neer nagareegamana vimarsanakalai eluthavum enpathu remba over//

இங்கு என்ன அநாகரிகத்தை கண்ண்டீங்க 'பேர் ஊர்' இல்லாத மனுசா? இங்க எதுவுமே பொய்யான தகவல்கள் இல்லை, உங்களது பெயரை தவிர.

....................................

சதீஷ்

//இப்படி சொன்னா எப்பூடி????
நாளைக்கே இளைய தளபதி கட்சி ஆரம்பிப்பது பற்றி ஆரம்பிப்பார். அப்போ என்ன செய்வீர்கள்?//

இப்பிடி எல்லாம் குதர்க்கமாக் a பேசப்படாது, be careful , என்னை சொன்னன்.

........................................

chosenone

//இவ்வளவு நாள் நீங்கள் எழுதாததற்கு அன்பான விஜய் ரசிகர்களின் வெறிபிடித்த மிரட்டல் தான் காரணமாமே .....ஆமாவா ???//

பப்ளிக் பப்ளிக்.

//{{{இரும்பு கோட்டை . மு. சி . படம் பார்த்திங்களா ?}}}//

இன்னும் இல்லை, விரைவில் பார்த்து விடுவேன்.

//இப்போதைக்கி எங்கள் குல தெய்வம் "தி . உ . சங்கம் " தான் .....
சாமியேய் தி . உ . ச!!!!!//

இன்றைய செய்திப்படி எஸ்.ஏ.சி சங்கத்தையே கலைச்சிட்டாராமில்ல. அரசியல் சாணக்கியன் எஸ்.ஏ.சி வாழ்க

....................................


kk samy

//ஒரு மனிதன் வெற்றியடைந்தால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதும், தோல்வியடைந்தால், உதாசீனப்படுத்துவதும் திரையுலக வரலாறு.
அந்த வரலாற்றில், தங்களை போன்ற
"ஜால்ரா" க்ளுக்கு நிச்சயம் இடம் உண்டு
"மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது".//

சாமி சார், விஜய் வெற்றி பெறும்போது நான் விஜயை தூக்கி பிடித்தேனா? நம்மை பற்றி தெரியாது போல,போங்க சார் போயி ஊரில விசாரியுங்க.மாற்றம் ஒன்று மட்டுமல்ல மாறாதது, "மாற்றத்தையும் விஜயையும் தவிர மிகுதி எல்லாமே மாறும் "

சரவணகுமரன் said...

நல்லா ரவுசு பண்றீங்க.. :-)

தமிழ் மதுரம் said...

வருக வருக.. நீண்ட காலத்திற்குப் பின்னர் வந்திருக்கிறீங்கள்? எப்பிடிச் சுகம்?

பாவம் விஜய்.. எல்லோரும் போட்டு அடிச்சால் எப்பிடித் தாங்குவார்?

SShathiesh-சதீஷ். said...

முதலில் மீள்வருகைக்கு வாழ்த்துக்கள் விஜயை தாக்கி எழுதாத பதிவுகளின் ரசிகன் நான். உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருந்த வேளை திடீரென காணாமல் போனீர்கள். கவலையை இருந்தது., இப்போது வந்தது சந்தோசம். ஆனால் விஜயை மட்டம் தட்டும் எழுத்து தொடர்கிறது. இது எப்புடி ஸ்டைலா வேறு ஒன்றும் சொல்ல மாட்டேன். காரணம் என்னால வாங்கிக் கட்ட முடியாது. எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிப்பது.......அவ்வ்வ்வ்வ்வ் வாழ்த்துக்கள்

சிங்கம் வருதாம்..........

வாழ்த்துக்கள். உங்களுக்கு சொன்னன்

r.v.saravanan said...

வாங்க எப்பூடி தினமும் உங்கள் தளத்தை புது இடுகை வந்திருக்கிறதா என்று

பார்த்து கொண்டிருந்தேன்

இனிமே தொடர்ந்து உங்கள் கலக்கல் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

அன்பரசு said...

வாங்க தல, விஜயப்பத்தி எப்போ வேணா, எவ்ளோ வேணா எழுதலாம், படிக்க நாங்க இருக்கோம்ல!
திரையரங்கு உரிமையாளர்கள் போட்ட மீட்டிங்கி, முடிவு எல்லாம் நம்ம கடைல பப்பரக்கான்னு இளிச்சுக்கிட்டு இருக்கு, வந்து பாருங்கப்பு!

Unknown said...

super thalaiva

அ.ஜீவதர்ஷன் said...

@ சரவணகுமரன்

@ கமல்

@ r.v.saravanan

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அ.ஜீவதர்ஷன் said...

@ SShathiesh-சதீஷ்.

கவலைய விடுங்க விஜய் தலையிடாட்டி நிச்சயம் காவல்க்காரன் வெற்றிப்படம்தான் , ஏன்னா பாடிகாட் ஒரு காமெடி லவ் ஸ்டோரி, அந்தகதைக்கு விஜய்க்கு வயசு அதிகமானாலும் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.அப்பிடி காவல்க்காரன் தோல்வின்னா அதுக்கு காரணம் நடுநிலை ரசிகர்களல்ல, விஜய் ரசிகர்கள்தான்(சச்சின், சாஜகான் படங்கள் சான்று)

.......................................

@ பனங்காட்டான்

@ Karthik


உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Yoganathan.N said...

அதென்ன ஐம்பது நாட்கள் கணக்கு? :P

//அந்த ஐந்து படங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்திருந்தால் வந்த லாபத்தில் ஒரு பகுதியை விஜய்க்கு கொடுத்திருப்பார்களா?//

நெத்தியடி கேள்வி.

எப்பூடி.. said...

Yoganathan.N

அதென்ன ஐம்பது நாட்கள் கணக்கு? :P

அது இருக்கட்டும் உங்களை என்ன ஒரு 75 நாளா இந்தப்பக்கம் காணம் :-)


//நெத்தியடி கேள்வி.//

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)