Sunday, May 30, 2010

பேரரசுவின் ரசிகர்கள்......

இந்தவார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சண் தொலைக்காட்சியின் மாலை திரைப்படங்களாக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'தருமபுரி', மற்றும் 'பழனி' திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமை தருமபுரி திரைப்படம் ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் கடந்த பின்னரே வீட்டிற்கு வந்தேன்,எனக்கு என்ன படம் ஒளிபரப்பப் படுகின்றதென்பது தெரியாது,சண் டிவியில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.வந்ததும் அவசர அவசரமாக பிரெஞ்சு ஓபன் டெனிசை பார்ப்பதற்காக ரிமோட்டை எடுத்து மாத்தலாமென்று நினைத்தேன்.அப்போது டிவி பார்த்துக்கொண்டிருந்த அக்காவின் சிறிய பிள்ளைகளும் மெகாசீரியல் பார்த்து கண்ணீர்விடும் ஒரு பக்கத்துவீட்டு அம்மாவும் நல்லபடம் போகுது சானலை மாத்தாதீங்கோ.... என்றார்கள்.சரி என்னடா படமென்று பார்த்தால் விஜயகாந்தும் m .s பாஸ்கரும் எதோ காமடி பண்ணும் காட்சியுடன் மீண்டும் படம் ஆரம்பமானது.அவ்வப்போது டெனிசை பார்த்தாலும் படத்தை அவர்களுக்காக மாற்றி மாற்றி காண்பித்துக்கொண்டிருந்தேன்.சிறிது நேரத்தின் பின்னர் நடாலின் match ஐயும் மறந்து படத்துடன் நானும் ஐக்கியமாகிவிட்டேன்.டென்சனாகாதீங்க! நான் சொன்னது அந்தளவுக்கு பேரரசுவின் காமடி இயக்கத்தை பார்த்து என்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தேன் என்பதையே. கமன்ட் அடிப்பதற்கு கூட அருகில் யாருமில்லை. என்னைத்தவிர கூட இருந்து படம்பார்ப்பவர்கள் (இன்னும் ஒரு நடுத்தர வயதினரும் இணைந்திருந்தார், சமையல்கட்டிலிருந்து அம்மாவேறு அப்பப்போ வந்து பார்த்துக்கொண்டிருந்தார்)அனைவரும் படத்தை ரசித்தனர், அதுவும் விறுவிறுப்பாக.அனைவரும் 50 ஐத் தாண்டியவர்களாகவும் மெகாசீரியல் ரசிகைகளாகவும் குழந்தைகளாகவும் இருந்தாலும் அவர்கள் தர்மபுரியை ரசித்தபோதுதான் பேரரசுவின் குப்பைப்படங்களென நாம் விமர்சிக்கும் படங்கள் எப்படி முதலுக்கு மோசமில்லாமல் ஓடுகின்றன என்பது புரிந்தது.சனிக்கிழமை நடாலின் ஆட்டத்தை தவறவிட்ட நான் ஞாயிற்றுக்கிழமை பெடரரின் ஆட்டத்தை தவறவிடவில்லை, அப்படி என்றால் பழனி படத்தை அவர்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா? இல்லை தருமபுரி போலவே பழனியையும் ரசித்தார்கள், ஆனால் என்ன படம் முடிந்த பின்னர்தான் பெடரரின் போட்டி தொடங்கியது. அந்தவகையில் பெடரரின் நான்காம்சுற்று ஆட்டத்தை என்னால் ரசிக்கமுடிந்தது. என்னதான் தமிழ்சினிமா வளர்ந்தாலும் ரசிகர்களின் ரசனை மாறினாலும் பேரரசுவின்தரத்து படங்களும் ஒருதரப்பு மக்களால் ரசிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.குறிப்பாக மெகாசீரியல்கள் இருக்கும் வரை இதுதொடரும், ஏன் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

9 வாசகர் எண்ணங்கள்:

surendar said...

நீங்க சொன்னது நூறு சத விதம் உண்மை. எங்க வீட்லயும் இதே கதை தான். என் அம்மா அப்பா இருவருமே நேற்றும் இன்றைக்கும் இவ்விரு திரைபடங்களையும் மிக ஆர்வத்துடன் கண்டு களிதன்னர். அந்த பொழுதில் தான் நானும் உங்களை போல் அந்த உண்மையை உணர்ந்தேன். என்னவென்றால், பேரரசுவின் தரம் கெட்ட படங்களும் ஒருதரப்பு மக்களால் ரசிக்கப்பட்டுக்கின்றது என்பதையே.

ஹாய் அரும்பாவூர் said...

kalakkure super non stop hits that is eppoodi

r.v.saravanan said...

correct eppoodi

chosenone said...

"...அனைவரும் 50 ஐத் தாண்டியவர்களாகவும் மெகாசீரியல் ரசிகைகளாகவும் குழந்தைகளாகவும்...."
hats -off to this careful observation.
இதில் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றுமே இல்லை ....
நீங்கள் குறிப்பிட்ட இந்த "group"
அன்று முதல் இன்று வரை வெளிவந்த உலக சினிமாவின் எந்தவொரு சிறந்த படைப்புக்கோ ,அல்லது நூதன சினிமாவின் தோழிநுட்ப மற்றும் கற்பனை திரணைக்கோ பரிட்சயமாகாதவர்கள், அல்லது மொழி பிரச்சனைக்கு ஆளானவர்கள் .

சூரியனை காணும் வரை ஒரு தீப்பொறி கூட கடவுள் தான் அதே மாதிரி ....

தரமான தமிழ் திரை மொழி ஒன்று உருவாகும் வரை ஒரு சாதாரண தமிழ் ரசிகனுக்கு பேரரசு மதிரியானாட்களின் "ஒளி-ஒலி குப்பைகள்" தான் "நல்ல படங்கள் " ஆக தெரியும் .....வேற வழி ?

SShathiesh-சதீஷ். said...

நீங்கள் எங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்தியமைக்கு நன்றி. உங்கள் தளத்தில் எங்கள் வாக்கெடுப்பு இடம்பெறும் தளத்தின் லிங்க் அடங்கிய லோடோவை இணைத்து ஆதரவு வழங்கலாமே.

தமிழ் மதுரம் said...

புரிந்தும் புரியாமலும் எழுதியுள்ளீர்கள். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் தானே?

Yoganathan.N said...

பேரரசு - தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சமீபத்திய விஜய் படங்களை எடுக்கும் இயக்குனர்களை ஒப்பிடும் போது பேரரசு பரவாயில்லை என்று தோன்றுகிறது.

ஆனாலும் பேரரசு பண்றது கொஞ்சம் ஓவர் தான்.

எப்பூடி.. said...

@ surendar

@ ஹாய் அரும்பாவூர்

@ r.v.saravanan

@ chosenone

@ கமல்

@ Yoganathan.N


உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

...........................................

@ SShathiesh-சதீஷ்

நிச்சயமாக

............................................

வெறும்பய

//சமீபத்திய விஜய் படங்களை எடுக்கும் இயக்குனர்களை ஒப்பிடும் போது பேரரசு பரவாயில்லை என்று தோன்றுகிறது.//

:-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)