Friday, May 28, 2010

என் ரசனையில் சிங்கம்தூத்துக்குடிக்கு பக்கத்திலிருக்கும் நல்லூரில் சப்இன்ஸ்பெக்டராக இருக்கும் துரைசிங்கம், அப்பாவின் ஆசைக்காக சொந்த ஊரிலேயே போலீசில் வேலை செய்கிறார். சென்னையையே ஆட்டிப்படைக்கும் மயில்வாகனமும் துரைசிங்கமும் ஒரு பிரச்சினையில் முண்டிக்கொள்ள இருவருக்குமிடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் சிங்கம்.

துரைசிங்கம் என்னும் சிங்கமாக சூர்யா.வழக்கமான மசாலாப்பட பில்டப் ஓபனிங் சீனுடன் அறிமுகமாகிறார்.ஜீப்பின் கதவு,கூரைகளைப் பிய்த்துக் கொண்டு அடியாட்கள் காற்றிலே டிராவல்ஆக நாயகன் அறிமுகம்.பின்னர் புட்பால் மச்சில் கோல் போட்டவுடன் ஓபனிங் சாங்.அனுஷ்காவின் காணாமல்போன சங்கிலியை "மூளையைக் கசக்கி"கண்டு பிடிக்கிறார்.பிரகாஷ்ராஜுடன் சவால்விடுகிறார்.நடிப்பின் பரிமாணங்களைக் காட்ட பெரிதாக வாய்ப்பில்லாத கதாபாத்திரம். காக்கி சட்டையில் கம்பீரத்தோற்றம்.ஆனாலும் என் பார்வையில் மசாலாப் பட போலிசுக்கு சூர்யா ஒட்டவில்லை.தங்கபதக்கம்,காக்ககாக்க,வேட்டையாடு விளையாடு போலிசுக்கு சூர்யா ஓகே.ஆனால் மூன்றுமுகம்,சாமி போலிசுக்கு பொருந்தவில்லை என்பது என்கருத்து.சிங்கம் இரண்டாம்ரகம்.


அனுஷ்கா மற்றைய படங்கள் போலன்றி அதிக காட்சிகளில் வந்திருக்கிறார்.டிபிகல் ஹரி படநாயகி.ஹீரோவுக்கு பக்க பலமாகவிருக்கும் துணிச்சலான பெண்.பாடல்களில் திறமை 'காட்டி' இருக்கிறார்.சூர்யா சிங்கம், இவர் புலி , காரணம் வெண்திரையில்.


பிரகாஷ்ராஜ் சென்னையே கலக்கும் டீசன்ட் ரௌடி மயில்வாகனம்.இவருக்கு பில்டப் பண்ணித்தான் படமே ஆரம்பம்.படம் முழுதும் பில்டப் மட்டுமே பண்ணுகிறார்கள்.இவரின் காரக்டரில் மட்டும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.சூர்யாவிடம் சவால் மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறார்.உருப்படியாக எதுவும் செய்யவில்லை.விவேக் ஒருசில காட்சிகளில் சிரிப்பு வெடி,பலகாட்சிகளில் கடி . நாசர்,ராதாரவி, விஜயகுமார்,நிழல்கள்ரவி,மனோரமா எல்லோரும் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள். போஸ்வெங்கட் நேர்மையான போலிஸ் அதிகாரியாக வந்து ஹீரோ பக்கம் யாரவது கொல்லப்படவேண்டும் என்ற ஹரிபட நியதிக்கமைய பிரகாஷ்ராஜால் கொல்லப்படுகிறார்.

ஒளிப்பதிவு பிரியன், அனுஷ்காவை சூர்யாவுடன் பாலன்ஸ் செய்வதிலேயே அதிகம் சிரத்தைஎடுத்திருக்கிறார்.கிராமத்துகாட்சிகளில் மண்வாசனை.சென்னையில் அதிகம் மூவிங் காட்சிகள்.படத்தை சொதப்பாத ஒளிப்பதிவு.வி.ரி விஜயனின் கோர்ப்பில் காட்சிகளில் தொடர்ச்சி இல்லாதது போன்ற உணர்வு.காமடி,குடும்பம்,வில்லன் என்று தனிதனி எபிசோட்கள் பார்ப்பதுபோல இருந்தது. கடைசி மூன்று படங்களிலும் கை கொடுத்த ஹரிஸ் இல்லாத வெறுமை சூர்யாவுக்கு இந்தப் படத்தில் தெரிகிறது.பாடல்கள் சுமார்.படமாக்கிய விதத்திலும் அனுஷ்கா தவிர ரசிக்கும்படி
எதுவுமில்லை.பின்னணிஇசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை,விவேக்கின் பில்டப் சாங் தவிர்த்து.கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஹரி.டெம்ப்ளேட் கதை,திரைக்கதை.மொக்கை செண்டிமெண்ட்கள் உட்பட. ஆங்காங்கே அக்மார்க் ஹரி பன்ச்வசனங்கள்.வேகமான திரைக்கதைதான் ஹரியின் பலம்.முதல் பாதி ஓரளவு வேகமாக நகர்ந்தாலும் இரண்டாம்பாதி பல இடங்களில் நொண்டிஅடிக்கிறது.கதை தமிழ்நாடு தாண்டி நகரும்போது வேண்டாமென்று போகிறது.எங்கே சிறிது விட்டாலும் 'சாமி' பாதிப்பு வந்து விடுமோ என்று திரைக்கதை அமைக்கப்பட்டாலும் சுத்திசுத்தி சாமிக்கே வருகிறது.நிறைய இடங்களில் 'சாமி' பாதிப்பு. ஏகப்பட்ட லாஜிக்மீறல்கள்,மொக்கை செண்டிமெண்ட்கள்,திருப்பங்கள் என்ற பெயரில் சிறுபிள்ளைத்தனமான முன்னரே யூகிக்கக்கூடிய காட்சிகள்.ஹரி அவுட் ஒப் போர்ம்.

என் பார்வையில் சிங்கம் வேட்டையாடப்படப் போகிறது.

பார்த்தவர்கள் கமண்டியது, இடைவேளையின் போது சூர்யாவின் ரசிக நண்பன் சொன்னார் 'விஜய் படங்கள் அளவுக்கு மோசமா போகலை.ஓரளவு ஓகே '

பின்புற இருக்கை நண்பர் சொன்னார் 'எப்படித்தான் சண் பிக்சர்ஸ் அசராம இப்பிடிப் படங்களா பார்த்து வாங்கிறாங்க'.

19 வாசகர் எண்ணங்கள்:

Yasin said...

so many mistakes, but still படம் ஓகேதான் தல.

ஹாய் அரும்பாவூர் said...

அப்போ படம் தேறுமா ?
நல்ல விமர்சனம்

மாதேவி said...

சிங்கம் நல்லா கர்ஜிக்கலையா?

life luvg said...

ஐயோ சூர்யா பாவம்

Chitra said...

பின்புற இருக்கை நண்பர் சொன்னார்'எப்படித்தான் சண் பிக்சர்ஸ் அசராம இப்பிடிப் படங்களா பார்த்து வாங்கிறாங்க'.


..... அதானே..... எப்பூடி?

ராம்ஜி_யாஹூ said...

naல்ல விமர்சனம், ன்றிகள் சூடான விமர்சனதிற்கு,

சூர்யா இனியாவது நல்ல கதைகளாய் தேர்ந்து எடுக்க vendum

Unknown said...

ராஜா இன்னும் பாக்கலையாம் ,அதனால நாங்க இந்த கமேண்ட எல்லாம் நம்ப மாட்டோம் அவரு பாத்ததுகப்புரம் அவரே சொல்லுவாரு

SShathiesh-சதீஷ். said...

ம் நடக்கட்டும் நடக்கட்டும்.....இருந்த சூர்யா என்னும் நடிகனும் செத்து விட்டானா? சிங்கம் பதிவுக்கான தலைப்புக்கள் என ஒரு பதிவு போட்டேன் முடிந்தால் படிக்கவும்...

சிங்கம் வேட்டையாடப்பட்டது எபது ஏதும் டபுள் மீனின்கா

r.v.saravanan said...

சூடான விமர்சனதிற்கு thanks

Unknown said...

ஓகே. ஒரு கமர்சியல் படத்த இன்னொரு கமர்சியல் படத்தோட கம்பேர் பண்ணுங்க சார். ரொம்ப கொற சொல்லாதிங்க, சூர்யா பாவம். சுராவுக்கு சிங்கம் ஓகேதானே?
எனக்கு படம் நல்லாத்தான் இருந்திச்சி.
சரவணன்,
குரும்பலூர்.

தமிழ் மதுரம் said...

ஆஹா.. அருமையான விமர்சனத்தைச் சொல்லி விட்டீர்கள். அப்ப சாமி பார்த்தவர்களெல்லாம் இது பார்க்கத் தேவை இல்லையோ?

ஆனந்த் பாபு said...

எனக்கு படம் நல்லாத்தான் இருந்துச்சு பாஸ்......
சுறாவுக்கு இது எவ்ளவோ பரவால்ல....

chosenone said...

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் .....

இந்த மசாலா படங்களுக்கு " title " கண்டு புடிக்கிற திறமைவாய்ந்த "ஐந்தறிவு" புலவர்கள் யார் என்பது ....
இதோ... உங்கள் ரசனைக்காக சில கலியுக காவிய துளிகள் ...

* சிங்கம் * சுறா * புலி * புலி வருது * குருவி * ஏய் * மிருகம் * காளை * சேவல் *சிங்கக்குட்டி *போக்கிரி * கேடி * பொல்லாதவன் *....etc

COMING SOON.....
(கடல்) சிங்கம் *(கடல்) புலி*நீர் யானை*எரும *பொருக்கி* நாயே * கோரவளை* ந்கோய்யலே* கொக்கமக்க *
*கே .கு (??) * பே .உ .பு(??) * (கடைசி இரண்டும் s.j சூர்யா காவியங்கள் ..)...

RajaS* Forever * said...

உங்கள் விமர்சனம் அருமை ....திரு.ஹரி யிடம் இது போன்ற திரை படங்கள் தான் எதிர் பார்க்க படுகிறது ....முன்று மணி நேரம் சலிபில்ல்மல் சென்றால் சரி தான் ....

Shaan said...

நன்றி உங்கள் கருத்துக்கு.

அ.ஜீவதர்ஷன் said...

@ Yasin

@ ஹாய் அரும்பாவூர்

@ மாதேவி

@ common man

@ Chitra

@ ராம்ஜி_யாஹூ

@ r.v.saravanan

@ chosenone

@ RajaS* Forever

@ shaan


அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

அ.ஜீவதர்ஷன் said...

Hrushikesh

//ராஜா இன்னும் பாக்கலையாம் ,அதனால நாங்க இந்த கமேண்ட எல்லாம் நம்ப மாட்டோம் அவரு பாத்ததுகப்புரம் அவரே சொல்லுவாரு//

சரிங்க...

.............................................

SShathiesh-சதீஷ்.

//ம் நடக்கட்டும் நடக்கட்டும்.....இருந்த சூர்யா என்னும் நடிகனும் செத்து விட்டானா? சிங்கம் பதிவுக்கான தலைப்புக்கள் என ஒரு பதிவு போட்டேன் முடிந்தால் படிக்கவும்...//

நிச்சயமாக படிக்கிறேன்.

//சிங்கம் வேட்டையாடப்பட்டது எபது ஏதும் டபுள் மீனின்கா//

டபிள் மீனிங்கின்னா என்னங்க?

..........................................

director

//ஓகே. ஒரு கமர்சியல் படத்த இன்னொரு கமர்சியல் படத்தோட கம்பேர் பண்ணுங்க சார். ரொம்ப கொற சொல்லாதிங்க, சூர்யா பாவம். சுராவுக்கு சிங்கம் ஓகேதானே?எனக்கு படம் நல்லாத்தான் இருந்திச்சி.
சரவணன்,
குரும்பலூர்.//

மோசமான படத்தோடு ஒருநாளும் ஒரு படத்தை ஒப்பிட்டுப்பார்க்ககூடாது,சூரியாவின் அயனோடு ஒப்பிடுங்கள், இல்லை ஹரியின் சாமியோடு ஒப்பிடுங்கள்.

.......................................

கமல்

//ஆஹா.. அருமையான விமர்சனத்தைச் சொல்லி விட்டீர்கள். அப்ப சாமி பார்த்தவர்களெல்லாம் இது பார்க்கத் தேவை இல்லையோ?//

ஹரியின் வழமையான பாணியில் அனைத்து ஹரியின் படைப்புக்களினதும்(?) கலவைதான் இந்த சிங்கம்.

.....................................

ஆனந்த் பாபு

//எனக்கு படம் நல்லாத்தான் இருந்துச்சு பாஸ்......
சுறாவுக்கு இது எவ்ளவோ பரவால்ல....//

இதுக்கு பதில் மேலே 'director' சரவணனுக்கு சொல்லிய பதில்தான்.

Yoganathan.N said...

இந்த அமரகாவியத்தையும் பார்த்து அதுக்கு இம்புட்டு பெரிய பதிவு... :(

எப்பூடி.. said...

@ Yoganathan.N said...

//இந்த அமரகாவியத்தையும் பார்த்து அதுக்கு இம்புட்டு பெரிய பதிவு... :(//

அவ்வ்வ் வ் வ் வ் வ் வ் வ்.......................

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)