Saturday, April 3, 2010

பையா - திரைவிமர்சனம்


ஓகே ரக படங்களுக்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் அந்தப்படங்களினை  தோல்வி அடையச்செய்வதால் பையா படத்திகு விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று ஒன்றுக்கு பலமுறை ஜோசித்த பின்னரே இந்த விமர்சனம் எழுதுகிறேன், இந்த விமர்சனத்தால்  பையாவின் தோல்வி எந்த வகையிலும்  பாதிக்கப்படாது என்கிற நம்பிக்கையில்.

'பிள்ளையாரே பெருச்சாளியில போறாரு  பூசாரிக்கு புல்லட்டு கேட்குதா?' என்கிற கதையா  ஆலாலப்பட்ட விஜையே இந்தமாதிரி படங்களை  ஓடவைக்க   திண்டாடும்போது கார்த்திக்கு இப்பிடி ஒரு படம் தேவையா? ஆரம்பகாலங்களில் கமர்சியல் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென தக்க வைத்திருந்த லிங்குசாமி சிறந்த technicians மட்டும்  இல்லாவிட்டால் பேரரசுவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல் உள்ளது, லாரி லாரியாக அள்ளக்கூடிய லாஜிக் மீறல்கள். சண்டைக்கோழி, ரன் போன்ற ஜனரஞ்சகமான படங்களை  எடுத்த லிங்குசாமி எங்கே ?


சரி படத்தில் என்னதான் கதை? அதைத்தான் Ka49 y 2133 இலக்க காரில் பெங்களூரில் இருந்து மும்பைவரை கார்த்தியும் தமன்னாவும் தேடுகிறார்கள், இறுதியில்   சோகமான முடிவு அதாவது அவர்களுக்கு கடைசிவரை கதை கிடைக்கவே இல்லை. கார்த்தி படத்தின் தேவைக்கேற்ப அழகாக அளவாக நடித்துள்ளார், இருந்த  போதும் அதிகமான இடங்களில்  வாரணம் ஆயிரம் சூரியாவின் பாதிப்பு தெரிகிறது. முப்பது நாற்பது  வில்லன்களை அடிப்பது, குறிப்பாக  இரும்பு கம்பியால் கிட்டத்தட்ட  இருபது அடி வாங்கிய பின்னரும் இரண்டு வில்லன் குரூப்பையும் அடித்து துவைப்பது போன்ற காட்சிகளில் கார்த்தியை ஓரளவேனும் மாஸ் ஹீரோவாக பார்க்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் அமீரும் பருத்திவீரனும்தான்.


தமன்னாவுக்கு  புதுப்படங்களில் வாய்ப்புக்களும் சம்பளமும் அதிகரித்துக் கொண்டு போனாலும்  ஒரே மாதிரி பாத்திரங்களில் நடித்து வெறுப்பைத்தான்  உண்டாக்குகிறார், வழமைபோல பாட்டுக்களிலும் தாராளம், மற்றயவர்கள் யாரும் குறிப்பட்டு சொள்ளையும் படியாக மனதில் பதியவில்லை. குறிப்பாக கார்த்தியின் நண்பர்கள் படு போர். அதலும் பிரியா என்னும் கேரக்டர் குளோசப்பில் பயமுறுத்துகிறார். அவர்களது காட்சியமைப்பு படத்துடன் ஒட்டவே இல்லை. அடுத்தடுத்த காட்சிகள் எப்படி இருக்க போகின்றன என்பதை அதிகமான இடங்களில் ஊகிக்க முடிகிறது.


மதியின் ஒளிப்பதிவுதான் படத்தை இறுதிவரை பார்க்க வைத்ததென்றே சொல்லலாம், வெய்யிலுக்கு பின்னர் மீண்டும் மதி தன்னை நிரூபித்திருக்கிறார்.அவரது ஒளிப்பதிவில் இரவும், நிலவும், நதியும், சொல்ல வார்த்தைகளே இல்லை. எதற்காக அன்ரனிக்கு  லிங்குசாமி கார் வாங்கிக் கொடுத்தார் என்பதை இறுதிவரை  ஊகிக்க முடியவில்லை. பிரிந்தாசாரதியின் வசனங்கள் பெரிதாக படத்திற்கு கை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. இறுதியாக யுவன் பற்றி சொல்லியே ஆக வேண்டும், மனிதர் பின்னணி இசையால் முடிந்தவரை படத்தின் தரத்தை உயர்த்தப் பாடுபட்டிருக்கிறார், பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் குறிப்பாக 'காதல் சொல்ல' யுவனின் வாய்சில் சூப்பர்.

லிங்குசாமியிடம் ஒரு கலைப்படைப்பயோ வித்தியாசமான படைப்புகளையோ யாரும்  எதிர்பார்க்கவில்லை, ரன், சண்டைக்கோழி போன்ற ஜனரஞ்சகமான ஒரு மசாலாப்படத்தையே  எதிர்பார்க்கின்றனர், அதை எதிர்பார்த்து திரையரங்கிற்கு  செல்பவர்களை லிங்குசாமி பையாவில் இல்லாவிட்டாலும் அடுத்த படத்திலாவது  திருப்திபடுத்துவார் என்று நம்புவோமாக.

ஐடியாமணி : ஹீரோவை அடிக்கவரும் வில்லன்களின் தொகையையும் , அவர்களின் தலை முடியையும், அவர்கள் ஹீரோவை துரத்தும் வாகனங்களின் எண்ணிக்கையையும் , சண்டைக் காட்சிகளின்  நேரத்தையும்  குறைத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

10 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

இந்த விமர்சனத்தால் பையாவின் தோல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்கிற நம்பிக்கையில்.

'பிள்ளையாரே பெருச்சாளியில போறாரு பூசாரிக்கு புல்லட்டு கேட்குதா?' என்கிற கதையா ஆலாலப்பட்ட விஜையே இந்தமாதிரி படங்களை ஓடவைக்க திண்டாடும்போது கார்த்திக்கு இப்பிடி ஒரு படம் தேவையா?

......ha,ha,ha,ha,ha...... very funny!

ஹாய் அரும்பாவூர் said...

"இந்த விமர்சனத்தால் பையாவின் தோல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்கிற நம்பிக்கையில்"
நிதர்சன உண்மை
இப்போது இருக்கும் இயக்குனர்களின் கற்பனை வறட்சி என்று கூட இதை சொல்லலாம்
ஒரு நல்ல இயக்குனர் என்பவன்
அவனை வைத்து இயக்கம் தயாரிப்பாளர் ,திரை அரங்க உரிமையாளர் ரசிகன் என்று அனைவரையும் சந்தோசபடுதுபவன் எவனோ அவனே உண்மையான இயக்குனர் என்பேன்

அந்த வார்த்தைக்கு உண்மையான பொருத்தம்
கே எஸ் ரவி குமார் மட்டுமே

Vijay Ramaswamy said...

படம் ஒவோருவர் பார்வையில் ஒவோருவிச்தமாக இருக்கிறது எனது பார்வையில்....இந்த படம் சுமார் ரகம்தான்..... இதை போன்ற படங்களை தியேட்டர் இல் பார்ப்பதற்கு அங்காடி தெரு வை இருமுறை பார்க்கலாம்

ஸ்ரீநி said...

good velai,,,
my no in TN. my no availbale to buying paiyaa ticket...

r.v.saravanan said...

ரன், சண்டைக்கோழி போன்ற ஜனரஞ்சகமான ஒரு மசாலாப்படத்தையே எதிர்பார்க்கின்றனர்

correct

ஜெயந்த் கிருஷ்ணா said...

யுவனின் இசையும் பாடலும் அருமை

Unknown said...

paiya tamil film is very joly movie, direction,cinemotography,editing,stund,music, all of super,

Ahamed irshad said...

யுவன் இசை பையாவுக்கு சிறப்பு

சாமக்கோடங்கி said...

படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.. ஆனால் திரும்பத் திரும்ப தமிழ் சினிமாவில் பார்த்த அதே காட்சிகள்..

நன்றி..

அ.ஜீவதர்ஷன் said...

@ Chitra

@ ஹாய் அரும்பாவூர்

@ Vijay Ramaswamy

@ ஸ்ரீநி

@ r.v.saravanan kudandhai

@ வெறும்பய

@ MURUGANANTHAM

@ அஹமது இர்ஷாத்

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, நேரப் பற்றாக்குறையால் தனித்தனியாக பதிலளிக்க முடியவில்லை. sorry

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)