Thursday, April 1, 2010

தமன்னான்னா இப்ப உசிரு.


நன்றியும் மன்னிப்பும்
முதற்க்கண் நேற்றைய APRIL FOOL'S DAY பதிவில் முட்டாள்கள் ஆகியவர்களுக்கும், சுதாகரித்துக் கொண்டவகளுக்கும், எதைஎதையோ எதிர்பார்த்து கடுப்புடன் கிளம்பிய அனைவருக்கும் நன்றிகள். எந்த மேட்டர போட்டா நிறைய ஜனங்களை முட்டாளாக்கலாம் என்று மல்லாக்க படுத்திருந்து சிந்தித்தபோது கணப்பொழுதில் தோன்றியதுதான் இந்த சிம்பு திரிஷா மேட்டரு. பின்னர் பல விடயங்களை யோசித்தாலும் இந்த மேட்டருக்கு இணையாக வேறொன்றும் அகப்படவில்லை, இவ்விருவரும் புகைப்படம் , ஒளிநாடா என்பவற்றில் இணையத்தில் ஏற்கனவே பிரபலம் என்பதாலும் இவ்வாறான கிசுகிசுக்கள் இவர்களுக்கு புதிதல்ல என்பதாலும் அவர்களை கேட்காமலே அவர்களது பெயரை ஒரு நல்ல (?) காரியத்துக்கு பயன்படுத்தி விட்டேன். இருந்தாலும் தப்பு தப்புத்தான், இதற்காக இவ் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அண்ணன் அழகிரி வாழ்ககலைஞரை தவிர யாரையும் தலைவராக ஏற்க்க மாட்டேன் என்று அண்ணன் அழகிரி கூறும்போதே அனைவருக்கும் கிளம்பிய சந்தேகம் இப்போ தலைமைப்பதவிக்கு போட்டிக்கு நிற்பேன் என்று அழகிரி கூறியதும் உறுதியாகிவிடது. அண்ணன் நானிருக்கும் போது தம்பி எப்படி தலைவராக முடியும்? வேணுமின்னா ஜனநாயகமா தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்து நான் கள்ளவோட்டு அடிச்சு எப்ப்பிடி வெல்கிறேன் என்பதை மட்டும் வேடிக்கை பாருங்க என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறார் எங்கள்  அண்ணன் அழகிரி.

ரஜினியிலிருந்து விஜய் வரை தனது செல்லப்புதல்வன் ஸ்டாலினுக்கெதிராக யாரும் அரசியல் களத்தில் இறங்கக்கூடாதென்பதில் அக்கறையாக இருந்தவர் , இருக்கிறவர் கலைஞர். அவரது ஆசைக்கு அவரது இன்னொரு மகனே மண்ணள்ளிப் போடப்போவதை அவர் எதிர்பார்த்திருந்தாலும் தனக்கு முன்னிலையிலேயே அது நடக்க கூடாதென்பதில் அக்கறையாக இருந்தவர், அதனால்தான் ஒருவருக்கு மத்திய அமைச்சர்பதவி, மற்றவருக்கு துணைத்தலைவர் பதவி என பார்த்து பார்த்து செய்தவர்.அழகிரியின் அண்மைக்கால  பேச்சுக்களால் நிலைமையை புரிந்த கலைஞர் இரு பிள்ளைகளும் மோதுவதை பார்க்க விரும்ப மாட்டாரென்பதால் தனது இறுதிக்காலம்வரை தானே தலைவராக இருப்பார் என்று தோன்றுகிறது . அதிகமாக கலைஞரின் காலத்தின் பின்னர் 29 மாநிலங்களை(தெலுங்கானா கணக்கில் இல்லை ) இந்தியாவில் காணலாமென்று தோன்றுகின்றது.


பாக்காம இருக்க முடியலஇதற்கிடையில் கலைஞர் தனது அன்றாட பணிகளை கைவிடவில்லை, அண்மைக்கால பாராட்டு விழாக்களின் நடிகைகளின் நடனங்கள் இல்லாததால் சென்றவாரம் சேப்பாக்கத்துக்கு சியர் லீடேசை பார்க்க சென்றவருக்கு தூரப்பார்வை ஒவ்வாமையால் நேற்று பிரசாந்த் - சினேகா நடிக்கும் 'பொன்னர் சங்கர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று ஒருமணி நேரம் பொழுதை கழித்துள்ளார், இந்தப்படத்திற்கு வசனமும் அவரே எழுதுவதால் எதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார் என்ற கேள்வி எழாது என்பது தலைவருக்கு தெரியாதா என்ன ? கலக்குங்க தலைவா! அப்பிடியே மானாடமயிலாட செட்பக்கம் போனா நமீதாவை நலம் விசாரிச்சதா சொல்லுங்க.தமன்னான்னா இப்போ சன்னுக்கு உசிரு.சன்டிவியின் இன்றைய தெரிவு தமன்னாதான். சுறா, தில்லாலங்கடி போன்ற தமன்னா நாயகியாக நடிக்கும் படங்களை தற்போது வாங்கியுள்ள சண் இதற்கு முன்னரும் கண்டேன் காதலை, அயன் ,படிக்காதவன் போன்ற படங்களை வாங்கியது நினைவிருக்கலாம். சண் தனக்கு பிடித்தமானவர்களை தூக்குவதும் பிடிக்காதவர்களை தாக்குவதும் புதிதல்ல. A.R.ரகுமானுடன் முன்னர் இருந்த பிரச்சனையால் 'அன்பே ஆருயிரே (அ .ஆ) ' படத்தின் பாடலுக்கு முன்பாக ஸ்ரீகாந்த் தேவாவின் 'சாணக்கியா' படப்பாடலை டாப் 10 பாடல்களின் தரவரிசையில் போட்டவர்கள்,அதேபோல வரலாறு படத்தின் பாடல்களுக்கும் முன்பாக தரவரிசையில் வட்டாரம் பட பாடல்களை போட்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்தவர்கள். இரண்டு மாங்காயில் ஒன்று ரகுமான் மற்றவர் அஜித்.

அதேபோல விஜயின் படத்துடன் குறிப்பிட்ட தினத்தில் போட்டிக்கு வரும் பெரிய நாயகனின் படத்திற்கும் தரவரிசையில் முதலிடத்தில்  இருக்கும் விஜயின் படத்திக் குமிடையில் (அது போட்டிக்கு வந்த படமாகவும் இருக்கலாம், அல்லது முன்னரே வெளியாக் ஓடிக்கொண்டிருந்த படமாகவும் இருக்கலாம் ) வேறொரு படம் இருக்கும். அதேபோல விமர்சனங்களிலும் பெரும் பாகுபாடு காட்டப்படுவது வழக்கம். சன்னின் பிடித்தவர்கள் லிஸ்டில் விஜய், சரத்குமார் (முன்னர்) இயக்குனர் பள்ளத்தாக்கு பேரரசு, பரத், ஜெயம் ரவி, தனுஷ்,விஷால், தமன்னா, விஜய் அன்டனி என்ற குறூப்பும் பிடிக்காதவர்கள் லிஸ்டில் அஜித், சிம்பு, ரகுமான்(முன்னர்), விஜயகாந்த் போன்றோரும் முக்கியமானவர்கள்.சிலகாலங்களுக்கு முன்னர் அதிகமான படங்களின் தலைவிதியை தீர்மானித்த 'சன்' இன்று தன் படங்களையே ஓடச்செய்ய முடியாமல் படாதபாடு படுவதை என்னவென்று சொல்வது?

5 வாசகர் எண்ணங்கள்:

Raghu said...

//இதற்காக இவ் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்//

வெரி நைஸ் :).....பெரும்பாலானோருக்கு இந்த‌ attitude இருப்ப‌தில்லை. 'கேவ‌ல‌ம் சினிமாக்கார‌ங்க‌தானே, என்ன‌ வேணும்னாலும் சொல்ல‌லாம்'னு இருக்காங்க‌.

//தமன்னான்னா இப்ப உசிரு//

ஹி..ஹி...என‌க்கும் ;)

மங்குனி அமைச்சர் said...

அந்த தமனா படம் ,,,, ஹி.... ஹி.... ஹி....

r.v.saravanan said...

இயக்குனர் பள்ளத்தாக்கு பேரரசு

ஹி..ஹி

ஞானப்பழம் said...

தமன்னா சரியான போர்ரு பா.. எல்லாப் படத்திலேயும் அவளே நடிச்சா? என்னத்த சொல்றது?

அ.ஜீவதர்ஷன் said...

@ ர‌கு

@ மங்குனி அமைச்சர்

@ r.v.saravanan kudandhai

@ ஞானப்பழம்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)