Friday, March 26, 2010

கூகிள்- சீனா நட்பு ,Twitter ,YouTube


 கூகிள் தனது செயற்பாடுகளை சீனாவில் நிறுத்துவதற்கு முடிவு செய்தது நாம் அறிந்ததே ..  இந்த  விடயத்தில் எனது கருத்துகளை பதிவு செய்யலாம் என நினைகின்றேன். கருத்து மட்டுமே

கூகிள் - சீனா பிரச்சனை (முறுகல் ) முதல் இருந்து வந்தது தான் ஆனால் ஜனவரி  12  கூகிள் மீதான தாக்குதலுடன் பெரிய விடயமானது .மார்ச் 22  தொடக்கம் எந்த தணிக்கையும் இல்லாமல் தனக்கு வரும் தேடலுக்குகான தரவுகளை வெளியிட தொடங்கி உள்ளது . இதை   google.cn முடியாதலால்  google.com.hk (Hong Kong) கொண்டு தேடலுக்குகான தரவுகளை தருகின்றது, simplified Chinese,traditional Chinese  இரண்டு மொழிகளிலும் google.com.hk  தரவுகளைப் பெறலாம் . இதனால் கூகிள் சேவைகள் சீனாவுக்குள் தடைசெய்யப்  பட்டு வருகின்றன . சீனா அரசு   எந்த சேவைகளை  தடை செய்கின்றது என்று அதை கூகிள் இங்கே குறிப்பிடுகின்றது  21 / 3/10 தொடக்கம் ஒவ்வொரு நாளும் அதை  update செய்கின்றது  


இது தனியே கூகுளுக்கு எதிரான நடவடிக்கைய மட்டும் இருக்கமுடியாது பின்னால் பல ராஜதந்திரங்கள் உள்ளன


சீனா - அமெரிக்காவுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியே. சீனா அரசு வேறு  நாட்டின் கம்பனிகளை தனது நாட்டுக்குள் தவிர்த்து வந்தது, முக்கியமாக அமெரிக்கா. உதரணமாக ,ஹாலிவுட் படங்களை தடை செய்த வரலாறுகள் உள்ளன .காரணம் ..
இவற்றின் செயற்பாடுகள் சீனா அரசுக்கு எதிராக அமையும் என்பதால் தான். எவ்வாறு என்றால்  " சரி கூகிள் சீனாவில் செயற்படுகிறது என்றே வைத்து கொள்ளவோம் சீனாவில் இணையத்தை பயன்படுதுவோரினதும்  ,சீனாவில் இருந்து கூகுளின் சேவைகளை பயன்படுத்துவோரின்  அனைத்து நடவடிக்கைகளையும்  கண்காணிக்கவும் , விபரங்களையும் சேமிக்கவும் கூகிளினால் முடியும். உதரணமாக ஒரு அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தால் மக்களின் எதிர்ப்பு எந்தளவுக்கு  இருந்தது, உண்மையில் என்ன நடந்தது, மக்களின் கருத்து என்ன, யார் யார்  சம்மந்த பட்டுள்ளார்கள் ,  ஆதாரங்கள் (புகைப்படங்கள் ,வீடியோ  ) என்பன கூகுளின் கைகளுக்கு  செல்வதை தடுக்க முடியாது " இவற்றை யாரும் தமக்கு தேவையான போதும், தமது நடவடிக்கைகள் மாற்றவும் சிறப்பிபதற்க்கும் உதவும்.
சீனா எந்த காரணத்துக்ககவும் தனது குடும்பிய (தலை முடியை ) வேறு ஒருத்தனிடம் கொடுத்துவிடு சிரித்து கொண்டும் இருக்குமா என்ன ????

Hillary Clinton கூகிள்  மீதான தாக்குதலுக்கு  சீனாவிடம்  விளக்கம்  கேட்டது  போன்றன  இதற்க்கு  பின்னால்  அரசியல்  உண்டு   என்பதை  காட்டுகின்றதுஇதனால் தான் சீனா எப்படியாவது கூகிள் வெளியேற்றியே தீரனும் என்ற திட்டம் இப்போது நிறைவேறி உள்ளது. இதனால் தான் கூகுளுக்கு தெளிவான எந்த  பதிலையும் (தாக்குதல் தொடர்பான ) கொடுக்கவில்லை, சீனா அரசு தற்போது தனது திட்டத்தில்  சிறிதளவு வெற்றி பெற்றுள்ளது. நஷ்டம் கூகுளுக்கு தான் . ஆனாலும் கூகிள்  தனது செயற்பாடுகளை சீனாவில் முழுமையாக நிறுத்தவில்லை போல் தெரிகின்றது


இருவருமே   அமெரிக்கன்  ஹி ஹி ஹி .....

எந்த அரசும் தனக்கு எதிரான கம்பனிகளை தனது நாட்டில் செயற்பட விடாது இவ்வாறான  வேறு  பிரச்சனைகள் உள்ளன  Microsoft - Latin American நாடுகள் ,Internet explore - European  union என்று தொடர்கின்றது .

இப்போது கூகுளுக்கு காலம் சரியில்லை Germany, Apple Inc, china என்று எல்லாப் பக்கத்தாலும்  இடி  தான்

"ஆமா சீனாவில் இப்படி எல்லாம் தணிக்கைகள் உள்ளன என்று சீனாவுக்கு செல்ல முன்னே தெரியாத ? , இவ்வளவு நாளும்  நீங்களும்  சேர்ந்து தானே தணிக்கை செய்திங்க !!! இப்ப என்ன புதுசா திடீர் என்று  சீன மக்கள் மீது அக்கறை ... "


You Tube :  ஒரு  நிமிடத்துக்குள்   24 மணித்தியால  அளவுள்ள  வீடியோக்கள்  upload செய்யப்படுகின்றன. இந்த  மைல்கல்லை மார்ச் 17  அன்று youtube  எட்டியுள்ளது
 

click செய்து பெரிதாக்கலாம்
Twitter: தனது 4 வது பிறந்தநாளை மார்ச்  21 கொண்டாடியது   இது தான் முதலாவது  tweet

 Twitter co-founder Jack Dorsey

இன்று ஒருநாளைக்கு 50 million  tweetsssss     ம்ம்ம்ம்....


source: http://googleblog.blogspot.com/ 
            http://youtube-global.blogspot.com
           http://Mashable.com   

8 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான தகவல்கள் அழகிய முறையில்
வாழ்க ! வளர்க

Chitra said...

இப்போது கூகுளுக்கு காலம் சரியில்லை Germany, Apple Inc, china என்று எல்லாப் பக்கத்தாலும் இடி தான்

.......என்னடா இது - கூகுளுக்கு வந்த சோதனை?

கமல் said...

காலத்துக்கேற்ற தகவல்களும் பயனுள்ள விடயங்களும் அருமை. தொடருங்கோ.

chosenone said...

கூகிள்... -சீனா... -அமெரிக்கா...-பனிப்போர் ...என்று உலக அரசியல் மேடயை அக்கு வேற ஆணி வேற பிரிச்சு மேஞ்சுடிங்க ....

Thinks Why Not said...

பயனுள்ள செய்திகள், தொடர்க உங்கள் பணி....

தங்க முகுந்தன் said...

இவ்வார யாழ்தேவி நட்சத்திரப் பதிவராக தெரிவானதற்கு எமது நல் வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்கித் தள்ளுங்கள்!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

தகவல்களை படங்களுடன் அழகாக வழங்கியிருந்தீர்கள்.
இணையத்தில் கிடைக்கும் வசதிகளை உச்ச பயன்பாட்டுடன் உபயோகித்து சிறப்பாகவும், தெளிவாகவும் வழங்கும் உங்கள் முயற்சியை பலரும் கடைப்பிடித்தால் தமிழ் பதிவுலகில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

எப்பூடி..... said...

@ ஹாய் அரும்பாவூர்
@ Chitra
@ கமல்
@ chosenone
@ Thinks Why Not

நன்றிகள்

@ தங்க முகுந்தன்
வாழ்த்துகளுக்கு நன்றிகள்

@ Dr.எம்.கே.முருகானந்தன்
நானும் முடிந்தளவு முயற்சிக்கின்றேன்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)