Monday, March 29, 2010

நுரையீரல்ப்பழம் T.R இற்கு நன்றிகள்.தமிழ் மக்களின் இதயக்கனி, அடடடா அது எம்.ஜி.ஆர் இல்ல , சரி தமிழ் மக்களின் நுரையீரல்ப்பழம் T.ராஜேந்தர் அய்யா அவர்களுக்கு நன்றிகள். எதற்கென்றெல்லாம் ஜோசிக்க தேவையில்லை, அவர் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமையை பெற்றுத்தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவே இந்த நன்றி. உங்களை போல மகான்கள் இல்லாவிட்டால் ஈழத்தவரின் நிலை அதோகதிதான்.

ஆனாலும் நீங்கள் எதற்காக இந்த திடீர் போராட்டத்தை நடத்தினீர்கள் என்று பலருக்கும் புரியவில்லை , ஏன் உங்களுக்கு கூட புரிந்திருக்காது , அதுதான் சார் நீங்க. இது போராட்டமா அல்லது முதல்நாள் அடித்த பீராட்டமா என்ற சந்தேகம் தேவையில்லை, இது நிச்சயம் போராட்டம்தான். அதை மாநில அரசிடம் ஜாடை மாடையாக செல்லமாக கோபப்பட்டமாதிரி கூறிவிட்டு உங்களையே யார் என்று தெரியாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தீர்களே நீங்கள் ஒரு லெஜன்ட் சார்.

ஆனால் சிலர் அரட்டை அரங்கம் போரடித்ததால் நீங்கள் இவ்வாறு வீதியில்இறங்கி பினாத்துவதாக கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இது உங்களது உலக அரசியலின் கன்னிப்பயணம் என்பது பலருக்கும் தெரியாது, அதாவது அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்கான முதல் முயற்சி என்று பொருள். 2011 இல் முதல்வராவீர்கள் என எண் ஜோதிடம் கூறியதால் உங்களது பெயரை விஜய T. ராஜேந்தர் என மாற்றிய நீங்கள் எங்களுக்காக ஈழத்தின் பெயரையும் கொஞ்சம் எண் ஜோதிட முறைப்படி மாத்திக்கொடுங்களேன் .


ரஜினி, விஜயகாந்த் ,ஜெயலலிதா போன்ற தமிழக (மாநில ) பிரபலங்களை விடுத்து இப்பொது மத்திய அரசை குறிவைத்த உங்களது வளர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது, எதற்கு மற்றவர்களிடம் கெஞ்சவேண்டும்? நீங்கள் 2011 இல் முதல்வராகும்போது எல்லா உரிமைகளையும் வாங்கிக்கொடுங்க, நாங்கள் உங்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். அப்புறம் உங்களை சிலர் கரடி என்கிறார்கள் , இது மிகவும் கேவலமான செயல் , ஆனால் இந்த நிலை சில காலங்களுக்குத்தான், நாளை கரடிகள் மான நஷ்ட வழக்கு போடும்போது உங்களை கரடி என அழைத்தவகள் தலைமறைவாகுவார்கள் என்பதுமட்டும் உறுதி

ஈழ மக்களின் துயர்துடைக்க வந்த அண்ணன் T.R அவர்களின் சின்னமான.......... அடடா நீங்கதான் இலங்கையில தேர்தல்ல போட்டியிடவே இல்லையே , இப்ப இந்தியாவில கூட தேர்தல் நேரமில்லை , அப்புறம் எதுக்கு இந்த திடீர் போராட்டம்?

எதாயிருந்தாலும் தலைவன் ஒரு தூர நோக்கமிலாமல் செய்யமாட்டான் என நம்மை நாமே தேற்ற வேண்டியதுதான்.

10 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

ஏ ....டண்டணக்கா..... டண்டணக்கா...... "எப்பூடி" என்னை உசுப்பி விடலாம், என்று அறிக்கை விட போகிறார்.....

தமிழ் மதுரம் said...

அதை மாநில அரசிடம் ஜாடை மாடையாக செல்லமாக கோபப்பட்டமாதிரி கூறிவிட்டு உங்களையே யார் என்று தெரியாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தீர்களே நீங்கள் ஒரு லெஜன்ட் சார்//


தமிழக அரசியல் ஒரு சினிமாப் படம் மாதிரி என்று சொல்லலாம். எப்பவுமே பல்சுவை அம்சங்கள் கலந்து போரடிக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் பாருங்கள். அதனை வைத்துத் தான் நான் சொன்னேன். இந்தப் படத்தில் ராஜேந்தர் போடும் வேசம் என்ன புதுசோ? எமக்கெல்லாம் இது பார்த்துப் பார்த்துப் பழகிப் போட்டுதப்பா.

ஹாய் அரும்பாவூர் said...

அப்புறம் எதுக்கு இந்த திடீர் போராட்டம்?"

அப்புறம் இவரை எல்லாம் மறந்துட்டா

ஸ்ரீநி said...

தலைவரின் எதிர்கால கோ பா செ " எப்புடி" வாழ்க வாழ்க !!!!!

r.v.saravanan said...

PHOTO SUPER..........

அ.ஜீவதர்ஷன் said...

@ Chitra

@ கமல்

@ ஹாய் அரும்பாவூர்

@ ஸ்ரீநி

@ r.v.saravanan kudandhai

உங்கள் அனைவரதும் பின்னூட்டங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

ஞானப்பழம் said...

ஏன் இந்த கொலைவெறிங்கறேன்? அவருக்கு எதோ விளம்பரம் வேண்டும்னு அப்படிச் செய்திருப்பார்.. அதப்போய்.. சின்னா புள்ளைய இப்படியா தாக்கறது?

@ஸ்ரீநி : "கோ பா சே" என்றால்?

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//ஏன் இந்த கொலைவெறிங்கறேன்? அவருக்கு எதோ விளம்பரம் வேண்டும்னு அப்படிச் செய்திருப்பார்.. அதப்போய்.. சின்னா புள்ளைய இப்படியா தாக்கறது?//

ஓகே.

// @ஸ்ரீநி : "கோ பா சே" என்றால்?//

கொள்கை பரப்பு செயலாளர். அது கொ.ப.செ என்று வரும்.

Jayadev Das said...

\\எதற்கென்றெல்லாம் ஜோசிக்க தேவையில்லை,\\ யோசிக்க என்பதை ஜோசிக்க என்று எழுதுகிறீர்களா!! அதுசரி, ஜப்பானை எதற்கு யப்பான் என்கிறீர்கள்?!! :))

Jayadev Das said...

T. ராஜேந்தரின் கஜினி ஸ்டைல் படம் பிரமாதன் [முக்கியமா அதிலுள்ள எழுத்துக்கள்!!]. இவரு மத்திய அரசுக்கு எதிரா போராட்டம் பண்றார!! நான் கூட ஏதாவது ஒரு முட்டு சந்துக்குள்ள போயி ஒபாமாவுக்கு எதிரா போராட்டம் பண்ணலாம், என்ன நஷ்டமாப் போச்சு!! ஹா..ஹா...ஹா..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)