Saturday, March 20, 2010

தம்பி 'சங்கா' நாங்க இன்னும் சிங்கங்கள்தான்"என்னை மீண்டும் அணியில் இணை" இது எச்சரிக்கை இல்லை கட்டளை என்பதை சங்காவுக்கு செய்முறையில் எடுத்து காட்டியுள்ளார் வாஸ். நீண்ட நாட்களுக்கு பின்னர் கிரிக்கெட்டில் ஒரு சந்தோசமான நாள், சங்ககாரவின் ஸ்டம்பை வாசின் இன்ஸ்விங் சிலோவ் டெலிவெரி(inswing slow cutters) பதம்பார்த்ததும் அதை தொடர்ந்து வாஸ் சிரித்த அந்த நக்கல் சிரிப்பும் ஆயிரம் அர்த்தங்களை சங்காவிற்கு சொல்லி இருக்கும். இதற்கு முன்னர் மஹாரூப்பும் சங்காவை வீழ்த்தியிருந்தாலும் இது என்னமோ அதைவிட விசேடமாக உள்ளது.IPL போட்டிகளின் முதல் மூன்று போட்டிகளிலும் எட்டு விக்கட்டுகளை கைப்பற்றி இருக்கும் வாஸ் தற்போது அதிக விக்கட்டுகள் பெற்றோரில் முதலிடத்தில் உள்ளார்.வயது ஒரு தடையல்ல என்பதை வாஸும் , முரளியும் இதுவரை நிரூபித்துள்ளதைபோல சனத்தும் நிச்சயம் எதிர்வரும் போட்டிகளில் நிரூபிப்பார். இன்றைக்கும் வாசின் இடத்தடோ, சனத், முரளியின் இடத்தையோ நிரப்ப யாரும் இல்லை. உடல் ஒத்துளைக்குமட்டும் விளையாட தகுதியுடைய இலங்கையின் மூன்று முக்கிய வீரர்களை இனியாவது அவமதிக்காமல் பயன்படுத்தினால் நல்லது. இல்லாவிட்டால் நஷ்டப்படபோவது இலங்கை அணியே. சங்ககார , மஹேலா துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் (அரசியல் வேலைகளை விடுத்து ) இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.இன்றைக்கும் கில்கிரிஸ்ரையோ , ஹெய்டனயோ மிஞ்சும் அளவிற்கு ஆரம்ப துடுப்பாட்டவீரர்கள் ஆஸ்திரேலியாவில் யாரும் இல்லை. எதற்காக இரண்டு சிங்கங்களும் ஒய்வு பெற்றனவோ தெரியவில்லை.அதிலும் கில்கிறிஸ்ட் ஒய்வு பெற்றதில்(2007) இருந்து மேலும் ஐந்து வருடம் ஒருநாள் போட்டிகளிலும் T/20 போட்டிகளிலும் மட்டுமாவது விளையாடி இருக்கமுடியும். மனிதர் அவ்வளவு உடற்தகுதியுடனும் சுறுசுறுப்புடனும் அதே பழைய போமுடனும்தான் இருக்கிறார். இப்போது கில்கிறிஸ்ட் நினைத்தாலும் மீண்டும் சர்வதேச போட்டிகளில் கலதுகொண்டு (ஒருநாள் போட்டிகளிலும் T/20 போட்டிகளிலும்) இன்னுமொரு ரவுண்டு கலக்கலாம், அப்படி நடந்தாலென்ன அடுத்த உலககிண்ணமும் ஆஸ்திரேலியாவுக்கே போய்விடும்.

T/20 போட்டிகள் கிரிக்கெட் போலல்லாது ரெஸ்லிங் போல இருந்தாலும் கிரிக்கற் சரியாக தெரியாத அம்மாக்களும் இதை ரசிப்பது T/20 யின் பலமே.முதல்வார IPL இல் (எனது பார்வையில்)

எதிர்பார்த்ததற்கேற்ப பிரகாசிக்கும் வீரர்- சேவாக்

எதிர்பாராதளவுக்கு பிரகாசிக்கும் வீரர் - ஜக் கலிஸ்

எதிர்பார்த்து சொதப்பிய வீரர் - டில்ஷான்

எதிர்பார்த்ததற்கேற்ப பிரகாசிக்கும் அணி - மும்பாய்

எதிர்பாராதளவுக்கு பிரகாசிக்கும் அணி - பெங்களூர்

எதிர்பார்த்து சொதப்பிய அணி - டெல்லி

இன்னமும் ஒவ்வொரு அணிக்கிடையில்    10 போட்டிகள் வரை உள்ளதால் நிச்சயம் இவற்றில் மாற்றம் ஏற்படும்

8 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

alright!

SShathiesh-சதீஷ். said...

yes sir!!!!!!!

Unknown said...

அந்த வாஸ் சிரித்த சிரிப்பு உண்மையில் ஆயிரம் அர்த்தங்களை சங்ககாரவுக்கு சொல்லி இருக்கும்

அ.ஜீவதர்ஷன் said...

Chitra


//alright!//

ok

...................................

SShathiesh

//yes sir!!!!!!!//

ok,ok

.......................................

A.சிவசங்கர்

//அந்த வாஸ் சிரித்த சிரிப்பு உண்மையில் ஆயிரம் அர்த்தங்களை சங்ககாரவுக்கு சொல்லி இருக்கும்//


நம்மாளுதானா நீங்க?

Atchuthan Srirangan said...

ur correct எப்பூடி......

தமிழ் மதுரம் said...

வயது ஒரு தடையல்ல என்பதை வாஸும் , முரளியும் இதுவரை நிரூபித்துள்ளதைபோல சனத்தும் நிச்சயம் எதிர்வரும் போட்டிகளில் நிரூபிப்பார்//ஆஹா நீங்கள் என்ன சொன்னாலும் நான் இதை நம்ப மாட்டேன். சனத் வந்து எங்கடை மெல்பேண் காலநிலை மாதிரி. ஒரு நேரம் அடிப்பார். ஒரு நேரம் ஓ வென்று போய் விடுவார். கிறிக்கட் பகிர்வுகள் கலக்கல்.

அ.ஜீவதர்ஷன் said...

கமல்

//ஆஹா நீங்கள் என்ன சொன்னாலும் நான் இதை நம்ப மாட்டேன். சனத் வந்து எங்கடை மெல்பேண் காலநிலை மாதிரி. ஒரு நேரம் அடிப்பார். ஒரு நேரம் ஓ வென்று போய் விடுவார்.//


இதுதான் சனத்தோட இன்றைய பிரச்சினையே , வளத்தா குடுமி அடிச்சா மொட்டை என்பதுபோல அடிச்சா தொடர்ந்து கொஞ்ச மச் போட்டுத்தாக்கிறது, பிறகு அப்பிடியே ஒரேயடியா கைவிடுறது.

அ.ஜீவதர்ஷன் said...

Atchu

// ur correct எப்பூடி......//

thanks Atchu

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)