Monday, March 15, 2010

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்

இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் இன்றைய நிலையில் மூன்றுவயது குழந்தை முதல் எண்பது வயது கிழம் வரைக்கும், மூடை சுமக்கும் தொழிலாளியில் இருந்து முதலாளிகள் வரைக்கும், ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரைக்கும் எல்லோரும் பயன்படுத்தும் சினிமா வசனங்கள் அதிகமாக வடிவேலு பயன்படுத்தியதாகவே இருக்கின்றது, பதிவுலகமும் இதற்கு விதிவிலக்கல்ல.ஆரம்பகாலங்களில் கவுண்டரின் கால்களுக்குள் மிதிபடும் பாத்திரங்களை இருக்கும்போதும் சரி, பின்னர் குழுவாக காமடி பண்ணும்போதும் சரி, அதன் பின்னர் நாயகனின் நண்பனாக வரும்போதும் சரி வடிவேலு சிரிக்க வைத்தாலும் இப்படி சினிமா ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் இன்றைய வடிவேலுவின் தாக்கங்கள் 'வின்னரில்' இருந்துதான் ஏற்பட்டதென்று நினைக்கிறேன் வின்னருக்கு பின்னர் கிரி, தலைநகரம் , மருதமலை,இம்சை அரசன், போக்கிரி போன்ற படங்களே வடிவேலுவின் வசனங்களை அதிகமாக பலரும் பேசும்படி வைத்தது. ஆனால் வடிவேலுவின் சுந்தர்.c , சுறாச் போன்றோருடனான பகைமையால் மேற்குறிப்பிட்ட படங்களுக்கு பின்னர் முழுமயான நகைச்சுவை படம் எதுவும் வடிவேலுவுக்கு அமையாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவதொரு படத்தில் வடிவேல் பேசும் வசனம் பிரபால்யம் ஆகிவிடுகிறது. இவற்றையும் தாண்டி இப்போதெல்லாம் வடிவேலுவுடன் படத்தில் பேசும் சக நடிகர்களின் வசனங்களும் பிரபல்யமாகிவிடுகின்றன.இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள்தான், காமடிக்கென்று இரண்டு முக்கிய சானல்கள், பாட்டு சானல்களில் இரவு ஒன்பது மணிக்கப்புறம் காமடிக்காட்சிகள், இவற்றைதவிர ஏனைய தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது காமடிக்காட்சிகள் ஒளிபரப்படுகின்றன. அதுவும் குறிப்பிட்ட படங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதால் அது தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் மனதில் தானாகவே பதிந்துவிடுகிறது . இதனால் பேச்சுக்களுக்கிடையில் காமடியாக இந்த வசனங்கள் ஒரு flow வில் தானாக வருகின்றன.. நேரடியாக பதில் கூற முடியாத விடயத்தை சமாளிக்கவும் இந்த வடிவேலு வசனங்கள் உதவுகின்றன. அதேபோல யாரவது கிண்டல் பண்ணும்போதும் அதிலிருந்து தப்பிக்கவும் பதிலுக்கு போட்டுத்தாக்கவும் வடிவேலு வசனங்கள் உதவுகின்றன, இது உண்மையில் ஒரு ஆரோக்கியமான விடயமாகவே தெரிகிறது.

அதிகமாகனவர்கள் பேசும் வடிவேலு, மற்றும் வடிவேலுவிடம் பேசுவோரின் வசனங்கள்"முடியல,"
"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே "
"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"
"நான்   அப்படியே ஷாக்  ஆயிட்டேன் !!"
"வடை போச்சே "
"தம்பி டீ இன்னும் வரல "
" நான்... என்னை சொன்னன் "
"வரும்.. ஆனா வராது "
"அவளவு சத்தமாவா..... கேக்குது "
"ஆஹா  ஒரு  குருப்ப  தான்ய  அலையுராங்காய  "
"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "
"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "
" மணிக் கொரு தடவை  மங்குனி அமைச்சர்  என்று   நிரூபிக்கீரீர்  !!! ."
என்  இனமடா நீ !!  "
"க க க போ......"
"ஆணியே  புடுங்க வேண்டாம் "
" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துது  " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு )
"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீற்ராண்டா "
"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு " 
"அவ்வவ்வ்வ்வ்.... "
"என்னா வில்லத்தனம் "
"அது போன மாசம் "
"வேனாம் வலிக்குது "
"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "
"கிளம்பீட்டாங்கையா  கிளம்பீட்டான்   " 
"Building  storngku  basement weakku"
" why  blood ? same blood"
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் தவறவிட்டவற்றை (அதிகம் உள்ளது ) பின்னூட்டலில் கூறுங்கள்.

இதுதவிர வடிவேலின் சில பிரபல்யமான பாத்திரங்களின் பெயர்கள்

கைப்பிள்ளை, வருத்தப்படாத வாலிபர்சங்கம்(இது வடிவேல் சார்ந்த ஒரு குழுப்பெயர் ) , சினேக்பாபு , வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி(Body சோடா ).....   இவ்வளவு தான் உடன ஞாபகத்துக்கு வந்தித்து, உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டலில் சொல்லுங்க....

"கையோ!! கையோ !! முடியல.....  முட்டிகிட்டு   நிக்கிது "

26 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

ஹையோ........ ஹையோ.......

கிரி said...

நீங்க சொன்ன மாதிரி வின்னர் தான் வடிவேலுக்கு திருப்பு முனை தந்த படம். கிரி தலைநகரம் அவரை நன்கு உயர்த்தி விட்டது காமெடியில் .. இப்ப நேரம் சரி இல்லை வடிவேலுக்கு..ம்ம்ம்

டக்கால்டி said...

ஏம்பா போன வாரம் என்னை அடிக்க வரீங்கன்னு சொன்னீங்க வரவே இல்ல.. (வின்னர்)
ஹை...கருவாட் ... ஐ திங்... ஒன்லி யு பாசிபிள் ...(சிங்காரவேலன்)
என்ன இது சின்ன புள்ளத் தனமா இருக்கு, குண்டக்க மண்டக்க (பாரதி கண்ணம்மா)
என்ன கைய புடிச்சு இழுத்தியா?, தலைவா மாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடிச்சுட்டாங்களே... (நேசம் புதுசு)

இப்படி பல இருக்கு...

மதுரை சரவணன் said...

உண்மை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

பதிவு எழுத "உட்கார்ந்து யோசிப்பாங்களோ "

r.v.saravanan said...

வடிவேலு : நல்ல பதிவு இதை எழுதியதற்காக குருவி ரொட்டியும்
குச்சி மிட்டாயும் வாங்கி தாரேன்

chosenone said...

சபாஷ்!
எப்பூடி நீ எங்கள் இனமடா ....
நான் வடிவேலுவின் harcore ரசிகன் .
நான் உங்கள் blog ஐ முதமுதல்ல பார்த்ததும் follow பண்ண காரணமே உங்கள் "எப்பூடி..." தலைப்பு தான்.(அதுவும் எங்க தலையின் பொன்மொழிகளில் ஒன்று தான்.)

இந்தியாவில் rj க்கள் முதல் europeஇல் டி கடை வரை தமிழ் பேசும் யார் ஜோக் அடிச்சாலோ மொக்கை போட்டாலோ அது அவங்களே அறியாமலே வடிவேலுவின் style க்கு பேசுவது ஒரு நடிகனுக்கு எவளவு பெரிய வெற்றி.

சில வர்ஷங்களுக்கு முதல் நல்ல நகைச்சுவை என்றால் சிரிக்கவைக்கணும் சிந்திக்கவும் வைக்கணும் என்று புது புது theory எல்லாம் சொனார்கள்(வெங்காயம்!!!)
என்னை இந்தபோழுதில் குலுங்ககுலுங்க யாரால் சிரிக்க வைக்க முடியுமோ அது தான் சிறந்த நகைச்சுவை என்பேன் .
காரணம் நீங்கள் சிரிப்பதற்கான முழு காரணம் உங்களுக்கு கூட தெரியாது .
it just goes deep down to your subconscious level.
சிந்திக்க வைக்க நகைச்சுவை ஒரு நல்ல கருவியே தவிர நல்ல நகைச்சுவைக்கான அளவுகோல் எல்லாம் இல்லை .

எந்த விதமான அடிப்படை காரணமே இல்லாமல் ஒரு மனுஷன் பார்த்தாள்,நடந்தால்,அழுதால்,சிரித்தால்,புலமபினால்....அவ்வளவு ஏன் திரையில் தோன்றினாலே சிரிப்பு வருவது எவளவு அற்புதமான விஷயம்.. இல்ல...? !!!!!!

hats-off to வடிவேலு ....

அ.ஜீவதர்ஷன் said...

Chitra

//ஹையோ........ ஹையோ.......//

ஏன் ?

.................................

கிரி

//நீங்க சொன்ன மாதிரி வின்னர் தான் வடிவேலுக்கு திருப்பு முனை தந்த படம். கிரி தலைநகரம் அவரை நன்கு உயர்த்தி விட்டது காமெடியில் .. இப்ப நேரம் சரி இல்லை வடிவேலுக்கு..ம்ம்ம்//

சிங்கமுத்துவிடமிருந்து வடிவேல் பிரிந்ததும் நன்மைக்குதான், இல்லாவிட்டால் ஒரே காமடியை திரும்பத்திரும்ப தந்து கழுத்தறுப்பார்கள்.

..................................

டக்கால்டி

//ஏம்பா போன வாரம் என்னை அடிக்க வரீங்கன்னு சொன்னீங்க வரவே இல்ல.. (வின்னர்)
ஹை...கருவாட் ... ஐ திங்... ஒன்லி யு பாசிபிள் ...(சிங்காரவேலன்)
என்ன இது சின்ன புள்ளத் தனமா இருக்கு, குண்டக்க மண்டக்க (பாரதி கண்ணம்மா)
என்ன கைய புடிச்சு இழுத்தியா?, தலைவா மாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடிச்சுட்டாங்களே... (நேசம் புதுசு)

இப்படி பல இருக்கு...//


கலக்கல்

........................................

Madurai Saravanan சொன்னது…

//உண்மை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்//

நன்றி
........................................

r.v.saravanan kudandhai


//பதிவு எழுத "உட்கார்ந்து யோசிப்பாங்களோ "//

நாங்கெல்லாம் ஓடுற ரெயினை ஒத்த கையாலேயே நிப்பாட்டினவங்க அதுவும் லெப்டு கையாள நம்ம கிட்டயேவா?


//r.v.saravanan kudandhai சொன்னது…

வடிவேலு : நல்ல பதிவு இதை எழுதியதற்காக குருவி ரொட்டியும்
குச்சி மிட்டாயும் வாங்கி தாரேன்//

இந்த அவமானம் உனக்கு தேவையா (விரலை என்னை நோக்கி காட்டி)

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//எந்த விதமான அடிப்படை காரணமே இல்லாமல் ஒரு மனுஷன் பார்த்தாள்,நடந்தால்,அழுதால்,சிரித்தால்,புலமபினால்....அவ்வளவு ஏன் திரையில் தோன்றினாலே சிரிப்பு வருவது எவளவு அற்புதமான விஷயம்.. இல்ல...? !!!!!!//

காமடியனையும் தாண்டி வடிவேலு ஒரு மிக சிறந்த நடிகன்.பிரச்சினைகளில் இருந்து மீண்டுவந்து திரும்பவும் ஒரு மெகா ரவுண்டு வருவார் நம்ம தலை.

சிநேகிதன் அக்பர் said...

சங்கமே நஷ்டத்துல ஓடிக்கிட்டிருக்கு.

நல்லாருக்கு எப்பூடி.

அ.ஜீவதர்ஷன் said...

அக்பர்

//சங்கமே நஷ்டத்துல ஓடிக்கிட்டிருக்கு.

நல்லாருக்கு எப்பூடி.//


நன்றிங்க ..

தெய்வமகன் said...

நல்லா தானே போய்கிட்டு இருந்தது... திடீர்னு ஏன் இந்த கொலை வெறி?

SShathiesh-சதீஷ். said...

நல்ல பதிவு. ரசித்தேன். ஒரு வசனத்தை விட்டு விட்டீர்கள். இவை எல்லாவற்றுக்கும் முன் வந்த பகவதி படத்தில் இடம்பெறும் கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்,வந்திட்டான்யா வந்திட்டான் போன்ற வசனங்களும் பிரபலம் என நினைக்கின்றேன்அந்த எம்.ஜி.ஆர்,ரஜினி வரிசை தான் கொஞ்சம் உதைக்கிது. வேண்டுமெண்டே போட்டது போல நடத்துங்க. நடத்துங்க. .

r.v.saravanan said...

வடிவேலு : நல்ல பதிவு இதை எழுதியதற்காக குருவி ரொட்டியும்
குச்சி மிட்டாயும் வாங்கி தாரேன்//

இந்த அவமானம் உனக்கு தேவையா (விரலை என்னை நோக்கி காட்டி

நான் ஜாலியாக தான் சொன்னேன் சீரியஸ் ஆக வேண்டாம் PLEASE

அ.ஜீவதர்ஷன் said...

தெய்வமகன்

//நல்லா தானே போய்கிட்டு இருந்தது... திடீர்னு ஏன் இந்த கொலை வெறி?//

ஹலோ , நான் சீடியஸா பேசிக்கிட்டிருக்கிரன் ("முடியாம ஆஸ்பத்திரியில படுத்திருக்கிரியா" என்று கேட்காதீர்கள்) :-)

..................................

SShathiesh

//நல்ல பதிவு. ரசித்தேன். ஒரு வசனத்தை விட்டு விட்டீர்கள். இவை எல்லாவற்றுக்கும் முன் வந்த பகவதி படத்தில் இடம்பெறும் கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்,வந்திட்டான்யா வந்திட்டான் போன்ற வசனங்களும் பிரபலம் என நினைக்கின்றேன்அந்த எம்.ஜி.ஆர்,ரஜினி வரிசை தான் கொஞ்சம் உதைக்கிது. வேண்டுமெண்டே போட்டது போல நடத்துங்க. நடத்துங்க. .//

அவரவருக்கு அவரவர் சோலி, ஹ்ம்ம். ஓகே ஓகே

.............................

r.v.saravanan kudandhai

//நான் ஜாலியாக தான் சொன்னேன் சீரியஸ் ஆக வேண்டாம் PLEASE//

நீங்கவேற, நான் ஏங்க சீடியசாக போறன். இதுவும் வடிவேலுவின் வசனம்தான்.

ரமேஷ் கார்த்திகேயன் said...

பாஸ் இவங்க எபவுமே இப்படிதான்

ஞானப்பழம் said...

Airtel super singer-இல் குட்டிப் பய்யன் சிறீகாந்த் நடுவர்களைப் பார்த்து "அவங்க ரொம்ப நல்லாவங்க"ன்னு சொன்னது நியாபகம் இருக்குதா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு நினைக்கிறீங்க? "எவ்வளோ தப்பா பாடினாலும் என்ன போட்டியில் இருந்து நீக்கவே மாட்டிங்கறாங்க.. நீங்க ரொம்ப நல்லவங்க"...

அ.ஜீவதர்ஷன் said...

ரமேஷ் கார்த்திகேயன்

//பாஸ் இவங்க எபவுமே இப்படிதான்//

றைர்று விடு(ங்க)

.......................................

ஞானப்பழம்

//Airtel super singer-இல் குட்டிப் பய்யன் சிறீகாந்த் நடுவர்களைப் பார்த்து "அவங்க ரொம்ப நல்லாவங்க"ன்னு சொன்னது நியாபகம் இருக்குதா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு நினைக்கிறீங்க? "எவ்வளோ தப்பா பாடினாலும் என்ன போட்டியில் இருந்து நீக்கவே மாட்டிங்கறாங்க.. நீங்க ரொம்ப நல்லவங்க"...//

ஏன் இந்த கொலைவெறி ?

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

மாடா ,தேங்காய் கட தேனப்பன் ,மாஸ்டர் மாரியப்பன், இவ்வளவுதான் எனக்கும் தெரியும்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் நு பெரியவங்க வடிவேலுவை மனதில் வைத்து தான் சொல்லி இருப்பங்களோ

Varthagaulagam said...

உட்றா உட்றா சுனாபானா (சுப்பையா பாண்டியா)

Robin said...

உண்மை.

ஜோ/Joe said...

இது போல எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் மக்கள் பயன்படுத்தியதா சொன்னீங்க ..எந்த வசனங்கள் ? இது போல கொஞ்சம் லிஸ்ட் போடுங்க பார்ப்போம்.

vino said...

தயவு செய்து சொல்லுங்கடா.. எதுக்குடா நான் சரி பட்டு வர மாட்டேன்?

எப்பூடி.. said...

@ karthikeyan

@ Moorthy

@ Robin

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்

.................................................

ஜோ/Joe

//இது போல எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் மக்கள் பயன்படுத்தியதா சொன்னீங்க ..எந்த வசனங்கள் ? இது போல கொஞ்சம் லிஸ்ட் போடுங்க பார்ப்போம்.//

நீங்க சிவாஜி ரசிகரா இருக்கலாம்,அதுக்காக வடிவேல பெருமைப்படுத்திறத்துக்காக ஒரு பொலோவில எம்.ஜி.ஆர் பெயர சேர்த்ததற்கு இம்புட்டு டீப்பா நோண்டப்படாது, ஓகே -:)

.................................................

வினோ

//தயவு செய்து சொல்லுங்கடா.. எதுக்குடா நான் சரி பட்டு வர மாட்டேன்?//

மை பெஸ்ட்டு கிளைண்டு,பட் நோ பீஸ் :-)

விஷாலி said...

"யாருக்கோ"

இப்படிக்கு தீப்பொறி திருமுகம் என்கிற வடிவேலு.

ஐயையோ நான் தமிழன் said...

"இதுதான் அழகில மயங்கி விழுறதா?...."
(தலை நகரம்)

"இது வரைக்கும் என்னை யாரும் தொட்டதில்ல....."
(வின்னர்)

"எங்களுக்கும் அடிதடி அரசியல் பண்ணத்தெரியும்..... ஆனால் நாங்க பண்ண மாட்டோம்.......... ஏன்னா............. பண்ணத்தெரியாது எங்களுக்கு........."
(எல்லாம் அவன் செயல்)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)