Saturday, March 27, 2010

பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்

இது நடந்தால் எப்படி இருக்குமென நாம் நினைக்கும் ஒரு விடயம் நம்மைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்.தனுஷுக்கு அது நடந்துள்ளது.தனுஷை மனதில் வைத்து ஒரு ஸ்க்ரிப்டை உருவாக்கிய இயக்குனர் இமயம் அதை தனுஷிடம் கூறியுள்ளாராம்.ஆனால் தனுஷ் அதை வாசிக்கக்கூட விரும்பவில்லையாம்.ஒப்பந்தமாகியுள்ள படங்கள் முடிந்தவுடன் கால்ஷீட் தருவதாகக் கூறியுள்ளாராம்.ஸ்டுடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்துக்குக் கூட்டிவந்த பாரதிராஜா தலைமுறை இடைவெளி காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளார்.இதற்குக் காரணம் முன்னணி நாயகர்கள் யாரும் அண்மைக்காலத்தில் இவருடன் கை கோர்க்கவில்லை.வளர்ந்துவரும் முன்னணி நாயகர்களுள் ஒருவரான தனுஷ் இம்முறை கை கோர்ப்பது பலமாக இருக்கும்.


பாரதிராஜாவின் இறுதிப்படமான 'பொம்மலாட்டம்' வர்த்தகரீதியாக பெரிதாக வெற்றியடையாவிடினும் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.ஆனாலும் பாரதிராஜாவின் முத்திரையான கிராமத்து வாசனை அவரது அண்மைக் காலப் படங்களில் மிஸ்ஸிங்.அறிமுக காலத்தில் இலக்கணங்களை உடைத்து வெற்றி நாயகனாக வலம் வந்த தனுஷுக்கு விழுந்த தொடர் அடிகளின் பின் 'திருவிளையாடல் ஆரம்பம்' படமே தனுஷுக்கு மறு வாழ்வுதந்தது.அதன் பின் 'பொல்லாதவன்' தவிர்த்து வித்யாசமான கதைக் களமேதிலும் தனுஷ் நடிக்கவில்லை.பாரதிராஜா கிராமத்து களமொன்றை கையில் எடுக்கும் பட்சத்தில் அதற்கு அப்படியே பொருந்திவரும் தனுஷின் தோற்றமும் நடிப்பும் நிச்சயம் ஒரு விருந்தாகவிருக்கும்.

ஏற்கனவே பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.படம் ஓரிரு நாட்களில் பெட்டிக்குள் சுருண்டாலும் தனுஷ் தனது காரியரைத் திரும்பிப் பார்க்கும் போது ஜாம்பவான்களோடு இணைந்து பணியாற்றியது பசுமையான நினைவுகளாகவிருக்கும். படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் ஏனையோர் பற்றி எந்த தகவலும் இல்லை.ஆனால் இளையராஜாவின் இசையில்லாத தனது படைப்புகளில் உயிரில்லையென பாரதிராஜாவே ஒரு விழாவில் கூறியிருந்தார்.இசை ராஜாவும் இயக்குனர் ராஜாவுமிணைந்து கிராமத்துக்கு நம்மை அழைத்து சென்றால் தனுஷின் வாழ்வில் மறக்க முடியாத படமா இது இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

7 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

"பாரதிராஜா கிராமத்து களமொன்றை கையில் எடுக்கும் பட்சத்தில் அதற்கு அப்படியே பொருந்திவரும் தனுஷின் தோற்றமும் நடிப்பும் நிச்சயம் ஒரு விருந்தாகவிருக்கும்"
நிச்சயமாக தனுஷ் பாரதிராஜா ஒரு காவியத்தை கொடுக்க வாழ்த்துக்கள்

தமிழ் மதுரம் said...

தமிழ் சினிமா வரலாற்றில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து எனும் கூட்டணி பெருமையாகப் பேசப்பட்டு வந்தது. அதுவும் இம் மூவரும் இணைந்து வழங்கிய மண் வாசனை கலந்த பாடல்கள் இன்றும் கேட்கும் போது காதில் தேனினைப் பாய்ச்சுகின்றன.ம்.... பொறுடத்திருந்து பார்ப்போம்... இந்த இருவரின் கூட்டணி எவ்வாறு அமையப் போகிறது என்று?

ஞானப்பழம் said...

என்னதான் பாரதிராஜா, இளையராஜா என்று இருந்தாலும்...
அந்த காலத்தில் பிரபலமான கிராமத்து கதைக் களங்கள், இந்த காலத்திற்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே!!

தமிழ் மதுரம் said...

வணக்கம் நண்பா! தாங்கள் யாழ்தேவித் திரட்டியில் நட்சத்திரப் பதிவாளராக மிளிர்ந்து கொண்டிருப்பதை இப்போது தான் பார்த்தேன். எனது பிந்திய வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பல பின்னூட்டக் கும்மிகள் களை கொட்ட நீங்கள் நிறையப் பதிவுகளைப் பகிர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

r.v.saravanan said...

இசை ராஜாவும் இயக்குனர் ராஜாவுமிணைந்து கிராமத்துக்கு நம்மை அழைத்து சென்றால் தனுஷின் வாழ்வில் மறக்க முடியாத படமா NAMAKKUM இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

நட்சத்திரப் பதிவாளராக மிளிர்ந்து கொண்டிருப்பdarkku வாழ்த்துக்கள்.

.

அ.ஜீவதர்ஷன் said...

@ ஹாய் அரும்பாவூர்

@ கமல்

@ ஞானப்பழம்

@ r.v.saravanan kudandhai


உங்கள் அனைவரதும் பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)