Thursday, March 25, 2010

கையை விட்டு போகும் வடிவேலுவின் காமடி

வடிவேலு நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு இருபத்து மூன்றுஅல்லது இருபத்தைந்து வேடங்களில் நடிக்கிறார், பத்து நாயகிகள் கூடவே நடிக்கிறார்கள் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. உலக சாதனைக்காக இந்தப்படம் தயாரிக்கப்பட போவதாக கூறியிருக்கும் அதேவேளை இந்தப்படத்தை ஆதம்பாவா இயக்குவார் என்று தெரிகிறது. இருந்தாலும் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் இன்னமும் வெளிவரவில்லை.

எதற்காக இந்த இருபத்து மூன்று வேடம் ? இது வடிவேலுக்கு தேவையா? இன்றும் நாம் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வடிவேலுதான். எங்காவது ஒரு லோ பட்ஜெற் படத்திலாவது வடிவேலுவின் ஏதாவதொரு காமடி கிளிக் ஆகினாலே அதை எத்தனை தடவையும் பார்த்துக்கொண்டிருக்கலாம். இப்போது வடிவேலு 175 நாட்கள் இந்த படத்துக்கு  கால்சீற் கொடுத்துள்ளதால் அடுத்த ஆறு மாதத்திற்கு லோ பட்ஜெற் படங்களில் கூட வடிவேலுவை காணமுடியாது. முன்னைய வடிவேலுவின் காமடிபோல இப்போது இல்லாவிட்டாலும் விவேக் , சந்தானத்தின் அலப்பறைக்கு(சந்தானம் ஒரிருபடங்கள் பரவாயில்லை ) இன்றைய வடிவேலு எவளவோ மேல்.வடிவேலுவிடமிருந்து அண்மைக்காலமாக கிடைக்கும் அதிகமான ஒரே மாதிரியான காமடிக்கு காரணமான சிங்கமுத்துவின் விலகலின் பின்னர் வடிவேலுவின் காமடிகளை புதிய கோணத்தில் எதிர்பார்த்தால் இப்போது வடிவேலு மீண்டும் ஒரு இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு தயாராகிவிட்டார்.


வடிவேலு மூன்று வேடத்தில் நடித்த அழகப்பனே பார்க்க முடியவில்லை, இருபத்து மூன்று வேடம் சாதனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், வடிவேலுவிடம் காமடியை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்தியாக அமையுமென்று நான் நினைக்கவில்லை.இது வடிவேலு சிலருக்கு தன்னை நிரூபிப்பதற்காக எடுத்த முடிவாக கூட இருக்கலாம், படம் காமடியாக இருக்கும் என்று கூறினாலும் இத்தனை நாயகிகளை வைத்துக்கொண்டு இத்தனை வேடத்தில் காமடி சாத்தியமென்று தோன்றவில்லை.


வடிவேலு முதலில் எல்லோருடனும் பகைக்கும் குணத்தை நிறுத்தவேண்டும். சுந்தர்.C ,சுராஜ் போன்றவர்களுடனான பகையால் வடிவேலுவுக்கும் நஷ்டம், அவர்களுக்கும் நஷ்டம், நல்ல காமடிக்கும் பஞ்சம். வடிவேலு நாயகனாக நடிப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை, ஆனால் கலைவாணர், பாலையா, நாகேஷ், கவுண்டமணி  செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு என எப்போதும் நிறைவாக இருந்த தமிழ் சினிமாவின் காமடி டிராக்கிற்கு இப்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சந்தானம் அதை ஈடுசெய்வார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. விவேக் அவுட் , இப்போ காமடியின் ஒரே நம்பிக்கை வடிவேலுதான். வடிவேலுவும் ட்ராக் மாறிப்போனால் தமிழ் சினிமாவின் காமடி பஞ்சத்தை சமகாலத்தில் யாராலும் தீர்க்கமுடியாது. இப்போது எங்களுக்கு தேவை அழகப்பன் அல்ல வட்டசெயலாளர் வண்டுமுருகன்தான்.

பயபுள்ள ! . நம்மளுக்கு ஏதோ சொல்லுறானே ...  ம்ம்ம்ம் .....ம்ம்...

13 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

தமிழ் சினிமா காமெடி என்னும் பகுதியி விட்டு தாண்டி பல வருடம் ஆகிறது

நல்ல நகைச்சுவை படம் எடுக்க ஒரு தனி திறமை வேண்டும் அப்படிப்பட்ட திறமைசாலிகள் இப்போது தமிழ் திரையுலகில் இல்லை என்பதே உண்மை

Raghu said...

இந்த‌ மாதிரி தேவையில்லாத‌ வேலையெல்லாம் ப‌ண்ணி, "க‌டுப்பேத்த‌றார் மை லார்ட்" :)

ஸ்ரீநி said...

தரமான நகைசுவை திரைப் படங்கள் இன்றும் உயிரோட வைத்திருக்கும் இரண்டு திரைப்பட மொழிகள் மலையாளம், மராத்தி. மற்றபடி வேர்எந்த இந்திய திரைப்பட மொழிகளிலும் நகைசுவைக்கான திரைப்படங்கள் கடந்த ஐந்து வருடங்களில் மிகவும் குறைவு

ஸ்ரீநி said...

அதிலும் தமிழில் நிறைவான நகைசுவை திரைப்படங்கள் அரிதாகி விட்டது, அப்படியே வந்தாலும் மற்ற மொழி REMAKEகலாக இருந்து விடுகின்றன. வருத்தமே. நகைசுவை தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் வடிவேலு, விவேக் நகைசுவை காட்சிகளும் புளித்துப் போய் விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் மலையாள திரைப்பட பட்டறை மண்ணைக்கவ்வியது நினைவிருக்கும், அப்பொழுது அவர்கள் தங்கள் நேயர்களை மீட்ட்க்க கைக் கொண்டது முழுவதும் நகைசுவை படங்களே.

ஸ்ரீநி said...

இன்றைய அரசியல் சூழல் காரணமாக தமிழ் சினிமா மண்ணைக் கவ்வும் நிலை ஏற்ப்பட்டால் நம்மிடம் நேயர்களை மீட்க, நல்ல நகைசுவை இயக்குனர்கள் இல்லை என்பது அச்சம் தரிக்கும் விஷயமே

தமிழ் மதுரம் said...

ஸப்பா..........இப்பவே கண்ணைக் கட்டுதே?

கலக்குறீங்கள்..


நகைச்சுவையால் சிறியவர்களையும் கவர்ந்திழுத்துத் தொலைக்காட்சிக்கு முன்னே வைத்திருக்கும் பெருமை வடிவேலுவையே சேரும்.

chosenone said...

திரைப்பட காமெடிஐ மற்றும் நம்பி இருந்தால் அம்போ தான் ....
sitcoms , தரமான standup comedies (கலக்க போவது யாரு புடுங்க போவது யாரெண்டு மொக்க போடாமல்...)
,comedy serials என்று தரமான நகைச்சுவைக்கான மற்ற பரிமாணங்களையும் எப்ப அனுபவிக்க போறோமோ ....?

சரி விடுடா புலிகேசி .....உலகத்துக்கு முன்னால ஏற்கனவே தமிழன் முழுநேர காமடி தானே பண்ணிட்டு இருக்கான் !!!

அ.ஜீவதர்ஷன் said...

@ ஹாய் அரும்பாவூர்

@ ர‌கு

@ ஸ்ரீநி

@ கமல்

@ chosenone

உங்கள் அனைவரது பின்னூட்டங்களுக்கும் நன்றி

முகில் said...

வண்டுமுருகன்தான் வேனும்....

அ.ஜீவதர்ஷன் said...

ராமு

//வண்டுமுருகன்தான் வேனும்....//

என் இனமடா நீ ?

Chitra said...

வடிவேலுவிடமிருந்து அண்மைக்காலமாக கிடைக்கும் அதிகமான ஒரே மாதிரியான காமடிக்கு காரணமான சிங்கமுத்துவின் விலகலின் பின்னர் வடிவேலுவின் காமடிகளை புதிய கோணத்தில் எதிர்பார்த்தால் இப்போது வடிவேலு மீண்டும் ஒரு இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு தயாராகிவிட்டார்.

.............. .......
..... மாப்பு, வச்சுட்டாங்கயா ஆப்பு!

DREAMER said...

உங்கள் கருத்து உண்மைதான், அவர் கதாநாயகனாக நடிப்பதைவிட, காமெடியனாக நடித்தால்தான் நமக்கெல்லாம் விருந்து... இல்லையென்றால்... 'அவ்வ்வ்வ்'தான்.

இவரின் பல டைலாக்குகள் இன்றும் கல்லூரிகளில் பேசப்படுவதற்கு 'அழகப்பன்' போன்ற படங்கள் காரணமல்ல, 'வின்னர்' போன்ற படங்களில் அவரது கதாபாத்திரங்களே மக்கள் மனதில் நின்றிருக்கின்றன. இதை அவர் புரிந்துக் கொள்ளாவிட்டாலும், உடனுள்ள நண்பர்கள் யாராவது சொல்லிப் புரியவைத்தாலாவது நன்றாக இருக்கும்...

க.க.க.போ... என்று நம்மை சொல்ல வைப்பாரா..?

r.v.saravanan said...

இப்போது எங்களுக்கு தேவை அழகப்பன் அல்ல வட்டசெயலாளர் வண்டுமுருகன்தான்.

வண்டுமுருகன்தான்.

correct eppoodi

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)