Tuesday, March 23, 2010

வெற்றி நாயகன் சூரியா...தமிழ் சினிமாவின் இன்னுமொரு அந்தமாதிரி வெற்றிவிழா கொண்டாட்டம் இன்று 23 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின் மூவி தாயாரிக்க K.S .ரவிக்குமார் இயக்க சூர்யா , நயன்தாராவின் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்சின் இசையமைப்பில் வெளிவந்து சென்ற ஆண்டு தமிழ்சினிமாவையே புரட்டிப்ப்ட்ட 'ஆதவன்'தான் அந்தமாதிரி 100 ஆவது நாள் வெற்றிவிழாக்காணும் திரைப்படம். இதற்கு முன்னர் முதல்தடவையாக உதயநிதி இயக்கிய தென்னிந்தியாவின்.. ஏன் இந்தியாவின் மிகப்பெரும் காவியம் விஜயின் 'குருவிக்கு' கூட நூறாவது வெற்றிவிழா கொண்டாடியிருந்தார் உதயநிதி, இம்முறை வெற்றி நாயகன் சூர்யா.குருவி வெற்றிவிழாவில் பேசிய விஜயின் பிரச்சார பீரங்கி S.A.சந்திரசேகர் 'குருவி' தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்காடுகளையும் தகர்த்துவிட்டதாக கூறியிருந்தார், இம்முறை தயாரிப்பாளர் உதயநிதியே 'ஆதவன்' அனைத்து வசூல்களையும் புரட்டிப்போட்டு வசூலில் புதிய சரித்திரம் படைத்துவிட்டதாக கூறியுள்ளார்.நமீதா பாராட்டினாலே உச்சி குளிர்ந்து ஜொள்ளு வடிக்கும் கலைஞருக்கு பேரனாக பிறந்த உதயநிதி இப்படிப்பட்ட வரலாற்று காவியங்களுக்கு (வசூலில்) வெற்றிவிழா கொண்டாடுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. நிச்சயம் உதயநிதி ஒருகாலத்தில் பலதரப்பட்ட பாராட்டு விழாக்களை சந்திப்பார் என்பதில் ஐயமில்லை.

"வாழ்க தமிழகத்தின் மாபெரும் அரசியல் குடும்பம்"இப்படி ஒரு பேரன் வெற்றிவிழா கொண்டாட நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதா என்று கலாநிதிமாறனும் தான் வாங்கி வெளியிடும் படங்களுக்கும் வெற்றிவிழா கொண்டாட ஆரம்பித்தால் மாதம் ஒரு வெற்றிவிழா காணலாம், காய்ந்துபோய் கிடக்கும் ரசிகர்களுக்கு அப்பப்ப ரகசியா, தேஜாஸ்ரீ , லக்ஸ்மிராய் போன்றோரின் தரிசனமாவது கிடைக்கும். மாதமொரு படத்தை ரிலீஸ் செய்து விட்டு பின்னர் மாதம் ஒரு வெற்றிவிழா கொண்டாடி அதில் கலைநிகழ்ச்சிகளை வைத்து நடிகைகளின் நடனத்தை அரங்கேற்றினால் இந்த தள்ளாத வயதிலும் 'சியர் லீடேர்சின்' ஆட்டத்தை பார்க்க கலைஞர் ஐயா சேப்பாக்கம் போகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா? இதை உணர்ந்த உதயநிதியின் பொறுப்பு மற்றைய பேரன்களுக்கும் வரவேண்டும். அப்படியே தயாநிதி அழகிரியும் எதிர்வரும் காலங்களில் மாதமொரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு வெற்றி விழாக்களை கொண்டாடினால் மாதம் மூன்று பேரன்களாலும் முப்பெரும் களியாட்டத்தை காணும் வாய்ப்பை தாத்தா பெறுவாரல்லவா ? ஊரை கொள்ளையடித்து உங்களுக்காக சொத்துக்களை சேர்த்த தாத்தாவுக்காக இதாவது நீங்கள் செய்யக்கூடாதா?முக்கியமான விடயம் இந்த வெற்றிவிழாவின் பிரதம விருந்தினர் உதயநிதியின் அடுத்த படத்தின் நாயகன் கமலஹாசனாம் . கவலைப்படதேவை இல்லை எப்படியும் அடுத்த கமலின் படத்தின் ரிசெல்ட் எப்படி இருந்தாலும் ஒரு வெற்றிவிழா நிச்சயம் இருக்கு. இறுதியாக நூறாவது நாள் விழாக்காணும் ஆதவனுக்கும் பாராட்டுக்கள். வெற்றிவிழாக்களையே காமடியாகக்கி இறுதில் யாருமே (உண்மையான வெற்றியாக இருந்தால் கூட) வெற்றி விழாக்களே கொண்டாடாமல் போகுமளவிற்கு இதேபோல மேன்மேலும் அந்தமாதிரி வெற்றிவிழாக்கள் கொண்டாட உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.

12 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

"ஊரை கொள்ளையடித்து உங்களுக்காக சொத்துக்களை சேர்த்த தாத்தாவுக்காக இதாவது நீங்கள் செய்யக்கூடாதா? "


Hmmmmmmmmmmmmmmmmmmmmmm......

Chitra said...

வெற்றி விழாக்களை குறித்து வெற்றிகரமான பதிவு எழுதிய வெற்றி பெற்ற பதிவருக்கு, பாராட்டுக்கள்! எப்பூடி!

SShathiesh-சதீஷ். said...

// காய்ந்துபோய் கிடக்கும் ரசிகர்களுக்கு அப்பப்ப ரகசியா, தேஜாஸ்ரீ , லக்ஸ்மிராய் போன்றோரின் தரிசனமாவது கிடைக்கும்.//

விளங்கிது விளங்கிது...ஹ்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் இவர்களை விட கொஞ்சம் புதியவர்கள் வந்துட்டாங்க தலைவா...புரிது புரிது,,,,

r.v.saravanan said...

சென்ற ஆண்டு தமிழ்சினிமாவையே புரட்டிப்ப்ட்ட 'ஆதவன்'தான் அந்தமாதிரி 100 ஆவது நாள் வெற்றிவிழாக்காணும் திரைப்படம்.

he......he......

r.v.saravanan said...

i have sent to one mail to you
please see

chosenone said...

கலைஞர் மற்றும் அவர் சான்றோர்களின் ஆதிக்கம் எந்த தரப்புக்கும் எந்த துறைக்கும் ஆரோக்கியமானதல்ல.....
இந்த பெரிய பட்டாளமே இணைக்கும் உயிர்நாடி ....." மு .க" .
அது நின்று விட்டால் எல்லா பரிவாரங்களும் சில்லறை சில்லறையாய் சிதறி விடும் ....
அப்புறம் இருக்கு கச்சேரி ...!!!!*ù%

Paarvai said...

தமிழ் நடிகர்களுக்கு இது ஒன்றும் புதிய சமாச்சாரம் இல்லையே. தங்கள் படத்தை ஓட்டுவதற்கு தானே ஒவவொரு areaவை தங்களுக்கு கேட்பது . விஜய் , விஷால் தனுஷ் இப்படி நிறைய .....

டக்கால்டி said...

:-)

கிரி said...

//வெற்றிவிழாக்களையே காமடியாகக்கி இறுதில் யாருமே (உண்மையான வெற்றியாக இருந்தால் கூட) வெற்றி விழாக்களே கொண்டாடாமல் போகுமளவிற்கு இதேபோல மேன்மேலும் அந்தமாதிரி வெற்றிவிழாக்கள் கொண்டாட உதயநிதிக்கு வாழ்த்துக்கள்//

உண்மை தான். இனி இதைப்போல நடக்க வாய்ப்புண்டு.

R.Gopi said...

நீங்க “தல”ய வச்சு காமெடி, கீமெடி பண்ணலியே...

அ.ஜீவதர்ஷன் said...
This comment has been removed by the author.
அ.ஜீவதர்ஷன் said...

@ ஹாய் அரும்பாவூர்

@ Chitra

@ SShathiesh

@ r.v.saravanan kudandhai

@ chosenone

@ Paarvai

@ டக்கால்டி

@ கிரி

@ R.Gopi

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)