Saturday, March 20, 2010

விஜயா சூர்யாவா?

வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சினிமா பதிவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இதற்கு காரணம் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் வெளிவர இருக்கும் சுறா திரைப்படம்தான். வரும் வெள்ளிக்கிழமை (26 ஆம் திகதி ) சுராவின் ஆடியோ ரிலீஸ் செய்யப்படுகின்றது. தொடர்ந்து சித்திரை பதின்நான்கு அன்று சுறா திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுகிறது. சித்திரை பதின்நான்கு புதுவருடப் பிறப்பில்லை என்று பாசாங்குத்தலைவன் அறிவித்தாலும் சித்திரை வருட திரைப்பட ரிலீச்கள் குறையவில்லை.முருகன் சினி ஆர்ட்ஸ் என்னும் பெயரில் சங்கிலி முருகன் தயாரிக்கும் சுறாவை ராஜ்குமார் இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க எம்.எஸ்.பிரபு மற்றும் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் சுறாவில் தமன்னா நாயகி என்பது தெரிந்ததே. அதைவிட சுறாவை கலைத்தாயின் 'செல்வப்'புதல்வன் சண் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுவதும் தெரிந்ததே. வழமையாக தனது முன்னைய x படங்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும் என்று திருவாய் மலரும் விஜய் இந்தத்தடவை சுறா வேட்டைக்காரனைபோலதான் இருக்கும் என்று கூறியிருப்பது படத்தின் தன்மையை புரியவைத்துள்ளது. (x = அந்த நேரத்தில் விஜய் நடித்த அனைத்துப் படங்களின் எண்ணிக்கை )வழக்கமாக விஜய் படங்களின் படப்பிடிப்பு இடம்பெறும்போது அவ்வப்போது புகைப்படங்கள் தயாரிப்பாளர் தரப்பால் பத்திரிகைகளுக்கும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் வளங்கப்படுகின்றமை வழக்கம், ஆனால் சுறாவை பொறுத்தவரை போஸ்டர்கள் தவிர புகைப்படங்கள் எவையும் வெளியிடப்படவில்லை . புகைப்படங்கள் வெளிவராததை பார்க்கும்போது விஜய் மீனவனாக நடித்திருப்பதால் பட்டாப்பட்டிக்குமேல ஒரு லுங்கியை கட்டி புதிய கெட்டப்பில் அசத்தினாலும் ஆச்சரியமில்லை (ஆனால் மெலோடி சாங் பாரின்லதான்).இதேநேரம் அரிவாள் இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் சூர்யா தோன்றும் புதிய படமான சிங்கமும் சித்திரை பதின்நான்குதான் ரிலீசாம். இதன் மூலம் விஜயின் மாஸ் இடத்தை சூரியா தற்போது கைப்பற்றியுள்ளார் என்ற ஒரு பிரிவினரின் வாதம் உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடும். அயன் தவிர சன்னின் வேறெந்த படங்களும் வெற்றியடையாத நிலையில் சுறா சன்னுக்கு வெற்றியை கொடுக்குமா என்பது நிச்சயம் சன்னின் கையில் இல்லை, அது படத்தின் தரத்தை பொறுத்து மக்களின் கைகளில்தான் உள்ளது. எது எப்பிடியோ காட்டு ராஜாவும்(சிங்கம்) கடல் ராஜாவும் (சுறா) நேரடியாக மோதப்போகிறார்கள். வெற்றி யார்பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

16 வாசகர் எண்ணங்கள்:

Madurai Saravanan said...

தமிழ் படங்கள் பாவம். கடலா ?காடா?அய்யா தலைப்பைவைத்து பட்டி மன்றம் நடத்திட போறாங்கள்.

Chitra said...

present sir.......!

tamilkumar said...

என்ன பாஸ் ராஜ்குமார் பழைய இயக்குனர்,பொன்மனம்,அழகர்மலை படங்களை இயக்கியவர் தான் ராஜ்குமார்.வலைபூலம் வைச்ருகிங்க இது தெரில.

vijay 50 movies said...

vijay is best so sura will win
s.p rajkumar is'nt new director
visit now to www.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies

SShathiesh said...

ராஜ்குமார் புதியவர் அல்ல அழகர் மலை உட்பட பிறப்பு நடித்த சில படங்களை இயக்கியுள்ளார். இன்னும் உங்கள் விஜய் தாக்கும் பாணி நிக்கல. எனக்கென்னவோ சூர்யா இன்னும் மாஸ் ஹீரோ ஆகவில்லை என்றே தோன்றுகின்றது. அவர் ஒரு நல்ல நடிகர். காட்டு ராஜா கடல் ராஜா நல்ல போட்டி இதில் இன்னொரு விசயமும் இருக்கு சிங்கம் என்னும் பெயர் விஜய் படத்துக்கு வைக்க முயர்ச்சிக்கப்பட்டு ஹரி -விஜய் லடாயால் அவருக்கு கிடைக்காமல் போனது. இதேபோல ஒரு பிரச்சனை முன்பு தமிழன்-தமிழ் படங்களுக்கு வந்தது. அந்த இரண்டு படங்களின் நிலையம் தெரியும் தானே.

Statistics said...

சுறாவை ராஜ்குமார் என்னும் புதிய இயக்குனர் !!!!!!இயக்குகிறார்

r.v.saravanan kudandhai said...

சுறா படத்தை இயக்கும் ராஜகுமார் ஏற்கெனவே பிரபு நடித்த ஒரு
படத்தையும் லிவிங்க்ஸ்டன் தேவயானி நடித்த என் புருஷன் குழந்தை
மாதிரி என்ற படத்தையும் இயக்கியுள்ளார் எப்பூடி

ஹாய் அரும்பாவூர் said...

புகைப்படங்கள் வெளிவராததை பார்க்கும்போது விஜய் மீனவனாக நடித்திருப்பதால் பட்டாப்பட்டிக்குமேல ஒரு லுங்கியை கட்டி புதிய கெட்டப்பில் அசத்தினாலும் ஆச்சரியமில்லை (ஆனால் மெலோடி சாங் பாரின்லதான்).

இதுதான் எப்பூடி முத்திரை விஜய்க்கு மட்டும் கொஞ்சம் விசேசமா

A.சிவசங்கர் said...

கடவுளே சிங்கம் சுறாவ அடிக்குமா
இல்ல சுறா சிங்கத்த அடிக்குமா ?


இல்ல மொத்ததில ரெண்டும் நம்மள அடிக்குமா ?

எப்பூடி ... said...

Madurai Saravanan

//தமிழ் படங்கள் பாவம். கடலா ?காடா?அய்யா தலைப்பைவைத்து பட்டி மன்றம் நடத்திட போறாங்கள்.//

ஹி ஹி...

...................................

Chitra

// present sir.......!//

ok sitdown

.....................................

tamilkumar

//என்ன பாஸ் ராஜ்குமார் பழைய இயக்குனர்,பொன்மனம்,அழகர்மலை படங்களை இயக்கியவர் தான் ராஜ்குமார்.வலைபூலம் வைச்ருகிங்க இது தெரில.//

பிழையான தகவல்தான் , இது தெரியலைன்னா வலைப்பூ வைத்திருக்க கூடாதா என்ன.

..................................

vijay 50 movies

//vijay is best so sura will win//

wait and see

//s.p rajkumar is'nt new director//

ok, thanks

......................................

SShathiesh

//ராஜ்குமார் புதியவர் அல்ல

உட்பட பிறப்பு நடித்த சில படங்களை இயக்கியுள்ளார்.//

உண்மையில் எனக்கு அது தெரியாது, நான் புது இயக்குனர் என நினைத்ததற்கு காரணம் ATM , வேட்டைக்காரன் போன்றன புதிய இயக்குனர்கள் இயக்கியவை என்பதாலே. இப்பேற்பட்ட காவியங்களை (அழகர் மலை)இயக்கியவர் என்று தெரிந்தபின்னர் இன்னும் எதிர்பார்ப்பு எகிறுகிறது.

//இன்னும் உங்கள் விஜய் தாக்கும் பாணி நிக்கல.//

இத்தனை நடிகர்கள் இருக்கும்போது நான் ஏன் விஜயை மட்டும் தாக்கனும்? (VVT பணியில் ) அதுக்காக விஜய் ரஜினிக்கு போட்டி என்பதால் என்று காமடி பண்றதில்ல.

//எனக்கென்னவோ சூர்யா இன்னும் மாஸ் ஹீரோ ஆகவில்லை என்றே தோன்றுகின்றது.//

ஆனால் சில சூரியா ரசிகர்கள் அடம் பிடிக்கிரர்களே , பொறுத்திருந்து பார்ப்போம்.

// காட்டு ராஜா கடல் ராஜா நல்ல போட்டி இதில் இன்னொரு விசயமும் இருக்கு சிங்கம் என்னும் பெயர் விஜய் படத்துக்கு வைக்க முயர்ச்சிக்கப்பட்டு ஹரி -விஜய் லடாயால் அவருக்கு கிடைக்காமல் போனது. இதேபோல ஒரு பிரச்சனை முன்பு தமிழன்-தமிழ் படங்களுக்கு வந்தது. அந்த இரண்டு படங்களின் நிலையம் தெரியும் தானே.//

மீண்டும் அப்படி ஒருநிலை(தமிழிடம் அடிவாங்கிய தமிழன் ) விஜய்க்கு வரக்கூடாதென்று உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன்.

...........................................


Statistics

//சுறாவை ராஜ்குமார் என்னும் புதிய இயக்குனர் !!!!!!இயக்குகிறார்//

விடுங்க பாஸ் ஒரு மனுஷன் தப்பே பண்ணிரதில்லையா? திருத்திக்கிரன்

......................................

r.v.saravanan kudandhai


//சுறா படத்தை இயக்கும் ராஜகுமார் ஏற்கெனவே பிரபு நடித்த ஒரு
படத்தையும் லிவிங்க்ஸ்டன் தேவயானி நடித்த என் புருஷன் குழந்தை
மாதிரி என்ற படத்தையும் இயக்கியுள்ளார் எப்பூடி//


தப்புத்தாங்க , உங்க தகவல்களுக்கு நன்றி. உங்க ஆரம்பகால பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு பதில்போட முடியவில்லை தவறாக நினைக்காதீர்கள்.

..................................

ஹாய் அரும்பாவூர்


//இதுதான் எப்பூடி முத்திரை விஜய்க்கு மட்டும் கொஞ்சம் விசேசமா//

நன்றி தல.

...................................

A.சிவசங்கர்

// கடவுளே சிங்கம் சுறாவ அடிக்குமா இல்ல சுறா சிங்கத்த அடிக்குமா ? இல்ல மொத்ததில ரெண்டும் நம்மள அடிக்குமா ?//


மூனாவதுதான் நடக்கும் என்று நினைக்கிறன்.

Atchu said...

//எது எப்பிடியோ காட்டு ராஜாவும்(சிங்கம்) கடல் ராஜாவும் (சுறா) நேரடியாக மோதப்போகிறார்கள். வெற்றி யார்பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். //

வெற்றி எப்பவும் நம்(சிங்கம்) பக்கம்தான்.......

chosenone said...

இந்த தலைப்புகளில்(சுறா , சிங்கம் ) இருந்தே புரிஞ்சிகொனும் இவனுங்க யாரும் மனுஷ பயபுள்ளைகளுக்கு படம் பண்ணல , மிருகங்களுக்கும் மனநோயாளிகளுக்கும் தான் தான் படம் எடுக்குரானுவளே !!!
இவனுங்க படம் எடுத்து கிழிச்சதுல பாதி தமிழன் sadist ஆ மாறினது தான் மிச்ச்சம்லே!!!
ஒன்னு , ஈ.வே.ரா மறு பிறவி எடுக்கணும் ,இல்ல, ... அடுத்த சுனாமி இவனுங்கள அள்ளனும்லே (அள்ளும்!)...

flying taurus said...

அரிவாள் இயக்குனர் ஹரி, பாசாங்குத்தலைவன் போன்ற வார்த்தைகளின் பிரயோகம் அற்புதம்...

r.v.saravanan kudandhai said...

தப்புத்தாங்க , உங்க தகவல்களுக்கு நன்றி. உங்க ஆரம்பகால பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு பதில்போட முடியவில்லை தவறாக நினைக்காதீர்கள்.

cool..........

எப்பூடி ... said...

Atchu

//வெற்றி எப்பவும் நம்(சிங்கம்) பக்கம்தான்.......//

நம்ம நாட்டில கூட அப்பிடித்தானே இப்ப நிலைமை :-)


.......................................


chosenone

//இந்த தலைப்புகளில்(சுறா , சிங்கம் ) இருந்தே புரிஞ்சிகொனும் இவனுங்க யாரும் மனுஷ பயபுள்ளைகளுக்கு படம் பண்ணல , மிருகங்களுக்கும் மனநோயாளிகளுக்கும் தான் தான் படம் எடுக்குரானுவளே !!!//

இதுக்கே இப்பிடி என்றால் இனிமேல் நாய், ஓநாய், நரி , திமிங்கலம், வவ்வால் என்றெல்லாம் டைட்டில் வரும் பாருங்க

.....................................

flying taurus

//அரிவாள் இயக்குனர் ஹரி, பாசாங்குத்தலைவன் போன்ற வார்த்தைகளின் பிரயோகம் அற்புதம்...//

பாராட்டுக்கு நன்றிண்ணே .


....................................


r.v.saravanan kudandhai

//cool..........//

:-)

Paarvai said...

ஹரியின் சாமி , தாமிரபரணி படங்கள் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள் பார்போம் ..... சிங்கம் சுறவை தூக்கி சாப்பிடுகிறதா என்று.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)