Friday, March 19, 2010

கால்களுக்குள் மிதிபடும் வேட்பாளர்கள்
யாழ்நகரில் ஒவ்வொரு சந்திகளிலும் கறுப்புதார் வீதிகளில் வெள்ளை நிற பெயின்றால் கட்சிபேதமின்றி ஓவ்வொருவரு கட்சி வேட்பாளர்களும் கட்சி சின்னத்தையும் தங்களது விருப்பு வாக்கு இலக்கத்தையும் எழுதிவைத்துள்ளனர். இதில் பெரியகட்சி சின்னகட்சி என்ற பேதமெல்லாம் இல்லை. இவர்கள் அடித்த வெள்ளை பெயின்ரை வைத்து குறைந்தது ஒரு நூறு வீடுகளுக்காவது பெயின்ட் அடித்திருக்கலாம். சந்திகள் தவிர வீதி வீதியாக இதே திருக்கூத்துத்தான்.அதுதவிர புதிய வீடுகளின் சுவர்கள், தலைவர்களின் சிலைகள் முதல் உக்கிப்போன தகரங்கள் வரை இவர்களது போஸ்டர்கள்தான். கொஞ்சம் ஏமாந்தால் எமது நெற்றியிலும் முதுகிலும் கூட ஒட்டிவிடுவார்கள் போலுள்ளது. ஒரு விடயத்திலும் இல்லாத ஒற்றுமை இந்த விடயத்தில் நம்ம வேட்பாளர்களுக்கு உள்ளது. பாரபட்சமின்றி ஒருவர் போஸ்டருக்கு அரகில் வேறுகட்சியாளர்போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். மாடுகளுக்குதான் நல்ல தீவனம்.எந்தக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் இதனை பார்த்து தீர்மானிக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு தெரியும். ஆனால் விருப்புவாக்குகளை யாருக்கு போடுவது என்பதில் நிச்சயமற்ற மனநிலைதான் இருக்கும் இதனால் மனோவியல் ரீதியாக தங்களது வாக்காளிப்பு எண் நினைவில் இருக்கவும் தாங்களது எண்ணை தங்களுக்கு ஓட்டுப்போட நினைப்பவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவுமே இவ்வாறு செய்கிறார்கள். வீதிகளில் உள்ள இவர்களது பெயர்களிலும் விருப்புவாக்கு இலக்கங்களிலும் விலங்குகளின் எச்சங்களும் மனிதர்களின் வெற்றிலை துப்பல்களும் கிடப்பதன்றி போகவர மக்களின் செருப்பு கால்களாலும்மிதிக்கப்படுகின்றன.உதாரணமாக ஒருவர் கூட்டமிப்புக்கு வாக்களிக்க முடிவெடுத்திருந்தால் அவர் வீட்டு சின்னத்தில் தனது வாக்கை பதிவர், இது கட்சிக்கான வாக்கு . அதே வாக்கு சீட்டில் யாழில் உள்ள மொத்தம் 9 தொகுதிக்கும் போட்டியிடும் 12 வேட்பாளர்களினது இலக்கமும் இடம்பெற்றிருக்கும், மக்கள் அவற்றில் மூன்று இலக்கங்களுக்கு புள்ளடி இடலாம். இறுதியில் விருப்பு வாக்கு எண்ணப்படும்போது உதாரணமாக கூட்டணிக்கு 9 இடங்களில் 7 இடங்கள் கிடைத்தால் கூட்டணி வேட்பாளர்களின் விருப்பு வாக்கில் முதல் 7 இடங்களை பெற்றவர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். 12 பேரில் கட்சிக்கு கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையளவான வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதால் தேர்தலில் எதிரணியினரை அமாளிப்பதை விட தங்களுக்கான விருப்புவாக்கை அதிகரிக்க செய்யவே இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

இவர்களைபோலன்றி மேற்படி எந்தவித விளம்பரங்களும் இல்லாத சுய தம்பட்டமில்லாத தமது நிலைப்பாட்டை மட்டும் எடுத்து கூறும் படித்த வேட்பாளர்களும் ஓரிருவர் உள்ளனர்.எனது நண்பர் ஒருவரின் தந்தை ஒருவரும் இந்த லிஸ்டில் இடம்பெறுவார். முக்கிய கட்சியின் வேட்பாளரான இவரது விளம்பரமில்லா பிரச்சாரம் உண்மையில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.(பெயரை குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்காதென்பதால் குறிப்பிடவில்லை)நீங்கள் நம்பும் உங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களியுங்கள் , வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.

5 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

நீங்கள் நம்பும் உங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களியுங்கள் , வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.

...correct!

ஹாய் அரும்பாவூர் said...

"நீங்கள் நம்பும் உங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களியுங்கள் , வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். "

ஓட்டு போடுவது நம்ம வேலை இல்லை என்று நினைக்கும் மக்களால் தான் தகுதி இல்லாத வேட்பாளர்கள் தங்கள் பண பலத்தை பயன் படுத்தி வென்று
நாட்டை இன்னும் குட்டி சுவர் ஆக்கிறார்கள்
ஓட்டு போடுவது நாம் தேசிய கடமை

தமிழ் மதுரம் said...

கொஞ்சம் ஏமாந்தால் எமது நெற்றியிலும் முதுகிலும் கூட ஒட்டிவிடுவார்கள் போலுள்ளது//ஆஹா.. கொஞ்சம் அசந்தீங்கள்... கதை கயிலாயம் போய்விடும். யாழ் நகரிலிருந்து சுடச் சுடச் செய்திகளைத் தொகுத்துத் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Atchuthan Srirangan said...

//"நீங்கள் நம்பும் உங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களியுங்கள் , வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். "//

என்னுடைய ஒரு ஓட்டு என்ன செய்யும் என்று வீட்டில் இருந்துவிடாதீர்கள்

9999துடன் ஒன்றை கூட்டினால் தான் 10000!

அ.ஜீவதர்ஷன் said...

@ Chitra

@ ஹாய் அரும்பாவூர்

@ கமல்

@ Atchu

அனைவரது வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)