Thursday, March 18, 2010

இவனும் ஒரு ஒபாமா

இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஒவ்வொருவரும் தமது குடும்பஉறுப்பினர்களைத் தவிர்த்து ஓட்டுக்கள் பெறப்போவது பெரிய விடயம் .ஏனெனில் ஏறத்தாள வீட்டுக்கொரு வேட்பாளர் என்ற கணக்கில் வாக்காளரை விட வேட்பாளர் தொகை அதிகமாகவிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.ஓட்டைப்பிரித்தல் என்னும் புதிய உத்தியின் பிரகாரம் ஏகப்பட்ட சுயேட்சைகள் களத்தில் குதித்திருக்கின்றது.கவுண்டமணி கூறியது போல "டெப்பாசிட் கட்ட காசு இருப்பவரெல்லாம் வேட்பாளர்".ஆனால் இந்த நோக்கமின்றி ஒரு லட்சியத்துடன் தமிழர்களினதும் இளைஞர்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு நண்பனைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.

நான் இங்கு அவனுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.அதை அவனும் விரும்பமாட்டான்.ஏனெனில் மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பெருமையாகக் கதைப்பது அவனுக்கு பிடிக்காது.யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்று இன்று சமூகத்தில் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற "அன்பே" உருவான அவன் அரசியலில் குதித்து பொது வாழ்வில் ஈடுபடுவானென நான் நினைக்கவே இல்லை.இன்று நான் காலரைத் தூக்கிக் கொள்கிறேன் அவனுடன் ஒன்றாகப் படித்ததற்காக.

பாடசாலைக் காலங்களிலேயே தலைமைத்துவம்,ஆளுமை,சமூகப் பொறுப்பு என்று அனைத்தையும் ஒருங்கே அவனிடம் கண்டிருக்கின்றேன்.படிப்பில் மட்டுமன்றி பல்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவன்.மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதற்காக இறுவட்டுகள் பலவற்றை இலவசமாக வழங்கிய பெருந்தகை என் நண்பன். குடிப்பழக்கமோ,புகைப் பிடித்தலோ எந்தக் கெட்ட பழக்கமும் கண்டதில்லை அவனிடம்.பெண்களை தாயாக மதிப்பான்.வீடு, சூரியன் என்று பழமையானவற்றை சின்னமாக வைத்திருப்போருக்கு மத்தியில் தொழில்நுட்ப ரீதியாக யோசித்து அவன் தேர்வு செய்த சின்னத்திலிருந்தே நான் முடிவு செய்து விட்டேன், நண்பா! தமிழரின் எதிர்காலம் உன் கைகளில்தானென்று.

தேர்தலிலிருந்து வாபஸ் பெறவேண்டுமென பல பேர் உன்னை மிரட்டியதாக அறிந்தேன்.சிலர் கோடிகளில் பேரம்கூட பேசியதாக கூறினான் நண்பன்.இண்டர்வெலுக்கு சோடா வாங்கித்தந்தால் லேட்டா வந்த மாணவனைக் கூட மன்னித்தருளும் மாணவத் தலைவனாகவிருந்த நீ இன்று இத்தனைக்கும் மசியவில்லை என்பதிலிருந்து உனது தொலைநோக்குப்பார்வை புரிகிறது.நீ தமிழரின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.ஒரு அரசியல்வாதிக்கான அனைத்துத் தகுதியும் உனக்கு உண்டு.

அதே நண்பன் கூற அறிந்தேன்.உனக்கும் உன்னுடன் சுயேட்சையில் நிற்கும் உன் தாத்தாவுக்கும் யாழில் வோட்டு இல்லையாமே.உனது அப்பா உனக்கு வோட்டு போட்டால் உனக்கு மரியாதை இல்லையென்பதால் உனக்கு வோட்டு போடாமாட்டாராமே.ஐயகோ அப்போ???

யாழ் சமுகமே,விழித்துக்கொள்,ஒரு தலைவன் உங்கள் முன் நிற்கிறான்,இவன் இன்னுமொரு ஒபாமா,அவனை பயன்படுத்திக்கொள்,ஒரு நண்பனுக்காக இந்த நண்பன் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன்.அவனுடன் பழகியதற்காகவாவது அவனுக்கு ஒரு நூறு விருப்பு வாக்குகள் ஆவது கிடைக்க பண்ணுங்கள்.நீங்கள் அவனுக்கு ஒட்டுப்போட்ட வாக்கு சீட்டை (பெட்டிக்குள் போடாமல் வெளியில் கொண்டுவந்து) அவனுக்கு காட்டினால் உங்களுக்கு ஒரு வாக்குக்கு ஒரு வாழைப்பழம் இலவசமாக தருவானாம். பார்த்து எதாவது செய்ங்கப்பா...

(கடைசி வரை அந்தப் பாடசாலை சென்ஜோன்ஸ் என்று நான் சொல்லவே இல்லை.அப்பாடா)

12 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

"நான் இங்கு அவனுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.அதை அவனும் விரும்பமாட்டான்.ஏனெனில் மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பெருமையாகக் கதைப்பது அவனுக்கு பிடிக்காது"

yaar andha nalla manidhar

தமிழ் மதுரம் said...

யார் அந்த நல்ல மனிதர் என்று பேரையாவது சொல்லலாமே??

Chitra said...

"டெப்பாசிட் கட்ட காசு இருப்பவரெல்லாம் வேட்பாளர்"


.... :-)

கார்த்தி said...

எனக்கு தெரியும் அந்த கனவான் யார் என்று! நீங்கள் படித்த அவன் படித்த பாடசாலையில்தான் நான் படித்தேன்!

// தமது எதிர்காலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதற்காக இறுவட்டுகள் பலவற்றை இலவசமாக வழங்கிய பெருந்தகை என் நண்பன்

இது மக்ஸிமம் சிலருக்கு விளங்கியிராது!!!

கார்த்தி said...

அவருடைய சின்னம் கூட தெரியும் கண்ணா எனக்கு!! தமிழில சொல்ல போனா ”க” வில ஆரம்பிக்கும்! இல்லையா?

ஞானப்பழம் said...

இறுவட்டுகள் - என்றால்?

"ஓட்டைப்பிரித்தல் என்னும் புதிய உத்தியின்" - நாங்கூட வீட்டுக் கூரையன்னு நெனச்சேன்!

அய்யோ... புதிர் போடதீங்க.. சீக்கிரம் அவர் யார்ன்னு சொல்லுங்க... அப்படியென்ன சின்னம் வைத்துள்ளார்?

நீங்கள் அவரைப்பற்றி சொல்வதெல்லாம் உண்மையென்றால் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஞானப்பழம் said...

இவன் இன்னுமொரு ஒபாமா///
O MY GOD!! அப்போ இவரும் எங்களுக்கு VISA தரமாட்டாரா?

chosenone said...

மொத்தத்தில் அவர் நல்லவரா கெட்டவரா ?*!

யேய்!!! அந்த தம்பிய வெச்சி நீ காமெடி கீமெடி பண்ணல இல்ல !

Unknown said...

சொல்ல மறந்திட்டன் , என்னுடைய நண்பன் ஒருவனும் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் தெரியுமா?

அன்புஜன் என்றால் யாழ்ப்பாணத்தில் எல்லோருக்குமே தெரியும். நல்ல நண்பன் என்று சொல்லவதை விட, he is really good human.

நான் இப்படி ஒரு நல்லவன இன்னும் பார்கவில்லை.
RECENTLY I SPOKE TO ANBUJAN, HE SAID THAT OBAMA WISHED HIM ADVANCE FOR THE VICTORY.


பின் குறிப்பு - எனக்கு உண்மை சொல்ல தெரியாது.

அ.ஜீவதர்ஷன் said...

@ ஹாய் அரும்பாவூர்

@ கமல் சொன்னது…

அம்புட்டு அவசரமா? கீழ ஒருத்தரு அவர்பேர சொல்லீர்ராறு.

...................................


@ Chitra

thanks

...................................

கார்த்தி

//எனக்கு தெரியும் அந்த கனவான் யார் என்று! நீங்கள் படித்த அவன் படித்த பாடசாலையில்தான் நான் படித்தேன்!//

நவீன கால அரிச்சந்திரனும் நீங்களும் ஒன்றாக படித்ததை நினைத்து பெருமைப்படுங்கள்


// தமது எதிர்காலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதற்காக இறுவட்டுகள் பலவற்றை இலவசமாக வழங்கிய பெருந்தகை என் நண்பன்

இது மக்ஸிமம் சிலருக்கு விளங்கியிராது!!!//

உண்மைதான் .

//அவருடைய சின்னம் கூட தெரியும் கண்ணா எனக்கு!! தமிழில சொல்ல போனா ”க” வில ஆரம்பிக்கும்! இல்லையா?//

அதேதான் , கடைசி மட்டும் அந்த மூன்று எழுத்து சின்னத்தின் கடைசி எழுத்தை 'ணி' என்றும் நடு எழுத்தை 'ண' என்றும் சொல்லிவிடாதீர்கள்

............................

ஞானப்பழம்

//இறுவட்டுகள் - என்றால்?//

cd

//"ஓட்டைப்பிரித்தல் என்னும் புதிய உத்தியின்" - நாங்கூட வீட்டுக் கூரையன்னு நெனச்சேன்!//

அது vote

//அய்யோ... புதிர் போடதீங்க.. சீக்கிரம் அவர் யார்ன்னு சொல்லுங்க... அப்படியென்ன சின்னம் வைத்துள்ளார்?//

நீங்கள் இப்போது பாவித்துக்கொண்டிருக்கும் சின்னம்.

//நீங்கள் அவரைப்பற்றி சொல்வதெல்லாம் உண்மையென்றால் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

அவரே விழுந்து விழுந்து சிரிப்பாரு.


//O MY GOD!! அப்போ இவரும் எங்களுக்கு VISA தரமாட்டாரா?//

ஒரு கட்டிங் குடுத்தா தருவாரு.

...................................

chosenone

//மொத்தத்தில் அவர் நல்லவரா கெட்டவரா ?*!

நல்ல பையன், என்ன கொஞ்சமா பொய் பேசுவான்.

யேய்!!! அந்த தம்பிய வெச்சி நீ காமெடி கீமெடி பண்ணல இல்ல !//

சீ சீ.:-)

...................................


dialog
//சொல்ல மறந்திட்டன் , என்னுடைய நண்பன் ஒருவனும் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் தெரியுமா?

அன்புஜன் என்றால் யாழ்ப்பாணத்தில் எல்லோருக்குமே தெரியும். நல்ல நண்பன் என்று சொல்லவதை விட, he is really good human.

இவர்தான் அவரென்று என்வாயால் நான் சொல்ல மாட்டேன்.

//நான் இப்படி ஒரு நல்லவன இன்னும் பார்கவில்லை.//

அப்டியா?

//RECENTLY I SPOKE TO ANBUJAN, HE SAID THAT OBAMA WISHED HIM ADVANCE FOR THE VICTORY.//

இததானே யாரு கேட்டாலும் பயலு சொல்லுறான்னு சொல்லுறாங்க

// பின் குறிப்பு - எனக்கு உண்மை சொல்ல தெரியாது.//

நம்ம வேட்பாளர் மாதிரின்னு சொல்லுங்கோ

Atchuthan Srirangan said...

"டெப்பாசிட் கட்ட காசு இருப்பவரெல்லாம் வேட்பாளர்".

ஹி..ஹி..

உங்கள் நண்பன்(எதிர்கால நம் MPக்கு) என் வாழ்த்துக்கள்!

அ.ஜீவதர்ஷன் said...

Atchu

// ஹி..ஹி..உங்கள் நண்பன்(எதிர்கால நம் MPக்கு) என் வாழ்த்துக்கள்!//

அவர்கிட்ட சொல்லிறன் :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)