Monday, March 15, 2010

நான் ஒண்ணும் காமடி பண்ணலீங்கோ....தமிழ் சினிமாவின் மாஜி நடிகரும் தற்போதைய நடிகசங்க தலைவருமான சரத்குமார் தான் ஆஸ்கார் வாங்கப்போவதாக கூறியுள்ளார். இதனை பலரும் காமடியாக பார்க்கின்றமை வேதனையாக இருக்கின்றது. சரத்துக்கு என்ன குறைச்சல்? எத்தனை படங்கள் நடித்திருக்கிறார், அரசியலில் வேறு இருக்கிறார், மனைவி ராதிகா கூட உழைக்கிறார் (சின்னத்திரையை சொன்னேன்) அவரால் ஒரு 'ஆஸ்' கார் வாங்க முடியாதா? சரி இந்தியாவில் 'ஆஸ்'(கலர்) கார் இல்லாவிட்டால் வெளிநாட்டில் வேண்டிவிட்டுபோகிறார், இதில் உங்களுக்கென்ன பொறாமை?

சரத் நீங்கள் 'ஆஸ்'காரென்ன பச்சை ,சிவப்பு, நீலம் , மஞ்சள் என்று பல வர்ணங்களில் கார்களை வாங்கி மென்மேலும் சிறந்துவிளங்க வாழ்த்துகிறேன்.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ் விக்கிபீடியா இணையதளத்துக்கு கட்டுரை அளிக்கும் போட்டியில், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், கலை அறிவியல், சட்டம் என 7 துறைகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வழங்கும் கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும் என அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளாராம்.
மாணவர்களே!!! எனக்கு உங்க அளவுக்கு அறிவெல்லாம் கிடையாது, இருந்தாலும் ஒரு சின்ன அறிவுரை. இந்த கட்டுறைய எழுத ஆரம்பிக்கும் முன் "உலகத்தமிழர்களின் தலைவா, தமிழ் இலக்கியத்தின் பிதாமகனே, தமிழ் இலக்கணத்தின் உயிர்எழுத்தே, ஏழைகளின் இதயமே, நல்லாட்சி புரியும் மாமன்னா" போன்ற சொற்கள்மூலம் ஒரு பந்தி தமிழகமுதல்வரை பாராட்ட தவறிவிடாதீர்கள். அப்புறம் எம்புட்டு நல்லா எழுதினாலும் "வடை போச்சே" நிலைமைதான் வரும். ஏன்னா நம்ம முதல்வருக்கு புகழ்ச்சியின்னா அம்புட்டு இஸ்ரம்.அப்புறமா நம்ம ஜேம்ஸ் கமரூன் அமீர்கானுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலாக உள்ளாராம், இதனால் அவர் ஒருபடத்தை அமீர்கானுக்காக இயக்குவாரென்று 'பாலிவூட்' நம்பிக்கையில் இருக்கிறது.கமரூன் அய்யா அவர்களே " அமீர்கான் நடித்த '3 இடியட்சை' தமிழில் ரீமேக் பண்ணும்போது அமீரைவிட சிறப்பாக நடிப்பாரென்று நம்பப்படும் எமது இளையதளபதிக்காக தமிழ் ரீமேக் '3 இடியட்ஸ்' வரும்வரை சற்று பொறுமையாக இருங்கள், அதன்பின்னர் இரு படங்களையும் ஒப்பிட்டு பார்த்து உங்களது படத்தில் அமீர்கானையா , விஜயையா நடிக்க வைப்பதென்று முடிவெடுங்கள், இது ஆஸ்கார் பிரச்சனை , எமது தளபதிக்கு கிடைக்கும் ஆஸ்காரை அநியாயமாக அமீர்க்கானுக்கு கிடைக்க செய்து விடாதீர்கள்"


P .வாசு இயக்கம் 'புலிவேசம்' படத்தில் முத்துராமன் கார்த்திக்கும் முக்கியவேடத்தில் நடிக்கிறாராம், வழக்கமாக கார்த்திக் படப்பிடிப்புக்கு குறைந்தது இரண்டு மணித்தியாலமாவது தாமதமாகத்தான் வருவாராம். ஆனால் புலிவேசம் படத்திற்காக எட்டு மணிக்கு வரவேண்டிய கார்த்திக் சரியாக எட்டு மணிக்கு வந்ததை பார்த்து மகிழ்ச்சியில் p .வாசு கார்த்திக்கை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டாராம். ஆனால் கார்த்திக் "ஆறுமணிக்கெல்ல சூட்டிங்" என்று தான் தவறாக நினைத்ததால்தான் எட்டுமணிக்கு வந்ததை கடைசிவரை வாசுவிடம் கூறவே இல்லையாம்.
அப்புறமா இந்த 'புலிவேசம்' சமூகத்தில் இருக்கும் சில தீயசக்திகளால் ரவுடியாக மாறும் இளைஞனின் கதையாம், தமிழ்சினிமாவின் இந்த புதியமுயற்சிக்கு மதிப்பளிக்கும் எல்லோரும் திரையில் சென்று பார்க்க வேண்டியபடம்.


கவுதம்மேனன் அஜித்தை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னர் முழு ஸ்கிப்டையும் தரும்படி படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கேட்டுள்ளாராம் . இருந்தால் தரமாட்டமா என்று முதலில் கூறினாலும் இரண்டு வாரத்துக்குள் எப்படியாவது துப்பறியும் நாவல்களை படித்தோ அல்லது வேற்றுமொழி துப்பறியும் படங்களை பார்த்தோ அவற்றை உல்டாப்பண்ணி ஸ்கிரிப்டை தருவதாக கவுதம் தரப்பு உறுதியளித்துள்ளதாம். அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயா கவுதமோட சொந்தப்படம்தானே என்று யாரும் வம்புக்கு வராதீங்கோ, அது யாரோடையோ சொந்த கதையாம் என்று அவரே சொல்லி இருக்கிறாரு. அப்புறம் எதுக்கு டைட்டில்ல 'எழுத்து - கவுதம் மேனனின்னு' போட்டாரென்றுதான் புரியல.

17 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

தொடரட்டும் உங்கள் எழுத்து பணி சரத் குமார் ஆஸ்கர் வாங்கும்போது நீங்கள் ஒரு நோபல் பரிசு வாங்கலாம் இல்லையா ?

Chitra said...

"ஆஸ்" சாரா? ash காரா? ஹா,ஹா,ஹா,ஹா......

Manoj (Statistics) said...

ஆஹா... சபாஷ் சரியான போட்டி
நம்ம அகில உலக super ஸ்டார் , வெற்றி தளபதி, vice captain சிவாவுடன் போட்டிக்கு சரத்தா........

மசக்கவுண்டன் said...

அதென்னங்க ஆஸ் காருங்க, வெல சலீசா இருந்தா எனக்கு ரெண்டு வாங்கிக்கொடுங்களேன் ஜெயசீலன் தம்பி.

மசக்கவுண்டன் said...

ஜீவதர்ஷன் தம்பி, பேரை மாத்திப்போட்டுட்டனுங்க. அதுக்காக காரு வாங்க்கிக் கொடுக்காம உட்றாதீங்க தம்பி, அப்றம் பொக்குனு போயிருவனுங்க.

Anonymous said...

திரு வாளர் சரத்குமார் ரெண்டு வருஷம் முன்னால
2011 தான்தன் அடுத்த முதலமைச்சர் எண்னு ஆனந்த
விகடனுக்கு பேட்டி கொடுத்தாரே இப்பிடி அந்தர் பல்டி
அடிச்சு ஆஸ்கருக்கு போய்ட்டரே

sweet said...

rajini kaalai virichaa mattum style entru solbavanukku other than his movies ellam pappadam thaan :)

VIJAY

வரதராஜலு .பூ said...

//நான் ஒண்ணும் காமடி பண்ணலீங்கோ....//

நம்பிடறோம்.
:)

பொன் மாலை பொழுது said...

சரத் குமாரை முதலில் தான் கொண்ட பாத்திரத்தின் நிலையில் நின்று பாவத்துடன் வசனம் பேச கற்றுக்கொள்ளச்சொல்லுங்கள்.

இவர்கள் எல்லாம் தங்களிப்பற்றி என்னதான் நினைத்துகொண்டுள்ளர்கள்?
அவ்வப்போது கருணாநிதியை சந்தித்து விட்டால் பெரிய "கொம்பர்கள் " என்று எண்ணமா? .

டக்கால்டி said...

குசும்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்குங்க ஒவ்வொரு மேட்டரிலும்...

r.v.saravanan said...

முழுக்க காமெடி பண்ணிட்டு காமெடி பண்ணலீங்க னு சொல்றீங்க

r.v.saravanan said...

எப்படியாவது துப்பறியும் நாவல்களை படித்தோ அல்லது வேற்றுமொழி துப்பறியும் படங்களை பார்த்தோ அவற்றை உல்டாப்பண்ணி ஸ்கிரிப்டை தருவதாக கவுதம் தரப்பு உறுதியளித்துள்ளதாம்

நல்ல விறுவிறுப்பா வித்தியாசமா ஒரு துப்பறியும் படத்தை
எதிர் பார்க்கலாமா வேண்டாமா ?

அ.ஜீவதர்ஷன் said...

ஹாய் அரும்பாவூர்

//தொடரட்டும் உங்கள் எழுத்து பணி சரத் குமார் ஆஸ்கர் வாங்கும்போது நீங்கள் ஒரு நோபல் பரிசு வாங்கலாம் இல்லையா ?//

வயசு போனால் எல்லோருக்குமே 'no பல்' தானே, அப்போ எனக்கும் நோபல் கிடைக்கும் உங்களுக்கும் கிடைக்கும் , எப்பூடி ...

..................................

Chitra

//"ஆஸ்" சாரா? ash காரா? ஹா,ஹா,ஹா,ஹா......//

ash ஐ தமிழில அப்படியே மொழிமாற்றம் செய்யாமல் எழுதினால் 'ஆஸ்' தானே ?

...................................

Statistics

//ஆஹா... சபாஷ் சரியான போட்டி
நம்ம அகில உலக super ஸ்டார் , வெற்றி தளபதி, vice captain சிவாவுடன் போட்டிக்கு சரத்தா........//

இல்லையா பின்ன...

..................................

மசக்கவுண்டன்

//அதென்னங்க ஆஸ் காருங்க, வெல சலீசா இருந்தா எனக்கு ரெண்டு வாங்கிக்கொடுங்களேன் ஜெயசீலன் தம்பி.//

சரிங்க நான் அவர்கிட்ட சொல்லிறன்.

............................

மசக்கவுண்டன்

//ஜீவதர்ஷன் தம்பி, பேரை மாத்திப்போட்டுட்டனுங்க. அதுக்காக காரு வாங்க்கிக் கொடுக்காம உட்றாதீங்க தம்பி, அப்றம் பொக்குனு போயிருவனுங்க.//

ஊரில திருவிழா அடுத்தமாசமுங்க, அதில விளாட்டு கார யாரவது விக்க கொண்டாந்தா என்ற பட்ஜெற்ரில ஒரு நூறு ரூபாய்க்கு வாங்கி கொரியல்ல அனுப்பிறன், ஆமா உங்க அட்ரஸ் என்ன?

...................................

suresh

//திரு வாளர் சரத்குமார் ரெண்டு வருஷம் முன்னால
/2011 தான்தன் அடுத்த முதலமைச்சர் எண்னு ஆனந்தவிகடனுக்கு பேட்டி கொடுத்தாரே இப்பிடி அந்தர் பல்டிஅடிச்சு ஆஸ்கருக்கு போய்ட்டரே//

இன்னும் கொஞ்ச நாள் போனா ஆஸ்காரையே ராதிகாவோட 'ராடன்தான்' குடுக்குதென்பாரு.

.....................................

sweet

//rajini kaalai virichaa mattum style entru solbavanukku other than his movies ellam pappadam thaan :)

VIJAY//

ரஜினி காலை விரிக்கிரத்தை பார்த்து தாங்களும் காலை விரிச்சு 'கவடு' கிளிஞ்சவங்களை பார்த்தால் பப்படம் மாதிரி தெரியாமல் ஐஸ்கிரீம் மாதிரியா தெரியும் ? :-)

.............................

வரதராஜலு .பூ

//நம்பிடறோம். :)//

நீங்கதாங்க ஒருத்தரு உண்மையா இருக்கிறீங்க :-)


...................................

கக்கு - மாணிக்கம்

//சரத் குமாரை முதலில் தான் கொண்ட பாத்திரத்தின் நிலையில் நின்று பாவத்துடன் வசனம் பேச கற்றுக்கொள்ளச்சொல்லுங்கள்.//

நடக்கிறதா பேசுங்க.

//இவர்கள் எல்லாம் தங்களிப்பற்றி என்னதான் நினைத்துகொண்டுள்ளர்கள்?
அவ்வப்போது கருணாநிதியை சந்தித்து விட்டால் பெரிய "கொம்பர்கள் " என்று எண்ணமா? .//

கருணாநிதி அம்புட்டு பெரியாளா?

...................................

டக்கால்டி

//குசும்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்குங்க ஒவ்வொரு மேட்டரிலும்...//

ஏங்க நான் சீடியஸா பேசிக்கிட்டிருக்கிறான் :-)

..................................


r.v.saravanan kudandhai

//முழுக்க காமெடி பண்ணிட்டு காமெடி பண்ணலீங்க னு சொல்றீங்க//

நம்புங்க சார்,

//r.v.saravanan kudandhai சொன்னது…

எப்படியாவது துப்பறியும் நாவல்களை படித்தோ அல்லது வேற்றுமொழி துப்பறியும் படங்களை பார்த்தோ அவற்றை உல்டாப்பண்ணி ஸ்கிரிப்டை தருவதாக கவுதம் தரப்பு உறுதியளித்துள்ளதாம்

//நல்ல விறுவிறுப்பா வித்தியாசமா ஒரு துப்பறியும் படத்தை எதிர் பார்க்கலாமா வேண்டாமா ?//

அது கவுதம் ஆட்டைய போடப்போற கதையா பொறுத்து.

ஐயையோ நான் தமிழன் said...

என்ன தான் ஸ்டைல் பண்ணலும் நம்ம ஔஉப்பர் ஸ்டார் இடத்துக்கு யாராலயும் வர முடியாது

Jayadev Das said...

\\தமிழ் சினிமாவின் மாஜி நடிகரும் தற்போதைய நடிகசங்க தலைவருமான சரத்குமார் தான் ஆஸ்கார் வாங்கப்போவதாக கூறியுள்ளார்.\\ முடியல...........

Jayadev Das said...

\\ஆனால் கார்த்திக் "ஆறுமணிக்கெல்ல சூட்டிங்" என்று தான் தவறாக நினைத்ததால்தான் எட்டுமணிக்கு வந்ததை கடைசிவரை வாசுவிடம் கூறவே இல்லையாம். \\ நல்ல விசாரிச்சுப் பாருங்க, அதுக்கு முதல் நாள் சூட்டிங்கு நினைச்சு அடுத்த நாள் வந்திருப்பாரு.!!

Jayadev Das said...

\\இருந்தால் தரமாட்டமா என்று முதலில் கூறினாலும் இரண்டு வாரத்துக்குள் எப்படியாவது துப்பறியும் நாவல்களை படித்தோ அல்லது வேற்றுமொழி துப்பறியும் படங்களை பார்த்தோ அவற்றை உல்டாப்பண்ணி ஸ்கிரிப்டை தருவதாக கவுதம் தரப்பு உறுதியளித்துள்ளதாம். \\ :))

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)