Sunday, March 14, 2010

பாலா , அமீர் போன்றோர் வித்தியாசமான இயக்குனர்களா ?



இன்றைய தேதியில் தமிழ் சினிமாவை உலகதரத்துக்கு கொண்டு செல்லும்படியான படங்களை இயக்கும் இயக்குனர்கள் அதிகமாக உள்ளார்கள் என்பது பலரதும் நம்பிக்கை. இந்த லிஸ்டில் பாலா, அமீர், செல்வராகவன், கவுதம்மேனன், ஷங்கர் , சசிகுமார், வெங்கட்பிரபு,சிம்புதேவன்,வசந்தபாலன், வெற்றிமாறன் என்பவர்கள் முக்கியமாக அதிகமானவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் நிச்சயமாக தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து புதிய பரிமாணத்தில் ரசிகர்களின் ரசனையை தூண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை , அதுதவிர ஒரே நிறத்தில் இருந்த தமிழ் சினிமாவுக்கு பல வண்ணங்களை கொடுத்தவர்கள் என்று கூட சொல்லலாம். ஸ்ரீதர், மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், மணிரத்தினம் என்னும் ஜாம்பவான்கலும் இவர்களைப்போலவே புதிய களங்களில் படங்களை கொடுத்து வெற்றிகண்டாலும் அன்றிருந்த மசாலா சினிமாவை இவர்களால் உடைக்க முடியவில்லை.இதற்குகாரணம் வித்தியாசமான சிந்தனைகள் உடையவர்கள் அன்று குறைவாக இருந்தமையும் சமகாலப்பகுதியில் இவர்கள் உச்சத்தில் இல்லாமையுமே ஆகும்.


ஆனால் இன்று புதிதாக வரும் ஒவ்வொரு இளைஞனும் எதோ ஒரு வித்தியாசத்தை கொடுக்கவேண்டும் என்ற வெறியோடுதான் இயக்குனராக வருகிறானென்றால் அதற்கு காரணம் இன்று அதிகமான இயக்குனர்கள் சமகாலத்தில் வித்தியாசமான படைப்புக்களை கொடுத்து வருவதும் , அதனால் ஏற்ப்பட்ட ரசனை மாற்றமுமேயாகும் . இன்றைய இயக்குனர்களின் புதுமையான சினிமா மாற்றத்தால் மசாலா சினிமா கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டதேன்றே கூறலாம்.

சரி இப்படிப்பட்ட பெருமைக்குரிய இயக்குனர்கள் உண்மையிலேயே வித்தியாசமான படங்களைத்தான் கொடுக்கிறார்களா என்றால் எனது பார்வையில் 90 % இல்லை என்பதே பதிலாகும். தமது முதல்ப்படத்தை வித்தியாசமாக கொடுக்கும் இந்த இயக்குனர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அடுத்த படங்களை தமது முதல்படத்தின் பாதிப்பிலேயே கொடுக்கிறார்கள். அதிகமாக ஒரேமாதிரியான உடல்மொழி, வசன உச்சரிப்பு, மொழி உச்சரிப்பு, பாடல் காட்சிகள், சண்டைகாட்சிகள் என்று தமது முதல்படத்தில் கிடைத்த வித்தியாசத்தை தமது அடையாளமாக கொண்டு அதே பாணியிலேயே தொடந்தும் படமெடுக்கும் இவர்களை எப்படி வித்தியாசமான இயக்குனர்கள் என்று கூறமுடியும்?


இதற்கு முன்னர் வித்தியாசமான படைப்புக்களை கொடுத்தவர்கள் என்று கூறப்படும் மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றோரும் இதற்க்கு விதிவிலக்கல்ல. மணிரத்தினம் கூட தனது சினிமாவை காலத்துக்கேற்றால் போல மாற்றினாலும் உடல்மொழி, வசன உச்சரிப்பு , ஒளிப்பதிவு முறை என்பவற்றுக்கு தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இன்றும் அந்த வட்டத்துக்குள்ளேயே நிற்பது வேதனையான விடயம். பலா படங்களில் அனைத்து நாயகர்களின் பாத்திரங்களும் அசாதாரணமாக இருப்பதும் , அமீர் படங்களில் ஒருவித கிறுக்கு பிடித்தவர்கள் போல இருப்பதும், கவுதம் படங்களின் வசன உச்சரிப்புக்கள் முதல் காட்சி அமைப்புக்கள் வரை ஒரே மாதிரியாக இருப்பதும், செல்வா படங்களின் போக்கு ஒரேமாதிரியாக இருப்பதும், வெங்கட்பிரபு ஒரே நடிகர்களைவைத்து ஒரே பாணியிலான நகைச்சுவயுடன் படமெடுப்பதும், வரலாற்று படங்களை சிம்புதேவன் எடுப்பதும் ஒரே கதையில் எட்டுப் படங்களை சங்கர் எடுப்பதும் எப்படி வித்தியாசம் ஆகும்?


சசிக்குமார், வெற்றிமாறன், வசந்தபாலன் போன்றோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு தமது அடுத்த படத்தை இன்னமும் வழங்காதது ஏமாற்றம் அளிக்கின்றது , இவர்களும் தமது முதல்ப் படங்களின் சாயலில் படங்களை கொடுத்தால் இவர்களும் வித்தியாசமான படங்களை இயக்குபவர்கள் லிஸ்டில் இடம்பெறமுடியாது. இவர்களை தவிர வர்த்தகரீதியான படங்களை இயக்கும் முன்னணி இயக்குனர்களான ரவிக்குமார், முருகதாஸ், லிங்குசாமி, சரண் என்பவர்களும் தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கி அதிலேயே ஒரே மாதரியான பல விடயங்களை உள்ளடக்கியே புதிய படங்களை இயக்குகிறார்கள்.


இப்படி ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்துவிட்டு தத்தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கி புதிய படங்களை தமது முதல்ப்படங்களின் பாதிப்புடன் கொடுத்தால் அவையும் வழமையான படங்கள்தானே ? இவர்கள் தமது வட்டத்தை உடைத்து வெளியே வந்து தமது படங்களில் தமது அடையாளங்கள் இல்லாமல் புதிய களங்களை கொடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.உதாரணத்திற்கு அமீர் இயக்கிய ஒரு படத்தை இது 'அமீர் படம்' என்பதைவிட அந்தப்படம் 'அமீரால்' இயக்கப்பட்டது என்பதில்தான் உண்மையான தமிழ்சினிமாவின் வளர்ச்சி தங்கியுள்ளது என்பது எனது கருத்து.






நான் மேலே கூறிய இயக்குனர்கள் அனைவரும் இன்றைய தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் ஏதாவதொருவகையில் முக்கிய பங்காற்றியவர்கள், அவர்களை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்பதே எனக்கு தெரியும் . இருந்தாலும் எனது எண்ணத்தில் தோன்றியதே இந்தப்பதிவு....

உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறலாம்......

26 வாசகர் எண்ணங்கள்:

பிரசன்னா இராசன் said...

முதலில் தலைப்பை மாற்றுங்கள். பாலா பாவம் பன்ருட்டி பலாவாகி விட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. தங்குளுக்கு என்று ஒரு பாணியை தங்கள் முதல் படம் மூலம் அமைத்து கொள்கின்றனர். தொடரும் படங்களை முதல் படத்தின் பாணியிலேயே அமைத்து கொள்கின்றனர். அவர்கள் என்றுமே தங்களை வித்தியாசமான இயக்குனர்கள் என்று கூறிக் கொண்டதில்லையே?

ஹாய் அரும்பாவூர் said...

இப்போது உள்ள புது இயக்குனர்கள் புதுமையான முறையில் படம் தருகிறேன் என்று அவரை நம்பி வரும் தயாரிப்பாளர் பணத்தை மட்டும் ஏமாற்றாமல் ரசிகனின் நம்பிக்கை ஏமாற்றுகின்றனர்

என்னை பொறுத்த வரை திரைப்படத்தை பாடமாக தருகின்றேன் என்று ஏமாற்றுவதை விட நல்ல படமாக தரும் இயக்குனரே சிறந்தவர்

அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் சிறந்து இயக்குனர் என்பேன்

ஹாலிவுட் பாலா said...

முதல்ல.. இப்படி நீங்க எதிர்பார்க்கறதே தப்பு.

ஒரே ஆள்.. கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்னு அத்தனை துறையிலும் வேலை செய்து பார்த்தே பழக்கமாகிட்டனால வந்த வினை இது.

ஹாலிவுட்டில் கூட, ரோலண்ட் மாதிரி இயக்குனர்கள் ஒரே மாதிரியானப் படங்களை இயக்குவது மாதிரித்தான் தெரியும்.

அங்கே கதையை வேறு யாரோ எழுதியிருக்க, இதை இவர் இயக்கினா நல்லாயிருக்குமேன்னு வரும் வாய்ப்புகள் அது.

ஆனா... பாலாவே கதை-வசனம் அத்தனையும் எழுதுவேன்னு அடம் பிடிச்சா.. ஈயடிச்சான் காப்பி படங்கள்தான் வரும். இதில் என்ன பிரச்சனையிருக்கு?

வித்தியாசமானப் படங்கள் கொடுப்பது இயக்குனர்கள் கையில் இல்லை. கதையில் இருக்குன்னு நினைக்கிறேன்.

எப்பூடி ... said...

பிரசன்னா இராசன்

//முதலில் தலைப்பை மாற்றுங்கள். பாலா பாவம் பன்ருட்டி பலாவாகி விட்டார். //

எல்லோரது பெயரையும் தலைப்பில் இடமுடியாது அதனால் எனக்கு மிகவும்பிடித்த இந்த இருவரது பெயர்களையும் தலைப்பில் இட்டுள்ளேன், இதில் தப்பேதுமிருப்பதாக தெரியவில்லை.

//இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. தங்குளுக்கு என்று ஒரு பாணியை தங்கள் முதல் படம் மூலம் அமைத்து கொள்கின்றனர். தொடரும் படங்களை முதல் படத்தின் பாணியிலேயே அமைத்து கொள்கின்றனர். அவர்கள் என்றுமே தங்களை வித்தியாசமான இயக்குனர்கள் என்று கூறிக் கொண்டதில்லையே?//

இதில் தவறென்று ஒரு இடத்திலும் நான் கூறவில்லை , அதேபோல இவர்கள் தங்களை வித்தியாசமான இயக்குனர்கள் என்று தாங்களே கூறியதாகவும் கூறவில்லை, அவர்கள் என்ன T .R ஆ அப்படி கூற?

ஆனால் பாலா படமென்றால் நாயகர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பது பலருக்கும் முன்பே தெரிந்த விடயம், இதை ஏன் பாலா மாற்றக்கூடாது என்று நினைக்கிறீர்கள்? பாலா என்னும் சிறந்த இயக்குனர் எதற்காக ஒரு வட்டத்துக்குள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? வெங்கட் பிரபுவின் அடுத்த படம் ஒரு காமடிப்படமாம், நாயகர்கள் சிவாவும் பிரேம்ஜியுமாம் , அப்படியானால் படம் எப்படி இருக்குமென்பதை முதலிலேயே ஊகிக்கமுடிகிறதே? ஒரு 600028 போதும் என்பது எனது விருப்பம்.

இதில் யாரையும் நான் குறை கூறவரவில்லை , இந்த சிறந்த திறமைகளை எதற்கு ஒரே வட்டத்திற்குள் போட்டு அடைக்கவேண்டும்? கவுதம் ஒரு கிராமத்து கதையில் புதுமை செய்யட்டுமே? அதேபோல செல்வா ஒரு யதார்த்தன்மான படத்தை புதிய கோணத்தில் தர முயற்சி செய்யட்டுமே என்பது எனது எண்ணம். இது குறை கூறுவதல்ல, ஒருவகை ஆதங்கம்...

எனக்கு பிடித்த பாலா தனக்கு எல்லை வைத்திருப்பவராக இருக்க கூடாதென்பது எனது விருப்பம், அனால் உங்களுக்கு பாலா அப்படியே இருப்பதுதான் விருப்பமென்றால் நீங்கள் உண்மையிலேயே பாலாவின் ரசிகர்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

நன்றி.

எப்பூடி ... said...

ஹாய் அரும்பாவூர்

//என்னை பொறுத்த வரை திரைப்படத்தை பாடமாக தருகின்றேன் என்று ஏமாற்றுவதை விட நல்ல படமாக தரும் இயக்குனரே சிறந்தவர்
அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் சிறந்து இயக்குனர் என்பேன்//

ரவிக்குமாரும் ஒரேவகையான மசாலாக்களையே இயக்குபவரானாலும் அவரை பொறுத்தவரை மாற்றம் தேவையில்லை என்பது எனது கருத்து. ஜனரஞ்சகமான படங்களை விரும்புபவர்களுக்கு இன்னமும் ரவிக்குமார்தான் தீனி போடுகிறார் என்பதை மறுக்கமுடியாது.

எப்பூடி ... said...

ஹாலிவுட் பாலா

//ஒரே ஆள்.. கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்னு அத்தனை துறையிலும் வேலை செய்து பார்த்தே பழக்கமாகிட்டனால வந்த வினை இது.//

மிகச்சரியாக சொன்னீர்கள்.


//ஆனா... பாலாவே கதை-வசனம் அத்தனையும் எழுதுவேன்னு அடம் பிடிச்சா.. ஈயடிச்சான் காப்பி படங்கள்தான் வரும். இதில் என்ன பிரச்சனையிருக்கு?//

பிரச்சினையே அதுதானே, நாம் சிறந்த இயக்குனர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் எதற்கு ஈயடிச்சான் காப்பி படங்களை தரவேண்டும்? புதிய கோணத்தில் சிந்தித்தால் இன்னமும் சிறப்பாக இருக்குமல்லவா ? இதற்கு நீங்கள் சொன்னாற்போல் முதலில் ஒருவரே கதை, திரைக்கதை,வசனம், எழுதி இயக்கம் கலாச்சாரத்தை உடைக்கவேண்டும்.ஆனால் இங்கு இது சாத்தியப்படுமென்று தோன்றவில்லை.

//வித்தியாசமானப் படங்கள் கொடுப்பது இயக்குனர்கள் கையில் இல்லை. கதையில் இருக்குன்னு நினைக்கிறேன்.//

கதையை விடுத்து பார்த்தால் கூட காட்சி அமைப்புக்கள் , வசன உச்சரிப்பு, உடல்மொழி , கதாபாத்திரங்கள் என்பன ஒவ்வொரு படத்திலும் ஒரே நிறத்தில் இருப்பதையாவது மாற்றிக்கொள்ளலாமே.

ஹாலிவுட் பாலா said...

பிரசன்னா சொன்னது... தலைப்பில் இருக்கும் எழுத்துப்பிழையைங்க.

பாலா-வுக்குப் பதிலா.. ‘பலா’-ன்னு இருக்கு. நானும் சொல்லனும்னு நினைச்சி மறந்துட்டேன்.

==

நான் என்ன பிரச்சனையிருக்குன்னு கேட்டதும்... இவங்களே அத்தனை துறை வேலையும் செய்யும் போது... அதுவே ஒரு பெரிய குறையா இருக்கும் போது, இதில் குறை சொல்ல என்ன இருக்குன்னுதான்.

தனித்தனி ஸ்பெஷலிஸ்ட் உபயோகிக்காதவரைக்கும்.. வித்தியாசமானப் படங்கள் எல்லாம் வருவது சாத்தியமே இல்லாத ஒன்னு.

பிரசன்னா இராசன் said...

அடங்கப்பா. தலைப்புல இருக்குற எழுத்துப் பிழைய மாத்த சொன்னேன். 'பாலா'வை 'பலா'ன்னு போட்டு இருக்கீங்க... முதல்ல அத மாத்துங்க பாஸ். அப்புறமா கருத்து சொல்லலாம்

எப்பூடி ... said...

ஹாலிவுட் பாலா சொன்னது…

//பிரசன்னா சொன்னது... தலைப்பில் இருக்கும் எழுத்துப்பிழையைங்க.பாலா-வுக்குப் பதிலா.. ‘பலா’-ன்னு இருக்கு. நானும் சொல்லனும்னு நினைச்சி மறந்துட்டேன்.//

அப்ப நான்தான் வைட்டா? ஓகே மாத்தியாச்சு.

//
நான் என்ன பிரச்சனையிருக்குன்னு கேட்டதும்... இவங்களே அத்தனை துறை வேலையும் செய்யும் போது... அதுவே ஒரு பெரிய குறையா இருக்கும் போது, இதில் குறை சொல்ல என்ன இருக்குன்னுதான்.//

மறுபடியும் நான்தான் வைட்டா ?

................................

பிரசன்னா இராசன்

//அடங்கப்பா. தலைப்புல இருக்குற எழுத்துப் பிழைய மாத்த சொன்னேன். 'பாலா'வை 'பலா'ன்னு போட்டு இருக்கீங்க... முதல்ல அத மாத்துங்க பாஸ். அப்புறமா கருத்து சொல்லலாம்//

மாத்தியாச்சு மாத்தியாச்சு , Becareful (என்னை சொன்னன் ), ஓகே இப்ப முதல் சொன்ன கருத்தை (நீங்கதான் சொன்னீங்க) படிங்க.

chosenone said...

"பாலா , அமீர் போன்றோர் வித்தியாசமான இயக்குனர்களா ?"???

இந்த தலைப்புக்கும் நீங்கள் பதிவு செய்த கருத்துக்கும் சின்ன முரண்பாடு இறுக்கு என்று நினைகிறேன்((நினைகிறேன் !)).
பாலா,அமீர் போன்றோர் வித்தியாசமான இயக்குனர்கள் என்று தமிழ் சினிமா சமீப காலமாக மார்தட்டிகொனட்து பெரும்பாலான இதர (மசாலா) இயக்குனர்களை ஒப்பிட்டு தானே தவிர ஒவ்வொரு படத்துக்கும் அவர்கள் தங்கள் "work style " இல் வித்யாசத்துக்காக அல்ல .



ஒரு இயக்குனரின் work style/ narration view என்பது ஒரு போட்டோ FRAME போன்றது. frame வழியாக தான் நாங்கள் படத்தை பார்க்கமுடியும் .
அதற்குள் இருக்கும் போட்டோ அதாவது "கதை களம் " மாற்றிக்கொண்டே இருக்கும் .(மசாலா படங்களை தவிர ) அனால் அந்த frame/narration view மட்டும் அப்படியே இருக்கும் .
அனால் நீங்கள் சொல்வது ஒரு இயக்குனரின் view of narrattion ம் படத்துக்கு படம் மாற வென்றும் என்பது .இது கொஞ்சம் கஷ்டம் தான்.
காரணம் : அதற்கு அந்த படைப்பாளியின் மனோ நிலை கட்டமைப்பு ஓரளவுக்கு தகர்க்க வேண்டும் . அது ஒரு யோக நிலை .
உலக சினிமாவின் பிதாமகர்களான
குரொசாவா,பெலினி ,பர்கமன்...போன்றோரே இந்த விஷயத்தில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளார்கள் .
இது எப்படி என்றால் ::
25 வருடம் வாழ்ந்த பிறகு உங்கள் body language ,expressions, reactions எல்லாம் உடனே மாற்றமுடியுமா ?
கஷ்டம் ஆனால் சாத்தியம்.

chosenone said...

///வெங்கட்பிரபு ஒரே நடிகர்களைவைத்து ஒரே பாணியிலான நகைச்சுவயுடன் படமெடுப்பதும், வரலாற்று படங்களை சிம்புதேவன் எடுப்பதும் ஒரே கதையில் எட்டுப் படங்களை சங்கர் எடுப்பதும் எப்படி வித்தியாசம் ஆகும்?///

100%உண்மை .
இது முழுக்க முழுக்க அவர்களின் கேனத்தனம் தான் .....
chennai-28 அருமையான திரை கதை அமைத்தவர் அதில் வெற்றி கண்ட பிறகு அவர் அடுத்து இயக்கிய படங்களிலும் அந்த பாதிப்பில்(வெற்றி போதையில்) இருந்து மீள முடியவில்லை . இயக்குனர்கள் மட்டும் அல்ல திரயுலகில் பலர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் . (s.a. ராஜ்குமார்/ ,"பிரமாண்ட" ஷங்கர்,/ "கில்லி "விஜய் ,/ "கருத்து "விவேக் ,/ "கெட்டப் சென்ஞ்" பாலா/"செண்டிமெண்ட் " விக்ரமன் .....etc

a.r.ரஹ்மான் இந்த 17 வருடத்தில் எவ்வளவு ஹிட் மேல் ஹிட் கொடுத்திருப்பார் . ஆனால் எத்துண பெரிய ஹிட்டும் அவரை குறிப்பிட்ட ஒரு "TREND" க்குள் முடக்க முடியவில்லை .(முடங்கிபோகவில்லை. )
அதனால் தான் முதல் படத்தில் இருந்த இன்று வரை அவரின் ருத்ர தாண்டவத்தின் வீரியம் குறையவில்லை .

Chitra said...

When people get caught in the "image mould" it is hard to break it. Audience has partial responsibility.

எப்பூடி ... said...

chosenone

// இந்த தலைப்புக்கும் நீங்கள் பதிவு செய்த கருத்துக்கும் சின்ன முரண்பாடு இறுக்கு என்று நினைகிறேன்((நினைகிறேன் !)). பாலா,அமீர் போன்றோர் வித்தியாசமான இயக்குனர்கள் என்று தமிழ் சினிமா சமீப காலமாக மார்தட்டிகொனட்து பெரும்பாலான இதர (மசாலா) இயக்குனர்களை ஒப்பிட்டு தானே தவிர ஒவ்வொரு படத்துக்கும் அவர்கள் தங்கள் "work style " இல் வித்யாசத்துக்காக அல்ல .//

நீங்கள் சொல்வது போல் மசாலப்படங்களில் இருந்துதான் வித்தியாசப்படுகிரார்களே தவிர தமது படங்களில் இருந்தில்லை என்ற அர்த்தத்தில்தான் அந்த தலைப்பை வைத்தேன்.

//இது எப்படி என்றால் ::
25 வருடம் வாழ்ந்த பிறகு உங்கள் body language ,expressions, reactions எல்லாம் உடனே மாற்றமுடியுமா ? //

உதாரணத்திற்கு இலங்கையில் 25 வயதுவரை மாடு மேய்த்துக்கொண்டிருந்தவனும் இங்கிலாந்து போனவுடன் நடை ,உடை ,பாவனை, மொழி, பேசும் முறை (இங்கு காட்டுக்கத்து கத்தியவன் அங்கு நுனி நாக்கில் பேசுகிறான் ) என்று தம்மை அந்த இடத்துக்கு ஏற்றால்போல மாறவில்லையா? அதேபோல தமிழகத்தில் இருக்கும் சினிமாவை உலகிற்கு எடுத்து செல்ல சில மாற்றங்களை நிச்சயம் மேற்கொண்டுதான் ஆகவேண்டும்.

//கஷ்டம் ஆனால் சாத்தியம்.//

நிச்சயமாக,ஆனால் முயற்சி செய்தால் மட்டுமே இது சாத்தியம்.


.......................................

Chitra

//When people get caught in the "image mould" it is hard to break it. Audience has partial responsibility.//

hmmm....

r.v.saravanan kudandhai said...

அவரால் ஒரு 'ஆஸ்' கார் வாங்க முடியாதா?

he...he....

தருமி said...

//இந்த லிஸ்டில் பாலா, அமீர், செல்வராகவன், கவுதம்மேனன், ஷங்கர் , சசிகுமார், வெங்கட்பிரபு,சிம்புதேவன்,வசந்தபாலன், வெற்றிமாறன் என்பவர்கள் முக்கியமாக அதிகமானவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள். //

அடப்பாவமே ...!

Mohan said...

எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை.பாலா இப்ப எடுத்துக்கிட்டு இருக்கின்ற படம் தன் முந்தைய படங்களை ஒட்டி கொஞ்சம் கூட இருக்காது என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.என்னைப் பொறுத்த வரைக்கும் அமீரோட படங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல்தான் வந்திருக்கிறது(மௌனம் பேசியதே,ராம்,பருத்தி வீரன் படங்களில் பெரிதாக என்ன ஒற்றுமை இருக்கு என்று எனக்கு தெரியவில்லை...இந்தப் படங்களின் ஹுரோக்களிடையே பெரிதாக ஒற்றுமையைச் சொல்லி விட முடியாது).செல்வராகவனும் துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன்,7G ரெயின்போ காலனி,புதுப்பேட்டை,ஆயிரத்தில் ஒருவன் என்று தன்னுடைய படங்களின் தளங்களை கொஞ்சம்,கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வந்திருக்கிறார்.அவர் இப்போது எடுத்துக் கொண்டு இருக்கும் படம் 'த்ரில்லர்' என்று நினைக்கிறேன்.கவுதம்மேனன், ஷங்கர் போன்ற சில இயக்குனர்களை இந்த லிஸ்டில் சேர்க்கலாமே தவிர,எல்லோரையும் சேர்க்க முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம்

எப்பூடி ... said...

r.v.saravanan kudandhai

//அவரால் ஒரு 'ஆஸ்' கார் வாங்க முடியாதா? he...he....//

முடியும்.. ஆனால் முடியாது.. ஹி ஹி

.........................................

தருமி

//அடப்பாவமே ...!//

யாரு?

.............................................

Mohan

//எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை.பாலா இப்ப எடுத்துக்கிட்டு இருக்கின்ற படம் தன் முந்தைய படங்களை ஒட்டி கொஞ்சம் கூட இருக்காது என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.//

நான் கூறியது இதுவரை வந்த படங்களை பற்றி, இனி வருங்காலங்களில் பாலா சொல்வதுபோல வித்தியாசமாக இருந்தால் சந்தோசமே.

//என்னைப் பொறுத்த வரைக்கும் அமீரோட படங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல்தான் வந்திருக்கிறது(மௌனம் பேசியதே,ராம்,பருத்தி வீரன் படங்களில் பெரிதாக என்ன ஒற்றுமை இருக்கு என்று எனக்கு தெரியவில்லை...இந்தப் படங்களின் ஹுரோக்களிடையே பெரிதாக ஒற்றுமையைச் சொல்லி விட முடியாது).//

இந்த மூன்று படங்களின் ஹீரோக்களும் ஒருவித கிறுக்கு பிடித்த கேரக்டர்களாகவே(un normal ) இருப்பார்கள்.இதனை தவிர்த்து பார்த்தால். அமீரது படங்கள் நீங்கள் சொல்வதுபோல வித்தியாசமானவையே. ஆனாலும் அமீர்சாதாரண மனநிலையில் உள்ள நாயகனை வைத்து படமொன்றை இயக்காவிட்டால் அமீரும் இந்த லிஸ்டில் தொடர்ந்தும் இருப்பார்.

//செல்வராகவனும் துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன்,7G ரெயின்போ காலனி,புதுப்பேட்டை,ஆயிரத்தில் ஒருவன் என்று தன்னுடைய படங்களின் தளங்களை கொஞ்சம்,கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வந்திருக்கிறார்.அவர் இப்போது எடுத்துக் கொண்டு இருக்கும் படம் 'த்ரில்லர்' என்று நினைக்கிறேன்.//

எந்தப்படமானாலும் இருண்ட ஒளிப்பதிவு, திணிக்கப்படும் முகம்சுளிக்கும் காட்சிகள் (புரியுமென்று நினைக்கிறேன்), மிகைப்படுத்தப்படும் நடிப்பை கொண்ட நாயகனின் பாத்திரம், பணக்கார நாயகி மற்றும் ஏழைநாயகன்(ஆயிரத்தில் ஒருவன் விதிவிலக்கு) என பலவிடயங்களை கூறலாம். அவர் திரிலரிலும் மேற்படி விடயங்களைதிணிப்பார் என்பது எனது நம்பிக்கை, திணிக்க கூடாதென்பது எனது ஆசை.


//கவுதம்மேனன், ஷங்கர் போன்ற சில இயக்குனர்களை இந்த லிஸ்டில் சேர்க்கலாமே தவிர,எல்லோரையும் சேர்க்க முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம்//

இவர்கள் இருவரும் (கவுதம்மேனன், ஷங்கர்) இதில் முன்னோடிகள், மற்றயபடி உங்கள் பார்வையில் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.

பிரசன்னா இராசன் said...

அமீரின் முதல் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி, இரண்டாவது படம் த்ரில்லர், மூன்றாவது படம் ஒரு நியோ ரியலிசத் திரைப்படம். மூன்றுமே வெவ்வேறுத் திரைக்கலன்களில் எடுத்தாளப்பட்டவை. 'யோகி'யை நான் லிஸ்டில் சேர்க்கவில்லை. இதில் முதல் படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் தமிழ் சினிமாவின் முக்கியமானத் திரைப்படங்கள். இத்தனை வித்தியாசமான மூன்று Genre களில் படத்தை அமீர் கொடுத்து இருக்க, இதற்க்கு மேல் உங்களுக்கு என்ன வித்தியாசம் வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் பதிவைக் காட்டிலும் அதற்கு பதிலாக நீங்கள் விவாதிப்பது தான் உச்சகட்ட காமெடி. சினிமாவே ஒரு மிகை தான். தங்களுக்கு என்று ஒரு பாணி இருப்பதில் என்றுமே தவறு இல்லை. அது தான் மற்றவர்கள் இருந்து ஒருவரை வித்தியாசப் படுத்த உதவும். உங்களுக்கு என்று ஒரு வித்தியாசமான பாணி தேவைப் பட்டது எனில் நீங்களே ஒரு திரைப்படம் எடுக்கலாமே...

பிரசன்னா இராசன் said...

//
இந்த மூன்று படங்களின் ஹீரோக்களும் ஒருவித கிறுக்கு பிடித்த கேரக்டர்களாகவே(un normal ) இருப்பார்கள்.இதனை தவிர்த்து பார்த்தால். அமீரது படங்கள் நீங்கள் சொல்வதுபோல வித்தியாசமானவையே. ஆனாலும் அமீர்சாதாரண மனநிலையில் உள்ள நாயகனை வைத்து படமொன்றை இயக்காவிட்டால் அமீரும் இந்த லிஸ்டில் தொடர்ந்தும் இருப்பார்.
//

தவறாக எடுத்துக் கொள்ளாதீர். நீங்கள் கூறியது உங்கள் புரிதல் தன்மை மிக மிக மேலோட்டமாக இருக்கிறது என தெளிநீர் ஓடையாக காட்டுகிறது. நம் ஒவ்வொருவரிடமும் ஒரு வித கிரேசி தன்மை ஒளிந்திருக்கும். அது தான் அமீரின் நாயகர்களிடம் வெளிப்பட்டது. 'மெளனம் பேசியதே'வில் நாயகன் ஒன்றும் Schizophrenic அல்ல. மாறாக தனக்கு பிடிக்காத ஒன்றை பிடிவாதமாக வெறுக்கிறான். அவ்வளவே. நம்மிடையே எதனை பிடிவாதக்காரர்கள் உண்டு. மேலும் 'இராம்' திரைப்படத்தின் நாயகன் ஒரு ஆடிசம் பதிக்கப் பெற்ற இளைஞன். ஆடிச பாதிப்பு உள்ளவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் 'ஜீவா'வின் கதாபாத்திரம் மிக மென் நோக்கோடு தான் கையாளப் பட்டு இருந்தது. 'பருத்தி வீரன்' நாயகனிடம் என்ன மனப்பிறழ்வு நிலையை கண்டீர் என்று தெரியவில்லை. நான் தேனிக்காரன். எனக்கு என்னுடைய மண்ணின் மனிதர்களையும், அவரின் வாழ்வியலும் ஒரு வகையில் சொல்லப் போனால் அத்துப்படி.

ஒரு வித rogue கதாப்பாத்திரத்தை இதைக் காட்டிலும் சிறப்பாக யாரேனும் திரையில் பொருத்தி இருக்க முடியாது. குறைகள் இல்லாத திரைப்படம் எது? இப்படி எல்லாம் இருக்க, இதற்க்கு மேல் என்ன வித்தியாசம் வேண்டி இருக்கிறது என்று கொஞ்சம் தெளிவுப்பட கூறுகிறீர்களா?

எப்பூடி ... said...

//அமீரின் முதல் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி, இரண்டாவது படம் த்ரில்லர், மூன்றாவது படம் ஒரு நியோ ரியலிசத் திரைப்படம். மூன்றுமே வெவ்வேறுத் திரைக்கலன்களில் எடுத்தாளப்பட்டவை//

உண்மைதான் ஆனால் வெவ்வேறுத் திரைக்கலன்களில் எடுத்திருந்தாலும் நாயகர்கள் ஒரே மாதிரியாகத்தான் எனக்கு தெரிகிறார்கள், முரட்டுத்தனமான, எந்த விடயத்தையும் கணக்கில் எடுக்காத ஒரு one way நாயகர்களாகத்தன் மூன்று படங்களிலும் தெரிகிறார்கள்.அதுதவிர அந்த மூன்று பேருக்குள்ளும் அமீர் என்னும் இயக்குனர் இருப்பது போலவே எனக்கு படுகிறது. இதை பிழை எனேறு நான் ஒருபோதும் கூறவில்லை, அமீரின் நாயகர்களுக்குள் அமீர் இல்லாமல் இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்குமென்றுதான் கூறினேன்.

// உங்கள் பதிவைக் காட்டிலும் அதற்கு பதிலாக நீங்கள் விவாதிப்பது தான் உச்சகட்ட காமெடி.//

உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டால் சீடியஸ் விவாதித்தால் காமடியா? நன்றி ஐயா.

//உங்களுக்கு என்று ஒரு வித்தியாசமான பாணி தேவைப் பட்டது எனில் நீங்களே ஒரு திரைப்படம் எடுக்கலாமே...//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை, நான் விமர்சிக்க கூட இல்லை , எனது கருத்தைத்தான் சொன்னேன், அது எனது பார்வையை பொறுத்தது. சிலருக்கு உடன்பாடு இருக்கலாம் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம், நான் இந்த கருத்தை யாருக்கும் திணிக்கவில்லை. எனது பார்வையில் ஒன்றாக தெரியும் அமீரின் நாயகர்கள் உங்கள் பார்வையல் வேறாக தெரியலாம், அதற்காக நான் உங்கள் கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அதேபோல நான் எனது என்னத்தையும் உங்களுக்கு திணிக்கவில்லை

//மெளனம் பேசியதே'வில் நாயகன் ஒன்றும் Schizophrenic அல்ல. மாறாக தனக்கு பிடிக்காத ஒன்றை பிடிவாதமாக வெறுக்கிறான். அவ்வளவே. நம்மிடையே எதனை பிடிவாதக்காரர்கள் உண்டு. மேலும் 'இராம்' திரைப்படத்தின் நாயகன் ஒரு ஆடிசம் பதிக்கப் பெற்ற இளைஞன். ஆடிச பாதிப்பு உள்ளவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் 'ஜீவா'வின் கதாபாத்திரம்//

இதைதான் நானும் சொன்னேன் மூன்று படத்திலும் ஒருவகை கிறுக்குபிடித்த un normal நாயகர்கள் என்று.

//பருத்தி வீரன்' நாயகனிடம் என்ன மனப்பிறழ்வு நிலையை கண்டீர் என்று தெரியவில்லை.நான் தேனிக்காரன். எனக்கு என்னுடைய மண்ணின் மனிதர்களையும், அவரின் வாழ்வியலும் ஒரு வகையில் சொல்லப் போனால் அத்துப்படி.//

பருத்திவீரனில் கார்த்தி கரக்ரர் un normal மனிதனாகவே எனக்கு தெரிகிறது, நான் தேனிக்காரன் இல்லாததால்தான் அப்படி தெரிகிறதென்றால் im sorry.

//குறைகள் இல்லாத திரைப்படம் எது? இப்படி எல்லாம் இருக்க, இதற்க்கு மேல் என்ன வித்தியாசம் வேண்டி இருக்கிறது என்று கொஞ்சம் தெளிவுப்பட கூறுகிறீர்களா?//

மீண்டும் சொல்கிறேன் நான் யாரையும் குறை கூறவில்லை , அனைத்து இயக்குனர்களும் எத்தனை வித்தியாசமான முகங்களில் படமெடுத்தாலும் தங்களுக்கேன்றுள்ள சில மரபுகள் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட புதிய முகத்தில் படத்தை தரவேண்டும் என்றுதான் கூறினேன். உதாரணமாக சுருங்க சொன்னால் அமீரின் நாயகர்களில் அமீரின் தாக்கம் இருக்ககூடாதென்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

பிரசன்னா இராசன் said...

//
உதாரணமாக சுருங்க சொன்னால் அமீரின் நாயகர்களில் அமீரின் தாக்கம் இருக்ககூடாதென்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

//

ஒரு படைப்பாளி தன்னுடைய ஆளுமை இல்லாமல் அந்த படைப்பை உருவாக்குவது எப்படி? நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் கூட நாம் அறியாமல் நம்முடைய ஆளுமை வெளிப்படுகிறது. யாரேனும் ஒருவரால் எழுதப் பட்டு அவர் இயக்கினால் ஒழிய அந்த தாக்கம் தவிர்க்கவே முடியாதது. சொல்லப் போனால் அமீரின் பாத்திரங்களில் இருந்த ஒரு பொதுத்தன்மை என்ன தெரியுமா? அவர்கள் அத்தனை பேரும் Male Chauvinistகள். முதலில் un normal என்ற பதம் தவறு. Abnormal என்று திருத்தி கொள்ளுங்கள். நம் ஒவ்வருவோரிடையே அந்த abnormal தன்மை உண்டு. அதைத் தான் அமீர் வெளிகாட்டி இருக்கிறார்...

எப்பூடி ... said...

பிரசன்னா இராசன்

//ஒரு படைப்பாளி தன்னுடைய ஆளுமை இல்லாமல் அந்த படைப்பை உருவாக்குவது எப்படி? நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் கூட நாம் அறியாமல் நம்முடைய ஆளுமை வெளிப்படுகிறது.//

நிச்சயமாக , இதை மாற்றுவது மிகமிக கடினம் என்று தெரியும் , மாற்றினால் சிறப்புத்தானே. அப்படி ஒரு மாற்றத்தைத்தான் விரும்புகிறேன்.இதில் நான் அமீருக்கு எதிரியோ அல்லது வேண்டாதவனோ இல்லை.
//முதலில் un normal என்ற பதம் தவறு. Abnormal என்று திருத்தி கொள்ளுங்கள்.//

சாரிசார் ,முதலில் பாலாவை பலா என்று எழுதியது எழுத்துப்பிழைதான் , இது எழுத்துப்பிழையில்லை தவறு, இதுதான் இங்கிலீசு தெரியாட்டி தமிழில எழுதோணும் என்கிறது.

உங்கள் பின்னூட்டத்திற்கும் , கருத்திற்கும் நன்றி.

முத்துகுமரன் said...

//நிச்சயமாக , இதை மாற்றுவது மிகமிக கடினம் என்று தெரியும் , மாற்றினால் சிறப்புத்தானே. அப்படி ஒரு மாற்றத்தைத்தான் விரும்புகிறேன்//

பேசாம தயாரிப்பாளர் ஆகிடுங்க...

un normal என்கிற பதமே அபத்தமானது.
சாத'ரண'ங்களை விட்டுமேற்கூறிய படைப்பாளிகள் விலகி இருப்பதே பெரும் ஆறுதல்.
பாலாவாகட்டும் அமீராகட்டும் அவர்களின் படைப்புகளை அசாதரண மனிதர்களை பிம்பப்படுத்தி எடுத்திருக்கிறார்கள் என்பது புரிதல் குறைவே. படைப்பாளியைப் போலவே ரசிகனும் தேட வேண்டும். பாலாவும் அமீரூம் நேரடியாக சொல்லாமலே ரசிகனுக்கு சில உணர்வுகளை கடத்தும் வல்லமை பெற்றவர்கள். அதுவே பெரிய வித்தியாசம்தான்

கலைஞன் வெளிப்பாடாத இடத்தில் கலை என்பதே இல்லை. அப்படி எடுத்தால் இயந்திரத்தனமாக இருக்கும்

எப்பூடி ... said...

முத்துகுமரன்


//பேசாம தயாரிப்பாளர் ஆகிடுங்க...

un normal என்கிற பதமே அபத்தமானது.
சாத'ரண'ங்களை விட்டுமேற்கூறிய படைப்பாளிகள் விலகி இருப்பதே பெரும் ஆறுதல்.
பாலாவாகட்டும் அமீராகட்டும் அவர்களின் படைப்புகளை அசாதரண மனிதர்களை பிம்பப்படுத்தி எடுத்திருக்கிறார்கள் என்பது புரிதல் குறைவே. படைப்பாளியைப் போலவே ரசிகனும் தேட வேண்டும். பாலாவும் அமீரூம் நேரடியாக சொல்லாமலே ரசிகனுக்கு சில உணர்வுகளை கடத்தும் வல்லமை பெற்றவர்கள். அதுவே பெரிய வித்தியாசம்தான்//


இவர்கள் சாதாரண படங்களை எடுப்பதாக நான் கூறவில்லை, இவர்கள் இயக்கம் வித்தியாசமான படங்கள் முதல்ப்படத்தின் பாதிப்பிலேயே தொடர்ந்தும் வருகின்றது இதனை மாற்றினால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரினேன், இதற்குபோயு தயாரிப்பாளர் ஆகச்சொன்னால் ?

அதேதான், ஆனால் வேறு வேறு இடங்களில் தேடினால் நான்றாக இருக்குமல்லவா?

//கலைஞன் வெளிப்பாடாத இடத்தில் கலை என்பதே இல்லை. அப்படி எடுத்தால் இயந்திரத்தனமாக இருக்கும்//

தன்னை தாண்டாவிட்டால் ஒரே உணர்வுகள்தான் மீண்டும் மீண்டும் வெளிப்படும். அப்படி இருந்தால் இவர்களது அசாதாரண படங்கள் ஒரே நிறத்தில்தான் இருக்கும்.

ROBOT said...

தங்களின் ஆதங்கம் நியாயம் தான்.நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் கூடிய விரைவில் வரும் என்று நினைக்கின்றேன்.பாலா கூட தனது வழக்கமான கதைகளை போல் இல்லாமல் ஒரு feel good படத்தை தான் இப்போது தான் இயக்கி கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.பொறுத்திருந்து பாப்போம் .

எப்பூடி ... said...

ROBOT

//தங்களின் ஆதங்கம் நியாயம் தான்.நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் கூடிய விரைவில் வரும் என்று நினைக்கின்றேன்.பாலா கூட தனது வழக்கமான கதைகளை போல் இல்லாமல் ஒரு feel good படத்தை தான் இப்போது தான் இயக்கி கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.பொறுத்திருந்து பாப்போம் .//

அதைதான் நானும் எதிர்பார்க்கிறேன்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)