Saturday, March 13, 2010

டுபாக்கூர் கேள்விகளும், அதற்கு ப்ரீத்தி கூறிய பதில்களும்....அரசியலில் ஒருநாளில்லை ஒருநாள் ஆழம் பார்க்கப்போவதாக கூறிய பிரீத்தியை (அதாங்க ப்ரீத்தி ஜிந்தா) ஒருவழியாக சந்தித்து அவரிடம் அவரது அரசியல்பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட இடக்குமுடக்கான கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும்.

கேள்வி :   எதிர்காலத்தில் அரசியலில் குதிப்பதாக கூறியுள்ளீர்களே ஒருவேளை கட்சி ஆரம்பித்தால் கட்சிப்பணிகளை முன்பின் நின்று பார்வையிடுவது யார்?விடை :  பின்னாடி மோடி பாத்துக்குவாரு முன்னாடின்னா 'யுவி'யைதான் கேக்கணும் (கட்சியை சொன்னன்).

கேள்வி :  உங்கள் கட்சியில் சிறப்பாக செயற்படும் தொண்டர்களுக்கு என்ன மாதிரியான ஊக்குவிப்பை வழங்குவீர்கள்?விடை :  நம்ம வசூல்ராஜா வைத்தியம்தான்.

கேள்வி :  அதி சிறப்பாக செயற்படும் தொண்டர்களுக்கு?விடை :  அவர்களுக்கு....... கமல் வைத்தியம்தான்.

கேள்வி :  உங்களுக்கு அரசியலே தெரியாதே பிறகெப்படி அரசியலில் குதிக்கிறீர்கள்?விடை :  கிரிக்கெட் தெரியாமல் ஒரு டீமையே வாங்கி 'கட்டி'மேச்ச எனக்கு இது பெரிய வேலையா?

கேள்வி :  உங்களுக்கு போட்டியா அரசியலுக்கு சில்பாசெட்டி வந்தால் ?விடை :  அங்க மட்டும் என்ன வாழுதாம் ? நாம ரெண்டு பேருமே ஒரே குட்டையில ஊறின மட்டைகள்தானே , அதனால கூட்டணி வைச்சிக்குவம், கூட்டணிக்கு ஷாருக் மத்தியஸ்தம் பண்ணுவாரு.

------- அங்க மட்டும்(ஷாருக்) என்ன வாழுதாம்? (mind voice) ----

கேள்வி :  சரி நீங்க ஜெயிச்சு ஆட்சியை பிடித்தால் என்ன செய்வீர்கள்?விடை :  டொம் மூடி எல்லாத்தையும் பாத்துக்குவார்.

கேள்வி :  சரி அத விடுங்க உங்க கூட boy friend என்று சொல்லி ஒரு பையன் திரிவாரே, அவர்தாங்க உங்க கிங்க்ஸ் லெவின் பஞ்சாப் பாட்னர், அவருக்கு உங்க கட்சியில ஏதாவது முக்கிய பதவி கொடுப்பீர்களா?விடை :  அப்ப எனக்கு டிரைவர் யாரு?

கேள்வி :  இந்த ஜெயவர்த்தன, சங்ககார எல்லாம் உங்க கட்சியில இருப்பாங்களா?விடை :  இல்லாமலா? அவர்கள்தான் வட்ட செயலாளர் (வண்டு முருகன் அல்ல) மற்றும் கவுன்சிலர் (சினேக்பாபு அல்ல ) பதவிகளுக்கு போட்டி போடுவார்கள்.

கேள்வி :  உங்கள் வாக்கு சேகரிக்கும் தந்திரோபயம்தான் என்ன?விடை :  அதெல்லாம் ஸ்ரீசாந்த் அழுதே வாங்கிடுவாரு.

கேள்வி :  அப்புறம் உங்களை அறிமுகப்படுத்திய மணிரத்தினத்திற்கு ஏதாவது...?விடை :  Sorry , அப்பிடி யாரையும் தெரியாது.

நன்றி மேடம் , நாங்க கிளம்பிறம்.....

விடை :  ஓகே, இன்னிக்கு எதோ ஒரு மேட்ச் இருக்கிறதா சொன்னாங்க , சரி சும்மாவாச்சும் அங்க போய் ஏதாவது சீனை போடுவம்.......Bye

Bye.

6 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

:-)

ஹாய் அரும்பாவூர் said...

எப்படி
இப்புடி
இதற்க்கு பேர்தான் ஊமை குசும்போ ?


சரியான் காமடி பதிவு
"அதெல்லாம் ஸ்ரீசாந்த் அழுதே வாங்கிடுவாரு. "

ரொம்ப உண்மைங்கோ

கலக்குங்கோ

மசக்கவுண்டன் said...

என்னமோ தமாசு பண்ணீருக்கீங்கன்னு தெரிதுங்க. வேற ஒண்ணும் புரியலிங்க.

நானு ஒரு மசக்கவுண்டனுங்க, நாகரீகம்னா அவ்வளவாத்தெரியாதுங்க, மன்னிச்சுக்கோங்க

அ.ஜீவதர்ஷன் said...

@ Chitra

@ ஹாய் அரும்பாவூர்

நன்றி

................................

மசக்கவுண்டன்

//என்னமோ தமாசு பண்ணீருக்கீங்கன்னு தெரிதுங்க. வேற ஒண்ணும் புரியலிங்க.//

பரவாயில்ல விடுங்கோ.

//நானு ஒரு மசக்கவுண்டனுங்க, நாகரீகம்னா அவ்வளவாத்தெரியாதுங்க, மன்னிச்சுக்கோங்க//

அட நீங்களும் நம்மாளுதானா?

ஞானப்பழம் said...

பஞ்சாப் டீம்ல சேர மட்டும் நம்மாளுங்க என் போட்டி போடறாங்கன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது!!

ஐயோ... நடு மைதானத்துல ஒரு bit-ஏ ஓட்டராய்ங்களே.... மானம் போகுது!!!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//பஞ்சாப் டீம்ல சேர மட்டும் நம்மாளுங்க என் போட்டி போடறாங்கன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது!!

ஐயோ... நடு மைதானத்துல ஒரு bit-ஏ ஓட்டராய்ங்களே.... மானம் போகுது!!!//


மச்சக்கார பசங்க.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)