Friday, March 12, 2010

ரஜினி, அஜித், மணிரத்தினம் படங்கள் ....
வருமா? வராதா? என விவாதிக்கப்பட்ட சுல்தான் தி வாரியார் விரைவில் ஒருமாதிரியாக வெள்ளித்திரையை காணவுள்ளது . இதனது ரிலீசை ஜூன் மாதமளவில் வைத்துக்கொள்ள சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடன் பணத்தை கேட்டு ரிலைன்ஸ் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. வழமைபோல சவுந்தர்யா மீது இன்னுமொரு வழக்கு , எங்கேடா என்றிருந்தவர்கள் உடனே ரஜினியை வம்புக்கு இழுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு தடவையும் சவுந்தர்யா மீது வழக்கு போடப்ப்படும்போதும் உருளுவதென்னமோ ரஜினியின் தலைதான். எது எப்பிடியோ சுல்தான் வெளியானால் சரி. சுல்தான் வெளியாவது ஜூன் என்றால் எந்திரன் ரிலீஸ் நிச்சயம் ஆகஸ்ட்டுக்கு முதல் நிகழ்வதற்கு சந்தர்ப்பமே இல்லை. இதனால் நிழல் ரஜினியை நிழலை காணும் ரசிகர்கள் நிஜ ரஜினியின் நிழலை காண காத்திருக்க வேண்டியிருக்கும் .அஜித்தின் அடுத்த படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என்னும் பெயர் இல்லையாம் என்று கவுதம் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக ஓர்குட் ரசிகர்களால் கடுமையாக இந்த டைட்டில் விமர்சிக்கப்பட்ப்டது. இதனால் படத்தின் டைட்டிலை 'காக்கி' அல்லது 'காவல்' என வைக்க முடிவெடுத்துள்ளார் கவுதம். தான் முதலில் பதிவு செய்த டைட்டில் பின்னர் ஒரு 'பீடியட் பில்மிற்காகவே' பதிவு செய்ததாக 'விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவாறு' கவுதம் கூறியுள்ளார்.இசை மீண்டும் ரகுமான் என்பது உறுதியாகியுள்ளது.

அஜித்தின் சர்ச்சையை உருவாக்கிய மேடைப்பேச்சு பற்றி கேட்டதற்கு உதயநிதி அஜித்துக்கு சார்பாக கருத்து கூறியுள்ளார். வழமையாக அஜித் 'தன் படங்களின் விழாக்களுக்கே' வருவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய உதயநிதி இது முடிந்து போன விடயம் இதனை இப்படியே விட்டுவிடலாமே என்று கூறியுள்ளார். இது தாத்தாவுக்கு தெரிந்தால் கோவிக்க மாட்டாரா? அல்லது அஜித்தின் 'கால்சீற்' ருக்கான முன்னேற்பாடா? எனஇரண்டு கேள்விகள் எழாமல் இல்லை.ரஞ்சிதாவின் காட்சிகளை நீக்கிவிட்டு வேறொருவரை வைத்து காட்சிகளை படமாக்க மணிரத்தினம் முடிவெடுத்ததும் ரஞ்சிதா தானே நடித்து கொடுப்பதாக மணியை தொடர்பு கொண்டு கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இன்றைய தேதியில் ரஞ்சிதா நடித்தால் அது படத்திற்கு நிச்சயமாக பலம்தான், ஆனால் அந்த பலம் மணி படத்திற்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். எது எப்பிடியோ இந்த ஆண்டு ராவணா, எந்திரன் என இரு மெகா தயாரிப்பகளும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். முன்னணி நாயகர்களதும், இயக்குனர்களினதும் படங்கள் அண்மைக்காலமாக மண்ணை கவ்வும் நிலையில் ரஜினியும் , மணியும் தாங்கள் இன்னமும் தமிழ் சினிமாவின் 'தளபதி'கள் தான் என்பதை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்(அதற்காக விக்ரமும், சங்கரும் குறைந்தவர்கள் என்று அர்த்தமில்லை).

13 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

:-)

Raghu said...

நிரூபிப்பார்கள் என்றே தோன்றுகிறது

r.v.saravanan said...

எந்திரன், ராவண் கண்டிப்பாக ஹிட் ஆகும் ஆக வேண்டும்
தமிழ் சினிமா உலகத்திற்கு அது ஒரு புத்துணர்ச்சி போல்

பஹ்ரைன் பாபா said...

"" அண்மைக்காலமாக மண்ணை கவ்வும் நிலையில் ரஜினியும் , மணியும் தாங்கள் இன்னமும் தமிழ் சினிமாவின் 'தளபதி'கள் தான் என்பதை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ""

மணி பத்தி தெரியலைங்க..
ஆனா.. தலைவர் எப்போதும் ஜெயிக்கும் குதிரை. ..
நம்பர் தெரிந்த லாட்டரி சீட்....

ஜெயிப்பாரா நு கேள்விக்குறி போடாதீங்க.. ஜெயிப்பார் நு முற்றுப்புள்ளி வைங்க.. தலைவருக்கு மட்டும்..

chosenone said...

விருப்பமான நடிகர் /இயக்குனர் என்ற கலர் கண்ணாடியை கொஞ்சம் கழற்றி வைத்தால் தான் ஒரு திரை படத்துடன் எங்களால் கரைந்து போக முடியும் .
அப்போது தான் எங்களுக்கு அத்திரைபடத்த்ன் உண்மையான ஏற்ற இறக்கங்கள்,நிறை குறைகளை தெளிவாக உணர முடியும் ...
அல்லா விட்டால் , உண்மையான திரைப்படத்தை விடுத்து self created reality ஒன்றை தான் எங்கள் மனது எங்களுக்கு போட்டு காண்பிக்கும் . அதனால் தான் பெரும்பாலும் தொழில்சார் விமர்சகர்களுக்கு விருப்பமான நடிகர்களோ இயக்குனர்களோ இல்லை .
பிடித்த கரெக்டர்களும் ,படங்களும் தான் இருக்கும்.

--எப்பூடி,--
மவுனராகம் கார்த்திக் கரெக்டர்
அலைபாயுதே கார்த்திக்(மாதவன்) வரை மணி'யின் வெவ்வேறு ஹீரோக்கள் மூலமாக இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பது கவனித்தீர்களா எப்பூடி ?

அ.ஜீவதர்ஷன் said...

Chitra

//:-)//

சிரிப்பிற்கு நன்றி.

.....................................

ர‌கு

//நிரூபிப்பார்கள் என்றே தோன்றுகிறது//

உங்கள் வாயில் சர்க்கரையை போடுங்கள்.

.......................................

r.v.saravanan kudandhai

//எந்திரன், ராவண் கண்டிப்பாக ஹிட் ஆகும் ஆக வேண்டும்
தமிழ் சினிமா உலகத்திற்கு அது ஒரு புத்துணர்ச்சி போல்//

உங்கள் வாக்கு பலிக்கட்டும்

.....................................

பஹ்ரைன் பாபா

//ஜெயிப்பாரா நு கேள்விக்குறி போடாதீங்க.. ஜெயிப்பார் நு முற்றுப்புள்ளி வைங்க.. தலைவருக்கு மட்டும்..//


ஓகே, cool

..................................


// விருப்பமான நடிகர் /இயக்குனர் என்ற கலர் கண்ணாடியை கொஞ்சம் கழற்றி வைத்தால் தான் ஒரு திரை படத்துடன் எங்களால் கரைந்து போக முடியும் .
அப்போது தான் எங்களுக்கு அத்திரைபடத்த்ன் உண்மையான ஏற்ற இறக்கங்கள்,நிறை குறைகளை தெளிவாக உணர முடியும் ...
அல்லா விட்டால் , உண்மையான திரைப்படத்தை விடுத்து self created reality ஒன்றை தான் எங்கள் மனது எங்களுக்கு போட்டு காண்பிக்கும் . அதனால் தான் பெரும்பாலும் தொழில்சார் விமர்சகர்களுக்கு விருப்பமான நடிகர்களோ இயக்குனர்களோ இல்லை .
பிடித்த கரெக்டர்களும் ,படங்களும் தான் இருக்கும்.//

எனக்கு அந்தளவிற்கு பக்குவம் இல்லை என்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன் , என்னை ஆரம்பத்தில் சினிமா பார்ப்பதற்கு இழுத்துவந்து அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு புத்துணர்ச்சியை தந்து கொண்டிருக்கும்(புகைப்படம் பார்த்தால் கூட ,இதற்கான காரணம் தெரியவில்லை ) ரஜினியும் , என்றும் என் தனிமையிலும் துணைவரும் ராஜாவின் பாடல்களும் எனக்கும் அப்பாற்பட்டவை . இது சிலவேளைகளில் உங்களுக்கு நகைசுவையாக தெரியும், ஆனால் இவர்கள் இருவரும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இந்த ஆயுளில் என்னை விட்டுப் போகாது.

//மவுனராகம் கார்த்திக் கரெக்டர்
அலைபாயுதே கார்த்திக்(மாதவன்) வரை மணி'யின் வெவ்வேறு ஹீரோக்கள் மூலமாக இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பது கவனித்தீர்களா எப்பூடி ?//

'பகல்நிலவு' முதல் 'குரு' வரை வந்த மணி படங்களில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' தவிர மிகுதி அனைத்து முத்துக்கள்தான்(இதய கோவில் அன்றைய காலப்பகுதியல் மைல் கல்தான் )

மணி தவிர மகேந்திரன் படங்களில் முள்ளும் மலரும் , ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே (உதிரி பூக்கள் பார்க்கும் சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை) பசிலின் 'பூவே பூச்சூடவா' என்பன என்னை பாத்தித்த முக்கியமான படங்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

மேலுள்ள பதில் chosenone இற்கு உரியது

ஹாய் அரும்பாவூர் said...

"ரஜினியை நிழலை காணும் ரசிகர்கள் நிஜ ரஜினியின் நிழலை காண காத்திருக்க வேண்டியிருக்கும் "

எது எப்படியோ எனக்கு ரஹ்மானின் இசையில் இன்னும் இரண்டு ஹிட் கேட்க்க ஆவலாக இருக்கேன்

ஹாய் அரும்பாவூர் said...

"ரஜினியை நிழலை காணும் ரசிகர்கள் நிஜ ரஜினியின் நிழலை காண காத்திருக்க வேண்டியிருக்கும் "

அப்போ ரஹ்மான் இசையில் மூன்று ஹிட் இருக்கு

அ.ஜீவதர்ஷன் said...

ஹாய் அரும்பாவூர்


//அப்போ ரஹ்மான் இசையில் மூன்று ஹிட் இருக்கு//


அவரவருக்கு அவரவர் பிரச்சினை :-)

chosenone said...

எப்பூடி ,
கருத்தில் முரண்பாடு இருந்தாலும், உங்க நேர்மை புடிச்சிருக்கு ....
வாழ்த்துக்கள் நண்பா !

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//எப்பூடி ,

கருத்தில் முரண்பாடு இருந்தாலும், உங்க நேர்மை புடிச்சிருக்கு ....

வாழ்த்துக்கள் நண்பா !//


நன்றி நண்பா

r.v.saravanan said...

சுல்தான் தி வாரியார் இதனது ரிலீசை ஜூன் மாதமளவில் வைத்துக்கொள்ள சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்ப ஜூன் மாசம் ஒரு தீபாவளி இருக்கு நமக்கு

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)