Sunday, March 7, 2010

பொறுப்பில்லாத நடிகர்கள் மற்றும் வயம்ப..ரஜினி, கமல், அஜித், விஜய்,விக்ரம் ,சூர்யா ..... என நடிகர்கள் யாருக்குமே பொறுப்பில்லாமல் போய்விட்டது, ஏதாவதொரு நிகழ்வுக்கும் போய் அங்கு ஏதாவது ஒரு வில்லங்கத்தை வாங்கினால்தானே நாங்கள் பதிவெழுதலாம். இல்லாவிட்டால் பட ரிலீஸ் , ஆடியோ ரிலீஸ் , பட பூஜை என்று ஏதாவது இருந்தால்கூட பருவாயில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் இருந்தால் நாங்கள் தொடர்ந்தும் நித்தியை பற்றியே எழுதுவதா? நித்திரையிலும் நித்தியின் நாசமாப்போன மூஞ்சிதான் வருகிது. தயவு செய்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி பதிவர்களாகிய எங்களுக்கு புதியவேலை கொடுக்கும் படி பதிவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

வயம்ப வெற்றிஇலங்கையின் மாகாணங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்த 20-20சுற்றுப்போட்டியில் வயம்பஅணி மீண்டும் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது.இதனால் இந்தியாவில் நடைபெறவுள்ள champion league போட்டிகளில் வயம்ப  அணி பங்குபற்றும்  சனத்,தரங்க ஆகியோரை உள்ளடக்கிய ருஹுன அணியை மகேல,மென்டிஸ்,முபாரக்,மகரூப் ஆகிய முக்கிய வீரர்களை கொண்ட வயம்ப இலகுவாக வெற்றி கொண்டு தொடர்ந்து இரண்டாம் முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது.தரங்க ருஹுன அணிக்கு தலைமை தாங்க வயம்பவுக்கு தலைமை தாங்கியவர் முபாரக்.நாணயச் சுழற்சியில் வென்று வயம்பவை துடுப்பாட தரங்க அழைத்தது முதல் வயம்பவின் ஆதிக்கம் போட்டி முடிவுவரை இருந்தது.

தொடர் முழுதும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகப் பிரகாசித்த மகேல இறுதிப் போட்டியில் விஸ்வரூபமெடுத்து ஒரு கோரதாண்டவமே நிகழ்த்தியிருந்தார்.49பந்துகளில் மகேல பத்து பவுண்டரி,ஆறு சிக்சர்கள் அடங்கப் பெற்ற 91ஓட்டத்தினுதவியுடன் 209எனும் பெரிய இலக்கை நிர்ணயித்தது வயம்ப. ஆரம்பத்திலேயே சனத் மற்றும் தரங்கவை இழந்தாலும் ருஹுனவின் இளம் விக்கட் காப்பாளர் தினேஷ் சண்டிமல் அதிரடி இன்னிங்க்ஸ் மூலம் வயம்பவின் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் மென்டிசின் அறிமுகத்தின் பின் எல்லாமே தவிடு பொடியானது.ருஹுன113 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க 95ஓட்டங்களால் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்தது வயம்ப.

ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக நான்கு அரைச்சதங்கள் பெற்று அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் எதிரணிக்கு சிறு வாய்ப்பைக் கூடக் கொடுக்காத மகேல அடுத்த வாரம் ஆரம்பமாகும் ஐ பி எல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு ஆரம்ப வீரராக களமிறங்கினால் பஞ்சாப் மற்றைய அணிகளுக்கு சவாலாக அமைய வாய்ப்புகள் உண்டு.ஐ பி எல் பற்றி இன்னுமொரு பதிவில் விரிவாக .....

8 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

"தயவு செய்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி பதிவர்களாகிய எங்களுக்கு புதியவேலை கொடுக்கும் படி பதிவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். "
சரியான குசும்பர் போங்கோ
நித்தி பற்றி ஒரே குசும்பு பதிவுதான் போங்கோ
வாழ்க ரஞ்சிதா நித்தி

Yoganathan.N said...

//ரஜினி, கமல், அஜித், விஜய்,விக்ரம் ,சூர்யா ..... என நடிகர்கள் யாருக்குமே பொறுப்பில்லாமல் போய்விட்டது, ஏதாவதொரு நிகழ்வுக்கும் போய் அங்கு ஏதாவது ஒரு வில்லங்கத்தை வாங்கினால்தானே நாங்கள் பதிவெழுதலாம். //

அவரவர் பிரச்சனை அவரவருக்கு.... ஹிஹிஹி

r.v.saravanan said...

தயவு செய்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி பதிவர்களாகிய எங்களுக்கு புதியவேலை கொடுக்கும் படி பதிவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மறுபடியுமா ................

இதை வடிவேல் சொல்வது போல் படிக்கவும்
ஹா....ஹா....

Unknown said...

தலைப்பு கொஞ்சம் ஓவரா போய்ட்டோ

chosenone said...

ஏன் ஏன் ஏன் .....!!!
ஏன் அப்பு இந்த கொலை வெறி ....

அ.ஜீவதர்ஷன் said...

@ ஹாய் அரும்பாவூர்

@ Yoganathan.N

@ r.v.saravanan kudandhai

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

....................................

A.சிவசங்கர்

//தலைப்பு கொஞ்சம் ஓவரா போய்ட்டோ//

சீடியஸா இருக்குமென்று உள்ள வந்தீங்களோ? தொப்பி தொப்பி :-)

.....................................

chosenone

//ஏன் ஏன் ஏன் .....!!!
ஏன் அப்பு இந்த கொலை வெறி ....//

தெரியலையே...

Chitra said...

எப்பூடியின் புலம்பல் மனு கோரிக்கையை நடிகர் சங்கத்துக்கு, பதிவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று கொடுத்துள்ளனர்.

அ.ஜீவதர்ஷன் said...

Chitra

//எப்பூடியின் புலம்பல் மனு கோரிக்கையை நடிகர் சங்கத்துக்கு, பதிவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று கொடுத்துள்ளனர்.//

கலைஞர் கிட்ட கொண்டுபோயிருந்தா ஏதாவது நடந்திருக்கும் , கையாலாகாத நடிகர் சங்கத்திட்ட குடுத்திட்டீங்க, சரி விடுங்க:-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)