Saturday, March 6, 2010

பார்ரா.....

கடந்த எட்டு நாட்களாக கடுமையான வேலைப்பளு, எனக்கு உடம்புக்கு முடியல, இனந்தெரியாத நபர்களின் மிரட்டல் , தூரதேச பயணம் , ப்ளாக் எழுதுவதில் வெறுப்பு என்பவற்றால் எதுவும் எழுதவில்லை என்று சொன்னா நம்பவா போறீங்க? ஒன்றுமில்லை கடைசி ஐந்து மாசமா சரியா தூங்கிறதுக்கு கூட நேரமில்லை, தினமும் நான்கு முதல் ஐந்து மணித்தியாலம்தான் நித்திரை, இப்பிடி நித்திரை இல்லாமல் என்னத்தை எழுதி கிழிக்கிறாய் என்று என்னை நானே கேட்டுக்கொண்டதால் நான் எனக்கு கொடுத்த விடுமுறைதான் இந்த திட்ட மிட்ட எட்டுநாள் லீவு. நான் கிறுக்காததால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் ஒரு எட்டு நாள் ஓய்விற்கு பின்னர் மொக்கைபோட "IM BACK".

இந்த எட்டு நாட்களும் உலாவிய சூடான விடயங்கள் எனது 'காமாலை கண்' பார்வையில்.......

விண்ணை தாண்டி வருவாயாஎனக்கு சிம்புவையும் பிடிக்காது கவுதம் மேனனையும் பிடிக்காது , இதற்கு காரணம் சிம்புவுக்குள் இருக்கும் ரஜினியும் கவுதமிற்குள் இருக்கும் மணிரத்தினமும்தான். ஒருவேளை ரஜினியையும் , மணிரத்தினத்தையும் எனக்கு பிடிக்காவிட்டால் இவர்கள் இருவரையும் பிடித்திருக்குமோ என்னவோ! ஆனால் 'விண்ணை தாண்டி வருவாயாவில்' சிம்புவுக்குள் ரஜினி இல்லாததால் முதல் முதலாக சிம்புவை ரசிக்க முடிந்தது(டைட்டிலில் இளைய சூப்பர்ஸ்டார் தவிர ) அதே நேரம் கவுதமிற்குள் தொடர்ந்தும் மணி இருப்பதால் விண்ணை தாண்டி வருவாயாவை ரசிக்க முடியவில்லை, இறுதியில் film by maniratnam என்று முடிந்திருந்தால் இதே படம் பிடித்திருக்குமோ என்னவோ!அடுத்து இந்த படத்தின் பாடல்கள் நன்றாகவே உள்ளன, அதற்காக நம்மாளுகளில் சிலர் ரகுமானுக்கு கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை, ரகுமான் ஆஸ்காருக்கு பின்னர் இசையமைத்ததாலோ என்னவோ அளவுக்கு அதிகமாகவே (ரொம்பவும்) பில்டப் கொடுக்கிறார்களோ என்று எனக்கு படுகிறது(கவனிக்க எனக்கு படுகிறது ), ஒளிப்பதிவு படம் முழுவதும் அருமை. ஆனாலும் ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பு , மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை, ஒரே மாதிரியான நடனம், ஒரே மாதிரியான உடல்மொழி என வழமையான கவுதம் ஸ்டையில் படமாக இருந்தாலும் எனக்கு பிடித்தது 'மேக்கப் இல்லாத' திரிஷாவும் , 'ரஜினி இல்லாத' சிம்புவும்தான்.

நித்தியானந்தமும் நம்மாளுங்களும்இந்த பயபுள்ள பண்ணின கூத்தும் சண் குடும்பமும் நக்கீரனும் பண்ணிய மொள்ள மாரித்தனமும் எனக்கு தமிழிஷில பாத்ததுக்கப்புறம்தான் தெரியம், சன் டிவி அதிகமாக பாக்காததால் இந்த கறுமத்தை பாக்க முடியவில்லை (இது வருத்தமில்லை ), அப்புறம் தமிழிஷில கிட்டதட்ட எல்லா செய்திகளும் 'பயபுள்ளைய' பற்றித்தான் இருந்திச்சு, சிலபேரு பயபுள்ளையும், சிலபேரு சன் டிவி மற்றும் நக்கீரனையும் வறுத்தெடுத்தாங்க. சிலபேரு சடை மாடையாய் பயபுல்லைக்கும் சார்பா எழுதினாங்க.என்னை பொறுத்த வரைக்கும் பயபுள்ளயையோ சன் டிவியையோ நக்கீரனையோ கோவிச்சு ஒன்னும் பலனில்லை, ஏன்னா இவங்க மூணுபேருமே சாக்கடைகள்தான் (நித்தியர் மட்டுமல்ல தம்மை கடவுளின் பிரதிநிதி என்று சொல்லும் எல்லா சாமிகளுமே ) கும்பிடுறதுக்குதான் இந்துக்களுக்கு எத்தனை கடவுள் இருக்கிறார்கள், பிறகு எதற்கு இந்த மனித வழிபாடு ? குருவைதான் தேடிப்போகிறோம் என்பவர்களுக்கு என்னால் கூறக்கூடியது bad luck தான்.

என்கிட்டதான் முதல்ல காட்டனும்இப்படியான இசகுபிசகு வீடியோக்கள் வந்தால் முதலில் அரசின் பார்வைக்கு வந்தபின்னரே ஏனைய தொலைக்காட்சிகள் வெளியிடவேண்டுமென உலக தமிழர்களின் தலைவன் அண்ணன் மு. கருணாநிதி கூறியுள்ளார். பாராட்டு விழாக்களில் அரைகுறையாக பார்த்தவருக்கு முழுசாக பார்க்கவேண்டுமென்ற ஆசை இருக்க கூடாதா? நல்ல கிளிப்பிங் என்றால் பேரம்பேசி காசைபார்க்கலாம் அல்லது சொந்த தொலைக்காட்சியில் வெளியிடலாமே! அதெப்படி மற்றவர்கள் அதை வெளியிடுவது, இதுதான் கடைசித்தடவை இனி தலைவர் மு.க பார்த்தபின்னர்தான் யாரும் பார்க்கலாம், ரொம்ப நல்ல கிளிப்பிங் என்றால் தலைவர் மட்டுமே பார்ப்பார் , இது அரச உத்தரவு.

யாருப்பா இந்த சாருஅண்மைக்காலமாக நம்மாளுங்க அதிகமானவர்கள் பலவிடயங்களுக்கு 'சாரு' என்பவரை பற்றியம் அவரது எழுத்துக்கள் பற்றியும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள், ஆனால் யாரும் அவரது லிங்கை கூட கொடுப்பதில்லை, ஒரு வழியாக கூகிளில் போய் யாரப்பா இந்த சாரு என்று பார்த்தால் தோற்றத்தில நம்ம தமிழ் கூட்டமைப்பு பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மாதிரியே இருக்கிறாரு. சத்தியமா எனக்கு இதுக்கு முன்னாடி அவரை பற்றி தெரியாது இன்றுதான் முதல் முறையாக அவரது தளத்திற்கு சென்றேன். அவரது எழுத்துக்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் மீண்டும் அந்த தளத்திற்கு நான் போக மாட்டேன், ஏனெனில் அவர் என்னை வருமாறு அழைக்கவில்லை. ஆனால் பலர் அவரது எழுத்துக்கள் பிடிக்காவிட்டாலும் தொடர்ந்தும் அங்கு செல்வதும் அவரது கருத்துக்களுக்கு தங்கள் தளங்களில் அவரையும் அவரது கருத்தையும் தாக்கி பதில் போடுவதும் நாகரீகமாக படவில்லை.

அந்தாளுக்கு இப்பிடி செய்யிறது இலவச விளம்பரம்போல ஆகிவிடுகிறது, மோசமாக எழுதினால் கண்டுக்காம விடவேண்டியதுதானே? இப்படி இவர்கள் அந்தாளை பற்றி எழுதுவதால் அவரது கேவலமான கருத்துக்கள் இவர்களால் பலருக்கும் கொண்டுசெல்லப்படுகின்றது என்பதை மறந்துவிட கூடாது. இப்பகூடபாருங்க அந்தாளுக்கு என்னாலையும் சிறு இலவச விளம்பரம் கிடைச்சிருக்கு.

குசும்பு

வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த விரக்தியாலேயே ரஞ்சிதா நித்தியிடம் சரணடைந்ததாக புலனாய்வுத்தகவல்கள் சில தெரிவிக்கின்றன.

18 வாசகர் எண்ணங்கள்:

Admin said...

//வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த விரக்தியாலேயே ரஞ்சிதா நித்தியிடம் சரணடைந்ததாக புலனாய்வுத்தகவல்கள் சில தெரிவிக்கின்றன.//

எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க....

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் . இந்த எட்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமா ஒரு பதிவில் சொல்லிட்டீங்க போங்க . பகிர்விக்கு நன்றி

ஹாய் அரும்பாவூர் said...

எப்பூடி
எப்பூடி இத்தனை நாள் பதிவு போடாம
மீண்டும் தொடரட்டும் உங்கள்
பதிவு welcome to eppoodi

அன்புடன் நான் said...

அத்தனையும் நல்ல அலசல்....

Unknown said...

தமிழ் சினிமா ல டி அர் எப்படி யோ அப்படி தன இங்கே சாரு

அவருக்கு விளம்பரமா .... என்ன சார் காமெடி பண்ணுரிங்க .... ஆது ஒரு எம்ப்டி வெச்சேள் .. ஆதுவே சவுண்ட் பொடுகும் ...

>> அவரது எழுத்துக்கள் பிடிக்காவிட்டாலும் தொடர்ந்தும் அங்கு செல்வதும் அவரது கருத்துக்களுக்கு தங்கள் தளங்களில் அவரையும் அவரது கருத்தையும் தாக்கி பதில் போடுவதும் நாகரீகமாக படவில்லை.

சாரு இக்கு நாகரீகம் எல்லாம் பார்க்க வேண்டாம் ... ஓபன் ஆ பேசுன தான் ஆத்துக்கு பிடிக்கும் ...

பா.வேல்முருகன் said...

//வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த விரக்தியாலேயே ரஞ்சிதா நித்தியிடம் சரணடைந்ததாக புலனாய்வுத்தகவல்கள் சில தெரிவிக்கின்றன.//

கடைசியா வச்சியே தலைவா ஒரு பன்ச்சு...

Chitra said...

வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த விரக்தியாலேயே ரஞ்சிதா நித்தியிடம் சரணடைந்ததாக புலனாய்வுத்தகவல்கள் சில தெரிவிக்கின்றன.


.............பார்ரா....... எப்பூடி எல்லாம் காரணம் சொல்றாங்க. நல்லா இருங்க!

chosenone said...

வணக்கம்-back -------தளபதி !
இந்த 8 நாள் ஓய்வில் உங்கள் எழுத்தின் தரம் எக்கச்சக்கமா எகிறிருக்கு ...சூப்பர் பதிவு .

முக்கியமா வி.தா.வருவாயா குட்டி விமர்சனம் அந்த படத்துக்கு விட "class"ஆ இருந்தது ....
நான் படித்ததில் அது தான் அந்த படத்துக்கான மிக துல்லியமான பார்வை!
படத்தின் posterல் இருந்து கடைசி எழுத்து வரை "அலைபாயுதே" தாக்கம் தெரியுது.
அலைபாயுதே முன்னால வி.தா .வ எல்லாம் ச்ச்சும்மா !!!....
ஆனாலும் சிம்பு-த்ரிஷா சாதாரண மனுஷ பயபுல்லைகளா நடிக்கிறது பார்க்க நல்லா இருக்கு இல்ல ,,??,?*!

கிரி said...

//இப்பிடி நித்திரை இல்லாமல் என்னத்தை எழுதி கிழிக்கிறாய் என்று என்னை நானே கேட்டுக்கொண்டதால் நான் எனக்கு கொடுத்த விடுமுறைதான் இந்த திட்ட மிட்ட எட்டுநாள் லீவு//

இந்த நிலை கண்டிப்பாக வரும், நான் எதிர்பார்த்தது தான் :-)

மற்றபடி இடுகை நல்லா இருக்கு.

அ.ஜீவதர்ஷன் said...

@ இரா.சுரேஷ் பாபு

@ ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫

@ arumbavur

@ சி. கருணாகரசு

@ Vels

@ Chitra

உங்கள் அனைவருக்கும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

Thala

//தமிழ் சினிமா ல டி அர் எப்படி யோ அப்படி தன இங்கே சாரு//

அப்பா காமடி பீசா? சத்தியமா எனக்கு தெரியாதுங்க. நண்பர் ஒருவர் சாருவை பற்றி இதுவரை தெரியாதன்னு கேட்டதோட சாருவை தெரியலன்னா மரியாதையில்லை இதுக்கு நீ அவரைபற்றி எழுதாமலே விட்டிருக்கலாம் என்றார். தெரியாததைதெரியாதென்பதில் என்ன மரியாதை குறைவு என்றுதான் எனக்கு புரியவில்லை.

....................................

chosenone

//-------தளபதி !//

----------- இந்த கோட்டில எழுத ஒரு கஸ்மாலம், பேமானி, டுபாக்கூர் கூடவா கிடைக்கல:-)

//ஆனாலும் சிம்பு-த்ரிஷா சாதாரண மனுஷ பயபுல்லைகளா நடிக்கிறது பார்க்க நல்லா இருக்கு இல்ல ,,??,?*!//

தொடர்ந்து இப்பிடியே இருப்பாங்கள் என்கிறீங்க?


..................................

கிரி

//இந்த நிலை கண்டிப்பாக வரும், நான் எதிர்பார்த்தது தான் :-)//

இத முன்னாடியே சொல்லியிருக்க கூடாதா? :-)

நம்மாளுங்க எங்க சொன்ன கேக்கிறீங்க பட்டு தெளியட்டும் என்று வீடிட்டீங்க போல :-)

chosenone said...

///வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த விரக்தியாலேயே ரஞ்சிதா நித்தியிடம் சரணடைந்ததாக புலனாய்வுத்தகவல்கள் சில தெரிவிக்கின்றன///
இனிமேலும் இப்படி எல்லாம் அநியாயத்துக்கு விஜய் பத்தி jokes அடிச்சி திரிஞ்சா , அ.இ .""ரஞ்சிதானந்தர்"" ரசிகர் மன்றத்துக்கு தலைவராகிடுவோம் .....
அஅஆ....ன் என்ககிட்டாயேவா!!!ù^$*ù^.*/

r.v.saravanan said...

கும்பிடுறதுக்குதான் இந்துக்களுக்கு எத்தனை கடவுள் இருக்கிறார்கள், பிறகு எதற்கு இந்த மனித வழிபாடு ?

கரெக்ட் இப்பூடி
சாமியை வணங்காமல் சாமியார்களை வணங்குவது கொஞ்சம் கூட சரியல்ல

r.v.saravanan said...

போகிற போக்கில் ஜஸ்ட் லைக் தட் ஆக எல்லா விசயங்களையும்
விமர்சனம் செய்திருகிறீர்கள்
நல்ல பதிவு

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//இனிமேலும் இப்படி எல்லாம் அநியாயத்துக்கு விஜய் பத்தி jokes அடிச்சி திரிஞ்சா , அ.இ .""ரஞ்சிதானந்தர்"" ரசிகர் மன்றத்துக்கு தலைவராகிடுவோம்//

அ.இ .""ரஞ்சிதானந்தர்"" ரசிகர் மன்றத்துக்கு நீங்கள் பொது செயலாளர் ஆக இருக்க ஓக்கேன்னா எனக்கு தலைவர் பதவி ஓகே, எப்பூடி ?

...................................

r.v.saravanan kudandhai


//கரெக்ட் இப்பூடி
சாமியை வணங்காமல் சாமியார்களை வணங்குவது கொஞ்சம் கூட சரியல்ல//

எனக்கு தெரியுது , உங்களுக்கு தெரியுது பாழாப்போன ரஞ்சிதாவுக்கு தெரியலையே :-)

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//இனிமேலும் இப்படி எல்லாம் அநியாயத்துக்கு விஜய் பத்தி jokes அடிச்சி திரிஞ்சா , அ.இ .""ரஞ்சிதானந்தர்"" ரசிகர் மன்றத்துக்கு தலைவராகிடுவோம் .....//

அ.இ .""ரஞ்சிதானந்தர்"" ரசிகர் மன்றத்துக்கு நீங்கள் பொது செயலாளர் ஆக இருக்க ஓக்கேன்னா எனக்கு தலைவர் பதவி ஓகே, எப்பூடி?

............................

r.v.saravanan kudandhai

//கரெக்ட் இப்பூடி
சாமியை வணங்காமல் சாமியார்களை வணங்குவது கொஞ்சம் கூட சரியல்ல//

எனக்கு தெரியுது , உங்களுக்கு தெரியுது பாழாப்போன ரஞ்சிதாவுக்கு தெரியலியே:-)

ஞானப்பழம் said...

வில்லு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த விரக்தியாலேயே ரஞ்சிதா நித்தியிடம் சரணடைந்ததாக புலனாய்வுத்தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
/////

ஆகா.. இது எனக்குத் தெரியாம போச்சே... அப்போ மன்னிச்சு விட்டரலாம்ங்கறேன்.. பாவம்பா..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//ஆகா.. இது எனக்குத் தெரியாம போச்சே... அப்போ மன்னிச்சு விட்டரலாம்ங்கறேன்.. பாவம்பா..//

அதேதாங்க நானும் நினைச்சன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)