Wednesday, February 3, 2010

Mr.அன்புமணி!!! போய் பிள்ளைங்களை படிக்க வைக்கிற வேலைய பாருங்க.


"நாங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம் " என்பதை உலகிற்கு மீண்டுமொருதடவை உரத்து கூறியுள்ளார் அன்புமணி. அப்பாவின் 'கொப்பு தாவலால்' அமைச்சு பதவியும் போய் இப்போ வீட்டில் மக்கள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அதிலே 'அசல்' படத்தின் ட்ரெயிலர் வந்தபோது கணப்பொழுதில் கபாலத்தில் ஒரு எண்ணம் தோன்றியுள்ளது போலிருக்கிறது. அதுதான் "அசலில் அஜித் புகை பிடிக்கிறார் இதவச்சு ஒரு புது இனிக்சையே ஆரம்பிச்சிடவேண்டியதுதான்" என தனது பரிவாரங்களையும் கூடிக்கொண்டு சென்னை சங்கம் தியேட்டரில் 'அசல்' படத்திலிருந்து புகைக்கும் காட்சிகள் நீக்க படவேண்டும் என போராட்டம் நடாத்தியவர் படத்தில் இருக்கும் புகைபிடிக்கும் காட்சிகளை நீக்கவேடுமாம், இல்லாவிட்டால் படத்தை தடைசெய்ய வேண்டுமாம்.


அன்று கலைஞரின் மறைமுக ஆதரவுடன் 'பாபா' ரிலீஸ் சமயத்தில் ராமதாஸ் செய்த ஆர்ப்பாட்டம் அன்று வெற்றியை கொடுத்தாலும் இன்று இவர்கள் 'அசலுக்கு' எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஆட்சிபலம் இல்லாமையால் அது செல்லாக்காசாகிவிடும் என்பது மட்டும் உறுதி.

1 ) தொலைக்காட்சிகளிலே புகைக்கும் காட்சிகளுக்கு கீழே "புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு" என்ற வாசகத்துடன் அதிகமான நேரங்களில் புகைபிடிக்கும் காடசிகள் ஒளிபரப்ப படுகின்றதே, அன்புமணி அதற்கு எதிராக பொங்கிஎழாதது எதற்காக?

2 ) சமீபத்தைய அதிகமான படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றபோதும் அஜித்தின் படம் வரும்போது இப்படி ஆர்ப்பாட்டம் செய்வது டாக்டருக்கு வேறு யாராவது 'டாக்டர்' கொடுத்த ஆலோசனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

3 ) அஜித் புகை பிடிப்பதை பார்த்துதான் தமிழக இளைஞர்கள் கெட்டுப்போகப் போகிறார்களென்று அன்புமணி கூறுவதன் மூலம் தமிழக இளைஞர்களின் சுயமரியாதையை இவரைவிட யாராவது கொச்சைபடுத்த முடியுமா?

4 ) இதையே பொலிவூட்டில் போய் ஷாருக்கானிடம் கூறினால் ஒத்துக்கொள்ளுவாரா?(இதற்கு முன்னர் அங்கு ஒருதடவை மூக்குடைபட்டவர் என்பதை மறவாதீர்கள்  ;-)புகைபிடிக்கும் காட்சிகள் தேவைப்படும் பட்சத்தில் நிச்சயமாக இடம்பெறத்தான் வேண்டும், கவியரசரை பற்றிய படமெடுக்கும்போது 'போத்தல்' இல்லாமல் படமெடுக்க முடியுமா? ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கும் பொது 'சிகரட்' இல்லாமல் எடுக்க முடியுமா? ஒரு தாதாவாக வருபவன் கையில் சிகரட் வைத்திருக்காமல் என்ன ஊதுபத்தியா வைத்திருப்பான்? கலைக்கு எல்லைகள் கிடையாது, அதனை ஆணை போட்டு அடக்கமுடியாது,அது காட்டாறு போன்றது. ஆனால் தேவையில்லாத இடங்களில் வரும் திணிக்கபட்ட புகைபிடிக்கும் காட்சிகளை குறைக்கலாம். அதை விடுத்து சினிமாவில் புகைபிடித்தால் ஆர்ப்பாட்டம், தண்ணியடித்தால் போராட்டமென்றால் ரம்யா கிருஷ்ணனை வைத்து 'பக்திபடம்தான் ' எடுக்கவேண்டும்.


புகைபிடிப்பது நிச்சயமாக தீமையான விடயம்தான், அதனை மக்களுக்கு புரியவைக்க நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அதை விடுத்து சினிமாக்களில் புகைபிடிப்பதை நிறுத்தினால் புகைபிடிக்கும் பழக்கம் குறையும் என்பது சுத்த அறிவீனம். இது அன்புமணிக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவர் அரசியல்பண்ண இதைவிட்டால் வேறு வழியில்லையே.அவரும் என்னசெய்வது "நானும் ரவுடிதான் "கெட்டப்பில் திரிந்தால்தானே அடுத்த தடவையாவது யாராச்சும் ஏதாவது குடுப்பாங்க. அதற்குதான் இந்த ஆர்ப்பாட்டம் , போராட்டம் எல்லாமே.

போங்க....! அன்புமணி போங்க ... , போயி உங்க புள்ள குட்டிங்கள படிக்க வைக்கிற (டெல்லியில இங்கிலீஷ் மீடியத்தில )வேலைய பாருங்க,நீங்க எப்புடி சீனை போட்டாலும் இந்த தபா உங்க பருப்பு வேகாது மிஸ்டர் அன்புமணி.

59 வாசகர் எண்ணங்கள்:

kailash,hyderabad said...

கலக்கல். ஆமா ,அந்த பக்தி படம் எப்ப வரும்?

SShathiesh-சதீஷ். said...

உங்கள் கருத்தை சொன்னீர்கள் இதில் எதற்கு விஜயை ஒரு சீண்டு நானும் பார்த்து வருகின்றேன் உங்கள் பதிவுகளில் விஜயை சீண்டுவதும் ரஜினியை தூக்கிப்பிடிப்பதும் வழக்கமாகி விட்டது. ரஜினி செய்யாததையா விஜய் செய்கின்றார். ரஜினி செய்தால் தப்பு இல்லை விஜய் செய்தால் தப்பு என்ன நியாயம் இது. அன்புமணி இதேபோல அழகிய தமிழ் மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அப்போது நாங்கள் இது தலையின் வேலை என்ரோமா? உங்களுக்கு ஏன் இந்த வீங்கின வேலை. ரசிகர்களுக்குள் பிரச்னையை உண்டாக்குவதா உங்கள் வேலை. முதலில் உங்கள் வேலையை ஒழுங்காய் பாருங்கள். உங்கள் பிடித்த நடிகரை எவ்வளவு வேண்டுமானாலும் தூக்கி வைத்து கொண்டாடுங்கள் மற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றை எதிராக எழுதும் பொது சிந்தித்து எழுதுங்கள். அநியாயமாக உங்கள் நல்ல எழுத்துக்களை இப்படி எழுதி அசிங்கமாக்காதீர்கள்

அ.ஜீவதர்ஷன் said...

kailash,hyderabad

// ஆமா ,அந்த பக்தி படம் எப்ப வரும்?//

வரும் ஆனா வராது.

..................................

SShathiesh

ஏங்க , நான் எங்கங்க விஜய வம்புக்கிழுத்தான்கோ ,விஜயின்ர பெயரோ , பட்டபெயரோ எங்காவது பதிவில இருக்குதாங்கோ? நீங்க தொப்பிய தூக்கி மாட்டினா அதுக்கு நான் எப்பிடி பொறுப்பாக முடியும்கோ?

இந்த பதிவில விஜயை பற்றி ஒன்றும் எழுதாவிட்டாலும் நீங்க கேட்டதால சொல்லிரங்கோ, ரஜினி வழியில விஜய் இல்லிங்கோ,அவரு விஜயகாந்த் வழியில்தான் போறாருங்கோ. ரஜினி கமெர்சியல் போர்முலா நடிச்சாலும் ஒரே மாதிரிப்படங்கள் நடிக்கிறதில்லைங்கோ . கேப்டன்தான் ஒரேமாதிரி தீவிரவாதிகளை வேட்டையாடுவாருங்கோ , இவரு ஒரேமாதிரி உள்ளூர் தாதாக்களை வேட்டையாடுவாருங்கோ . ரஜினியின் பெயரை வியையே இப்ப பயன்படுத்திரதில்லீங்கோ, அவரு இப்ப எம்.ஜி.ஆர் வாரிசாமுங்கோ. விஜய் ரஜினி ரசிகர்களுக்கு செய்த துரோகத்துக்கு விஜய்க்குதொடர் ஆப்பு இருக்குங்கோ.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்கோ.

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான பதிவு
இண்டர் நெட் கொஞ்சம் பிரச்சினை அதனால் பின்னுட்டம் இட முடியவில்லை
இனி தொடரும்

ரஹ்மான் பற்றி உங்களிடம் ஒரு அழகிய பதிவு எதிர்பார்கிறேன்

kuruvi said...

இந்த அன்புமணிக்கு தேவையில்லாத வேலை. குப்பை படத்துக்கு இந்தாளால் தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது!

அசல் ட்ரெயிலரை பாத்தீங்ளா? அதில ஒருத்தரு பேசுறாரு 'அவனுக்கு சரின்னு பட்டா அது தப்பா இருந்தாலும் கரெக்டா செய்வான்னு' சகிக்கல.... (தமிழ்ப்படம் சிவா நினைவுகஇகு வாறாங்க) இந்த ஒரு டயலாக்கே படம் எப்படி இருக்குமுன்னு ஊகிக்க முடியது!

முதல்ல தமிழ் சினிமாவைவிட்டு இந்த விஜய் அஜித் வகையறாக்களை ஒழிச்சுக்கட்டனும்!

kuruvi said...

தலைப்பை சரியா வச்சிருக்கீங்க இவனுங்களுக்கு புத்தி சொல்லுற நேரத்தில கஸ்டப்படுற புள்ளைங்களை படிக்க ரவச்சா புண்ணியமாவது கிடைக்கும்!
அன்புமணி தான் பிரபலமாகனும்னு நடிகர்களை வம்புக்கிழுப்பது சரியில்ல!

Yoganathan.N said...

முதலில் இந்த பதிவிற்கு நன்றிகள் பல. நேற்று இந்த செய்தி தெரிய வந்ததும் பயங்கர கோபம் எனக்கு... மக்கள் தொலைக்காட்சி செய்தியில் கூட வந்ததாமே...

இவர்களுக்கு எல்லாம் வேர வேலையே இல்லையா???
புகைப்பிடிக்கும் ஸ்டில்கள் படம் பூஜை போட்ட தினமே இருந்தன... அப்போதே இதை கேட்டிருக்கலாமே, இப்போது மட்டும் இதை பெரிது படுத்துவது பெரிய தமாசு.
Mr.அன்புமனிக்கு ஒரு கேள்வி, ஒரு வேலை படத்தில் ஹீரோ தற்கொலை செய்வது போல இருந்தால், ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா???
அஜித் சார் மரம் நடுதல், ப்ளாஸ்டிக் உபயோகித்தலை குறைக்கும் விதங்கள், சுற்றுசூழலை பாதுகாத்தல் போன்ற நல்லது செய்துள்ளார், செய்து வருகிறார். அப்பொழுது எல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்???

ஒரு மேடையில் அஜித் சார் சொன்னது தான் ஞாபகதிற்கு வருகின்றது - "சினிமாவை சினிமாவா இருக்க விடுங்க"...

பி.கு நண்பரே, கொச்சின் ஹனிபா இறந்த செய்தி தெரியுமா??? மிகவும் வருத்த்மாக உள்ளது. நல்ல கலைஞன்... மஹானதி, முகவரி, பட்டியல், முதல்வன் போன்ற படங்களின் மூலம் நன்கு பிறகாசித்தார். அவரது குடம்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என்றென்றும் அவர் நம் நினைவில் இருப்பாராக..._/\_

settaikkaran said...

அன்புமணி இராமதாசு இந்தப் பதிவைப் படிச்சிட்டு ஐயாகிட்டே பெருமையாச் சொல்லிட்டிருப்பாரு: "டேடி..டேடி...என்னைப் பத்தி ரொம்ப நாளைக்கப்புறம் வலைப்பதிவுலே ஒருத்தர் எழுதியிருக்கார்,"ன்னு. மருத்துவர் ஐயா ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து உச்சி மோந்துக்குவாரு!

Unknown said...

SATHIESH ARE YOU A VIJAY FAN..........

SShathiesh-சதீஷ். said...

dialog சொன்னது…
SATHIESH ARE YOU A VIJAY FAN.........

Yes,

சமீபத்தைய அதிகமான படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றபோதும் அஜித்தின் படம் வரும்போது இப்படி ஆர்ப்பாட்டம் செய்வது டாக்டருக்கு வேறு யாராவது 'டாக்டர்' கொடுத்த ஆலோசனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதற்க்கு என்னங்கோ அர்த்தம். சின்ன பிள்ளைக்கும் புரியும் இளைய நடிகர்களில் விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்தது பலருக்கு வயித்தெரிச்சல் தான்.

விஜி விஜ்யகாந்த் வலி என்கிறீர்கள் அண்ணாமலை அருணாசலம் முத்து பாட்ஷா போன்ற படங்கள் என்னவாம் ஒரே வேலை தான் அதிகம். இன்னொன்றை நீங்கள் மறக்கக்கூடாது எம்.ஜிஆர் தன கலை உலக வாரிசாக அறிவித்தது யாரை பாக்கியராஜை அதை மீறி ரஜினி அவர் வாரிசாகா சூப்பர் ஸ்டார் ஆகவில்லையா. அல்லாது விஜயை கவில்க்கவேண்டுமென ரஜினி உள்ளுக்குள் அஜித்தை வளர்க்க முற்பட்டதும் இப்போது தன மருமகன் தனுஷை அந்த வழியில் கொண்டு வர முயல்வதும் என்னவென சொல்வது. எனக்கு தெரிந்ததை சொல்கின்றேன். ரஜினி நினைப்பதால் அஜித்,தனுஷ் சூப்பர் ஸ்டார் வாரிசாக முடியாது அதே போல் விஜய் தந்தை நினைத்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் வாரிசாக்கா முடியாது மக்கள் கையில் தன என்ல்லாம் அந்த மக்கள் கொடுத்த தீர்ப்பு தான் ரஜினி தலைமுறைக்கு அடுத்த தலை முறை விஜய் தான் முன்னணி என இதை விட நான் என்னப்பா சொல்ல.... நீங்கள் ரஜினி ரசிகரச்சே ஒருக்கா சொன்னாலே புரியும் என நினைக்கின்றேன்.

hayyram said...

உண்மையில் உள்ளக்குமுறைலை வெளிப்படுத்தும் கட்டுரை. இந்த அன்புமனி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பாத்து நல்ல பேர் வாங்கட்டும். அத வுட்டூட்டு அரசியல்ல சம்பாதிக்க புறப்பட்டறாரு. .எப்பூடி, நல்லாருக்கு

திரு.SATHIESH... ஏன் இதுக்கு போய் கோச்சுக்கறீங்க.விஜய அவரை விட வேற யாரும் கிண்டல் பண்ண முடியாது. விஜய்க்கு காமெடியன் விஜயே தான். விஜய முதல்ல ரஜினி ஃபார்மலாவ விட்டுட்டு சுயமா நடிக்க... 'ஸாரி'அவருக்கு அது தெரியாததால அட்லீஸ்ட் நடக்க சொல்லுங்க . உண்மையா சொல்லப்போனா இப்ப வந்திருக்கிற "தமிழ்ப்படம்" கும் விஜயோட எல்லா படங்களுக்கும் பெரிய வித்தியாசமே இருக்கறதில்ல. மேக்ஸிமம் விஜய் படம்ஸ் ஆர் காப்பி பேஸ்ட் . இதுல விஜய நாங்க வேற தனியா கிண்டல் பண்ணனுமாக்கும்.

hayyram said...

// ரஜினி தலைமுறைக்கு அடுத்த தலை முறை விஜய் தான் முன்னணி/// ஆனா இது தான் செம காமெடி தல...சீ...சதீஷ்.

regards
www.hayyram.blogspot.com

Guru-ji said...

சதீஷ் டோன்ட் வொர்ரி நாங்க விஜய்க்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுதிங்கனு கஷ்டமான கேள்வி எல்லாம் இங்க கேட்கலை........

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//ரஹ்மான் பற்றி உங்களிடம் ஒரு அழகிய பதிவு எதிர்பார்கிறேன்//

எனக்கு ரகுமானை பிடிக்காதென்றில்லை, சரியான நேரம் வரும்போது (அவருக்கு அவாடுகள் வழங்கும்போது அல்ல ) மனதில் உள்ளபடி உண்மையான பதிவு நிச்சயம் எழுதுவேன்.

....................................

kuruvi

//முதல்ல தமிழ் சினிமாவைவிட்டு இந்த விஜய் அஜித் வகையறாக்களை ஒழிச்சுக்கட்டனும்!//

ஒருவரை இல்லாதொளிப்பதை விட அவரை மாற்றுவது சால சிறந்ததுதானே?

.....................................

kuruvi

//அன்புமணி தான் பிரபலமாகனும்னு நடிகர்களை வம்புக்கிழுப்பது சரியில்ல!//

இது அவரு அப்பாவோட தந்திரோபாயம்.

...................................

Yoganathan.N


//Mr.அன்புமனிக்கு ஒரு கேள்வி, ஒரு வேலை படத்தில் ஹீரோ தற்கொலை செய்வது போல இருந்தால், ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா???//

நெத்தியடி


//கொச்சின் ஹனிபா இறந்த செய்தி தெரியுமா??? மிகவும் வருத்த்மாக உள்ளது//

நிச்சயமாக வருத்த்மாக உள்ளது , இவரது மலையாளம் கலந்த வசன உச்சரிப்பும், உடல் மொழியும், ரைமிங் சென்ஸும் வியக்க தக்கது.
அவரது ஆத்மாவுக்காக பிரார்த்திப்போம்.


...................................


சேட்டைக்காரன்

//அன்புமணி இராமதாசு இந்தப் பதிவைப் படிச்சிட்டு ஐயாகிட்டே பெருமையாச் சொல்லிட்டிருப்பாரு: "டேடி..டேடி...என்னைப் பத்தி ரொம்ப நாளைக்கப்புறம் வலைப்பதிவுலே ஒருத்தர் எழுதியிருக்கார்,"ன்னு. மருத்துவர் ஐயா ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து உச்சி மோந்துக்குவாரு!//


உங்க பெயருக்கு எத்த மாதிரியே நச் கமெண்டு.

முரளிதீர தொண்டைமான் said...

புகைப்பிடிக்கும் பழக்கம் 90 சதவீத இளைஞர்கள் சினிமாவின் மூலமாகத்தான் பழகுவதாக ஒரு நீதிபதியே ஒரு விசாரனையின் போது குறிப்பிட்டிருந்தார். புகைப்பவரின் பெற்றோர்களிடம் கேளுங்கள் உங்கள் பிள்ளைகள் புகைப்பதை நீஙகள் வரவேற்க்கிறீகளா என்று? அல்லது இங்கே கருத்து தெரிவித்திருக்கும் மகான்கள் அவர்களின் பிள்ளைகள் புகைப்பிடிக்க அனுமதிப்பீங்களா?!

புற்று நோய் போன்று கொடிய நோய்கள் புகைப்பதனால்தான் வருகிறது என்று கூறாத எந்த மருத்துவரும் கிடையாது. ஆனல் குடித்து கூத்தாடிக்கு கொடிப்பிடித்து திரிகிறவனின் மண்டையில் இது ஏறாதென்பது திண்ணம்.

Anonymous said...

விஜய் க்கு டாச்டர் பட்டம் கொடுத்த பல்கலைகழகத்தையே தூக்கிட்டாங்க.
இவரு தான் ரஜினி ரசிகருங்க.முதல்னாலே போஇ பார்துடுவங்கோ என குமுதத்தில் கூவியதை இவர் மறந்திருக்கலாம்.ஆனா ரஜினி பக்தர்களில் இவரும் ஒரு ஆள் தான்.ரஜினி போல எம்ஜிஆர் போல ஒரு மக்கள் தலைவனாக உருவெடுக்க முடியாது.கால் தூசிக்கு கூட வர முடியாது.வேட்டைகாரனை சன் ட்வியே ஊத்தி மூடிவிட்டது

Anonymous said...

அன்புமணி ராமதாசுக்குஇந்த முறை அஜித் ரசிகர்கள் கையால் நிச்சயம் பரிகாரம் கிடைக்கும் ...ஆப்பு உறுதி...டவுசர் பத்திரமுங்கோ

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

//இதற்க்கு என்னங்கோ அர்த்தம்//

அன்பு மணி வீட்டிலேயே ஒரு டாக்டர் இருக்கிறார் தெரியுமா உங்களுக்கு?

//சின்ன பிள்ளைக்கும் புரியும் இளைய நடிகர்களில் விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்தது பலருக்கு வயித்தெரிச்சல் தான்.//

எங்களுக்கு பொறாமையா? நல்ல காமடி, உங்களுக்கு தெரியாதென்று நினைக்கிறேன்,நான் முன்னைய பதிவில் எழுதியிருந்தாலும் உங்களுக்காக.

*****ரஜினிக்கு ஏன் இன்னமும் டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை என பலரும் நினைக்கலாம்,ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்தது ஏனையவர்களுக்கும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த தகவல், ரஜினிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தது. ஆனால் அதை ஏற்க ரஜினி மறுத்துவிட்டார் . பின்னர் அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவெடுத்து அதை பத்திரிகைச் செய்தியாகக் கொடுத்தது. விஷயம் அறிந்து, ரஜினியேஇந்த முறையும் பட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இறுதியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி ஷண்முகத்திடம் (ஓட்டல் பென்ஸ் பார்க்கில்), ஷங்கர், விஜய் போன்றவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்த போது, "ரஜினி போன்ற மிகப் பெரிய நடிகருக்கு டாக்டர் பட்டம் தராதது ஏன்?" என்று கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் சொன்னபதில் "ரஜினி சாருக்கு கொடுக்க நாங்கதயார். அவர் வாங்கிக்கணுமே...! அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவு செய்து, அவர்கிட்ட சம்மதம் கேட்டோம். அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" கூறினார் இதைக்கூறும் போது ஒரு ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது,இருக்காதாபின்ன? மற்றவர்களுக்கு பட்டம் கொடுத்தால் அது பட்டத்தை பெற்றவருக்கு பெருமை,ரஜினிக்கு கொடுத்தால் தானே அந்த பட்டத்துக்கே பெருமை. இந்தமூன்று சம்பவங்களையும் சந்தேகமிருந்தால் சம்பத்தப்பட்ட பல்கலைக்களகங்களை அணுகி நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம். விருதுகளே விலைபோகும் காலத்தில் விருதகளாலேயே வாங்கமுடியாத கலைஞன் ரஜினி. ********

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh


//அண்ணாமலை அருணாசலம் முத்து பாட்ஷா போன்ற படங்கள் என்னவாம் ஒரே வேலை தான் அதிகம்//

இந்த நான்கு படங்களும் கமெர்சியல் படமேன்பதை தவிர வேறெந்த ஒர்ருமயுமில்லை. பாட்சா இன்றைய வியின் அனைத்து படங்களுக்குமான இன்ஸ்பிரேசன் , அது ஒரு டான் சம்பந்தபட்ட கதை, முத்து ஜமீந்தார் காலத்து கதை, அண்ணாமலை முதல்பாதி இளமையாகவும் பிற்பாதி முதியவராகவும் ரஜினி நடித்துள்ள படம், அருணாச்சலம் மட்டுமே சப்பையான படம், ஆனால் முதல் மூன்று படத்துடனும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதது. அடுத்து இவைநான்குமே வசூலில் history rewriter films என்பதை மறந்து விடாதீர்கள்.

//விஜயை கவில்க்க வேண்டுமென ரஜினி உள்ளுக்குள் அஜித்தை வளர்க்க முற்பட்டதும் இப்போது தன மருமகன் தனுஷை அந்த வழியில் கொண்டு வர முயல்வதும் என்னவென சொல்வது.//

சிறந்த காமடி, ரஜினி அஜித்தை தேடி போகவில்லை, ரஜினி வீட்டுக்கு வந்த அஜித் 'பில்லாவை' ரீமேகே செய்ய அனுமதிகேட்டார், வழமை போல அன்மதி கொடுத்த ரஜினி ஆதரவும் கொடுத்தார். மற்றபடி எந்த விதத்திலும் அஜித்தை ரஜினி தூக்கி பிடிக்கவில்லை, அப்படியே செய்தாலும் அஜித் என்ன ரஜினிக்கு மாமனா,மச்சானா? , தனுஸ் ரஜினியன் மருமகன், அவருக்கு ஆதரவாக இருப்பதை எப்படி பிழை என்று கூறமுடியும்?

//அந்த மக்கள் கொடுத்த தீர்ப்பு தான் ரஜினி தலைமுறைக்கு அடுத்த தலை முறை விஜய் தான் முன்னணி என //

நீங்கள் பாவம், மக்கள் விஜயை ஒதுக்கி ரம்பா நாளாச்சு, நாலு பிளாப் தொடர்ந்து குடுத்தும் உங்களுக்கு குசும்பு போகல பாத்தீங்களா, நீங்கள் கிணற்று தவளையாகவே இருக்கிறீர்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

மற்றும் நீங்கள் விஜயை பற்றி எழுதும் போது ரஜினியை இழுப்பது சின்னபுள்ளைதனமாக உள்ளது. விஜய்க்கும் ரஜினிக்குமுள்ள இடைவெளி பூமியிலிருந்து சந்திரனுக்கும் சூரியனுக்குமான இடைவெளி, நீங்கள் இப்படி ஒப்பிடுவது உங்கள் அனுபவ முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.

விஜய் இன்று ஓரளவேனும் நல்ல நிலையில் இருப்பதே ரஜினியின் பெயரை பயன்படுத்தியதால்தான், விஜயின் 49 படங்களில் குறைந்தது 45 படங்களிலாவது ரஜினியின் பெயரோ, அல்லது படத்தின் பெயரோ அல்லது பாடலோ, அல்லது போஸ்டரோ,அல்லது பஞ்ச வசனமோ பயன் படுத்திடிருப்பார். அதனால்தான் பல ரஜினி ரசிகர்கள் ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாக இருந்தோம்.இன்று சத்தியராஜ் என்னும் செல்லாகாசின் பேச்சை கேட்டு ரஜினிக்கு எதிராக விஜய் செயற்பட ஆரம்பித்ததிலிருந்து (ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி விஜய் அப்பிடி என்னசெய்தார் என்று கேட்டால் அதற்கான பதிலாக மிகபெரும் பதிவுதான் எழுதவேண்டும்) ரஜினி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கைவிட்டதன் பலன்தான் விஜயின் இந்த நான்கு தொடர் பிளாப். விஜய் எங்களிடம் (ரசிகர்களிடம் )பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும்வரை இந்த எதிர்ப்பு இனியும் தொடரும்.


நீங்கள் விஜய் ரசிகராச்சே பத்து தடவை சொன்னால்தான் புரிந்து கொள்வீர்கள் போலிருக்கிறது. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அ.ஜீவதர்ஷன் said...

hayyram

//உண்மையில் உள்ளக்குமுறைலை வெளிப்படுத்தும் கட்டுரை. இந்த அன்புமனி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பாத்து நல்ல பேர் வாங்கட்டும். அத வுட்டூட்டு அரசியல்ல சம்பாதிக்க புறப்பட்டறாரு.//

இலவச மருத்துவமா? அப்போ டெல்லி 'இங்கிலீசு மீடிய' பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க பணத்திற்கு எங்கு போவாரு?

.........................................

Guru-ji

//சதீஷ் டோன்ட் வொர்ரி நாங்க விஜய்க்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுதிங்கனு கஷ்டமான கேள்வி எல்லாம் இங்க கேட்கலை........//

ஆமா எதுக்கு கொடுத்தாங்க?

.....................................

அ.ஜீவதர்ஷன் said...

முரளிசாமி

//புகைப்பிடிக்கும் பழக்கம் 90 சதவீத இளைஞர்கள் சினிமாவின் மூலமாகத்தான் பழகுவதாக ஒரு நீதிபதியே ஒரு விசாரனையின் போது குறிப்பிட்டிருந்தார்.//

நீதிபதி என்ன ஆய்வாளரா? புகை பிடித்தல் மிகவும் மோசமான ஒன்றுதான், இதில் அருக்கருத்தில்லை. ஆனால் சினிமாவை பார்த்துதான் கேட்டுப் போகிறார்கள் என்றால் அவ்வளவுக்கு சுயமாக சிந்திக்க முடியாதவர்களா தமிழக இளைஞர்கள், அது தவிர சினிமா இலாத காலங்களில் எதை பார்த்து புகைபிடிக்க கற்று கொண்டார்கள்? சினிமா பார்க்காத இளைஞர்களும் போய் பிடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், யோகநாதன் கேட்டதுபோல தூக்கில் தொகும் பாத்திரத்தில் நாயகன் நடித்தால் இளைஞர்கள் தூக்கில் தொங்கி விடுவார்களா?

ஒருவன் எப்படி வாழவேண்டுமென்பதை அவன்தான் தீர்மானிக்க வேண்டும், அதற்காகத்தான் மனிதனுக்கு ஆறறிவை கடவுள் படைத்துள்ளார். அதை விடுத்து சினிமாவை பார்த்து கெட்டுபோகிறது உண்மையென்றால் அவர்கள்மாந்தர்கள் அல்ல குரங்குகளே(அவைதான் செய்வதை திருப்பி செய்யும் ). நீங்களும் அந்த நீதிபதியும் இளைஞர்களை குரங்குகள் என்கின்றீர்களா?

அ.ஜீவதர்ஷன் said...

ஆர்.கே.சதீஷ்குமார்

விஜய் சொந்த புத்தியில் இயங்க தெரியாதவர். அவரை திட்டி ஒன்றும் ஆகப் போவதில்லை.

MUTHU said...

இன்று சத்தியராஜ் என்னும் செல்லாகாசின் பேச்சை கேட்டு ரஜினிக்கு எதிராக விஜய் செயற்பட ஆரம்பித்ததிலிருந்து (ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி விஜய் அப்பிடி என்னசெய்தார் என்று கேட்டால் அதற்கான பதிலாக மிகபெரும் பதிவுதான் எழுதவேண்டும்)

மிக விரைவில் போடுங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்

na.jothi said...

உங்க தலைப்புல உள்ள "save our single home"
இதுக்கு என்னங்க அர்த்தம்

sellamma said...

ஹ்ஹாஆஆஆஆ
என்னைய இது,, விஜய் ஒரு ஆளுன்னு அவருக்கு வாழ் பிடிக்கிறாராம் சதீசன்,, அதில வேற டாக்டர் விஜய் எண்டு பெருமையா சொல்லுறார்,,
ஏம்பா சதீசு,, உனக்கே இது கேவலமா தெரியேல்லைய??

அ.ஜீவதர்ஷன் said...

Muthu


//மிக விரைவில் போடுங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்//

சரியான நேரம் வரும்போது நிச்சயமாக போடுகிறேன்.

..................................


ஜோதி

//உங்க தலைப்புல உள்ள "save our single home"
இதுக்கு என்னங்க அர்த்தம்//

உங்க கிண்டல் புரியுது, நான் எதோ புகை பிடிப்பதை ஊக்குவிக்கிற மாதிரி உங்க கதை போகுது. திரும்ப திரும்ப சொல்கிறேன் புகை பிடிப்பதை ஒரு போதும் நான் வரவேற்கவில்லை, ஆனால் சினிமாவால்தான் இளைஞர்கள் புகை பிடிக்கிறார்கள் என்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதுதவிர அவசியமான இடங்களில் நிச்சயம் புகைபிடிக்கும் காட்சிகள் அவசியமே.


..................................

sellamma சொன்னது…


//என்னைய இது,, விஜய் ஒரு ஆளுன்னு அவருக்கு வாழ் பிடிக்கிறாராம் சதீசன்,, அதில வேற டாக்டர் விஜய் எண்டு பெருமையா சொல்லுறார்,,
ஏம்பா சதீசு,, உனக்கே இது கேவலமா தெரியேல்லைய??//


இதுக்கு சதீஸ் பதில் சொல்லுவாரு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் அப்பு...

அஹோரி said...

////உங்க தலைப்புல உள்ள "save our single home"
இதுக்கு என்னங்க அர்த்தம்//

உங்க கிண்டல் புரியுது, நான் எதோ புகை பிடிப்பதை ஊக்குவிக்கிற மாதிரி உங்க கதை போகுது. திரும்ப திரும்ப சொல்கிறேன் புகை பிடிப்பதை ஒரு போதும் நான் வரவேற்கவில்லை, ஆனால் சினிமாவால்தான் இளைஞர்கள் புகை பிடிக்கிறார்கள் என்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதுதவிர அவசியமான இடங்களில் நிச்சயம் புகைபிடிக்கும் காட்சிகள் அவசியமே.
//

சரி சரி , மீசைல மண் ஒட்டல.

அந்த லோகோவ தூக்கிட்டா போதும்.
லோகோவ வைக்கறதுக்கு முன்னாடி அர்த்தம் தெரிஞ்சி கிட்டு வையுங்க. பதிவுக்கும் லோகோவுக்கும் சம்பந்தம் இல்ல.

சினிமா விசிறி said...

ஏனுங்,மூணு மசாலா படம் ஹிட்டு குடுத்தா அடுத்த ரஜினின்னா,அப்போ நாலு பிளாப்பு குடுத்தா விஜயும் ஜெய் ஆகாஷும் ஒன்னுங்களா,ஏப்பு ரஜினி என்னும் நடிகருக்கு ரசிகரான பல பேர் இப்போ ரஜினி என்னும் மனிதருக்கு ரசிகராயிட்டாங்க.ரஜினி ஒரு வழிகாட்டி.அவரு கூட சும்மா சும்மா ஒப்பிட்டு கிட்டு இருகாதீங்,அண்மைக் காலமா விஜய விட தனுஷ் கூட முன்னணில தான் இருக்காரு,படிக்காதவனும் பொல்லாதவனும் கூட வந்த விஜயோட படத்துக்கு டாடா காமிச்சது தெரியுமில்ல.ரஜினி பட டைட்டிலோடையே ஜெய்க்க முடியாத விஜய் அடுத்த ரஜினியாமாம்,நாராயணா இந்த .........

mnalin said...

அஹோரி

தலைப்புல உள்ள "save our single home" விளக்கம் :
எங்கள் சூரிய குடும்பத்தில் உயிர்கள் வாழ கூடிய ஒரே ஒரு கோள் பூமி தான் அதனால் அதனை பாதுககவேண்டும் இங்கு வாழலும் வேறு எந்த விலங்கினதாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை மனிதனை தவிர (சுழல் மாசடைதல் )
மேலும் கட்டுபாடு இன்றிய இயற்கை வள பாவனை குறைத்து எதிர் காலத்துக்கு கொஞ்சமாவது விட்டு வைக்கவேண்டும்
"பூமியை பாதுககவேண்டும் என்பது நிறைய காலமாக இருந்தாலும் இப்போது பாதுகாக்க விட்டால் நாம காலி என்ற நிலைமை " என்பதையும் சேர்க்கலாம்

சுருக்கமாக நமது பூமி ( எமது ஒரே ஒரு வீடு ) பாதுகாக்க வேண்டியது நமது கடமை !!! வேறு எங்கையும் அகதியாக போகமுடியாது

அகோரி !! logo தான் போட வேண்டும் என்றால் ரோஜா பூ or கரடி பொம்மை போட்டு இருக்கலாம் இந்த விளக்கம் போதும் என நினைகின்றேன்
இல்லை துக்க தான் வேண்டும் என்றால் எடுத்துது ஒரு ரோசா பூ போட்டா சரி or எதசும் ஒரு கவர்சியா .... சகி.... photo வை போடால் நிறைய hits வேற கிடைக்கும் ;-) !!!


இப்ப அர்த்தம் தெரியும் தானே ???? இப்ப சம்மந்தமாக உள்ளதா ??

நான் நம்புகின்ற,விரும்புற விடயங்கள் தான் இந்த வலைப்பூ

உங்கள் கருத்துக்கு நன்றி அகோரி
மீண்டும் வாருங்கள்

அ.ஜீவதர்ஷன் said...

பட்டாபட்டி..

//சூப்பர் அப்பு...//

நன்றி

.......................................

சினிமா விசிறி

//ஏனுங்,மூணு மசாலா படம் ஹிட்டு குடுத்தா அடுத்த ரஜினின்னா,அப்போ நாலு பிளாப்பு குடுத்தா விஜயும் ஜெய் ஆகாஷும் ஒன்னுங்களா//

கலக்கல் வாசகம்

Yoganathan.N said...

//விஜயை கவில்க்கவேண்டுமென//

விஜயை கவில்க்க ரஜினி சார் ஏன் கங்கனம் கட்ட வேண்டும் என என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. அவருக்கு வேர வேலை இல்லை என நினைத்து விட்டீர்கள் போலும்.

//ரஜினி உள்ளுக்குள் அஜித்தை வளர்க்க முற்பட்டதும்//

இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. அஜித் சாரை வளர்க்க ஏன் ரஜினி சார் பாடுபட வேண்டும்??? இதுவும் என் சிற்றறிவுக்கு புலப்படவில்லை.

//ரஜினி தலைமுறைக்கு அடுத்த தலை முறை விஜய் தான் முன்னணி//

வாழ்த்துகள் :)

டவுசர் பாண்டி said...

//அன்புமணி ராமதாசுக்குஇந்த முறை அஜித் ரசிகர்கள் கையால் நிச்சயம் பரிகாரம் கிடைக்கும் ...ஆப்பு உறுதி...டவுசர் பத்திரமுங்கோ//

ஆர்.கே.சதீஷ்,அண்ணாத்தே !! நானு இன்னா பண்ணுவேன் எம் பேர வேற இழுக்கரீங்கோ !!
( காமிடி !! )

ஊர்ல கீர மரத்த வெட்ட சொல்லிக் குட்ததே இந்த ஆளுங்க தான் , அப்பால பண்ண பாவத்துக்கு ( ஊற ஏமாத்த ) மரம் நடறோம் இன்னு சொல்லிக்கீனு , இருந்தாங்கோ !!

இப்ப வேல வெட்டி இல்ல அதான் இந்த மேட்டர் கீதே இன்னு அட்ரா பல்டி கதை . அட உடு தல , இவங்க சொல்றத இவங்க ஆளுங்களே கேக்கறது இல்ல , இதப் போய் !! !! !!

SShathiesh-சதீஷ். said...

hayyram சொன்னது

//திரு.SATHIESH... ஏன் இதுக்கு போய் கோச்சுக்கறீங்க.விஜய அவரை விட வேற யாரும் கிண்டல் பண்ண முடியாது. விஜய்க்கு காமெடியன் விஜயே தான். விஜய முதல்ல ரஜினி ஃபார்மலாவ விட்டுட்டு சுயமா நடிக்க... 'ஸாரி'அவருக்கு அது தெரியாததால அட்லீஸ்ட் நடக்க சொல்லுங்க . உண்மையா சொல்லப்போனா இப்ப வந்திருக்கிற "தமிழ்ப்படம்" கும் விஜயோட எல்லா படங்களுக்கும் பெரிய வித்தியாசமே இருக்கறதில்ல. மேக்ஸிமம் விஜய் படம்ஸ் ஆர் காப்பி பேஸ்ட் . இதுல விஜய நாங்க வேற தனியா கிண்டல் பண்ணனுமாக்கும்//

விஜய்க்கு காமெடியன் அவரே என்ற உங்கள் காமெடி சூப்பர். ரஜினி பார்முலாவை விட்டு நடிங்க என்றீர்கள். அப்போ ரஜினியும் நடிக்கலையா? பார்முலாக்க வந்து போறாரா? தமிழ் படம் நான் இன்னும் பார்க்கல ஆனால் ரஜினியையும் போட்டுத்தாகியதா கேள்வி? மறந்து போச்சா?

SShathiesh-சதீஷ். said...

hayyram சொன்னது…
// ரஜினி தலைமுறைக்கு அடுத்த தலை முறை விஜய் தான் முன்னணி/// ஆனா இது தான் செம காமெடி தல...சீ...சதீஷ்

ஏனுங்கண்ணா தலைக்கு காமெடி வருமா? rajinikku அடுத்து யார் முன்னணி யார் வசூல் நாயகன் என ஒத்துக்கொள்ள முடியாதது உங்கள் கோழைத்தனம் அல்லது அறியாமை நான் என்ன செய்வேன்.

SShathiesh-சதீஷ். said...

Guru-ji சொன்னது…
சதீஷ் டோன்ட் வொர்ரி நாங்க விஜய்க்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுதிங்கனு கஷ்டமான கேள்வி எல்லாம் இங்க கேட்கலை........


ஏன் கொடுத்தாங்கன்னு உங்களுக்கு தெரியாதா? தெரியாமல் தான் பேசிரிங்களா?

SShathiesh-சதீஷ். said...

//முதல்ல தமிழ் சினிமாவைவிட்டு இந்த விஜய் அஜித் வகையறாக்களை ஒழிச்சுக்கட்டனும்!//

ஒருவரை இல்லாதொளிப்பதை விட அவரை மாற்றுவது சால சிறந்ததுதானே?

ஏன் இந்த நல்ல மனம். நீங்கள் சொன்னது சரிதான் கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு தான் தண்டனை அதிகம் இவர்களையே இல்லாதொளித்தால் அஜித்-விஜய் வகையறாக்களை உருவாக்கியவரை என்ன செய்வது????????????????

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

//விஜய் க்கு டாச்டர் பட்டம் கொடுத்த பல்கலைகழகத்தையே தூக்கிட்டாங்க.
இவரு தான் ரஜினி ரசிகருங்க.முதல்னாலே போஇ பார்துடுவங்கோ என குமுதத்தில் கூவியதை இவர் மறந்திருக்கலாம்.ஆனா ரஜினி பக்தர்களில் இவரும் ஒரு ஆள் தான்.ரஜினி போல எம்ஜிஆர் போல ஒரு மக்கள் தலைவனாக உருவெடுக்க முடியாது.கால் தூசிக்கு கூட வர முடியாது.வேட்டைகாரனை சன் ட்வியே ஊத்தி மூடிவிட்ட//

ரஜினி தன எத்தனை வயதில் இவ்வளவும் செய்தற் விசைக்கு எத்தனை வயது யோசித்தீர்களா? காலம் நேரம் வரும்? கால் தூசிக்கு கூட வரமுடியாது ஆனால் அந்த தூசிகளே புயலானால் என்ன நடக்கும் தெரியும் தானே?

எப்பூடி ... சொன்னது

//சின்ன பிள்ளைக்கும் புரியும் இளைய நடிகர்களில் விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்தது பலருக்கு வயித்தெரிச்சல் தான்.//

எங்களுக்கு பொறாமையா? நல்ல காமடி, உங்களுக்கு தெரியாதென்று நினைக்கிறேன்,நான் முன்னைய பதிவில் எழுதியிருந்தாலும் உங்களுக்காக.

*****//ரஜினிக்கு ஏன் இன்னமும் டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை என பலரும் நினைக்கலாம்,ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்தது ஏனையவர்களுக்கும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த தகவல், ரஜினிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தது. ஆனால் அதை ஏற்க ரஜினி மறுத்துவிட்டார் . பின்னர் அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவெடுத்து அதை பத்திரிகைச் செய்தியாகக் கொடுத்தது. விஷயம் அறிந்து, ரஜினியேஇந்த முறையும் பட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இறுதியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி ஷண்முகத்திடம் (ஓட்டல் பென்ஸ் பார்க்கில்), ஷங்கர், விஜய் போன்றவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்த போது, "ரஜினி போன்ற மிகப் பெரிய நடிகருக்கு டாக்டர் பட்டம் தராதது ஏன்?" என்று கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் சொன்னபதில் "ரஜினி சாருக்கு கொடுக்க நாங்கதயார். அவர் வாங்கிக்கணுமே...! அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவு செய்து, அவர்கிட்ட சம்மதம் கேட்டோம். அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" கூறினார் இதைக்கூறும் போது ஒரு ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது,இருக்காதாபின்ன? மற்றவர்களுக்கு பட்டம் கொடுத்தால் அது பட்டத்தை பெற்றவருக்கு பெருமை,ரஜினிக்கு கொடுத்தால் தானே அந்த பட்டத்துக்கே பெருமை. இந்தமூன்று சம்பவங்களையும் சந்தேகமிருந்தால் சம்பத்தப்பட்ட பல்கலைக்களகங்களை அணுகி நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம். விருதுகளே விலைபோகும் காலத்தில் விருதகளாலேயே வாங்கமுடியாத கலைஞன் ரஜினி. *******//

SShathiesh-சதீஷ். said...

எப்பூடி ... சொன்னது…

//அடுத்து இவைநான்குமே வசூலில் history rewriter films என்பதை மறந்து விடாதீர்கள்.//

appo உங்களுக்கு வசூல் தான் முக்கியம் அப்படி என்றால் விஜய் செய்வதொன்றும் தப்பில்லையே அவர் படங்கள் எந்த தயாரிப்பாளரையும் விநியோகச்தரையும் ஏமாற்றவில்லையே? இது உண்மைதானே

//விஜயை கவில்க்க வேண்டுமென ரஜினி உள்ளுக்குள் அஜித்தை வளர்க்க முற்பட்டதும் இப்போது தன மருமகன் தனுஷை அந்த வழியில் கொண்டு வர முயல்வதும் என்னவென சொல்வது.//

சிறந்த காமடி, ரஜினி அஜித்தை தேடி போகவில்லை, ரஜினி வீட்டுக்கு வந்த அஜித் 'பில்லாவை' ரீமேகே செய்ய அனுமதிகேட்டார், வழமை போல அன்மதி கொடுத்த ரஜினி ஆதரவும் கொடுத்தார். மற்றபடி எந்த விதத்திலும் அஜித்தை ரஜினி தூக்கி பிடிக்கவில்லை, அப்படியே செய்தாலும் அஜித் என்ன ரஜினிக்கு மாமனா,மச்சானா? , தனுஸ் ரஜினியன் மருமகன், அவருக்கு ஆதரவாக இருப்பதை எப்படி பிழை என்று கூறமுடியும்//

oru ரஜினி ரசிகனாக இருந்து கொண்டு அவரை பற்றி அறிந்தது இவ்வளவு தானா? எனக்கு சரியாக எந்த இதழ் என்று நினைவில்லை. 2007-2008 kaalappakuthiyil velivantha nakkeeran சஞ்சிகை இதழில் இந்த ரஜினி ஆதரவு அஜித்துக்கு என்பது பற்றி ஒரு கட்டுரையே வெளிவந்தது படிக்கவில்லையா? maaman மச்சான் தான் உதவ வேண்டுமா? அக்கறை இருந்தால் யாருமே உதவலாமே. தனுஷ் மருமகன் என்றால் ஆதரவகாக இருப்பது தப்பில்லை என்றால் விஜயின் அப்பா விஜய்க்கு அதரவாக இருப்பது மட்டும் உங்களை போன்ற சிலருக்கு எப்படி தப்பாக தெரிகின்றது.

//எப்பூடி ... சொன்னது…
SShathiesh

மற்றும் நீங்கள் விஜயை பற்றி எழுதும் போது ரஜினியை இழுப்பது சின்னபுள்ளைதனமாக உள்ளது. விஜய்க்கும் ரஜினிக்குமுள்ள இடைவெளி பூமியிலிருந்து சந்திரனுக்கும் சூரியனுக்குமான இடைவெளி, நீங்கள் இப்படி ஒப்பிடுவது உங்கள் அனுபவ முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.

விஜய் இன்று ஓரளவேனும் நல்ல நிலையில் இருப்பதே ரஜினியின் பெயரை பயன்படுத்தியதால்தான், விஜயின் 49 படங்களில் குறைந்தது 45 படங்களிலாவது ரஜினியின் பெயரோ, அல்லது படத்தின் பெயரோ அல்லது பாடலோ, அல்லது போஸ்டரோ,அல்லது பஞ்ச வசனமோ பயன் படுத்திடிருப்பார். அதனால்தான் பல ரஜினி ரசிகர்கள் ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாக இருந்தோம்.இன்று சத்தியராஜ் என்னும் செல்லாகாசின் பேச்சை கேட்டு ரஜினிக்கு எதிராக விஜய் செயற்பட ஆரம்பித்ததிலிருந்து (ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி விஜய் அப்பிடி என்னசெய்தார் என்று கேட்டால் அதற்கான பதிலாக மிகபெரும் பதிவுதான் எழுதவேண்டும்) ரஜினி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கைவிட்டதன் பலன்தான் விஜயின் இந்த நான்கு தொடர் பிளாப். விஜய் எங்களிடம் (ரசிகர்களிடம் )பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும்வரை இந்த எதிர்ப்பு இனியும் தொடரும்.


நீங்கள் விஜய் ரசிகராச்சே பத்து தடவை சொன்னால்தான் புரிந்து கொள்வீர்கள் போலிருக்கிறது. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி//

இந்த இடைவெளியிலேயே இப்படி பிரச்சனைகள் என்றால் கிட்டவந்தால் என்ன ஆகும். ரஜினி ரசிகர்கள் சிலர்(இதை கவனிக்க) விஜயை வெறுக்க காரணம் லயோலா கல்லூரி முடிவும்தான். சில நேரங்களில் சறுக்கும் தான் நாங்களும் ஒத்துக்கொள்கின்றோம். விஜய் இன்னும் ரஜினி அளவு வளரவில்லை அதற்க்கு இன்னும் பல படி இருக்கின்றது. ஆனால் அந்த வழியில் அவர் செல்வது மறுக்க முடியாத உண்மை. இதை உங்கள் தலைவரை உருவாக்கிய பாலசந்தர் சொல்லி இருக்கின்றார். ஏன் உங்கள் தலைவரே விஜயையும் விக்ரமையும் பார்க்கும் போது ஆரம்பகாலத்தில் தன்னையும் கமலியும் பார்ப்பது போல் இருக்கின்றது என சொன்னது நினைவில்லையா? ரஜினி தனக்கு வேண்டப்பட்டவர்களை வல்றப்பதும் வேண்டாதவர்களை விளுத்துவதும் சில இடங்களில் நடந்தே உள்ளது தனக்கு போட்டியாக வந்த மோகனை இல்லாமல் செய்த பங்கு இவருக்கும் உண்டு. அதே போல விஜயின் ஆரம்பகாலத்தில் விஜய்க்கு அமோக ஆதரவு கொடுத்தார் அதன் பின் விஜயின் அசுர வளர்ச்சி வர அவரை வீழ்த்தி சாமி விகாரமாய் சூப்பர் ஸ்டார் என கொண்டாடினார். மீண்டும் கில்லி வர விஜயுடன் inainthaar. idaiyil அஜித். பின் தனுஷ். இப்போது அஜித்தை வைத்து விஜயை உசுப்பேத்தி தனுசை வளர்க்கின்றார். ஆனால் அஜித்-விஜய் idaiye ஏற்பட்டிருக்கும் நட்பு இந்த முயற்ச்சிகளுக்கு பெரும் தடையாக இருக்கலாம். உண்மைகள் கசக்கத்தான் செய்யும் கொஞ்சம் பின்னோக்கி சென்று பாருகள். அனால் ரஜினி ரசிகர்கள் உங்களுக்கு இது ellam தெரியாது.

SShathiesh-சதீஷ். said...

sellamma சொன்னது…
ஹ்ஹாஆஆஆஆ
என்னைய இது,, விஜய் ஒரு ஆளுன்னு அவருக்கு வாழ் பிடிக்கிறாராம் சதீசன்,, அதில வேற டாக்டர் விஜய் எண்டு பெருமையா சொல்லுறார்,,
ஏம்பா சதீசு,, உனக்கே இது கேவலமா தெரியேல்லைய?


ஹஆகாஹா, ஏம்பா செல்லம்மா உனக்கு உன் பேர் தெரியாது உன் பேர் நான் சொல்லவா? எதுப்ப கேவலம் உண்மையை சொன்ன கேவலாமா அப்படி என்றால் அதை செய்ய நான் தயார்.

//சினிமா விசிறி சொன்னது…
ஏனுங்,மூணு மசாலா படம் ஹிட்டு குடுத்தா அடுத்த ரஜினின்னா,அப்போ நாலு பிளாப்பு குடுத்தா விஜயும் ஜெய் ஆகாஷும் ஒன்னுங்களா,ஏப்பு ரஜினி என்னும் நடிகருக்கு ரசிகரான பல பேர் இப்போ ரஜினி என்னும் மனிதருக்கு ரசிகராயிட்டாங்க.ரஜினி ஒரு வழிகாட்டி.அவரு கூட சும்மா சும்மா ஒப்பிட்டு கிட்டு இருகாதீங்,அண்மைக் காலமா விஜய விட தனுஷ் கூட முன்னணில தான் இருக்காரு,படிக்காதவனும் பொல்லாதவனும் கூட வந்த விஜயோட படத்துக்கு டாடா காமிச்சது தெரியுமில்ல.ரஜினி பட டைட்டிலோடையே ஜெய்க்க முடியாத விஜய் அடுத்த ரஜினியாமாம்,நாராயணா இந்த ..//

viajy rajini pada title il நடிக்கலையே தலைவா? விஜய் நாலு மசாலா படமா கொடுத்தார்.

singamla366 said...

anbhumani nee araaciyalvathyya? kamadiyana?illanai dotora? nee unveeta thiruthu, appuram natta thiruthalam.nee oociyl vanthavan thane, nee makklidam poyi oottu vanki jeiythuva...........

karthik said...

//உங்கள் பிடித்த நடிகரை எவ்வளவு வேண்டுமானாலும் தூக்கி வைத்து கொண்டாடுங்கள் மற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றை எதிராக எழுதும் பொது சிந்தித்து எழுதுங்கள்//
to sathish

நீங்க எதோ அரிச்சந்திரண்ட நேரடி வாரிசு மாதிரி எழுதிறீங்க
உங்கட blog ல எல்லா நடிகர்களையும் பத்தி உயர்வாவா எழுதுறீங்க. விக்ரம், சூரியா படங்கள் வார நேரம் (கந்தசாமி, ஆதவன்) படத்த கவுக்கு என்ன என்ன வேலை எல்லாம் பண்ணுனீங்க ( ஆதவன் என்ன பாதகனா, ஆதவன் உதிக்காமல் போனதற்கான காரணங்கள் ) நீங்க எழுதினா அது சரி மற்ற நபர்கள் எழுதினால் பிழை

பாஸ்கரன் said...

அருமையான பதிவு.

விடுங்க பாஸ்.
ரெண்டு டாக்டர்ஸ்-மெ (original & dublicate) வேஸ்ட்.

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

நீங்க ரொம்ப சின்னப்புள்ளயாவே இருக்கிறீங்க, இப்போ உங்க கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு நேர அவகாசமில்லை , உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் இரவு பதிலளிக்கிறேன், வரட்டுமா...

singamla366 said...

அன்புமணி நீ அரசியல் வாதியா?
காமடியான ? நாய் டாக்டர?
ஊர திருத்தமா ..
உன் வீட்ட திருத்து ..
அரசியல் வாதின்ன மக்கள் ஓட்டு போட்டு
ஜெய்க்கனுனம் அது இல்ல, ஓசியா... கொடுத்தது முதலில் தெருவில் நின்னுஓட்டு வாங்கி ஜெய்த்து வா.......

அ.ஜீவதர்ஷன் said...

டவுசர் பாண்டி


சரிண்ணே...

....

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

//ஏன் இந்த நல்ல மனம். நீங்கள் சொன்னது சரிதான் கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு தான் தண்டனை அதிகம் இவர்களையே இல்லாதொளித்தால் அஜித்-விஜய் வகையறாக்களை உருவாக்கியவரை என்ன செய்வது????????????????//

யாராவது உருவாக்கிவிட அஜித், விஜய் ஒன்னும் தெரியாத பாப்பா பாருங்க, உங்க கதையின்படி பாத்தா இவர்கள் என்ன சொந்த அறிவில்லாதவன்களா? அல்லது களிமண் பொம்மையா? அவங்களை யாராவது உருவாக்க?

//ரஜினி தன எத்தனை வயதில் இவ்வளவும் செய்தற் விசைக்கு எத்தனை வயது யோசித்தீர்களா?//

கண்ணா அபப தனுசுக்கு எத்தினை வயசு ஜோசியுங்கள், தனுஸ் மூன்று தொடர்ஹிற் கொடுத்த வயதில் விஜய் 6 தொடர் பிளாப் கொடுத்தது உங்களுக்கு தெரியாதென்று நினைக்கிறேன்.

// தூசிகளே புயலானால் என்ன நடக்கும் தெரியும் தானே? //

உங்களுக்கு விஞ்ஞானமும் தெரியவில்லை போங்கள், தூசிகள் புயலாவதில்லை , புயல்கள்தான் தூசிகளை வளிமண்டலத்தில் நிலையில்லாமல் அலையவிடும்.

//appo உங்களுக்கு வசூல் தான் முக்கியம் அப்படி என்றால் விஜய் செய்வதொன்றும் தப்பில்லையே அவர் படங்கள் எந்த தயாரிப்பாளரையும் விநியோகச்தரையும் ஏமாற்றவில்லையே? இது உண்மைதானே//

இப்படி சொல்ல உங்களுக்கு நா கூசல, ஒருவருக்கும் நட்டமில்லாவிட்டால் எப்படி தொடர்ந்து நான்கு படம் பிளாப் ஆகும் ? எதற்காக விஜயின் மாக்கேற் குறையவேண்டும்.(ஆயிரத்தில் ஒருவன் போன்ற பெரிய நடிகர்கல்ற படமே 50 கோடிக்குமேல் வியாபாரமாகும்போது விஜயின் சுறா 42 கோடிக்கு வியாபாரமாகியது தெரியாதென்று நினைக்கிறேன் ).

யாரும் விஜயை கமெர்சியல் பார்முலாவை விட்டு நடிக்க சொல்லவில்லை, ஒரேமாதிரியான காட்சி அமைப்புள்ள படங்களில் இல்லாமல் கமெர்சியல் பார்முலாவிலேய அனைத்த் தரப்பையும் கவர கூடி ஜனரஞ்சகமான படங்களில் நடிக்கத்தான் சொல்கிறார்கள்.

//oru ரஜினி ரசிகனாக இருந்து கொண்டு அவரை பற்றி அறிந்தது இவ்வளவு தானா?//

கண்ணா உமக்கு தெரிந்ததை விட எனக்கு ரஜினியை பற்றியும் விஜயை பற்றியும் ரொம்பவே அதிகமாக தெரியும்(இது தலைக்கனமில்லை தன்னம்பிக்கை ), நீர் சொல்லும் கதைகள் போல நானும் சிறு வயதில் கதைத்துள்ளேன், நீர் கூறுபவை சிறுபிள்ளைதனமானவை என உமக்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் புரியும்.

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

//kaalappakuthiyil velivantha nakkeeran சஞ்சிகை இதழில் இந்த ரஜினி ஆதரவு அஜித்துக்கு என்பது பற்றி ஒரு கட்டுரையே வெளிவந்தது படிக்கவில்லையா?//

நக்கீரன் பத்திரிகையை பற்றி உமக்கு தெரியுமா? நக்கீரன் கோபாலை பற்றி உமக்கு தெரியுமா? தெரியாவிட்டால் எழுதக்கூடாது, தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளும். நக்கீரன் கோபால் ஆரம்ப காலங்களில் 'ரஜினி ரசிகன் ' என்ற ரஜினி பற்றிய பத்திரிகைதான் நடத்தி வந்தார். அதுதான் அவருக்கு சோறு போட்டது என்பது உங்களைத்தவிர எல்லோருக்கும் தெரியும். ரஜினியுடன் நல்ல நிலையில் இருந்த கோபால் வீரப்பன் பிரச்சினையின் பின்னர் ஒரு ரஜினி எதிரியாகவே மாறிவிட்டார்(அந்த அரசியல் நிகழ்வுகள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ) அதனை தொடர்ந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரஜினியை வசைபாடி வருபவர், ரஜினிக்கு எதிராக எழுதிவரும் அவர் பேச்சும் ஞானி பேச்சும் உண்மை என்றால் கலைஞரை பற்றி ஜெயலிதாவின் தினம் தினம் வரும் குற்றசாட்டும் உண்மையே, இரண்டும் ஒன்றுதான்.

//விஜயின் அப்பா விஜய்க்கு அதரவாக இருப்பது மட்டும் உங்களை போன்ற சிலருக்கு எப்படி தப்பாக தெரிகின்றது. //

விஜயின் அப்பா ஆதரவாக இருக்கிறாரா . ஹி ஹி ஹி , அவர்தான் விஜய்க்கு ஆப்பாக இருக்கிறார் .

//ரஜினி ரசிகர்கள் சிலர்(இதை கவனிக்க) விஜயை வெறுக்க காரணம் லயோலா கல்லூரி முடிவும்தான். சில நேரங்களில் சறுக்கும் தான் நாங்களும் ஒத்துக்கொள்கின்றோம்.//

கண்ணா லோயலா கல்லூரி வாக்கெடுப்பு 2000 பேர் பங்கு பற்றியது அதில் கமலுக்கு விக்ரம், சூரியா எல்லோருக்கும் பின்னர்தான் இடம் கிடைத்தது அப்படி பார்த்தால் கமலை விக்ரமும் சூரியாவும் மிஞ்சி விட்டார்களா? அதனால் எங்களுக்கு விஜய் மீது எந்த கோபமுமில்லை, அனால் இதை பெரிய விடயமாக எடுத்து பனர் கட்டி'வாழ்ந்தவர் கோடி மறந்தவர் கோடி' என வாசகங்கள் வைத்தாரே அதுதான் விஜயின் அழிவுகாலத்தின் ஆரம்பம் .

//ஆனால் அந்த வழியில் அவர் செல்வது மறுக்க முடியாத உண்மை//

எந்த வழியில் ? குறுக்கு வழியில் போகும் விஜய் ஒருபோதும் ரஜினியின் இடத்தை அடைய முடியாது. இப்போது இதை உங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது ஆனால் காலம் வரும்போது உணர்வீர்கள்.


//இதை உங்கள் தலைவரை உருவாக்கிய பாலசந்தர் சொல்லி இருக்கின்றார்//

பாலச்சந்தர் அடுத்த சூப்பர் ஸ்டார் என 'லாரன்ஸையும்' குறிப்பிட்டது உமக்கு தெரியுமா?

//ஏன் உங்கள் தலைவரே விஜயையும் விக்ரமையும் பார்க்கும் போது ஆரம்பகாலத்தில் தன்னையும் கமலியும் பார்ப்பது போல் இருக்கின்றது என சொன்னது நினைவில்லையா?//

உண்மைதான், அதற்காக இன்னும் ஆரம்ப காலத்த்லேயே இருப்பது போல் இருந்தால் என்னத்தை சொல்வது, கடைசிவரை ஆரம்பகால ரஜினியாகவே இருக்க வேண்டியதுதான்.

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

//தனக்கு போட்டியாக வந்த மோகனை இல்லாமல் செய்த பங்கு இவருக்கும் உண்டு//

அப்பு ராசா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா? மோகன் ரஜினியின் நண்பர்,மோகன் நல்ல நிலையில் இருந்த காலத்திலேயே ரஜினிக்காக ஸ்ரீ ராக வேந்திரா படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து கொடுத்திருப்பார். உங்கள் கதையா பார்த்தால் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என அரூடம் கூறப்பட்ட சத்தியராஜ், ராமராஜன், ராஜ்கிரண்,t.ராஜேந்தர் , பிரஷாந்த், பிரபுதேவா, விஜய் என அனைவரது 'வீழ்ச்சிக்கும்' ரஜினிதான் காரணம் என்பீர் போலுள்ளது.

//அதன் பின் விஜயின் அசுர வளர்ச்சி வர அவரை வீழ்த்தி சாமி விகாரமாய் சூப்பர் ஸ்டார் என கொண்டாடினார்.//

இன்னும் சிரித்துக் கொண்டிர்க்கிறேன் தம்பி! சாமி வரும் போது விஜயின் நிலைமை தெரியுமா உமக்கு? தொடர்ந்து 7 பிளாப்(திருமலை வெற்றியின் பின்னர் விஜே ஒப்புகொண்டது. ) உங்களுக்கு அந்த படங்கள் தெரியாவிட்டால் சொல்லுகள் நான் கூறுகிறேன்.அப்படி இருக்க விஜயின் அசுரவளர்ச்சியா?

மற்றும் சாமி ஒரு கவிதாலயா தயாரிப்பு, பாலசந்தர் அழைத்து ரஜினி இதுவரை என்னகும் போகாமிருக்கவில்லை, அங்குகூட தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விக்ரமுக்கு தாரை வார்த்தவர் ரஜினி.தெரிந்தால் எழுதுங்கள் இல்லாவிட்டால் தெரிந்தவரை கேட்டு எழுதுங்கள்.

//மீண்டும் கில்லி வர விஜயுடன் இணைந்தார்//

உமக்கு மனநிலை பாதிப்பேதும் உள்ளதா? விஜயுடன் இனைய ரஜினி என்ன கதாநாயகியா ? ரஜினி வலிந்து சென்று என்னை சிறப்பு விருந்தினராக அழையுங்கள் என்று கேட்டதுபோல கூறுகிறீர்.சந்திர சேகர் அழைப்பின் பெயரில் ரஜினி சென்றதும் அங்கு விஜய் அஷ்டாங்கமாக காலில் விழுந்ததும் தெரியாதா?

அப்புறம் சந்திமுகிக்கு போட்டியாக சச்சினை வெளியிட்டு மூக்குடைபட்டு பின்னர் பிரபு வீட்டில் சந்திரமுகி நூறாவது நாளில் தாணு வற்புறுத்தியதால்தான் அப்படத்தை அதே தினத்தில் வெளியிட வேண்டிவந்தது , இதில் எனக்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை என்று அந்தர் பல்டி அடித்தது தெரியாதா? அதற்காக தன் பங்கிற்கு விஜயும் சந்திரமுகி விழாவில் தலைவர் தலைவர் என வாளி வைத்தது தெரியாதா?

//இப்போது அஜித்தை வைத்து விஜயை உசுப்பேத்தி தனுசை வளர்க்கின்றார்.//

ரஜினிக்கும் வேற வேலையில்லை, அஜித் சொந்த புத்தி இல்லாதவர், இந்த பிள்ளைபூச்சிக்காக ஒன்றாக சேர்ந்து பிளான் பண்ணுகிறார்களாம்,நீர் இப்படித்தான் எப்பவுமேயா? அல்லது எப்பவுமே இப்படித்தானா?

//viajy rajini pada title il நடிக்கலையே தலைவா? //

உங்கள் விளக்கத்தில் ஒரு லீற்றர் பெற்றோல் வாங்கி ஊத்துங்கள் ,அவர் ரஜினி பட டைட்டிலில் விஜய் நடித்ததாக கூடவில்லையே , தனுஸ் நடித்த பொல்லாதவன், படிக்காதவனுடன் (ரஜினிபட டைட்டில் ) வெளிவந்தவிஜயின் A T M மற்றும் வில்லு ஆகியன வாங்கி கட்டியதைதான் "ரஜினி பட டைட்டிலோடையே ஜெய்க்க முடியாத விஜய் அடுத்த ரஜினியாமாம்" என்று கூறியுள்ளார்.


சத்தீஸ் உங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள், அதற்காக சிறுபிள்ளைகள் போல கதைக்க கூடாது. அடுத்த தடவை தெளிவாக, தெரிந்த, சரியான கருத்தை கூறுங்கள். உங்கள் வருகைக்குநன்றி.

karthik said...

//தனக்கு போட்டியாக வந்த மோகனை இல்லாமல் செய்த பங்கு இவருக்கும் உண்டு//

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நடிகர் மோகன திரை உலகில் இருந்து இல்லமால் ஆக்கியதில் முழுப்பங்கும் விஜய் குடும்பத்தையே சாரும் (மோகனுக்கு dupping குரல் குடுத்தவர் விஜயின் மாமாவான S. N. சுரேந்தர் அவருக்கும் மோகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே மோகனின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது)

அ.ஜீவதர்ஷன் said...

karthik


// to sathish

நீங்க எதோ அரிச்சந்திரண்ட நேரடி வாரிசு மாதிரி எழுதிறீங்க, உங்கட blog ல எல்லா நடிகர்களையும் பத்தி உயர்வாவா எழுதுறீங்க. விக்ரம், சூரியா படங்கள் வார நேரம் (கந்தசாமி, ஆதவன்) படத்த கவுக்கு என்ன என்ன வேலை எல்லாம் பண்ணுனீங்க ( ஆதவன் என்ன பாதகனா, ஆதவன் உதிக்காமல் போனதற்கான காரணங்கள் ) நீங்க எழுதினா அது சரி மற்ற நபர்கள் எழுதினால் பிழை//


ஆமால்ல, சரியாதானே சொல்லி இருக்கிறீங்க .

.......................................

பாஸ்கரன்

//விடுங்க பாஸ்.
ரெண்டு டாக்டர்ஸ்-மெ (original & dublicate) வேஸ்ட்.//

சின்ன திருத்தம், ஒரு டாக்டரும் ஒரு மருத்துவரும்... ஹி ஹி......

..............................................

singamla366

//அரசியல் வாதின்ன மக்கள் ஓட்டு போட்டு
ஜெய்க்கனுனம் அது இல்ல, ஓசியா... கொடுத்தது முதலில் தெருவில் நின்னுஓட்டு வாங்கி ஜெய்த்து வா.......//

அதெப்பிடி அவங்கதான் 7 இடத்திலையும் வாங்கிகட்டீற்றாங்களே , மறுபடியும் தேர்தல்லையா ? அதுவும் நேரடியாவா?

.......................................

karthik


//எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நடிகர் மோகன திரை உலகில் இருந்து இல்லமால் ஆக்கியதில் முழுப்பங்கும் விஜய் குடும்பத்தையே சாரும் (மோகனுக்கு dupping குரல் குடுத்தவர் விஜயின் மாமாவான S. N. சுரேந்தர் அவருக்கும் மோகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே மோகனின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது)//

இந்த விடயம் எனக்கு படவேயில்லை, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

சினிமா விசிறி said...

சதீஷ் உங்க போராடும் குணம் என்னை மெய் சிலிர்க்க வைக்குது,ஆமா விஜயோட வசூல் படங்கள கொஞ்சம் சொல்லுங்க கில்லி,போக்கிரி, திருப்பாச்சி,திருமலை, சிவகாசி???.கடைசி ஏழு எட்டு வருடங்களில் விஜய் கொடுத்திருக்கும் அஞ்சு ஹிட்டுக்கே இந்த அலப்பறை என்றால்,ஸ்ஸப்பா.ஏங்க இதே கால கட்டத்தில அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் எல்லாம் ஹிட்டே கொடுக்கலியா பாஸ்.

வசூல் வசூல் என்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றிங்களே விஜய் படங்கள விட விக்ரம் சூர்யா படங்கள் ரஜினி படங்களுக்கு அடுத்து வசூல் லிஸ்ட்ல இருக்கு.இப்போ கூட சிவாஜி தசாவதாரத்துக்குப் பின் அயன் தாங்க.விஜயோட படங்களால யாரும் நட்டம் அடையுறதில்ல என்பது எஸ் எ சீ சொல்றது மாதிரி இருக்கு,உண்மைய பேசுங்கப்பா.சுய விளம்பரம் (அப்பாவின்) மூலம் விஜய் தன்னை ரஜினி ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணினாரு,இப்போ எல்லாரும் அவர வச்சு காமடி பண்றாங்க,மத்தபடி அடுத்த தலைமுறை நால்வரில் விஜய் உயர்ந்தவருமில்லை,குறைந்தவருமில்லை.

ரஜினிக்கு அப்புறம் விஜய் காமடி நல்ல பண்றாரு.ஆனால் விஜய் பண்ணியதை திரும்ப திரும்ப பண்ணி இப்போ சிரிப்பே வர்றதில்லை.தனுஷ் இப்போ காமடில கலக்குறாரு.சுராவும் வேட்டைக்காரன போலவே இருக்கும் என்று தெனாவெட்டா அவரே சொல்லிய பிறகும் இந்த சலம்பல் கூடாது.விஜய் படம் அப்பப்போ ஹிட்டாகும்.ஆனா எத்தினை ப்லாபு குடுத்திட்டு ஒரு ஹிட்டு குடுத்தாலும் இந்த ரசிகர்கள் பண்ற அலப்பறை.என்னமோ விஜய் மட்டும் தான் தமிழ் சினிமாவில ஹிட்டு குடுத்த மாதிரி.

அப்புறம் சதிஸ் எல்லாருக்கும் தொங்கி தொங்கி பதில் குடுத்தீங்களே.எனது முதல் கேள்விக்கு என்ன பதில்.அதுதாங்க விஜய் கூட ஜெய் ஆகாஷ ஒப்பிட்டா உங்களுக்கு வரும் அதே கோபம்,ரஜினி கூட விஜய ஒப்பிட்டா ரஜினி ரசிகர்களுக்கு வரும் என்பது லாஜிக் தானே/விஜய் நாலு மசாலா படமா கொடுத்தார்./

நாலு மசாலா படம்தான் ஹிட்டு குடுத்தார் பாஸே.

/viajy rajini pada title il நடிக்கலையே தலைவா?/

நான் சொன்னது படிக்காதவன்,பொல்லாதவன் என ரஜினி பட டைட்டிலுடன் வந்த தனுஷ் படங்களுடன் விஜயின் வில்லு அழகிய தமிழ் மகன் படங்கள் வாங்கிய அடி பற்றி.ரஜினி படங்களுடன் மற்றவர்கள் படமே ரிலிஸ் செய்வதில்லை.இவர் கூடவந்த நண்டு சிண்டுவிடமெல்லாம் அடி வாங்குவார்.ஆப்புறம் நானும் ரஜினி நானும் ரஜினின்னு கொட்டம் அடிப்பார்,ஐயோ டைப் பண்ணி கை வலிக்குது டாக்டர பார்க்கணும்,என்னது டாக்டரா.சந்தடி சாக்கில சதீஷ் டாக்டர் பட்டம் பற்றி பண்ண காமடி சூப்பர்,ஆமா அந்த பல்கலைகழகத்த மூடிட்டங்கலாமே?

sellamma said...

சதீசன்,,

///ஹஆகாஹா, ஏம்பா செல்லம்மா உனக்கு உன் பேர் தெரியாது உன் பேர் நான் சொல்லவா? எதுப்ப கேவலம் உண்மையை சொன்ன கேவலாமா அப்படி என்றால் அதை செய்ய நான் தயார்.///

பெயர்கள் இங்கு முக்கியமல்ல,, கருத்துக்கள்தான்,,,
நீங்க உண்மை என்ற பெயரில் காதில் பூ சுத்துவீர்கள் அதை நாங்க கேக்கனுமா??


உங்களின் கருத்துக்களின் படி உங்கள் டாக்டர் விஜய் கமல், சிவாஜியைக்கூட தாண்டி போய்விடுவார் போல உள்ளது...

இதெல்லாத்தையும் விடுங்க,,
"எப்பிடி",, சும்மா கலக்குறாரு,, அவரை சமாளிக்கிற வேலையை பாருங்க சதீஸ்,,

karthik said...

//இப்போது அஜித்தை வைத்து விஜயை உசுப்பேத்தி தனுசை வளர்க்கின்றார். ஆனால் அஜித்-விஜய் idaiye ஏற்பட்டிருக்கும் நட்பு இந்த முயற்ச்சிகளுக்கு பெரும் தடையாக இருக்கலாம்//

அஜித்தும் விஜயும் மப்புல கதைச்சதையா சொல்றீங்க நானும் அந்த நியூஸ் பார்த்தனான் அனால் விஜய பத்தியும் விஜய் ரசிகர்களா பத்தியும் நல்ல அறிஞ்சு வச்சிருக்கிற அஜித் கடைசிவரை விஜயின் நட்ப ஏற்றுகொள்ளமாடார் (அதே சந்திப்பில் யாரோ ஒரு நடிகரின் திடீர் வளர்ச்சிய பத்தி பேசினதாகவும் அந்த news ல இருந்துது. யாராக இருக்கும் சூர்யாவா இல்ல தனுஷா இல்ல ரவியா இல்ல சசிகுமரா )

SShathiesh-சதீஷ். said...

எப்பூடி, நீங்கள் சொன்னது போல சில விடயங்கள் அல்ல பல விடயங்கள் எனக்கு தெரியாது நக்கீரன் சம்பந்தமாக. அத்துடன் இங்கே நான் மட்டுமே கருத்து சொல்கின்றேன். ஒரு கை தட்டி சத்தம் வராது. முடிந்தால் விரைவில் எனக்கு தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு ஒரு பதிவிடுகின்றேன். அப்பாட விஜய்க்கு இவ்வளவு பெரிய எதிரிகளா. காச்சமரம் தான் கல்லடி படும். ஆதவன் பற்றி எழுதிய நண்பரே ஆதவன் வந்து படுத்தபின் தன என் அந்த பதிவு வந்தது. படம் பார்க்காமல் நான் எழுதவில்லை. அடுத்து கந்தசாமியை நான் நன்றாக இருக்கேன்றேன். வேட்டைக்காரனை பிடிக்கவில்ல யென தான் எழுதினேன் இதெல்லாம் படிக்கவில்லையா. நாளை அசல் நன்றாக இருந்தால் அதை நன்றாக சொல்ல தயங்கமாட்டேன். நான் சின்னப்பிழை தனமா கதைப்பதாக இருக்கலாம் ஆனால் இன்னொரு நடிகனை தாள் த்தி நாம் உயர்வது நல்லதல்ல என தெரிந்தவன். எப்பூடி நீங்க கலக்குங்க. நமக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் சந்ஹிப்போம். எல்லோருக்கும் நன்றி. விரைவில் என் பதிவை எதிரபாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரேயடியாக அங்கெ பதில் சொல்கின்றேன். வரட்டா.....

Unknown said...

முடிஞ்சுதா......... இல்லியா.....

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு, உங்கள் பதிவு கலக்கலாக இருக்க வாழ்த்துக்கள்.

.......................................

பேநா மூடி

//முடிஞ்சுதா......... இல்லியா.....//

முடிஞ்சிதென்று நினைக்கிறன்....

♥Manny♥ said...

இந்த போஸ்ட் விட, சதீஸ் பண்ண காமெடி தான் ஹை-லைட்டே :) ரிப்ளை எல்லாம் கலக்கிட்டீங்க பாஸ்... :)

அ.ஜீவதர்ஷன் said...

♥Manny mazhaikalam.blogspot.com♥

//இந்த போஸ்ட் விட, சதீஸ் பண்ண காமெடி தான் ஹை-லைட்டே :) ரிப்ளை எல்லாம் கலக்கிட்டீங்க பாஸ்... :)//

சரி சரி விடுங்க பாஸ், வருகைக்கு நன்றிங்க

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)