Tuesday, February 23, 2010

சுவாசித்த கிரிக்கட்-- தொடர் பதிவு

தொடர் பதிவிற்கு அளித்த எட்வினுக்கு(தமிழ் எட்வின் ) மீண்டும் நன்றியை கூறிக்கொண்டு எனது தொடர்பதிவை எழுதுகிறேன், இதுதான் முதல்தரம் தொடர்பதிவு எழுதுவது என்பதால் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். 

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

(1) பிடித்த போட்டிவகை : டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் (தெற்காசிய ஆடுகளங்கள் தவிர்ந்த )

(2) பிடிக்காத போட்டிவகை : டுவென்டி டுவென்டி , பார்த்தாலே எரிச்சலாக இருக்கும், கிரிக்கெட் போல இருக்காது எதோ ரெஸ்லிங் பார்த்த மாதிரி இருக்கும்.  

(3) பிடித்த அணி : முதலிடம் முன்னர் இலங்கை, இப்போ தென்னாபிரிக்கா, இரண்டாமிடம் எப்போதும் பாகிஸ்தான். மீண்டும் முதலிடம் இலங்கை ஆவதற்கு காத்திருக்கிறேன்.

(4) பிடிக்காத அணி : முன்னர் இந்தியா, இப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 'பிச்சைகாரன் சத்தி எடுத்தமாதிரி' எல்லா நாட்டு வீரர்களின் கலப்பு அணியாக விளையாடுவதால் அதை இங்கிலாந்துஎன்பதைவிட 'சர்வதேச அணி' என்றே அழைக்கலாம்.(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : எப்படி ஓரிருவரை சொல்வதென்று தெரியவில்லை இருந்தாலும் சுருக்கமாக - அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூரியா, மஹேலா ஜெயவர்த்தன, ரசல் ஆணல்ட், இஜாஸ் அஹமட், சாயிட் அன்வர், முகமட் யூசப், இன்சமாம் உல் ஹாக், கிராம் ஸ்மித், ஜக் கலிஸ், ஜஸ்டின் கெம்ப், ஹேசல் கிப்ஸ், எம்.எஸ். டோனி, மைக்கல் பெவன், மார்க் வோ, ஸ்டீவ் வோ, டேமியன் மார்டின், பிறையின் லாரா, கிரிஸ் கெயில், ஹால் கூப்பர், நாதன் அஸ்டில், கிறிஸ் கெயின்ஸ், அலிஸ்டர் கம்பல், கிரான் பிளவர், மைக்கல் வோகன் .... இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்களது ஷோட்கள் பற்றியும் எழுதுவதென்றால் இந்த பதிவு போதாது.

இருந்தாலும் அரவிந்த, சனத் , மஹேலா போல யாரையும் வெறித்தனமாக ரசித்ததில்லை.

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் : தனிப்பட்ட காரணங்களுக்காக சங்கக்காரா, மற்றும் கெவின் பீற்றசன், அன்று பிளின்டோப், மைக்கல் ஹசி

(7) பிடித்த விக்கட் காப்பாளர்  : எப்போதும் களுவித்தாரண

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : கமரன் அக்மல் (விக்கட் காப்பு மட்டும் , துடுப்பாட்டம் அல்ல)

(9) பிடித்த களத்தடுப்பாளர் : ரொஷான் மஹாநாம , என்னவொரு கவர்ச்சிகரமான களத்தடுப்பாளர், இப்போது நினைத்தாலும் பசுமையாக உள்ளது. இஜாஸ், கிப்ஸ், பொண்டிங், உப்பிள் சந்தன போன்றோரும் பிடிக்கும்.

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : நுவான் சொய்சா, சஹீர் கான், முகம்மது யூசப், அப்துல் ரசாக்.


(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் : வாசிம் அகரம், வசீமை பற்றி என்னவென்று சொல்வது , ஆரம்பகால் fast run-up வசீமாக இருக்கட்டும் இறுதிக்கால slow run-up arm fast வசீமாக இருக்கட்டும் அந்த swing control ஐ என்னவென்று சொல்வது? அந்த நேர்த்தியான yorker பந்துகளை என்ன வென்று சொல்வது? ரிவேர்ஸ் ஸ்விங் மூலம் பெரும் தலைகளது இலக்குகளை (அதிகமாக lbw ) அனாவசியமாக அள்ளியதை எப்படி சொல்வது ? தனது சமயோகித புத்தியை(different variation ) பயன்படுத்தி விக்க்கட்டுகளை கொய்த அழகை என்னவென்று சொல்வது? வசீம் வசீம்தான்.

வசீம் அக்ரமளவிற்கு ரசித்த இன்னொருவர் சமிந்த வாஸ் , வேகம் தவிர வசீமிடமிருக்கும் அனைத்து திறமைகளும் உள்ள இன்னொருவர், சாஜா ஆடுகளங்களிலும் , கொழும்பு RPS இலும் இரவு நேரங்களில் வாஸின் கை 'கதை பேசியதை' எப்படி மறக்க முடியும்? எனது பார்வையில் வாஸ் இன்னுமொரு வசீம் அக்ரம்தான். இவர்கள் தவிர வக்கார் யூனிஸ், சொஹைப் அக்தர், ஹீத் ஸ்ட்ரீக், டரின் கப் (இவரது Bowling Action ), அன்றே நெல், ஷோன் போலக் ,டேல் ஸ்டெயின் , டில்ஹார பெர்னாண்டோ, இயன் ஹாவி, கிறிஸ் கெயின்ஸ் , டரில் டபி போன்றோரையும் பிடிக்கும்.

(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் :  ஸ்டுவட் ப்ரோட் , வெட்டிப் பந்தா பேர்வழி, 'அந்த ஓவரோட' அடங்குவாரென்று பார்த்தால் முடியல....

(13) பிடித்த ஆப் ஸ்பின்னர் :  இதிலென்ன சந்தேகம் முரளிதான் , இருந்தாலும் சக்லின் முஷ்டாக் , குமார் தர்மசேன என்போரையும் நன்கு பிடிக்கும்.

(14) பிடிக்காத ஆப் ஸ்பின்னர் : ஹர்பஜன் சிங், இதற்கு காரணம் தேவைப்படவில்லை

(15) பிடித்த லெக் ஸ்பின்னர் : நிச்சயமாக ஷேன் வோன் இல்லை, கிராண்ட் பிளவர் மற்றும் விட்டோரி பிடிக்கும்.

(16) பிடிக்காத லெக் ஸ்பின்னர் : சுனில் ஜோசி மற்றும் அஸ்லி ஜயில்ஸ்

(17) பிடித்த ஆடுகளங்கள் :  தென்னாபிரிக்காவின் டேர்பன், வோண்ட்ரூஸ் (பச்சை ஆடுகளம் ), மேற்கிந்தியாவின் ஜமேக்கா, அரபு எமிரேட்சின் சாஜா, இங்கிலாந்தின் லீட்ஸ், எட்ஜ்பாச்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஹோபாட் (அற்புதமான இயற்கை அழகு ) , நியூசிலாந்தின் வெலிங்டன் , ஜிம்பாவேவின் ஹராரே ,இலங்கையின் RPS

(18) பிடிக்காத ஆடுகளங்கள் :  இலங்கையின் RPS தவிர்ந்த தெற்காசிய ஆடுகளங்கள் அனைத்தும், நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் ஒருநாள் போட்டிகளுக்காக மாற்றியமைக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் சாதகமான எந்த ஆடுகளமும்.(19) பிடித்த சகலதுறை வீரர்  : கிறிஸ் கெயின்ஸ், நான் வெறித்தனமாக ரசித்த இன்னுமொரு வீரர், ஆனால் அடிக்கடி குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க செல்வதால் இவரை மைதானத்தில் பார்ப்பது அரிது.

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்று பிளின்டோப் , தான் போடும் சப்பை பந்துக்கு தாமாக அடித்து ஆட்டமிழப்பவர்களை கூட தனது திறமையால் ஆட்டமிழக்க செய்ததுபோல் காட்டிக்கொள்ளுமிவர் தான் நல்ல பந்திற்கு ஆட்டமிழந்தால் கூட தனது தவறால்தான் ஆட்டமிழந்தமாதிரி ஒரு ரியாக்சன் குடுப்பார் பாருங்க, வாயில கெட்ட வார்த்தைதான் வரும்.

 
(21)பிடித்த அணித் தலைவர் :  2007 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் இலங்கையை இறுதிப்போட்டிவரை தனது தலமைத்துவத்தாலேயே கொண்டுசென்றார் என்பது ஒருபுறம் இருக்க மகேலாவின் தலைமையின் சிறப்பிற்கு சிறு உதாரணம், 2007 உலக கோப்பையில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் பத்து ஓவர்களில் விக்கட்டுகளை இழந்து அழுத்தத்துடன் ஆடியவேலையில் இரண்டாவது power play யை எடுக்காது (வேறு யாரும் இப்படி செய்ததில்லை ) ஸ்பின்னேர்ஸ் இடம் பந்தை வீசக்கொடுத்து மேலும் இரண்டு விக்கட்டுகளை சாய்த்ததை பாராட்டாத வர்னணையாளர்களே இல்லை. அதுதவிர களத்தடுப்பு வியூகங்களாகட்டும் , பந்து பரிமாற்றங்களை வழங்குவதாகட்டும் மகேலா தனது முத்திரையை பத்திததை நான் சொல்ல வேண்டியதில்லை. அஜே ஜடேயா, வசீம் அகரம், கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றோரே சொல்லியிருக்கிறார்கள்

மஹேல தவிர அர்ஜுனா,சனத், டோனி, ஸ்மித், வசீம், கான்சி குரோனியே போன்றோரையும் பிடிக்கும்

(22) பிடிக்காத அணித்தலைவர் : யூனிஸ் கான் , இவரது அதிமேதாவித்தனமான செயற்பாடே இன்றைய பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.மற்றும் சைபுல் ஹசன், அதிக மண்டைக்கனம்

(23) கனவான் வீரர்கள் : சச்சின்,  முரளி, லாரா, அரவிந்த, சனத்....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

(24) பிடித்த வர்ணனையாளர் : எப்போதும் டோனி கிரேக், இலங்கை சுழியத்தில் இருந்த காலம் முதல் உச்சத்தில் இருந்த காலம்வரை இலங்கையின் சார்பில் வர்ணனை செய்த வேற்று நாட்டுக்காரரான இவருக்கு ஒரு சலூட் , இவரது குரலில் little kalu , master blaster போன்ற சொற்கள் என்றும் மறக்க முடியாதவை. இவரைத்தவிர ரவி சாஸ்திரி, ரமேஷ் ராஜா, அமீர் சொஹெயில் 

(25)  பிடிக்காத வர்ணனையாளர் : கவாஸ்கர், சிவராம கிருஷ்ணன் , ஹர்ஷா போக்லே, ஜெப்ரி போய்கொட், இயன் சப்பல், ஹென்ஸ்மன் , இவர்கள் முழுக்க முழுக்க பக்க சார்பானவர்கள்.


(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் :  டேவ் வட்மோர் , காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன் , டொம் மூடியும், பொப் வூல்மரும் பிடிக்கும்.

(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல், மோசமான ஆசாமி

(28) பிடித்த போட்டி :  முன்னர் இலங்கை விளையாடும் எந்த போட்டியும் , இப்போ இந்தியா- இலங்கை, இந்தியா- பாகிஸ்தான், ஆஸ்திரேலியா -தென்னாபிரிக்கா, இந்தியா- தென்னாபிரிக்கா, இந்தியா- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து-தென்னாபிரிக்கா

(29) பிடித்த வளரும் வீரர் : உமர் அக்மல், நான் அண்மையில் வியந்த இளம் வீரர், இவர்தவிர முகமட் அமீர் மற்றும் தென்னாபிரிக்காவின் வோனே பானெல்

(30) பிடிக்காத வளரும் வீரர் : அப்படி யாரும் இல்லை.


தொடர் பதிவெழுத நான் அழைப்பது

சத்தீஸ் (சத்தீசின் சரவெடி)

கார்த்திக் (ரசிகன் )

19 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

விளையாட்டு ,சினிமா ,அரசியல் ஒரு சூப்பர் காக்டெயில் ஜ்னனரஞ்சக வலைப்பதிவு கலக்கு நண்பா

Paleo God said...

சூப்பர்..:))

வரதராஜலு .பூ said...

நல்ல ரசனை:-)

பல தேர்வுகள் என்னுடையதுடன் ஒத்துபோகாவிட்டாலும்
http://varadaradj.blogspot.com

SShathiesh-சதீஷ். said...

ஏனையா என் மேல் இவ்வளவு கோபம் என் பெயரை தாருமாறாக்கி இருக்கின்றீர்கள் சதீஷ் தான் என் பெயர். இருந்தாலும் பரவாயில்லை. என்னையும் யாரும் அழைக்கமாட்டார்களா என நான் எண்ணிய ஒரு பதிவு இது. அழைத்ததுக்கு நன்றி விரைவில் எழுதுகின்றேன். பல இடங்கல் நான் உங்களுடன் ஒத்துப்போகமாட்டேன் என நினைக்கின்றேன். பார்ப்போம். என் பதிவில் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன் .

Unknown said...

nadaththungka

Unknown said...

அந்த ஓவர் எண்டு யூவி அடித்த அடியதானே

டக்கால்டி said...

V.A.S.சங்கர்...அதையே தாங்க சொல்லுறாரு..

karthik said...

நான் உங்கள் பதிவுடன் 95% ஒத்து போகிறேன். தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள். நேரம் கிடக்கும் பொது கட்டாயம் எழுதுவேன்

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//விளையாட்டு ,சினிமா ,அரசியல் ஒரு சூப்பர் காக்டெயில் ஜ்னனரஞ்சக வலைப்பதிவு கலக்கு நண்பா//

நன்றி

..................................

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

//சூப்பர்..:))//

நன்றி தல


.......................................

வரதராஜலு .பூ

//நல்ல ரசனை:-)

பல தேர்வுகள் என்னுடையதுடன் ஒத்துபோகாவிட்டாலும்
http://varadaradj.blogspot.com//

பல என்ன ஒன்றுமே ஒத்துப் போகலையே, ஹி ஹி....


.......................................

SShathiesh

//ஏனையா என் மேல் இவ்வளவு கோபம் என் பெயரை தாருமாறாக்கி இருக்கின்றீர்கள் சதீஷ் தான் என் பெயர். இருந்தாலும் பரவாயில்லை. //

எனக்கு சதீஸ் என்றால் sathees என்றுதான் தெரியும் ,உங்கள் பெயரான Shathiesh இல் உள்ள ie தான் குழப்பமாகிப்போய்விட்டது , sorry.

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//nadaththungka//

ok ok :-)


.......................................

V.A.S.SANGAR

//அந்த ஓவர் எண்டு யூவி அடித்த அடியதானே//

அதேதான்

..................................

டக்கால்டி

//V.A.S.சங்கர்...அதையே தாங்க சொல்லுறாரு..//

உங்க புரிதலுக்கு நன்றி :-)


...................................

karthik

//நான் உங்கள் பதிவுடன் 95% ஒத்து போகிறேன். தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள். நேரம் கிடக்கும் பொது கட்டாயம் எழுதுவேன்//

ஒத்துப்போகாத 5 % ஐ எதிர்பார்த்தது காத்திருக்கிறேன்:-)

யோ வொய்ஸ் (யோகா) said...

நானும் இத்தொடர் பதிவெழுதிவிட்டேன், ஆனால் உங்கள் பதிவை பார்த்த பின்னர் விடுபட்ட சில வீரர்களின் பெயர் நினைவுக்கு வந்துள்ளது..

நல்ல ரசனை உங்களது

அ.ஜீவதர்ஷன் said...

யோ வொய்ஸ் (யோகா)

//நானும் இத்தொடர் பதிவெழுதிவிட்டேன், ஆனால் உங்கள் பதிவை பார்த்த பின்னர் விடுபட்ட சில வீரர்களின் பெயர் நினைவுக்கு வந்துள்ளது..

நல்ல ரசனை உங்களது//


நன்றி, உங்களது பதிவை பார்க்கிறேன்.

எட்வின் said...

அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அன்பரே. வாசிம் அக்ரம் உங்களையும் பாதித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அற்புதமான பந்துவீச்சாளர்.

ஷேன் வார்ன் உங்களுக்கு பிடிக்காமல் போனது மைதானத்திற்கு அப்பால் செய்த செயல்களினாலா?!

சசிகுமார் said...

நல்ல பதிவு , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அ.ஜீவதர்ஷன் said...

எட்வின் //

//ஷேன் வார்ன் உங்களுக்கு பிடிக்காமல் போனது மைதானத்திற்கு அப்பால் செய்த செயல்களினாலா?!//

தனிப்பாட்ட காரணமென்றில்லை, அர்ஜுனவுடன் பிரச்சினை, இலங்கை விமர்சிப்பது என்று வோன் இருந்தாலும் எனக்கு வோனில் வெறுப்பு வரவில்லை, ஆனால் முரளியுடன் மைதானத்திலும் , வெளியிலும் நண்பனாக பழகிவிட்டு தனது ஓய்வின் பின்னர் முரளி பந்தை முறைதவறி வீசுகயார் (எறிகிறார்) என்று எப்போது புகார் கூறினாரோ அப்போதே வோன் தனது மதிப்பை முற்றாக இழந்துவிட்டார்.

......................................

சசிகுமார்

//நல்ல பதிவு , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி

Unknown said...

அண்ணே, பிடித்த துடுப்பாட்டக்காரர்களில் சச்சினைக் காணவில்லையே? அவரைப் பிடிக்காதா?

அப்புறம் சங்கக்கராவை எதற்குப் பிடிக்காது? உங்களுக்குப் பிடித்த மஹேலவைத் தாண்டி அணித்தலைவர் பதவிக்கு வந்தமைக்கா?

எனக்கு மஹேலாவைத் தான் பிடிக்காது. லாகூர் துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டியினால.

அ.ஜீவதர்ஷன் said...

முகிலன்

//அண்ணே, பிடித்த துடுப்பாட்டக்காரர்களில் சச்சினைக் காணவில்லையே? அவரைப் பிடிக்காதா?//


பிடிக்காதவர் லிஸ்டிலும் அவர் பெயர் இல்லைதானே ? சச்சினை கட்டாயம் பிடிக்க வேண்டும் எண்டு சட்டம் ஒன்றும் இல்லையே? சச்சின் சிறந்த வீரர் ஆனால்சச்சின் எனக்கு பிடித்த வீரரும் இல்லை பிடிக்காத வீரரும் இல்லை.

//அப்புறம் சங்கக்கராவை எதற்குப் பிடிக்காது? உங்களுக்குப் பிடித்த மஹேலவைத் தாண்டி அணித்தலைவர் பதவிக்கு வந்தமைக்கா?//

'தாண்டி' என்ற சொல் தவறானது, மகேலாவின் விலகலின் பின்னர்தான் சங்ககார தலைவரானார்.உண்மையான காரணம் இதற்கு முதல் பதிவில் விளக்கமாக உள்ளது, இதை பாருங்கள், http://eppoodi.blogspot.com/2010/02/blog-post_22.html

//எனக்கு மஹேலாவைத் தான் பிடிக்காது. லாகூர் துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டியினால.//

நீங்கள் சொல்வது சரி ,ஆனால் 20 /20 இறுதிப்போட்டி தோல்வியின் பின்னர் சங்ககாரா பரிசளிப்பில் சிங்களத்தில் பேசியதிலும் பார்க்கவா (முதலாவது இலங்கை தலைவர்) மஹேலா கூறியது மோசமாக இருந்தது?

Unknown said...

\\\5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : எப்படி ஓரிருவரை சொல்வதென்று தெரியவில்லை இருந்தாலும் சுருக்கமாக - அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூரியா, மஹேலா ஜெயவர்த்தன, ரசல் ஆணல்ட், இஜாஸ் அஹமட், சாயிட் அன்வர், முகமட் யூசப், இன்சமாம் உல் ஹாக், கிராம் ஸ்மித், ஜக் கலிஸ், ஜஸ்டின் கெம்ப், ஹேசல் கிப்ஸ், எம்.எஸ். டோனி, மைக்கல் பெவன், மார்க் வோ, ஸ்டீவ் வோ, டேமியன் மார்டின், பிறையின் லாரா, கிரிஸ் கெயில், ஹால் கூப்பர், நாதன் அஸ்டில், கிறிஸ் கெயின்ஸ், அலிஸ்டர் கம்பல், கிரான் பிளவர், மைக்கல் வோகன் .... இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்களது ஷோட்கள் பற்றியும் எழுதுவதென்றால் இந்த பதிவு போதாது.

இருந்தாலும் அரவிந்த, சனத் , மஹேலா போல யாரையும் வெறித்தனமாக ரசித்ததில்லை.\\\\

உங்கள் பதிவில் இந்தியர்களே பிடிக்காது எனபது போலே எழுதி உள்ளிரிர்கள் பரவாயில்லை அதற்காக இங்கு யாரும் வருத்தபடவில்லை ஆனால் கிரிக்கெட் எனும் வரும்போது தான் அது இடிகிறது நீங்கள் மேலே குறிப்பிட்ட சில வீரர்கள் பற்றி மாற்று கருத்து என்னக்கு உண்டு ரசல் அர்னோல்ட் என்ற வீரர் என்ன சாதித்தார் அல்லது அவருடைய game style பார்க்ககுடியதா? அடுத்தது ஜஸ்டின் கேம்ப் தென் ஆபிரிக்கா வீரர் இவரின் game style என்ன வென்று சொல்லுவது இஜாஸ் அகமத் கொடுமையிலும் கொடுமை இவரின் ஆட்டம் அடுத்தது சனத் ஜெயசூர்யா இவர் அடுத்த அழுக்கான ஆட்டத்தின் முலம் பிரபலமானார் என்ன ஓட்டங்கள் வரும் அதான் midoff ஆடுனா mid on னுக்கு போகும் அந்த அளவுக்கு நேர்த்தியான ஆட்டக்காரர் :)

அ.ஜீவதர்ஷன் said...

siva

//உங்கள் பதிவில் இந்தியர்களே பிடிக்காது எனபது போலே எழுதி உள்ளிரிர்கள் பரவாயில்லை அதற்காக இங்கு யாரும் வருத்தபடவில்லை ஆனால் கிரிக்கெட் எனும் வரும்போது தான் அது இடிகிறது நீங்கள் மேலே குறிப்பிட்ட சில வீரர்கள் பற்றி மாற்று கருத்து என்னக்கு உண்டு ரசல் அர்னோல்ட் என்ற வீரர் என்ன சாதித்தார் அல்லது அவருடைய game style பார்க்ககுடியதா? அடுத்தது ஜஸ்டின் கேம்ப் தென் ஆபிரிக்கா வீரர் இவரின் game style என்ன வென்று சொல்லுவது இஜாஸ் அகமத் கொடுமையிலும் கொடுமை இவரின் ஆட்டம் அடுத்தது சனத் ஜெயசூர்யா இவர் அடுத்த அழுக்கான ஆட்டத்தின் முலம் பிரபலமானார் என்ன ஓட்டங்கள் வரும் அதான் midoff ஆடுனா mid on னுக்கு போகும் அந்த அளவுக்கு நேர்த்தியான ஆட்டக்காரர் :)//

இது சிறந்த வீரர்களுக்கான தெரிவல்ல, எனக்கு பிட்த்தமான ஆட்டக்காரர்கள், ஆர்னல்ட்டை பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுந்தான், ஜெயசூரியாவின் காலத்தில் இலங்கையின் மேட்ச் வின்னர் மற்றும் மேட்ச் பினிஷர் இவர்தான் உங்களுக்கு தெரியாவிட்டால் cricinfo வை புரட்டி பாருங்க. மிடோபிக்க அடிக்க மிடோனுக்க போகிறமாதிரி அடிச்சு யாராவது 20 ,000 ரன்ஸ் அடிக்க முடியுமா? உங்களுக்கு கிரிக்க்றே தெரியாதென்று நினைக்க போறாங்க ஜாக்கிரதை. அப்புறம் இஜாஸ் , கெம்ப் பற்றி பேசிறீங்களே டோனி,ஷேவாக் என்ன புக் ஸ்டைலா விளையாடுறார்கள் ?

இஜாஸ், சனத் பற்றி வெங்கடேஷ் பிரசாத்திடம் கேளுங்க விபரமா சொல்லுவாரு.

மீண்டும் சொல்லிறன் இவர்கள் அனைவரும் எனக்கு பிடித்த வீரர்கள், இந்தியாவில் எனக்கு டோனி தவிர யாரையும் பிடிக்காது, பிடிக்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லை:-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)