Monday, February 15, 2010

இன்றைய டிவி நிகழ்சிகளில் , அஜித்தின் பேச்சு இல்லை?கலைஞருக்கு சென்ற வாரம் இடம்பெற்ற பாராட்டு விழாவில் அஜித் பேசிய பேச்சு ஒரு பிரிவினரால் வரவேற்க்கப்பட்ட போதும் இன்னொரு பிரிவினரை எரிச்சலுக்கு உள்ளாகி இருப்பது உண்மை. இவர்களில் முக்கியமானவர்கள் 'நடிகர்சங்க ரவுடிகள்' மற்றும் 'கலைஞர்' தரப்பினர் . நடிகர் சங்கத்தினருக்கு தங்களை நாறடித்தது கோபமாக இருப்பதுபோல கலைஞருக்கு எடுத்த விழா இப்படி புஸ்வானமாக போனதற்கு அஜித்தின் பேச்சு முக்கிய காரணம் என கலைஞர்' தரப்பினரும் கடுப்பில் இருப்பார்கள் என எதிர்பார்க்க பட்டது. அப்பவே அஜித்தின் பேச்சு எடிட் செய்யப் படலாம் என்ற பேச்சுக்கள் உலாவின. இது கிட்டத்தட்ட சரி போலவே இருக்கிறது, இன்று கலைஞர் தொலைக்காட்சியில் முதல்முறையாக இந்த விழாவினை ஒளிபரப்புவதற்கு விளம்பரங்கள் ஒளிபரப்ப தொடங்கினர்.

வழமையான பில்டப்புடன் திரையுலக சூரியனுக்கு நன்றி சொல்லும் விழா என கூறப்படும் இந்த விழாவிற்கு அமிதாப்பச்சன் தலைமையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா,விக்ரம் என்போர் பங்குபற்றியதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விழாவில் முக்கிய பிரச்சினையை கிளப்பி பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்று விழாவின் போக்கையே மாற்றிய அஜித்தின் பெயர் இந்த லிஸ்டில் இல்லாதது அஜித்தின் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிடும் என்ற சந்தேகத்தை உறுதி செய்வதுபோல் உள்ளது. இப்போது ரஜினியின் பேச்சாவதுமுழுமையாக ஒளிபரப்பபடுமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

அடுத்து சண் டிவியின் இன்ப அதிர்ச்சியாக இன்று 'அசல்' டாப் 10 படங்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்ததை குறிப்பிட்டே ஆகவேண்டும். அஜித் படங்கள் முதலிடத்தை பிடிப்பது சன்னில் அபூர்வம். அடுத்த வாரம் தயாநிதிமாறனின் வெளியீட்டில் வெளிவந்த 'தீராத விளையாட்டுபிள்ளை' தரவரிசையில் சேர்த்துக்கொள்ளப்படும்வரை ஒருவாரமாவது அசல் முதலிடத்தில் இருக்கும். அதேபோல அசலுக்கு திரைவிமர்சனமும் சற்று அதிகமாகவே நன்றாக சொல்லப்பட்டது, இவற்றையெல்லாம் பார்க்கும்போது அஜித்மீது சன்னுக்கு திடீர்பாசம் வந்துவிட்டதாக எண்ணலாம்,உண்மை என்னவெனின் அசலின் ஒளிபரப்பு உரிமையை சண் வாங்கியதே இந்த மாற்றத்திற்கு காரணம்.ஏதாவது ஒருவகையில் சண் அஜித் படத்திற்கு உதவுவது இதுதான் முதல்தடவை, இருந்தாலும் 'அசலின்' வெற்றி நாளைமறுதின 'பாக்ஸ் ஆபீஸ்' நிலவரத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.பணத்தின் மீது படுத்திருக்கும் சண் நெர்வோர்க் கடந்த சில மாதங்களாக நடாத்திவரும் டீலா, நோ டீலா நிகழ்ச்சியை கட்டாயமாக பார்க்கவேண்டிய சூழ்நிலை, அதில் நிகழ்ச்சியை வழங்கும் அந்த அரைவேக்காட்டுத் தம்பியின் கொடுமையை தாங்க முடியவில்லை. எதோ மூளையை அல்லது உடற்பலத்தை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டைப்போல "சூப்பரா விளையாடுறீங்க" , "நல்லா பாத்து விளையாடுங்கோ" , "சின்ன எமவ்ண்டா எடுங்க" என்று அந்தாளு பண்ணுற மோட்டுத்தனமான கூத்தை தாங்கமுடியல. சண் டிவியால ஒரு நல்ல நிகழ்ச்சியை கூட தரமுடியாதா? எந்த நிகழ்ச்சி செய்தாலும் பணத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை நிகழ்ச்சியின் தரத்திற்கு சண் கொடுப்பதில்லை.அடுத்து கலைஞர் டிவியின் புதிய 'மானாட மயிலாட ' தொடர் நடனம் (நாடகம்) ஆரம்பிக்க உள்ளது, அடுத்த ஆறு மாதத்திற்கு புதிய நடனமாடும் போட்டியாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்துகிறார்களோ இல்லையோ கலாவும் குஷ்புவும் தங்களது நடிப்பு திறனை வளர்த்துக்கொள்ள போகிறார்கள். இதே நேரம் விஜயில் ஜோடி நோ (? ) ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே பிரபலமான போட்டியாளர்கள்தான் அதிகளவு பங்கு பற்றுகிறார்கள்,சண் டிவியில ஆடவரெல்லாம் ஆடவரலாம் என்றொரு நடன போட்டியென சனி, ஞாயிறென்ராலே ஒரே கூத்துத்தான். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு காக்கா வலிப்பு வராவிட்டால் சரி, ஆகமொத்தத்தில் கூத்து ஆரம்பிச்சிடுத்துடோய்.....

10 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

அஜித்தின் பேச்சு நியாயமானது. பிடிக்காததை கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. விழாவின் பின் கருணாநிதியின் பேச்சு வெறுப்பின் உச்சம்(இன்று போற்றுவோர் நாளை தூற்றுவர் என்ற ரீதியில் இருந்ததை தான் சொல்கின்றேன்.) படங்களில் நான் அஜித் ரசிகன் இல்லாவிட்டாலும் அந்த பேச்சு என்னை அஜித்தை ரசிக்க வைத்தது. நீங்கள் சொன்னது போல அஜித் பேச்சு இடம்பெறாமல் போகலாம். ஆனால் ரஜினியுடன் மோதமாட்டார்கள் என நம்புகின்றேன்.

Kitcha said...

Hai friend..
on Friday(12-02-10) evening while i saw the first advertise about the Kalaingar Program... in that adv Ajith was in the List. after some time in the same advertisement Ajith Name was removed...

karthik said...

Chennai Box Office

Film: Asal
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 137
Average Theatre Occupancy over this weekend: 85%
Collection over this weekend in Chennai: Rs. 37,11,750
Total collections in Chennai: Rs.1.56 Crore

Verdict: Good Opening

Paarvai said...

I have seen poeple opened Blog accounts just to post in your Blog. The truth always hurt, but they are not going to learn.

Karthik//
With 85% theater occupancy and number of shows 137 Asal made 1.56 crore which makes average 29,639.37. Hunter made with 350 shows 25,452.83.

So are you trying to say theater occupancy for hunter is less than 50%.

Nothing to say... Everyone come up with their on calculation now days. In Toronto Asal was running houseful last week which is very rare after Sivaji, Dasavatharam, and Billa.

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

.....................................

@ Kitcha

@ karthik

@ Paarvai


தயவு செய்து தமிழில செப்புங்க, இந்த எழவெடுத்த இங்கிலீச விளங்கிறதுக்க ! யப்பா சாமி என்னால முடியல :-))) எது எப்படியோ உங்கள் வரவுக்கு நன்றி.

chosenone said...

/// நிகழ்ச்சியை வழங்கும் அந்த அரைவேக்காட்டுத் தம்பியின் கொடுமையை தாங்க முடியவில்லை. எதோ மூளையை அல்லது உடற்பலத்தை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டைப்போல "சூப்பரா விளையாடுறீங்க" , "நல்லா பாத்து விளையாடுங்கோ" , "சின்ன எமவ்ண்டா எடுங்க" என்று அந்தாளு பண்ணுற மோட்டுத்தனமான கூத்தை தாங்கமுடியல.///

why blood ? same blood ?

chosenone said...

ஆபரேஷன் ஓகே ! ஆனால் நாளாக நாளாக பேஷன்ட்டுக்கு சைடு எபக்ட்ஸ் கூடும் என்று நம்புறேன் . wait and see the real show of our tamil
"cine'tics"

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//why blood ? same blood ?//

:-)

//ஆபரேஷன் ஓகே ! ஆனால் நாளாக நாளாக பேஷன்ட்டுக்கு சைடு எபக்ட்ஸ் கூடும் என்று நம்புறேன்//


பொறுத்திருந்து பார்ப்போம்...

Ravidayalkumar said...

இது என் கருத்து:"

அரசியல், அரசியல் வாதி, மேடை பேச்சு , idhellam paarthale kovam dhan varudhu,
andha place vittu seekiram move panniduven.

Avargal naattu makkaluku nalladhu seivadhai patri yosipadhai vida, paarattu
vizhakalukke mukkiyathuvam tharuginranar.

Maadha madham thavaraamal paarattu vizha mattum nadakkiradhu.
Avargalai patri avargale pugalndhu kolvadhil appadi avargal ennadhan seidhaargal?
Makkalin varipanathil dhaane avargal vaalgiraargal, naattin nalanukkaga thangal
sondha panathiya selavidugiraargal.
Idharku edhuku paarattu vizha!

Central Government, Middle class payan paduthum Petrol, gas, parupu, sarkarai etc...
Vari vidhikirargal, State Government edhirpu therivipadhu pol therivikiradhu,
kaaranam ketkiradhu. Then avargalukul pesi, thavirka mudiyadha
kaaranathal vilai vuyartha padugiradhu endru arivikkai vidugiraargal.

World No 1 Rich Country India!

Ulagileye adhigamaaga sambaadhikum arasiyal vaadhigal

Maximum Black money

Foreign plyers kaaga kodi kanakil selavu seiyya thayaraga irukum BCCI

Americavai vida adhigamaga petrolukaaga selavidum makkal

Uk la oru bun rate rs300, bayapidathinga.
avanga money madhipu padi £4

Uk la minimum salary £2000
India la minimum salary Rs2000

Aaana oru bunnoda rate Rs6

Naamadhan adiga selavu panrom.
So we are the rich person in the world.

Think about it!
Politicians ready to increase our tax, but no one ready to decrease their
salary.

Kodi kanakkil sambadhikum oru vannal therukodiyil irukum oruvanai patri eppadi
yosikka mudiyum!

Makkaluku nalladhu seiyya varubavargalku sambalam edharku?
Naattin nilamai ippadi irukka pala aayiram kodi selavu seidhu naadalu mandram katta vendumaa?
Indha kelviyai edhir katchi ketkaamal, rest edukkum andha katchi edharku?


Evan oruvan enaku rs 2000 mattum podhum, endha oru arasu salugai galum vendam endru vote ketka
varugiraano avanuku ungal vote pottaldhan, Naadu nalamaga irukum.

Solution to Reduce Tax:

Sim card freeyaga kidaikiradhu, water kaasu koduthu vaangugirom.
Thevaikaga payan paduthuvor, aadambarathirkaaga paya paduthuvor endru pirithu paarka vendum.
Oru naduthara kudumbam oru maadhathirku payanpaduthum alavai kanakida vendum, adharku mel payan
paduthinaal adharku vari vidhithaal naadu sirapaaga irukum.

Anaithu makkalum sugamaaga vazha mudiyum.

குடிமகன்
Ravi Dayal Kumar

அ.ஜீவதர்ஷன் said...

Ravidayalkumar

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படுமென்று நான் நினைக்கவில்லை, சாத்தியப்பட்டால் மகிழ்ச்சி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)