Friday, February 26, 2010

தாண்டிரா ராமா தாண்டிரா...

அஜித்தும் ரஜினியும் எமது குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் மீதிருந்த மனக்கசப்பு தீர்ந்துவிட்டதென்று பெப்சி சங்கத்தலைவர் mr டுபாக்கூர் குகநாதன் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே குடும்பத்துக்குள் கலககம் உருவாகிடக் கூடாதென்றும் திரையுலகின் கட்டுபாடு காத்திட வேண்டும் என்றும் கலைஞர் கேட்டதற்கிணக்கவே அஜித்மீதும் ரஜினிமீதும் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கிவிட்டதாக இவர் கூறியள்ளார்.இந்த பெப்சி சங்கத்துக்கு சொந்தமா மூளையே இக்ல்லையா? கலைஞர் சொல்லுமட்டும் இவர்களுக்கு திரையுலகினர் ஒரே குடும்பம் என்று தெரியாமலா இருந்தது? அல்லது போராட்டத்தை ஆரம்பிக்க சொன்னவரே முடித்துவைக்க சொல்லோட்டும் என்று காத்திருந்தனரா ? சரி அப்படியே எடுத்துகொண்டாலும் இந்த பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது முதல்வர் என்ன கோமாவிலையா கிடந்தாரு? இப்போ அஜித்தோ ரஜினியோ இந்த சங்கங்களின் காமடியை கண்டு கொள்ளாமல் விட்டவுடன் 'குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத' கதையாய் தோல்வியில் முடிந்த போராட்டத்தை கலைஞர் முடித்து வைத்ததாக கூறுகின்றனர். சில நேரங்களில் குழப்பமடைய இருந்த சினிமா கலைஞர்களின் உறவை மீண்டும் புதுப்பித்ததற்காக 'உறவை காத்த தலைவனுக்கு' என தலைப்பிட்டு பாராட்டுவிழா ஒழுங்கு செய்து அதற்கு வரும்படி நடிகர் , நடிகையரை கட்டாயப் படுத்தினாலும் ஆச்சரிய மில்லை.இந்த அரைவேக்காடுகளின் குணம் தெரிந்துதானோ என்னமோ ரஜினி இந்த விடயத்தை பற்றி கொஞ்சமும் அலட்டிக்காமல் கூலாக சூட்டிங்கிற்கு கிளம்பியிருப்பார் போலுள்ளது, ரஜினி தனக்கு இருக்கும் தீர்க்கதரிசனம் எப்பேற்பட்டதென்பதை மீண்டுமொருதடவை நிரூபித்து காட்டிவிட்டார். நாம்தான் கொஞ்சம் அல்ல நிறையவே கொதிப்படைந்து விட்டோம், தலைவரின் பொறுமையும் தெளிவும் கொஞ்சம் கொஞ்சமாக எமக்கும் வர ஆரம்பித்துவிட்டது, இப்போது தெளிவாக இருக்கும் நாம் தலைவருக்கெதிரான 'வலிந்த தாக்குதல்கள்' நிகழும்போது கொதிப்படைவது வழக்கம், ஆனால் இனிவரும் காலங்களில் எம்மை தெளிவாகவும் அமைதியாகவும் வைத்திருக்க இந்த கலகம் உதவும், நன்றி mr குகநாதன்.

குகநாதனே இம்புட்டு பல்டி அடித்தால் ஜாக்குவார் ஸ்ரண்ட் மாஸ்டர்வேற எம்புட்டு பெரிய பல்டி அடிப்பார்?

அப்ப நாளை சத்தியராஜ் தலைமையில் 'சொறி சிரங்குகள்' வைக்கும் கூட்டம் புஸ்வாணமா?

பன்னீர்செல்வம் திரையரங்குகளில் ipl போட்டிகளை பார்க்க வேண்டியதுதானா?

அதெல்லாம் சரி எப்ப கலைஞருக்கு பாராட்டு விழா?

15 வாசகர் எண்ணங்கள்:

sivaG said...

இரண்டு போட்டோவும் ஒரே மாதிரி இருக்கே...

லோகு said...

பதிவு போடும் போது இப்படித்தான் கவனக்குறைவா இருப்பீங்களா. வெளியிடுவதற்கு முன்னால் சரி பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லையா. பார்த்தீங்களா இப்ப என்னாச்சுனு?? ஒரே புகைப்படமே ரெண்டு இடத்துல வந்துருக்கு:)) கொஞ்சம் கவனமா இருங்க பாஸ்..

Unknown said...

// அதெல்லாம் சரி எப்ப கலைஞருக்கு பாராட்டு விழா? //

just wait for a week

கிரி said...

குகநாதனுக்கு இப்ப பல விசயம்! புரிந்து இருக்கும் ;-)

chosenone said...

ஏதேதோ தான்கிடோம் .....இந்த கொடுமையை தாங்க மாட்டோமா ?!!!!

Paarvai said...

//லோகு சொன்னது… பதிவு போடும் போது இப்படித்தான் கவனக்குறைவா இருப்பீங்களா. வெளியிடுவதற்கு முன்னால் சரி பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லையா. பார்த்தீங்களா இப்ப என்னாச்சுனு?? ஒரே புகைப்படமே ரெண்டு இடத்துல வந்துருக்கு:)) கொஞ்சம் கவனமா இருங்க பாஸ்..//

I enjoyed your comment more than the article.

Think Why Not said...

100 followers பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

அ.ஜீவதர்ஷன் said...

sivaG

//இரண்டு போட்டோவும் ஒரே மாதிரி இருக்கே...//

உடன் பிறப்புக்கள் அப்பிடித்தானே இருக்கும் :-)

..................................

லோகு

//பதிவு போடும் போது இப்படித்தான் கவனக்குறைவா இருப்பீங்களா. வெளியிடுவதற்கு முன்னால் சரி பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லையா. பார்த்தீங்களா இப்ப என்னாச்சுனு?? ஒரே புகைப்படமே ரெண்டு இடத்துல வந்துருக்கு:)) கொஞ்சம் கவனமா இருங்க பாஸ்..//

ஆமாங்க நான்தான் தவறு செய்துவிட்டேன், இரண்டும் தோற்றத்திலும் செயற்பாட்டிலும் ஒண்ணுதானே?


.....................................

பேநா மூடி

//just wait for a week//

கலைஞர் : செல்லாது செல்லாது, எனக்கு இப்பவே பாராட்டுவிழா வேணும்.

......................................

கிரி

//குகநாதனுக்கு இப்ப பல விசயம்! புரிந்து இருக்கும் ;-)//

இப்ப மு.க வை பத்தி நன்னா புரிஞ்சிருக்கும்.


........................................

chosenone

//ஏதேதோ தான்கிடோம் .....இந்த கொடுமையை தாங்க மாட்டோமா ?!!!!//

இதுக்கே இப்பிடி என்றால் எந்திரன் வரும்போது நிறைய தாங்கவேண்டி இருக்கும்.

.......................................

Paarvai

//I enjoyed your comment more than the article.//

எங்க எழுதினது பிடிக்கலன்னா நேரடியா சொல்லலாமே:-)

........................................

Thinks Why Not

// 100 followers பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...//

சட்டு புட்டின்னு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்நீரலாமா ? ஒரு கண்டிசன், நடிகர்கள் எல்லோரும் மிரட்டியாவது வரவலக்கப் படனும்:-)

சரி அதவிடுங்க , நூறில ஒன்றா இருக்கிற உங்களுக்கும் ஏனைய 99 பேருக்கும் மீண்டும் நன்றிகள்.

சசிகுமார் said...

நல்ல பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yoganathan.N said...

//இரண்டு போட்டோவும் ஒரே மாதிரி இருக்கே...//

பாஸ்... தயவு செய்து அந்த குரங்கை அசிங்கப் படுத்தாதீங்க ப்லீஸ்...

அ.ஜீவதர்ஷன் said...

சசிகுமார்

//நல்ல பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி

.......................................


Yoganathan.N


//பாஸ்... தயவு செய்து அந்த குரங்கை அசிங்கப் படுத்தாதீங்க ப்லீஸ்...//

:-)))

பாலா said...

தல சத்தியம் தான் எப்பவும் ஜெயிக்கும். இந்த மாதிரி அர வேக்காடுகள எல்லாம் கணக்குலேயே எடுக்க கூடாது.

பாலோயர் ஆகிட்டேன் தல

அ.ஜீவதர்ஷன் said...

பாலா

//தல சத்தியம் தான் எப்பவும் ஜெயிக்கும். இந்த மாதிரி அர வேக்காடுகள எல்லாம் கணக்குலேயே எடுக்க கூடாது.

பாலோயர் ஆகிட்டேன் தல//

அனைத்துக்கும் நன்றிங்க.

r.v.saravanan said...

தலைப்பு சூப்பர்

அ.ஜீவதர்ஷன் said...

@ r.v.saravanan

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)