Wednesday, February 24, 2010

ரஜினியை நாடு கடத்தும் தீர்மானம்.எதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.இந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் 'ஒன்பது ரூபாய் நோட்டை' லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்

வேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,

"அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், சினிமா விபச்சாரிகளுக்கு ஆதரவு தேடும் கண்டன கூட்டங்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும், முத்தமிழை வித்தவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு" என்றவரிடம்


அதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு,

"தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் தமிழக முதல்வரது வாரிசுகள் என்ன செய்வது? ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா? அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது ? அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே ? நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும்? எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்" என்றார்.இருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் " அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்" எண்டு கலைஞர் ஒகேனக்கலில் எழுதிக்கெடுத்த (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். கலைஞர் இன்னும் புதிதாக எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் 'நன்றிகெட்டதனத்துடன்' என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே!

18 வாசகர் எண்ணங்கள்:

ஸ்ரீநி said...

தல
மூக்கு பொடப்பா இருந்தா இப்படீல்லாம் பேச சொல்லும் போல.

SShathiesh-சதீஷ். said...

பதிவு நன்றாக உள்ளது கருத்து தெளிவாக உள்ளது உள்குத்து நிறைய உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பதிவை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. வேண்டாம் அடுத்தவரை கலைக்கவேண்டாம் அப்புறம் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஆனால் எல்லோரையும் வாருரின்களே நீங்கள் அஜித்தை விட ரொம்ப தைரிய சாலிப்பா.

ஹாய் அரும்பாவூர் said...

உண்மையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் இறக்க யார் காரணம் என்று தெரிந்தும் சும்மா ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்தி விளம்பரம் தேடி அலையும் சில பேரை விட
இன்னும் தமிழ் மக்கள் வாழ்க்கை பற்றி கவலைப்படாத சிலரை விட
தமிழர் தமிழர் என்று சொல்லி விளம்பரம் தேடி தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாத இவர்களை விட

தமிழன் அல்லது தமிழனாக வாழும் இவர்கள் உண்மையில் சிறந்தவர்களே

யோ வொய்ஸ் (யோகா) said...

nice thala

Online money said...

நானும் superstar மாதிரி எழும்பி நின்று தான் உங்களுக்கு கை தட்ட வேண்டும்.
In fact u deserve it.
Thz for ur marvellous work.

Santhappanசாந்தப்பன் said...

சரியான் நச் பதிவுண்ணே. கலக்கிபுட்டீங்க போங்க...


இவனுக திருந்த மாட்டானுக!

ரவி said...

சூப்பர்,,,,,,,,,,,,,,,

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீநி

//தல மூக்கு பொடப்பா இருந்தா இப்படீல்லாம் பேச சொல்லும் போல.//

இப்பிடி பேசினா டிஸ்போஸ் பண்ணிடுவன் :-)

....................................

SShathiesh


//ஆனால் எல்லோரையும் வாருரின்களே நீங்கள் அஜித்தை விட ரொம்ப தைரிய சாலிப்பா.//

நீங்க அஜீத்த வாரிற மாதிரி இல்ல? :-) ஒரு சந்தேகம்தான் .

................................


arumbavur

//உண்மையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் இறக்க யார் காரணம் என்று தெரிந்தும் சும்மா ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்தி விளம்பரம் தேடி அலையும் சில பேரை விட

இன்னும் தமிழ் மக்கள் வாழ்க்கை பற்றி கவலைப்படாத சிலரை விட

தமிழர் தமிழர் என்று சொல்லி விளம்பரம் தேடி தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாத இவர்களை விட

தமிழன் அல்லது தமிழனாக வாழும் இவர்கள் உண்மையில் சிறந்தவர்களே//


சரியாக சொன்னீர்கள்

.....................................

யோ வொய்ஸ் (யோகா)

//nice thala//

thanks thala

.....................................

sridharan

//நானும் superstar மாதிரி எழும்பி நின்று தான் உங்களுக்கு கை தட்ட வேண்டும்.//

அப்புறம் 'சக்கைவார் பித்தளை' என்று யாராவதொருவர் தன் பொண்டாட்டி கையை நானும் நீங்களும் வெட்டிவிட்டோம் என்று போலீசில் புகார் கொடுக்காவிட்டால் சரி :-)))))

..................................

பிள்ளையாண்டான்

//இவனுக திருந்த மாட்டானுக!//

திருத்தணும், எல்லாத்தையும் திருத்தணும், இது 'மணி' படங்களில மட்டும்தான் சரிவரும்:-)

அ.ஜீவதர்ஷன் said...

செந்தழல் ரவி

//சூப்பர்,,,,,,,,,,,,,,,//

நன்றி ரவி

chosenone said...

ஏன்னா வில்லத்தனம் .......

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//ஏன்னா வில்லத்தனம் .......//

நான் காமடியா பேசிக்கிட்டிருக்கிறன் அதபோய் வில்லத்தனம் என்கிறீங்க ....ஏய்... என்ன வச்சு நீங்க ரொவுடித்தனம் கிவுடித்தனம் ஒன்னும் பண்ணலையே:-)

Unknown said...

ஹி ஹி..,

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//ஹி ஹி..,//

வெறும் ரெண்டு ஹி தானா ? :-)

Yoganathan.N said...

//இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங். //

இனிமேல் உங்களது பதிவை அப்பீஸில் படிக்க வேண்டாமென தீர்மானித்து விட்டேன்... குறிப்பாக அந்த 'ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா' - சான்ஸே இல்ல... பின்னிட்டீங்க... ஹிஹிஹி

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//இனிமேல் உங்களது பதிவை அப்பீஸில் படிக்க வேண்டாமென தீர்மானித்து விட்டேன்... குறிப்பாக அந்த 'ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா' - சான்ஸே இல்ல... பின்னிட்டீங்க... ஹிஹிஹி//

ஹலோ, நான் சீடியசா பேசிக்கிட்டிருக்கிறன்

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

r.v.saravanan said...

எப்பூடி உட்கார்ந்து யோசிப்பிங்களோ ?
நல்லா இருக்கு படிக்கும் போது
என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை நன்றி

சத்யராஜ் போட்டோ இந்த பதிவிற்கு நல்ல பொருத்தம்

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan

//எப்பூடி உட்கார்ந்து யோசிப்பிங்களோ ? //

இவங்க மீது முதல்ல கோபம்தான் வந்துது , பின்னர் அது காமடிய மாறிடிச்சு, இப்ப மேட்டரே காமடியா போச்சு.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)