Sunday, February 21, 2010

அபராத சங்கமும் கைப்புள்ளைகளும்

இது தான் வருத்தபடாத வாலிபர் சங்கம் 

கிட்டத்தட்ட தெலுங்கானா ரேஞ்சுக்கு சூடுபிடித்திருக்கிறது அஜித்தின் பேச்சு,சம்பந்தமே இல்லாமல் தங்கங்களும்,சங்கங்களும் பப்ப்ளிசிட்டி ஸ்டன்ட் எடுத்துக்கொண்டிருக்கிறது.தமிழர்கள் ஆட்சியிலிருக்கும் தமிழ்நாடு பசுமைசோலையாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றது,அனைத்துத் தமிழர்களும் பாசக்கார பயபுள்ளைகளாக இருக்கும்போது தமிழரல்லாத தமிழ் நடிகர்களை ஒழித்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.இந்த மாதிரிதான் பிரச்சினையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள் சில கருத்தஆடுகள்,பாசகார தலைவரும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.இந்தப் பிரச்சினை உச்சத்தை அடைந்ததும் இதனை பெரிசுபடுத்த வேண்டாமென ஒரு அறிக்கையும் விட்டு மாபெரும் பிரச்சினையை ஒரே வார்த்தையில் நீக்கிய மாபெரும் தலைவனுக்கு பாராட்டு விழா என்று ஒரு விழாவுக்காக காத்திருக்கிறாரோ என்னமோ?

சாத்துரத்துக்கு ஆள் இல்லை   கட்டதுரை missing ....

இப்போ என்னதான் பிரச்சினை,சங்கத்து ரகசியத்தை அஜித் வெளியே கூறிவிட்டாராம்,இதற்கு அஜித் நிபந்தனையற்ற மன்னிப்பும் அதற்கு ஆதரவாகப் பேசிய ரஜினிக்கு கடும் கண்டனமும் என தீர்ப்பு வழங்கியிருக்கின்றது அனைத்து சினிமா சங்கங்களின் அமைப்பும் அதன் கைப்புள்ளை தலைவர்களும், இதற்கு நம்ம நடிகர் சங்க நாட்டாமையும் கையெழுத்திட்டு விட்டு வந்திருக்கின்றார். ஒரு முன்னணி நடிகரான அஜித்தை ஒருமையில் பேசியதற்கு எந்த கண்டனங்களும் இல்லை,உலகமே கொண்டாடும் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியை கேவலமாகப் பேசியதற்கும் மௌனம் சாதித்த நடிகர்சங்கம் தமது உறுப்பினரான ஜாக்குவார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்திற்கு விளக்கமளிக்குமாறு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது,மக்கா உங்க கடமை உணர்ச்சி நம்மள மெய்சிலிர்க்க வைக்குதுபா.


உங்க படத்துக்கு ஒரு பிரச்சினையா? "ரஜினி சார் நீங்க வந்தாதான் நல்ல இருக்கும்" சங்கத்துக்கு நிதி சேகரிக்கனுமா? "நீங்க மட்டும் வந்தாப்போதும்". கொய்யால அவருக்கு ஒரு பிரச்சினையா உடனே 'சொல்லாமலே' லிவிங்க்ஸ்டன் மாதிரி ஆகுரிங்களே,ஏன் இந்த பொழப்பு? இது பத்தாதென்னு அபராத்ததில ஓடுற சங்கமெல்லாம் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.நேற்று ஒரு விழாவில் பேசிய குகநாதன்,ஜி சேகரன் பேச்சுக்களில் இருந்த தொனி ஏதோ சங்க உறுப்பினர்கள் அடிமைகள் என்பது போலவிருந்தது.

இதற்கு உதரணமாய் ஒரு குட்டி சம்பவம்,ஹிட்லர் ஆட்சியில் ஒருவன் ஹிட்லரை 'முட்டாள்' எனக் கூறிவிட்டான்,அவனுக்கு மரண தண்டனையும் நிறைவேற்றியாயிற்று.ஏன் மரணதண்டனை என்று கேட்டதற்கு ஹிட்லர் சொன்ன பதில் "இவன் ராணுவ ரகசியத்தை வெளியே கூறிவிட்டான்" என்பதாகும்,கிட்டத் தட்ட ஹிட்லர் போல தான் நேற்றைய ஆடியோ ரிலிசொன்றில் பேசியிருந்தார் இந்த குகநாதன்.தாங்கள் மிரட்டி கூப்பிட்டதல்ல குற்றம்,அதை அஜித் வெளியே சொன்னதுதான் குற்றம்.இந்தப் பேச்சுக்கு கோபப்பட்டிருக்க வேண்டியது உண்மையில் நடிகர்களும் அதன் சங்கமும்தான்.ஆனால் சரத்?


இவ்வளவு காலமும் ரஜினியை மட்டும் மையம் கொண்டிருந்த தமிழன் விவகாரம் இப்போது சூழ்ந்து கொண்டிருப்பது அஜித்தையும் சேர்த்து.இனவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் தாரைதாரையாக வருகிறது,அதிலும் 'தங்கத்தை' சந்தித்து ஆறுதல் கூறிய திருமாளவன் "தான் அப்படி கூறவில்லை என்று ஜெயராம் மன்னிப்பு கேட்டார், ரஜினியும் அஜித்தும் இது பற்றி வாயே திறக்கவில்லை"சொன்னாரம்.இதிலிருந்து அவர்கள் பக்கம் பிழை என்பது தெரிகிறதாம்.

திரு.திருமாளவன் அவர்களே உங்க ஜோக்கியதை என்னவென்பது எங்களுக்குத் தெரியும்,"நல்லவேளை நீங்கள் பிரபாகரனுடன் இருந்திருந்தால் நீங்களும் இறந்திருப்பிர்களென" ராஜபக்ச கூறியதற்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உள்ள பெண்போல   வெட்கபட்டு   தலை குனிந்து நிலத்தில காலால்  கோலம் போட்டு   புன்னகையை பதிலாக உதிர்த்த இவர் தமிழன் என இன்று மார்தட்டுகிறார். குப்பன் சுப்பனுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க அவர்களுக்கு என்ன வேற வேலையே இல்லியா? தயவுசெய்து உங்கள் சுயலாபத்திற்கு 'தமிழன்' என்ற அடையாளத்தை பயன்படுத்தி எம்மைத் தலை குனியச்செய்யாதீர்கள்.இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரவாழ்வில்லை எனக்கூறும் நீங்களே தமிழரல்லாத இவர்கள் தமிழ்நாட்டில் நடிக்கக் கூடாதென கூறுவது காமடியாகவில்லை,உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.தமிழர்கள் இப்போது அனைவரைப் பற்றியும் தெளிவாக அடையாளம் கண்டுவிட்டார்கள்,எங்கே எப்படிப் பிறக்கப் போகிறோமென்று யாருக்கும் தெரியாது,அது நம்ம கையிலும் இல்லை,ஆனால் நாம் யாராக,எப்படி வாழ்கிறோமென்று முடிவு செய்வது எங்கள்  கையில்.ரஜினியோ அஜித்தோ அப்படித்தான்,தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள்.முதலில் நீங்கள் மனிதனாக இருங்கள்,பின்னர் நல்ல மகனாக இருங்கள்,அப்புறம் தமிழனாக இருக்கலாம்.

ரஜினியோ அஜித்தோ சினிமாவை விட்டுப் போனால் பாதிக்கப்படப் போவது நிச்சயம் அவர்களில்லை,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளாகக் கூறும் வி.சி.குகநாதன் போன்றோர் தொழிலாளர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்துத்தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்களா? ரஜினி,அஜித் படங்களைப் புறக்கணிப்போம் எனக்கூறும் இந்தப் பதவி ஓநாய்கள் தங்கள் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படப்போவது பற்றி நிச்சயம் சிந்தித்திருக்கமாட்டார்கள்.அரசியல் பின்புலத்தை வைத்து தங்கள் சுயலாபத்திற்காக பப்ளிசிட்டி தேடும் இவர்கள் தொழிலாளர்கள் பற்றி சிந்தித்ததை விட நிச்சயம் ரஜினி,அஜித் இவர்களை விட பலமடங்கு சிந்தித்திருப்பார்கள்.

அஜித் நிபந்தனையற்ற மன்னிப்புக்கு என்ன பதில் கூறப்போகிறார்? ரஜினியின் ரியாக்ஷன் என்னவாகவிருக்குமென்பது ஓரிரு நாட்களில் தெரியும்.அஜித்தின் சூழ்நிலைகள் என்னவென்பது தெரியாது,ஆனால் இந்த மன்னிப்பு கேட்டுத்தான் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் சினிமாவே வேண்டாமென்று அஜித் முடிவெடுப்பரானால் அவருக்கு ஒரு சல்யுட்.

நடிகர்களைப் பற்றி மட்டுமே 'இவங்க ரொம்ப மோசமானவைங்க' என கூறும் எல்லோரும் 'மோசமனவங்களிலேயே ரொம்ப கேவலமான' இந்த கறுப்பு ஆடுகளை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம் .

ஆமா,அஜித்தோட அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் நம்ம தயாநிதி "அழகிரி" ஆச்சே,இது தெரியாம தடை,சங்கமென்று வாய்சவாடல் விடுகிறார்களே! இந்த விஷயத்த கொஞ்சமா மறுபரிசீலணை பண்ணுவாங்களோ!!!!

22 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

//ஆமா,அஜித்தோட அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் நம்ம தயாநிதி "அழகிரி" ஆச்சே,இது தெரியாம தடை,சங்கமென்று வாய்சவாடல் விடுகிறார்களே! இந்த விஷயத்த கொஞ்சமா மறுபரிசீலணை பண்ணுவாங்களோ!!!!//

அட போங்கப்பா என்னய்யா பதிவெளுதிரிங்க. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பை கடைசீல போட்டிட்டு.
வாழ்த்துக்கள்.

ஹாய் அரும்பாவூர் said...

அஜித் ரீல் ஹீரோ இல்லை ரியல் ஹீரோ
தர்மம் தனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும

R.Gopi said...

இன்னா தலீவா...

இந்த பதிவும் பொறி பறக்குது!!??

அடிச்சு ஆடுங்க.... தூள் கிளப்புங்க....

ரவி said...

சூப்பர் !

Unknown said...

தலை தலைதான் விட்டிரு தலை இவனுக கிட்ட எல்லாம் போய் நீ மன்னிப்புகேட்டுகிட்டு அப்பிடித்தானே பாஸ்

மந்திரன் said...

என் மனக் குமறலை அப்படியே நீங்க சொல்லி விட்டீர்கள் ..
என் மனசாட்சிக் கூட உங்களிடம் தோற்றுவிட்டது போங்க

யூர்கன் க்ருகியர் said...

I like ur last paragraph. that's the judgement! :)

ரெண்டு said...

//பாசகார தலைவரும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.இந்தப் பிரச்சினை உச்சத்தை அடைந்ததும் இதனை பெரிசுபடுத்த வேண்டாமென ஒரு அறிக்கையும் விட்டு மாபெரும் பிரச்சினையை ஒரே வார்த்தையில் நீக்கிய மாபெரும் தலைவனுக்கு பாராட்டு விழா என்று ஒரு விழாவுக்காக காத்திருக்கிறாரோ என்னமோ? //

இந்த ஐடியாகூட நல்லா இருக்கே?

மக்கா, இதுக்கு பேர்தான் "Divide and Rule" னு சொல்றதோ..

Barari said...

ajit.rajani cinemaavai vittu ponal nastam thamizakaththukkuthaan.thamizakame irul sooznthu vidum.nalla comedy aka illai.

2009kr said...

சரியான கருத்து . அஜீத் மற்றும் ரஜினி இருவரும் தமிழர்களுடன் இரண்டற கலந்துவிட்ட திராவிடர்கள். அவர்களின் நேர்மையான பேச்சினை ஆராய்ந்து தவறுகளை களையவேண்டிய சங்கங்களின் தலைவர்கள் முறை தவறி நடக்கிறார்கள் முதல்வர் உடனடியாக இவ்விசயத்தில் தலையிட்டு முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

மனதைத்திற said...

தாங்கள் கூறிய கரு்த்துக்கள் 100/1000 சதவிகிதம்
உண்மை நண்பரே இந்த விவகாரத்தை இவர்கள் தேவையில்லாமல் திசை திருப்புகிறார்கள் குகநாதனுக்கு
மண்டைக்கு வெளியி்ல் தான் ஒன்றுமில்லை என்று பார்த்தால் மணடைக்கு உள்ளேயும் ஒன்றுமில்லை என்று நிருபித்து விட்டா(ன்)ர்

அ.ஜீவதர்ஷன் said...

@ SShathiesh

@ arumbavur

@ R.Gopi

@ செந்தழல் ரவி


@ மந்திரன்

@ யூர்கன் க்ருகியர்

@ ரெண்டு


@ 2009kr


உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்
@ Barari

உங்களுக்கு நல்ல விளக்கம் வர கடவுளை வேண்டுகிறேன்.
@ V.A.S.SANGAR

அதேதான்
@ மனதைத்திற

:-)

Suresh said...

Neenga sonna mathiri thala sollitaru appadi manipu ketu than nadikanum na antha nadipae thevai illainu he he next producer yaru nu theriya savudal viduranga chinna pasanga..

Simple_Sundar said...

அருமை... அருமை... அருமை.... பாராட்ட மேற்கொண்டு வார்த்தைகள் இல்லை. ரசிகர்களின் உள்ள குமுறல்கள் எல்லாம் வெளிக்கொணர்ந்துவிட்டீர்கள்.

- சுந்தர்
OnlySuperstar.com

பாலா said...

தோல்விகளோ அவமானங்களோ அஜித்துக்கு புதிதில்லை.

சோதனைகளை சாதனைகளாக்கி தொடர்ந்து வெற்றிபெறுவார் என்று நம்புவோம்

நேரமிருந்தால் படித்து பார்க்கவும்
www.balapakkangal.blogspot.com

கிள்ளிவளவன் said...

நீங்க சொல்றது படிக்க நல்லாயிருக்கு நீங்களும் கொஞ்சம் யோசிங்க பாஸ். அவங்க வருத்தபடாத வாலிபர் சங்கமா இருந்துட்டு போகட்டும், ஆனா என் மக்கள் அப்படி இருக்க கூடாது. ஆப்புறம் ஏன் அஜித் படத்துல தமிழ் செண்டிமெண்ட் இருக்கிறது. அவரு வந்த கலந்துகிட்ட காவிரில தண்ணி தரபோறது இல்ல. ஆனா பாதிக்க பட்ட மக்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் கிடைக்கும் என்பது மக்களின் எண்ணம்.

சசிகுமார் said...

நம் நாட்டில் எதற்கு எடுத்தாலும் சங்கங்கள். அஜித் தனது கருத்தை கூறினார் அதற்கு ஏன் இவர்கள் இப்படி சண்டை போட்டு கொள்கிறார்கள். எல்லாமே பப்ளிசிடி தான். இந்த மீடியா இது போன்று உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் தராமலிருந்தால் இப்படி தேவையில்லாமல்
இந்த பிரச்சினையை பெரிது படுத்த மாட்டார்கள்.

V.Sathish Kumar said...

ajith superman

ஈ ரா said...

//இதற்கு உதரணமாய் ஒரு குட்டி சம்பவம்,ஹிட்லர் ஆட்சியில் ஒருவன் ஹிட்லரை 'முட்டாள்' எனக் கூறிவிட்டான்,அவனுக்கு மரண தண்டனையும் நிறைவேற்றியாயிற்று.ஏன் மரணதண்டனை என்று கேட்டதற்கு ஹிட்லர் சொன்ன பதில் "இவன் ராணுவ ரகசியத்தை வெளியே கூறிவிட்டான்" என்பதாகும்,//


கலக்கல்....

அ.ஜீவதர்ஷன் said...

Suresh

//next producer yaru nu theriya savudal viduranga chinna pasanga..//

YAA....

.....................................

Simple_Sundar

//அருமை... அருமை... அருமை.... பாராட்ட மேற்கொண்டு வார்த்தைகள் இல்லை. ரசிகர்களின் உள்ள குமுறல்கள் எல்லாம் வெளிக்கொணர்ந்துவிட்டீர்கள்.

- சுந்தர்
OnlySuperstar.com //

உங்கள் பின்னூட்டல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, உங்கள் வருகைக்கு நன்றி.

..................................

கிள்ளிவளவன்

//ஆனா பாதிக்க பட்ட மக்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் கிடைக்கும் என்பது மக்களின் எண்ணம்.//

மக்கள் எண்ணத்தைவிட இதை அரசியலாக்கும் மன்னனின் எண்ணம்தான் மோசமான விளைவுகளை தருகிறது.

....................................


சசிகுமார்

//நம் நாட்டில் எதற்கு எடுத்தாலும் சங்கங்கள். அஜித் தனது கருத்தை கூறினார் அதற்கு ஏன் இவர்கள் இப்படி சண்டை போட்டு கொள்கிறார்கள். எல்லாமே பப்ளிசிடி தான். இந்த மீடியா இது போன்று உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் தராமலிருந்தால் இப்படி தேவையில்லாமல்
இந்த பிரச்சினையை பெரிது படுத்த மாட்டார்கள்.//

உண்மைதான்

.......................................

V.Sathish Kumar

//ajith superman//

:-)

.......................................

ஈ ரா

//கலக்கல்....//

நன்றி தலைவா

chosenone said...

நவீன மன்னராட்சி முறைக்கி சென்று கொண்டுஇருக்கும் தமிழ் நாட்டு அரசியல் சூழலுக்கு அஜித் காட்டின எதிர்ப்பு முற்றிலும் இயற்கையானதும் நல்ல துவக்கமும் கூட .
இதுவரையில் மக்கள் பணிகளை அஜித் புரகநிப்பத்ர்கு அஜித் சொன்ன காரணங்கள் உப்பு சப்பு இல்லாதவை .....
ஆனால் ஒரு சினிமா சங்கம் இப்படி எல்லாம் சரவாதிகாரம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.
இம்மாதிரியான இயற்கையான எதிபுக்கள் எல்லா துறைகளிலும் வெடிக்கும்.....அது கருணா'நரி விரைவில் "டிக்கெட்" எடுத்தால் தான் நடக்கும் ....

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//கருணா'நரி விரைவில் "டிக்கெட்" எடுத்தால் தான் நடக்கும் ....//

அப்புறம் நாம யாருக்கு பாராட்டுவிழா வைக்கிறது? ஸ்டாலின் ஓகேயா? அல்லது அழகிரியா?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)