Saturday, February 20, 2010

ஜாக்குவார் !!!! டங்குவார் பத்திரம்.......


  ரஜினி பேசினாலும் பிரச்சினை பேசாவிட்டாலும் பிரச்சினை என்பதையும் தாண்டி இப்போது கைதட்டினாலும் பிரச்சினை என்றாகிவிட்டது. கருணாநிதிக்கு இடம்பெற்ற பாராட்டுவிழாவில் அஜித் நடிகர் சங்கத்தின் ரவுடீசத்தை எதிர்த்து பேசியதை தொடர்ந்து அஜித் மீது மறைமுகமான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன, நட்சத்திரங்களின் பக்கமிருந்து அஜித்தின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் நடிகர் சங்கத்தினரும் பெப்சி அமைப்பினரும் அஜித்மீது கடுப்பாகி இருந்தனர். ஒரு சிலர் நேரடியாகவும் ஒருசிலர் மறைமுகமாகவும் அஜித்தை தாக்க தொடங்கினார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் மகளின்  திருமண வைபவத்திற்கு இரண்டு மனைவிகள் சகிதம் சென்று வாழ்த்திய கருணாநிதியை மரியாதையின் நிமித்தம் நன்றிகூற சென்ற ரஜினி அவரை சந்தித்தபின்னர் பத்திரிகயாளர்களுக்கு அளித்த செவ்வியிலேயே புதிய பிரச்சினைஆரம்பமானது. ரஜினியின் கூற்றை திரிவுபடுத்தி ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்குமிடையில் பிரச்சனையை உண்டாக்க நினைத்த க(ல,ழ)க காரர்களே இந்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர் எனினும் அது உண்மைநிலை தெரிந்ததால் புஸ்வானம் ஆகிற்று.

ரஜினியிடம் அஜித்தின் பேச்சை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கிறார்கள். ஆனால், வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று ரஜினி கூறியதாக ஒரு சாராரும்"அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன்,விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர் - நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தக்கூடாது. கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை"என்று ரஜினி கூறியதாக மறு சாராரும் கூறி வருகின்ற நிலையில் இரண்டாவதாக கூறியதே உண்மையானது என்பது NDTV பார்த்தவர்களுக்கு தெரியும். அன்று மாலையே கலைஞரை சந்தித்த பின்னர் பத்திரிகயாளர்களிடம் தனக்கு சார்பாக பேசிய ரஜினிக்கு நன்றி என்று அஜித் கூறியதிலிருந்து இரண்டாவது செய்தியே சரியானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, அஜித் கலைஞரை சந்தித்தது மரியாதையின் நிமித்தம் என்று அஜித் தரப்பாலும் கலைஞர் தரப்பாலும் கூறப்பட்டது.


இதற்கிடையில் ஜாக்குவார் தங்கம் வீடும் காரும் அஜித்தின் தூண்டுதலால் அடித்து நொருக்கபட்டதாக அஜித்மீதும் மேலும் பதினைந்துபேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஜாக்குவார் இவர்கள் அனைவரையும் கைது செய்யும் படியும் கேட்டுள்ளார். "எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜீத் போன்றவர்கள், திடீரென்று உயரத்துக்கு வந்ததும் தொழிலாளர்களை மறந்து விட்டு மனம் போன போக்கில் பேசுகிறார்கள். விழாவில் பேசியதற்கு அஜீத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தான் கூறியதற்காகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஜாக்குவார் கூறியுள்ளார். இதுதவிர அஜித்தின் பேச்சிற்கு வரவேற்பளித்த ரஜினியை 'ஜோக்கர்' என்றும் 'ரஜினி பேச்சை யார் கணக்கெடுக்க போகிறார்கள்' என்றும் கூறியுள்ளார்.

தான் நேரில் சென்று பத்திகை வைக்காவிட்டாலும் மனைவிகள் பிள்ளைகள் சகிதம் வந்து தனது மகளின் நிச்சயதார்த்தத்தை சிறப்பித்த கருணாநிதியை மரியாதையின் நிமித்தம் ரஜினி சந்தித்ததாக கலைஞர் தரப்பிலும் கலைஞர் டிவியிலும் கூறப்பட்ட பின்னரும் ரஜினி மன்னிப்பு கேட்க சென்றார், ரஜினி சமாளிக்க சென்றார் என சில புல்லுருவிகள் எழுதுவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது. எங்களுக்கு இதனால் கோபம் வரப்போவதில்லை, பாவம் நீங்களும் என்ன செய்வீர்கள்? இப்படியான சந்தர்ப்பங்களில்தானே உங்கள் இயலாமையை வெளிப்படுத்த முடியும். உங்கள் வயித்தெரிச்சல் இதனால் கொஞ்சமாவது குறையுமானால் எமக்கு சந்தோசமே.

இது கொஞ்சம் அல்ல...!!  ரொம்பவுமே காட்டமாக இருக்கும்.!!
[பூ போன்ற  இதயம் கொண்டவர்கள் தவிர்க்கவும்]  

ஜாக்குவார் தங்கம் என்னும் காமுகனே .....


தலையை தலை விமர்சிக்கலாம், வால்கூட விமர்சிக்கலாம் நீ வாலில்  இருக்கிற முடி, உன் பேச்சி எல்லாம்(கறுமம்)கேட்கவேண்டிய சூழ்நிலை .ரஜினியை விமர்சிப்பதற்கு முன்னர் உனது கற்பழிப்பு வழக்கை முடித்துவிட்டு வா, ஒரு நடிகையை வலுக்கட்டாயப்படுத்திய நீ எல்லாம் நியாயம் பேசமுன் உனது ஜோக்கியதை என்னவென்பதை தெரிந்து பின்னர்பேசு. ரஜினி பேச்சை யாரும் கேட்காமல்தானா நடிகர் சங்கமும் , பெப்சியும் தமது கலை(?) நிகழ்ச்சிகளுக்கு வரசொல்லி ஒவ்வொருதடவையும் கெஞ்சுகிறார்கள், அதுவும் நடிகர் சங்கம் "நீங்கள் மட்டும் வந்தால் போதுமென்று" கோரிக்கை வைத்தார்கள்.


அஜித்தும், ரஜினியும் தமிழர்கள் இல்லை என்றால் நீ தமிழன்தானே? இன்னும் இங்கு நிறைய தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள்தானே? நீங்கள் என்ன ம..ரா புடுங்கி கிழித்தீர்கள்? ரஜினி மூச்சு விட்டாலே உங்களுக்கு தமிழ் பாசம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை, நீயும் ஒரு படம் இயக்கி கிளிச்சனிதானே ?தமிழ் பற்று பொங்கிற உனக்கு எதுக்கு வேற்றுமொழி நாயகி ? நீ ஸ்ரண்ட் மாஸ்டர் தானே? உனக்கு பப்ளிசிட்டி வேணுமென்றால் ஓடுற ரெயினில இருந்து குதி , இப்பிடி ஏதாவது செய்து பப்ளிசிட்டியை தேடு, ரஜினி உனது பேச்சுக்கு பதில் கூற மாட்டார் என்பதற்காக கண்டபாட்டுக்கு பேசாதே. முடிந்தால் T.R பற்றி இப்படி கூறிப்பார் உன் 'டங்குவார்' அறுந்திரும்.

ரஜினியோ அஜித்தோ தமிழன் என்பதல்ல முக்கியம், நல்ல மனிதர்களா என்பதுதான் முக்கியம், நிச்சயம் சினிமா உலகில் இருவருமே அதிகமான விடயங்களில் நல்ல மனிதர்கள்தான்.

29 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

unkal pathivil நியாயம் உள்ளது. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ஜாக்குவாரை டர் ஆக்கிவிட்டீர்கள் அது வேண்டாமே. பிறகு அது அசிங்கமாகிவிடும். அஜித் பேசினார், ரஜினி கைதட்டினார், ஜாக்குவார் பெட்டி கொடுத்தார் அத்துடன் விட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு ஜாக்குவார் வீட்டை தாக்கியதில் ஆரம்பித்ததி இந்த பூகம்பம் இதை நடத்தியவர்தான் உண்மை குற்றவாளி. இப்போது இதை செய்தது ரஜினி ரசிகர்கள் என்ற பேச்சுல் எழுகின்றது. என்ன கொடுமை சார் இது????????

chosenone said...

இந்த சாதாரண ஜாக்குவார் தங்கம் ரஜினி அஜித்தை எதிர்த்து இவளவு தெனாவட்டா பேசுறான் என்றால் இது வெறும் ** விஷயமாவும் தெரியவில்லை அதேநேரம் இதுக்கு ஆட்சி மேலிடத்தின் பூர்ண ஆசிர்வாதம் இருக்கிறதேன்று தான் தோன்றுகிறது.
அவளவு அழகாக தெரியும் வெள்ளித்திரைக்கு பின்னால் அரங்கேருகிறது அரசியல் மிருகங்களின் கேவலமான நாடகங்கள் !!!

kuruvi said...

ரஜினி நன்றி சொல்ல கருணாநிதியை பார்க்க போனாரு சரி அஜித் எதுக்கு கருணாநிதியை போயி பாத்தாரு?

அஜித் அன்னைக்கு பேசினது ரொம்ப சரி. இவங்க மிரட்டித்தான் பாராட்டு விழாவுக்கு கூப்பிடுறாங்க..

அப்படின்னா நேத்து கருணாநிதியை சந்திச்சதுக்கு என்ன அர்த்தம்? அஜித் மிரட்டபடுகிறாரு.. அதுதான் அர்த்தம்.

Elanthi said...
This comment has been removed by the author.
Unknown said...

ரஜினியோ அஜித்தோ தமிழன் என்பதல்ல முக்கியம், நல்ல மனிதர்களா என்பதுதான் முக்கியம், நிச்சயம் சினிமா உலகில் இருவருமே அதிகமான விடயங்களில் நல்ல மனிதர்கள்தான்.

this is super...

"ராஜா" said...

ரஜினி மற்றும் அஜித்தின் மேல் மேல் வீசப்படும் குற்றசாட்டு அவர்கள்
தமிழன் இல்லை என்பதுதான், அது உண்மைதான் தமிழனை ஏமாற்ற தெரியாதவன் எப்படி தமிழனாய் இருக்க முடியும்...
if you have time plz read my opinion about this issue on http://apkraja.blogspot.com/2010/02/blog-post_18.html

karthik said...

// முதலாவதாக பின்னூட்டம் போட்டவருக்கு//
உண்மை எது வதந்தி எது எண்டு வித்தியாசம் தெரியாமல் இருக்கும் இவரை நினைத்தால் பாவமா இருக்கு.
இவர் மாதிரி அரை வேக்காடுகளை அறிவிப்பாளர்களாக வைத்திருக்கும் வானொலிய நினைத்தால்தான் அதை விட பாவமாக இருக்கு

VR said...

உங்களை போன்ற சில்லறை ஈன பிறவிகள் திருந்த இன்னுறு பாரதி பெறக்கனும். இதுதான் உங்கள் எழுத்து சுதந்திரம் என்றால் நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்.

காதலும்கடவுளும் said...

சினிமா காரர்களுக்கு பிரச்னை வரும் போது சாதியை கையில் எடுப்பது புதிதல்ல.விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி,பத்திரிக்கையளர்களை விமரிசித்த விவேக் எல்லாம் சமீப காலமாக சாதி சங்கங்களிடம் அடைக்கலம் புகுவது...அபாயத்தின் அறிகுறி.

கிரி said...

இவர்கள் இப்படி செய்வதால் ரஜினியின் மதிப்பு கூடுமே தவிர கண்டிப்பாக குறையாது.

suthershan said...

இந்த தங்கத்துக்கு போலீஸ்காரன் பத்தாது.. வேற ....வேற.......வேற......
வேட்டைக்காரன் தான் வேணும் ...

டிராகன் said...

சார் ,
நீங்க சொல்வது மிக சரி ,ரஜினி கை தட்டினாலும் குற்றம் என்று சொல்வது ,இவர்களை என்ன வென்று சொல்வது ??

karthik said...

//உங்களை போன்ற சில்லறை ஈன பிறவிகள//
V R
உங்கட பிறப்ப பத்தி நியூஸ் போடவில்லையே இது ஒரு பித்தளை பத்தின நியூஸ் அதுக்கு ஏன் உங்களுக்கு கோபம் வருது

தர்ஷன் said...

ரஜினியே சொன்னத் தவளைக் கதைத்தான் ஞாபகம் வருகிறது. சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை

chosenone said...

///உங்களை போன்ற சில்லறை ஈன பிறவிகள் திருந்த இன்னுறு பாரதி பெறக்கனும். இதுதான் உங்கள் எழுத்து சுதந்திரம் என்றால் நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்.///

பதிவுக்கான கருத்தை மாட்டும் சொல்லிட்டு அடங்கு!
அடிப்படை நாகரீகமே தெரியாத நீ , support க்கு பாரதிய வேற கூப்பிடுரியா ???

Unknown said...

இதுவும் கருணாவின் திருவிளையாடல்களில் ஒன்று

Vijithan said...

நீ ஒரு உண்மையான உணர்வுள்ள தமிழன் என்றால் இப்படி எழுதி இருக்க மாட்டாய்.
ஜாக்குவார் தங்கம், நடிகர் சங்கத்தின் கருத்து அஜித்துக்கோ அல்லது ரஜனிக்கோ எதிரானது அல்ல. athavathu தமிழனுக்கு சார்பானது மட்டுமே. நீ கொஞ்சம் அடக்கி எழுது தமிழ் உணர்விருந்தால்.

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

//இப்போது இதை செய்தது ரஜினி ரசிகர்கள் என்ற பேச்சுல் எழுகின்றது. என்ன கொடுமை சார் இது????????//

அப்டியா ? நல்ல விஷயம், இதை ரஜினி ரசிகர்கள் செய்திருந்தால் சந்தோசம், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான் வருத்தம்.

.........................................


chosenone

//இந்த சாதாரண ஜாக்குவார் தங்கம் ரஜினி அஜித்தை எதிர்த்து இவளவு தெனாவட்டா பேசுறான் என்றால் இது வெறும் ** விஷயமாவும் தெரியவில்லை அதேநேரம் இதுக்கு ஆட்சி மேலிடத்தின் பூர்ண ஆசிர்வாதம் இருக்கிறதேன்று தான் தோன்றுகிறது,அவளவு அழகாக தெரியும் வெள்ளித்திரைக்கு பின்னால் அரங்கேருகிறது அரசியல் மிருகங்களின் கேவலமான நாடகங்கள் !!!//

கலைஞருக்கு இவை ஒன்றும் தெரியாது, அவருக்கு வாய்க்குள் விரலை வைத்தாலே கடிக்கதெரியாது,அம்புட்டு அப்பாவி, பாவம் அவரைபோய் நீங்கள் கோவித்துக் கொள்கிறீர்கள்.

.....................................

kuruvi

//ரஜினி நன்றி சொல்ல கருணாநிதியை பார்க்க போனாரு சரி அஜித் எதுக்கு கருணாநிதியை போயி பாத்தாரு? அஜித் அன்னைக்கு பேசினது ரொம்ப சரி. இவங்க மிரட்டித்தான் பாராட்டு விழாவுக்கு கூப்பிடுறாங்க.. அப்படின்னா நேத்து கருணாநிதியை சந்திச்சதுக்கு என்ன அர்த்தம்? அஜித் மிரட்டபடுகிறாரு.. அதுதான் அர்த்தம்.//


உண்மைதான், ரஜினி அரசியல் வேணாம் என்றாலும் இவர்கள் விட மாட்டார்கள் போலுள்ளது, இப்போது அஜித்திற்கும் வைராக்கியம் பிறந்திருக்கும் , சரியான நேரத்திற்காக அஜித் காத்திருக்கலாம்.

.................................

இளந்தி...

//நீங்கள் சொல்ல வந்தது நூறு வீதம் சரி.
தங்களுக்கு பப்ளிசிட்டி வேணும் என்றால் கையில் அகப்படுரத தூக்கி கொண்டு குய்யோ முறையோ எண்டு கத்துறது இவர்களின் பிழைப்பு(ஜாக்குவார் தங்கம்) இதில சாதி பிரச்சினையையும் தூண்டி விட்டு,, இவங்கள் எல்லாம் என்ன மனுஷ ஜென்மமோ? நேர்மை இருந்தால் அல்லது துணிவிருந்தால் நேருக்கு நேர் மோதட்டும். எது சாதி,மதங்களையும் தூண்டி விடனும்.//

இப்பவெல்லாம் சாதி பெற சொல்லி பிச்சை கேட்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. எல்லாத்துக்கும் ஒரு முடிவிருக்கு, அந்த முடிவை தொடக்கிவைப்பது யார் என்பதுதான்கேள்வி.

வேலூர் ராஜா said...

அஜித் சொன்னது ரொம்ப கரிட்டு, ஜால்ரா போடாத துணிஞ்சு கொரல் உட்டாரு பாரு, அதுக்கே ஒரு சலாம் போடணும், அத்த வுட்டு சொம்மா தொட்டதுக்கெல்லாம் தமிழன்,தமிழன்னுட்டு இருக்குற கொஞ்ச நஞ்ச தமிழ் ரோசத்தையும் கெடுத்துருவானுங்க போலக்குது. சோத்தில மன்னுவிழரா மேரி இருந்தாக்கா தமிழன் பாசம் பொத்துக்கும் இவனுங்களுக்கு.இவேன்லாம் ஒரு ஆளு! சிறுத்தை,தங்கம் இதுங்க பெற கெடுத்துக்கினு.நீ கவலைப்படாத தல.

அ.ஜீவதர்ஷன் said...

George

//this is super...//

thanks

.............................................

"ராஜா" from புலியூரான்

//ரஜினி மற்றும் அஜித்தின் மேல் மேல் வீசப்படும் குற்றசாட்டு அவர்கள் தமிழன் இல்லை என்பதுதான், அது உண்மைதான் தமிழனை ஏமாற்ற தெரியாதவன் எப்படி தமிழனாய் இருக்க முடியும்...//

நியாயமான கூற்று


//if you have time plz read my opinion about this issue on http://apkraja.blogspot.com/2010/02/blog-post_18.ஹ்த்ம்ல்//

இதோ கிளம்பியாச்சு

...........................................

karthik

// (// முதலாவதாக பின்னூட்டம் போட்டவருக்கு//) உண்மை எது வதந்தி எது எண்டு வித்தியாசம் தெரியாமல் இருக்கும் இவரை நினைத்தால் பாவமா இருக்கு.இவர் மாதிரி அரை வேக்காடுகளை அறிவிப்பாளர்களாக வைத்திருக்கும் வானொலிய நினைத்தால்தான் அதை விட பாவமாக இருக்கு//

தனிப்பட்ட தாக்குதல்கள்(தொழில் சம்பத்தப்பட்ட ) வேண்டாமே, pls .

.............................................

V R

//உங்களை போன்ற சில்லறை ஈன பிறவிகள் திருந்த இன்னுறு பாரதி பெறக்கனும். இதுதான் உங்கள் எழுத்து சுதந்திரம் என்றால் நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்.//


பாரதியை பற்றி எழுதும் போதாவது கொஞ்சம் எழுத்துப் பிழைகளை தவிர்த்திருக்கலாம், நான் ஈனப்பிறவியாவே இருந்திட்டுபோறான் உம்மைபோன்ற நல்ல பிறவிகள் சமூகத்தை காப்பாற்றட்டும். நீர் திட்டித்தான் நாசமாய்ப்போகும் நிலையில் எமது நாடு இல்லை, அது ஏற்கனவே நாசமா போய்த்தான் இருக்கு. உமது 'அறம் பாடலுக்கு' நன்றி.

அ.ஜீவதர்ஷன் said...

உங்கள் நள(ல) பாகன் ஆனந்த்

//சினிமா காரர்களுக்கு பிரச்னை வரும் போது சாதியை கையில் எடுப்பது புதிதல்ல.விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி,பத்திரிக்கையளர்களை விமரிசித்த விவேக் எல்லாம் சமீப காலமாக சாதி சங்கங்களிடம் அடைக்கலம் புகுவது...அபாயத்தின் அறிகுறி//

இந்த தங்கங்கள் பித்தளைகள் இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது.

................................


கிரி

//இவர்கள் இப்படி செய்வதால் ரஜினியின் மதிப்பு கூடுமே தவிர கண்டிப்பாக குறையாது.//

புத்திக்கு தெரியுது , ஆனா மனசு கேக்கலையே.


..................................

suther

//இந்த தங்கத்துக்கு போலீஸ்காரன் பத்தாது.. வேற ....வேற.......வேற......வேட்டைக்காரன் தான் வேணும் ...//


ஏங்க வேற வேட்டைக்காரன்?

.......................................


shankar

//சார்,நீங்க சொல்வது மிக சரி ,ரஜினி கை தட்டினாலும் குற்றம் என்று சொல்வது ,இவர்களை என்ன வென்று சொல்வது ??//

தலைவிதி

.......................................


karthik

//V R, உங்கட பிறப்ப பத்தி நியூஸ் போடவில்லையே இது ஒரு பித்தளை பத்தின நியூஸ் அதுக்கு ஏன் உங்களுக்கு கோபம் வருது//

thanks for your support

..................................

தர்ஷன்

//ரஜினியே சொன்னத் தவளைக் கதைத்தான் ஞாபகம் வருகிறது. சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை//

உண்மைதான் சார்.

.................................

chosenone

//பதிவுக்கான கருத்தை மாட்டும் சொல்லிட்டு அடங்கு!அடிப்படை நாகரீகமே தெரியாத நீ , support க்கு பாரதிய வேற கூப்பிடுரியா ???//

பக்கத்து வீட்டு பாரதிங்கிற பொண்ண கூப்பிடுறாரு, விட்டிடுங்க பாவம்....

அ.ஜீவதர்ஷன் said...

ganapathy

//இதுவும் கருணாவின் திருவிளையாடல்களில் ஒன்று//

திருவிளையாடலின் முடிவு பாராட்டு விழாத்தானே.

....................................


Lesly

//நீ ஒரு உண்மையான உணர்வுள்ள தமிழன் என்றால் இப்படி எழுதி இருக்க மாட்டாய்.
ஜாக்குவார் தங்கம், நடிகர் சங்கத்தின் கருத்து அஜித்துக்கோ அல்லது ரஜனிக்கோ எதிரானது அல்ல. athavathu தமிழனுக்கு சார்பானது மட்டுமே. நீ கொஞ்சம் அடக்கி எழுது தமிழ் உணர்விருந்தால்.//

புறம்போக்கு ,உனக்கு தெரிந்தது அவளவுதான். அரைவேக்காட்டு பயலே உன்னை மாதிரி தமிழை வைத்து பிச்சை எடுக்க நான் ஆளில்லை, உன்னைவிட எனக்கு தமிழிலும் தமிழர்களிலும் நிறைய அக்கறை இருக்கு, உன்ர வகுப்பை யாரவது குப்பனுக்கோ சுப்பனுக்கோ போய் நடத்து, இங்க வேண்டாம். இந்த தமிழ் உணர்வாளர்கள் என்று வேஷம் போட்டுக்கொண்டு இங்கவராத. உன்னைவிட தமிழுக்காக நிறைய அடிவேண்டியிருக்கிரம், அடி வேண்டிக்கொண்டிருக்கிறம், இங்கவந்து சீனை போடாத.முதல்ல மத்த இனத்தவனை மதிக்க கத்துக்கோ தமிழ் தானாய் வளரும். நீ வாழவைக்க தமிழன் ஒன்றும் அநாதை இல்லை.

அ.ஜீவதர்ஷன் said...

வேலூர் ராஜா

//அஜித் சொன்னது ரொம்ப கரிட்டு, ஜால்ரா போடாத துணிஞ்சு கொரல் உட்டாரு பாரு, அதுக்கே ஒரு சலாம் போடணும், அத்த வுட்டு சொம்மா தொட்டதுக்கெல்லாம் தமிழன்,தமிழன்னுட்டு இருக்குற கொஞ்ச நஞ்ச தமிழ் ரோசத்தையும் கெடுத்துருவானுங்க போலக்குது. சோத்தில மன்னுவிழரா மேரி இருந்தாக்கா தமிழன் பாசம் பொத்துக்கும் இவனுங்களுக்கு.இவேன்லாம் ஒரு ஆளு! சிறுத்தை,தங்கம் இதுங்க பெற கெடுத்துக்கினு.நீ கவலைப்படாத தல.//

தமிழையோ தமிழனையோ காரணமாக கூறி இன்னொருவனுக்கு சேறு பூசும் இந்த நாய்கள் தமிழர்களே இல்லை, பகைவர்களை நெஞ்சில் குத்திய இனம்தான் தமிழினம், இந்த நாய்கள் போல முதுகில் குத்துபவர்களில்லை.

JS RAMKUMAR said...

இதை பற்றி பேச ஜாகுவார் தங்கத்திற்கு எந்த அருகதையும் இல்லை. முதலில் அவன் மேல் உள்ள அசிங்கத்தை அவன் துடைத்து கொள்ளட்டும்.

அஜித் சொன்னது முற்றிலும் சரியே. ரஜினி அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் சரியே.

இப்படிக்கு

உண்மை தமிழன்.

R.Gopi said...

ஜாக்குவாரோட டங்குவார அறுத்துட்டீங்களே...

ரஜினியை பார்த்து பொறாமைப்படுவது, அவரின் திரையுலக ஆளுமையையும், உயரத்தையும் பார்த்து பெரு மூச்சு விடுவது... இதெல்லாம் சகஜம் தானே...

அவரை பற்றி ஏதாவது சொன்னால், அவர் கவலைப்படுவதில்லை என்பதாலேயே இது போன்ற அரைவேக்காடுகள் எல்லாம் கூவுகின்றன...

ம்ம்ம்... இவர்களுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும்...

அ.ஜீவதர்ஷன் said...

@ R.Gopi


உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்

r.v.saravanan said...

இந்த பதிவிற்கு தலைப்பு பார்த்ததும் ஆரம்பித்த சிரிப்பு போட்டோ பார்த்ததும் தொடர் சிரிப்பானது

நன்றி எப்பூடி

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan

//இந்த பதிவிற்கு தலைப்பு பார்த்ததும் ஆரம்பித்த சிரிப்பு போட்டோ பார்த்ததும் தொடர் சிரிப்பானது //

உங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

edwin ajith said...

mankatha da

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)