Tuesday, February 9, 2010

விஜயின் வெயிட்டும் ரைட்டும்.

ஜெயம் ராஜாவுக்கு வெயிட்டும் சித்திக்குக்கு ரைட்டும சொல்லியுள்ளார் விஜய்.

விஜயின் 51 ஆவது படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக கூறப்பட்டது, நிச்சயமாக அது ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் விஜயின் வழமையான முழுநீள அக்ஷன் படமாக இல்லாமல் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. விஜயிடம் இருந்து எதிர்பார்ப்பது வித்தியாசமான படங்களையில்லை , வர்த்தகரீதியான படமானாலும் ஜனரஞ்சகமான படங்களையே.ஜெயம் ராஜாவுடன் இணையும்போது அதற்கான சந்தர்ப்பம் அமையும் வாய்ப்பு இருந்தது, ஆனால் விஜய் அந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு தனது அடுத்தப்படத்தை 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் சித்திக்கிடம் ஒப்படைத்துவிட்டார்.மலையாளத்தில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'பாடிகார்டு' திரைப்படத்தை ரீமேகே செய்யப்போகிறார்களாம், நயன்தாரா - திலீப் நடித்த இந்த மலையாளப் படத்தின் தமிழ் உரிமையை விஜய் வாங்கியுள்ளார் , ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்ட 'பிரண்ட்ஸ்' கொடுத்த வெற்றியை தற்போது விஜய் மீண்டும் இந்த ரீமேக்கில் எதிர்பார்த்துள்ளார். சித்திக் பிரண்ட்சுக்கு பின்னர் தமிழில் இயக்கிய இரண்டு படங்களான 'எங்கள் அண்ணா' மற்றும் 'சாது மிரண்டால்' ஆகிய இரண்டுமே சிறந்த நகைச்சுவை திரைப்படங்கள். எங்கள் அண்ணாவில் வடிவேலு, பாண்டியராஜன், M.S. பாஸ்கர் கூட்டணியும் சாது மிரண்டாலில் பிரசன்னா, கருணாஸ் கூட்டணியும் கலக்கியிருப்பார்கள்.ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களிலும் காமடியை தவிர வேறொரு சிறப்பம்சமும் இல்லை,மோசமான திரைக்கதையை தனது காமடியால் மறைக்கும் வித்தை தெரிந்தவர் சித்திக்.விஜயை வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் 'பிரியமானவளே' என்ற திரைப்படத்தை தயாரித்த சிவராஜ் வெங்கடராஜூ இந்த புதிய படத்தை தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு நாயகியாக அசின் நடிக்கிறாராம்.முன்பெல்லாம் விஜய் பொண்டாட்டி கையால் 'மீன்பொரியல் 'வாங்கி சாப்பிட்டவர் (சங்கீதாவின் மீன்பொரியல் என்றால் தனக்கு உயிர் என்று அசின் பேட்டியே கொடுத்தவர் ) பின்னர் அது கசக்கியதாலோ என்னவோ தமிழைவிட்டே ஓடி அமீர்கான் வீட்டில் 'றால்' பொரியலும், சல்மான்கான் வீட்டில் 'கணவாய்' பொரியலும் சாப்பிட்டுவிட்டு இப்போது மீண்டும் மீன் பொரியலுக்காக விஜய் வீட்டுக்கு ஓடிவந்துள்ளார்."நாலு சண்டை, ஐந்து பாட்டு , மூன்று வில்லன் பார்சல்" என விஜய் ஓடர் குடுக்காதவரை இந்தப்படம் விஜயை பொறுத்தவரை வித்தியாசமான படமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. திரைக்கதை ஓட்டையாக இருந்தாலும் சித்திக் அதை காமடியால் அடித்துவிடுவார், இந்தப்படத்தில் விஜய் நடித்தால் ஒருவேளை அவர் தனது அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் ஒரு வெற்றியை பெறும் சந்தர்ப்பம் உள்ளது.

18 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

///அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், "சுறா"!!! என ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் ஒரு வெற்றியை பெறும் சந்தர்ப்பம் உள்ளது.///
அட பாவி !!! சுறா ஷூட்டிங்கே இப்போ தான் start பண்ணி இருக்காங்க ,அதுக்குள்ள தொழ்வியா ?
உங்களுடைய திர்க -தரிசனம் எங்கள மெய் சிலிர்க்க வைக்குது .....
இப்பவே கன்ன கட்டுதே .....

DR said...

அப்புடியே எந்திரன் படம் வெற்றி படமா இல்ல தோல்வி படமான்னு பார்த்து சொன்னீங்கன்ன உங்களுக்கு புண்ணியமா போகும்...

சுறா வை தோல்வி படம் என்று ஒரு தலை பட்சமாக அறிவித்ததற்கு நான் என்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றேன்...

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//அட பாவி !!! சுறா ஷூட்டிங்கே இப்போ தான் start பண்ணி இருக்காங்க ,அதுக்குள்ள தொழ்வியா ?
உங்களுடைய திர்க -தரிசனம் எங்கள மெய் சிலிர்க்க வைக்குது .....
இப்பவே கன்ன கட்டுதே .....//


நான் சொல்லலைங்க, விஜய் சுராவும் வேட்டைக்காரன் மாதிரித்தான் சுராவும் இருக்கும் என்று தன வாயாலேயே வாக்குமூலம் குடுத்தாரு, வேட்டைக்காரன் மாதிரி என்றால் எப்படி வெற்றிப் படமாகுமேன்ர சின்ன லாகிக்தான், சனியனை தூக்கி பனியனுக்க பொட்டுடன் என்று நினைக்கிறான், ஆரம்பியுங்க....


Dinesh

//அப்புடியே எந்திரன் படம் வெற்றி படமா இல்ல தோல்வி படமான்னு பார்த்து சொன்னீங்கன்ன உங்களுக்கு புண்ணியமா போகும்...

சுறா வை தோல்வி படம் என்று ஒரு தலை பட்சமாக அறிவித்ததற்கு நான் என்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றேன்...//


அண்ணே சங்கரோ, ரஜினியோ என்திரன் இன்னபடம் மாதிரித்தான் (சிவாஜி) மாதிரி இருக்குமென்று சொல்லல, அப்படி சொல்லியிருந்தா வெற்றியா , தோல்வியா என்று சும்மாவாச்சும் சொல்லலாம், ஆனால் விஜய்தான் சுறா வேட்டைக்காரன் போலத்தான் இருக்கும் என்கிறாரே, அதுதான் இந்த சின்ன லாஜிக்.

பெண்மணி said...

எங்களை நாகரிகமான முறையில் கருத்துகூற சொல்லும் நீங்கள் சூட்டிங்கே முடியாத சுறா படம் தோல்வி என்பது எந்த வகையில் நாகரிகம்

Unknown said...

முடிவே பண்ணிட்டிங்களா..., நடக்கட்டும்.. நடக்கட்டும்..

தமிழ் குமார் said...

இப்படியே விஜயை ஓடிட்டு இருங்க அவரு ராகுல் காந்திய பாக்குற அளவுக்கு போய்ட்டாரு.பதிவு எழுத வந்தா நடு நிலைமையா எழுதுங்க.

karthik said...

//தமிழ்குமார்//
விஜய் நல்ல கதைகளை (commercial படமாக இருந்தாலும்) தெரிவு செய்து நடித்து இருந்தால் சோனியா காந்தியயே சந்திச்சு இருக்கலாம் (என்ன கலைஞர் சோபா கல்யாண மண்டபத்த இடிச்சு இருப்பார்)

chosenone said...

//இப்படியே விஜயை ஓடிட்டு இருங்க அவரு ராகுல் காந்திய பாக்குற அளவுக்கு போய்ட்டாரு.பதிவு எழுத வந்தா நடு நிலைமையா எழுதுங்க//.....
தமிழ் குமார் ......விஜய் ராகுல் காந்திய சந்தித்ததற்கும் அவோரோட படங்களை விமர்சிப்பதற்கும் என்ன சம்பந்தம் ?
இந்த பதிவரை நடுநிலைமையா எழுத அறிவுரை சொல்லும் நீங்கள் ஒரு அரசியல் நிகழ்வுக்கும் சினிமா தகவலுக்கும் முடிச்சி போடுறிங்க .
இது பதிவுலக ரவுடிதனம் ...
உங்க ஏரியா ரவுடி எப்படி தன்னுடய சொல் மற்றவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்று நினைப்பானோ அதேதான் நீங்கள் பதிவுலகில் செய்ய முற்படுகிறீர்கல்...
கடைசியா என்னதான் சொல்லவாறீங்க
//.........விஜய் எம்புட்டு பெரிய ஆளு ! அவர பத்தி எக்குத்தப்பா எழுதாம நல்லதா ரெண்டு வார்த்த எழுதி பொழைக்கிற வழிய பாரு ...// உங்களையே அறியாம அச்சு அசலா விஜய் பட வில்லன் மாதிரியே பேசுறிங்களே !!!......தன்னுடைய சுய தன்மைய self ஐ துளைத்து நிக்கிற உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .
என்னை பொறுத்தவரை விஜய் பத்தி எழுதுகையில் எவளவு காரசாரத்தை குறைக்க (downplaying) முடியுமோ அவளவு குறைத்து ,யார் மனதும் வருந்தாத படிதான் எழுதுகிறார் .
உண்மையிலே உங்களுக்கு "quote unquote" நடுநிலையான விமர்சனங்கள் வேண்டும் என்றால் ஒரு தொழில்ரீதியான professionel திரைப்பட விமர்சகர் ஒருத்தர் கிட்ட "உங்கள் விஜய்" பட சி.டி எதாவது கொடுத்து விமர்சனத்தை பெற்று பாருங்கள் ...
அவன் எந்த நாட்டு விமர்சகராக இருந்தாலும் தன் மொழியில் உள்ள கீழ்த்தரமான வார்த்ய்கள் உபயோகிக்காமல் இருக்க மாட்டான் என்பதுக்கு நான் உத்தரவாதம் .....
காரணம் : ஒரு கொடுக்க பட்ட அச்சுக்கு
பொருளை மற்றும் மாற்றி எடுப்பது எப்படி திரைபடம் ஆக முடியும் ?
இதை நான் 3ம் வகுப்பு படிக்கும் போதே வெற்றிகரமாக செய்து முடித்தேன் .

இப்பொழுது விஜய் அதை தான் வருட கணக்கில் செய்து வருகிறார்.
ஒரே கதை ,ஒரே ஹீரோ ,5 பாட்டு ,4 பைட்,முதல் பாதி கொமெடி ,ரெண்டாம் பாதி ரணகளம் ..இந்த அச்சுக்கு ஹிரோஇன்,வில்லன் ,மியூசிக் மற்றும் படத்துக்கு படம் மாறி மாறி கழுத்தறுக்கும் .

இப்போ சொல்லுங்க ! விஜயோட சுறா வும் அவோரோட முந்தய படங்களின் சாயல் இருக்குமாயின் அதுவும் தோல்விதான் என்று சொல்வதற்கு நெற்றிக்கண் பார்வை அவசியமில்லை . ரெண்டு கண்ணும் தெளிவான சிந்தனையும் போதும்.

இதை தவிர , விஜய் ராகுல் காந்திய சந்தித்ததற்கே இப்படி எண்டால் , ஒரு விபத்தில் விஜய் எம் .பி - கிம் .பி ஆனால் உங்களுக்கு கொலை மிரட்டலே வரும் போல .....

பி : கு : இவளவு பெரிய comment போட்டதுக்கு மன்னிச்சிகோங்க அண்ணாச்சி !

Sukumar said...

//சுறா என ஐந்து தொடர் தோல்விகளுக்கு// இந்த காமெடியை ரொம்பவும் ரசிச்சேன்..

அ.ஜீவதர்ஷன் said...

k

//எங்களை நாகரிகமான முறையில் கருத்துகூற சொல்லும் நீங்கள் சூட்டிங்கே முடியாத சுறா படம் தோல்வி என்பது எந்த வகையில் நாகரிகம்//


வணக்கம்னே, விஜய் மட்டும் பிளாப்பான ஆதியையும், வில்லுவையும் , வேட்டைக்காரனையும் ஹிட் என்பார், அட்டர் பிளாப் குருவிக்கு வெற்றிவிழா கொண்டாடுவார், படம் ரிலீசான அடுத்தநாளே படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்பார்,அவரோட அப்பா இவரால யாருக்கும் எந்த நஷ்டமும் வரலயின்னு கதைவிடுவார். இதெல்லாம் நாகரிகமேன்றால் நான் சுறா தோல்வி என்றதும் நாகரீகமே.

.......................................

பேநா மூடி

//முடிவே பண்ணிட்டிங்களா..., நடக்கட்டும்.. நடக்கட்டும்..//

நான் சொல்லலீங்கோ, இது நம்ம தளபதியே பட்டும் படாமலும் சொன்னது.


...........................................

தமிழ் குமார்

//இப்படியே விஜயை ஓடிட்டு இருங்க அவரு ராகுல் காந்திய பாக்குற அளவுக்கு போய்ட்டாரு.//

to கிரேசி மோகன்

பாத்து சார் இங்க மேல இருக்கிற வசனத்தை பாத்தீங்களா, உங்களுக்கு போட்டியா காமடி வசனமெழுத தமிழ் குமார் என்னு ஒருத்தர் தயாராகீட்டார்,அவரோட வசனத்தை பார்த்து இன்னும் நானும் ஒரு பத்துபேரும்( இந்த காமடியை கேட்ட ) சிரித்து கொண்டிருக்கிறோம்.


//பதிவு எழுத வந்தா நடு நிலைமையா எழுதுங்க.//

வந்திட்டாரு வாத்தியாரு டியூசன் எடுக்க, உங்களுக்கு தெரிந்த யாராவது ஒரு நாடு நிலையான பதிவரை(அனைத்து விடயத்திலும் ) காட்டுறீங்களா? எல்லோரும் தமது எண்ணங்களை பதிவு செய்வதுதான் பதிவுலகம், அதில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவற்றை ஆதரித்தும், பிடிக்காததை விமர்சித்தும்தான் எழுதுவார்கள். இது கூட தெரியாதா சார்? இன்னும் நீங்க வளரனும் சார்....

அ.ஜீவதர்ஷன் said...

karthik

உங்களுக்கு பதில் சொல்லுவாருன்னு நினைக்கிறன்.... உங்கள் வருகைக்கு நன்றி ..

.........................................

chosenone


பெரிய பின்னூடத்தில ஆதரவா பேசியதற்கு பெரிய நன்றி.....


............................................


Sukumar Swaminathan


//சுறா என ஐந்து தொடர் தோல்விகளுக்கு// இந்த காமெடியை ரொம்பவும் ரசிச்சேன்..


நீங்கவேற என்னோட சேர்த்து உங்களையும் கும்மபோறாங்க -:)

சகா.. said...

நான் பொதுவாக பதிவுகளை படிப்பதோடு சரி எந்த பதிவிற்கும் பின்னூட்டல் போடுவதில்லை.ஆனால் நீண்ட நாட்களாக சொல்ல வேண்டும் என்று எண்ணிய விஷயத்தை இன்று உங்கள் ப்ளாக்மூலமாக பதிவுலகத்திற்கு தெரிவிகின்றேன். இன்று தெரிந்தோ தெரியாமலோ பதிவுலகம் மக்கள் சக்தியாக மாறிவிட்டது.இன்னும் சொல்ல போனால் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு பதிவர்களின் பங்கு உள்ளது.ஆனால் உங்களை போன்ற பதிவர்கள் என்ன செய்கிறிர்கள்?உங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் படம் என்றால் முதல் நாளே படத்தை பற்றி தாறுமாறாக விமர்சனம் எழுதுகிறிர்கள்.இதற்கு சமிபத்திய உ.ம். ஆ.ஒருவன், வேட்டைக்காரன்,கோவா..இவ்வாறு சொல்வதால் நான் யாருக்கும் ரசிகனோ என்று என்ன வேண்டாம்இது என் மனக்குமுறல் மட்டுமே...இதாவது பரவாயில்லை இன்னும் பலர் படமே பார்க்காமல் விமர்சனம் எழுதுகிறார்கள்..பதிவர்களே உங்கள் முதலீடு அதிகபட்சம் 200ரூபாய் டிக்கெட் விலை மட்டுமே ஆனால் உங்கள் விமர்சனத்துக்கு பின்னால் எவ்வளவு நஷ்டங்கள்??பத்து வருடங்களுக்கு முன்னால் சுமாரான படம்கூட ஓரளவு கலக்சன் ஆகும்.ஆனால் இன்று நல்ல படங்கள் கூட உங்களால் பிளாப் ஆகிறது..எனக்கு என்ன வருத்தம் என்றால் திரு.எப்பூடி,தோல்வி படங்கள் அதிகரிததற்கு காரணம் ப்ளாகர்கள்
தான் இன்று சொல்லிய நீங்களே
///அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், "சுறா"!!! என ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் ஒரு வெற்றியை பெறும் சந்தர்ப்பம் உள்ளது.///
இப்படி ஒரு இடுகையை எழுதியதுதான்கடைசியாக,பதிவர்களே உங்களிடம் மாபெரும் சக்தி உள்ளது அதை தயவு செய்து ஆக்கமாக பயன்படுத்துங்கள்..திரு.எப்பூடி,உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதை அப்படியே எடிட் பண்ணாமல் போடவும்..

நிர்மல்குமார்,இந்தோனேசியா.

chosenone said...

திரு நிர்மல் அவர்களுக்கு !

///பதிவர்களே உங்கள் முதலீடு அதிகபட்சம் 200ரூபாய் டிக்கெட் விலை மட்டுமே ஆனால் உங்கள் விமர்சனத்துக்கு பின்னால் எவ்வளவு நஷ்டங்கள்??பத்து வருடங்களுக்கு முன்னால் சுமாரான படம்கூட ஓரளவு கலக்சன் ஆகும்///

உங்களை பொறுத்த வரை சினிமா என்பது வெறும் லாப நஷ்ட கணக்கு ....
தமிழ் முதளிட்டாலர்கலுகளுக்காக கவலை படும் நீங்கள் ஒரு நல்ல படைப்பு சூழலை உருவாக்குவதற்கு யோசித்துகூட இருக்கமாடீர்கள்!
திரைப்பட மொழியின் அடிப்படை கூட தெரியாமல் , வெறும் லாப நஷ்ட கணக்கு வைத்துகொண்டு அடுத்தவனுக்கு உபதேசம் தருகிறீர்கள் .

இந்தியாவிலேயே எந்த துறையிலும் சிறந்த திறமைசாலிகள் தமிழில் உள்ளனர் ....ஆனால் இவர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த படைபுக்காக முக்க வேண்டியதா இருக்கு.
இதற்கு முக்கிய காரணம் கூர்மையான விமர்சனங்கள் இல்லாதது தான்.
குறைகளை விமரசனத்துக்கு உள்ளாக்காமல் மறைத்து வைத்து,அதற்கு வெற்றி விழா வேற கொண்டாடி எண்ணத்தை காண போகிறோம் .

அ.ஜீவதர்ஷன் said...

nirmal

நீங்கள் குறிப்பிட்ட "தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம் " பதிவுக்கு பின்னர் எந்தப்படத்துக்கும் இதுவரை விமர்சனம் எழுதவில்லை உண்மையை எழுதினால் படங்கள் தோல்வியடைகின்றன என்ற குற்றசாட்டே இதற்கு முக்கிய காரணம். கோவா, ஆயிரத்தில் ஒருவன் படங்களை பற்றி எந்தவிதத்திலும் குறைத்து எழுதவில்லை (செய்திகளையே), அதுதவிர வேட்டைக்காரனை வெற்றியடைய செய்வதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடபோகிறது? ஊர்க்காசை கொள்ளையடித்த தயாநிதியின் பணமும், தன ரசிகனுக்கே திருப்தியாக படம் கொடுக்க முடியாத விஜய்க்கும் பக்கபாட்டு பாட சொல்கிறீர்களா? விஜய் கில்லி, போக்கிரி போன்ற ஜனரஞ்சகமான படங்களில் நடித்தால் வரவேற்கும் முதல் ஆளாக இருப்பேன், அதற்காக சிவகாசி, ஆதி, வில்லு, குருவி, வேட்டைக்காரன் போன்ற சப்பை படங்களுக்கு முதல் எதிரியும் நான்தான், விஜையே சுறா இந்த லிஸ்ட் என்ற பிறகு என்ன வரவேற்பு வேண்டிக்கிடக்கு?

நான் நினைத்தாலும் உங்கள் கமெண்டை எடிட் செய்ய இயலாது. ஏன்னா எனக்கு எடிட் செய்ய தெரியாது.....


.......................................

chosenone


சச்சின் -200 , ஆதி -100 , குருவி- வெற்றிவிழா, வேட்டைக்காரன்? இந்த மாதிரி தோல்விப்படங்களுக்கு எடுக்கும் வெற்றிவிழா கொண்டாட்டங்கதான் நம்மள உசுப்பேத்துது....

damildumil said...

//சுறா வை தோல்வி படம் என்று ஒரு தலை பட்சமாக அறிவித்ததற்கு நான் என்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றேன்...//

நானும். அதென்ன தோல்வி? படு தோல்வின்னு தானே இருக்கனும்?

//chosenone
சச்சின் -200 , ஆதி -100 //
இது என்ன? பலியானவர்களின் எண்ணிக்கையா?

chosenone said...

mr:எப்பூடி ,
தான் ஒரு விஜய் ரசிகன் என்றோ அஜித் ரசிகன் என்றோ பின்மடையில் label குத்திகொண்ட பிறகு அவர்கள் என்னத்த செய்தாலும் சூப்பரா தான் தெரியும் , அவர்கள் நடித்த படங்களை விமர்சிக்கும் எங்களை மாதிரி ஆட்களை பார்த்து கோபமடைய தான் செய்வார்கள் .
படைப்பையும் , படைப்பாளியையும் பிரித்து பார்க்க தெரியாததன் விளைவு !!!

Unknown said...

விஜய் தான் மொக்கை படம் தருகிறார்கள் என்றால். அஜித் தருவது எல்லாமே நல்ல படங்களா?

அ.ஜீவதர்ஷன் said...

damildumil


//நானும். அதென்ன தோல்வி? படு தோல்வின்னு தானே இருக்கனும்?//

முடியல

.......................................

chosenone

//mr:எப்பூடி ,
தான் ஒரு விஜய் ரசிகன் என்றோ அஜித் ரசிகன் என்றோ பின்மடையில் label குத்திகொண்ட பிறகு அவர்கள் என்னத்த செய்தாலும் சூப்பரா தான் தெரியும் , அவர்கள் நடித்த படங்களை விமர்சிக்கும் எங்களை மாதிரி ஆட்களை பார்த்து கோபமடைய தான் செய்வார்கள் .
படைப்பையும் , படைப்பாளியையும் பிரித்து பார்க்க தெரியாததன் விளைவு !!!//


இவர்களுக்காகவாவது பார்க்க கூடிய மாதிரி படங்களில் நடிக்கட்டும்


.....................................


raj

//விஜய் தான் மொக்கை படம் தருகிறார்கள் என்றால். அஜித் தருவது எல்லாமே நல்ல படங்களா?//

நான் அப்பிடி சொன்னனா

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)