Thursday, February 11, 2010

பாலாவுடன் கைகோர்க்கும் விக்ரம்

விக்னேஷ்,ரஞ்சித்,விக்ரம்,ராம்கி ஆகியோரின் படங்கள் எங்காவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் ஹீரோ யாரென கண்டுபிடிப்பது கஷ்டம் என்றதொரு நிலையிருந்தது.ஏனெனில் இவர்கள் கிடைக்கும் படங்களிலெல்லாம் நடித்து விட்டு எப்பவாச்சும் தமக்கும் ஒரு ப்ரேக் கிடைக்குமென நம்பிக் கொண்டிருந்தனர்.அப்படி வெளிவந்தவொரு படம்தான் சேது.இதுவும் பத்தோடு பதினொன்றாக தட்டி கழிக்கப்பட்டாலும் பின்னர் பலரினது சிறப்பான விமர்சனங்களை பெற்று படம் லேட் பிக்கப் ஆகியது.அன்றிலிருந்து தான் விக்ரம் சியானாக அனைவரினாலும் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார்.இந்தப் படம்தான் தமிழ்சினிமாவின் "வித்யாசம்" என்ற டிரென்ட் செட்டரை உருவாக்கிய பாலாவையும் தமிழ் சினிமாவுக்கு தந்தது.பின்னர் இவர்கள் கூட்டணியில் உருவான பிதாமகன் பிலிம் பெயார்(film fare) விருதுகளை அள்ளி குவித்ததோடு விக்ரமுக்கு தேசியவிருதையும் பெற்றுக்கொடுத்தது.அதன் பின் பாலா இயக்கிய நான்கடவுள் பாலாவுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.விக்ரமிடம் எந்த நேர்காணலிலும் கேட்கப்படும் கேள்வி மீண்டும் பாலாவுடன் இணைவீர்களா? அதற்கு விக்ரமும் "பாலா எப்போ ரெடின்னாலும் கால்ஷிட் கொடுக்கத்தயார்" என்பார்.இப்பொழுது இந்தகூட்டணி மீண்டும் கைகோர்க்கும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது .தமிழ்ப்படத்தை தயாரித்த தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.தமிழ்ப்படம் ரிலீசாகும் போதே தமது அடுத்த படம் தூங்காநகரம் என கூறியிருந்தார்.அடுத்த படமாக அஜித்தின் ஐம்பதாவது படத்தை கௌதம் மேனனின் இயக்கத்தில் தயாரிக்கவிருக்கும் தயாநிதிக்கு பாலா விக்ரம் படம் நான்காவது படமாகவிருக்கும்.தற்போது விக்ரம் செல்வராகவனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதன்பின் மோகன் நடராஜன் தயாரிக்கும் பூபதிபாண்டியன் படத்திலும் நடிக்கிறார்.அதேபோல பாலா ஆர்யா விஷாலை வைத்து அவன்இவன் படத்தை இயக்கிவருகிறார்.இவ்விருவரும் இப்படங்களை முடித்த பின்னர் இந்த கூட்டணி அமையலாமெனத் தெரிகிறது.விக்ரமுக்கும் பாலாவுக்கும் பெரியதொரு தொகை சம்பளமாக நிச்சயிக்கப்பட்டு சுமுகமாக முடிந்திருப்பதால் மீண்டுமொரு சிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம்.பாலா மதுரையில எந்த லொகேஷன் வேணும்னாலும் சொல்லுங்க.தயாரிப்பாளர் பார்த்துப்பார்.அஞ்சா நெஞ்சனா அசத்துங்கப்பா

4 வாசகர் எண்ணங்கள்:

வெற்றி said...

இதெல்லாம் இருக்கட்டும்..நீங்க எப்போ அசல் விமர்சனம் எழுத போறீங்க ?

karthik said...

விக்ரம் பாலா கூட்டணி தயாநிதி அழகிரியின் ஐந்தாவது படம் அதற்க்கு முதல் வெற்றிமாறன் அழகிரி கூட்டணியில் வாடா சென்னை படம் எடுப்பதாக தகவல் (நாயகன் கார்த்தி, நாயகி அனுஷ்கா)

Unknown said...

ஆனா லேட்டாகுமோ

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//இதெல்லாம் இருக்கட்டும்..நீங்க எப்போ அசல் விமர்சனம் எழுத போறீங்க ?//

நான் இன்னும் எப்படி விமர்சனம் எழுதுவதென்று தெரியாமல் குழம்பி இருக்கிறன், உண்மையை எழுதினா அதிகமான படங்களை மோசமாகத்தான் விமர்சிக்க வேண்டும், அது படத்தின் வெற்றியை பாதிக்கும், சரி நல்ல படமாபாத்து எழுதுவம் என்றால் இன்னும் சந்தர்ப்பம் வரல, இப்ப உங்க கேள்விக்கு சாதகமான பதில் கிடைச்சாச்சுதானே? -:)


.....................................

karthik

//விக்ரம் பாலா கூட்டணி தயாநிதி அழகிரியின் ஐந்தாவது படம் அதற்க்கு முதல் வெற்றிமாறன் அழகிரி கூட்டணியில் வாடா சென்னை படம் எடுப்பதாக தகவல் (நாயகன் கார்த்தி, நாயகி அனுஷ்கா)//

வெற்றிமாறன் ஓகே, ஆனா கார்த்திக்கு அனுஷ்கா சித்தி மாதிரி எல்லா இருப்பா? -:)


.........................................


பேநா மூடி

//ஆனா லேட்டாகுமோ//

இது சீக்கிரம் முடியும் என்று நம்புவோம்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)