Thursday, February 18, 2010

புதிய களத்தில் சனத்

மாத்தறையில் மகிந்தவின் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி சார்பாக சனத் ஜெய சூரியா போட்டியிடப்போவதாக தெரிகிறது. இது இவர் விரும்பி எடுத்த முடிவாக இருந்தாலும் சரி இல்லாவிட்டலும் சரி தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது.இதனால் சனத் தேர்தல் வேட்பு மனுதாக்கலுக்கு முன்னர் தனது ஓய்வை அறிவிப்பார் போலுள்ளது.

முன்னர் அர்ஜுன சந்திரிகா காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்ற தேத்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விளையாட்டுத்துறை அமைச்சை எதிர்பார்த்து அது கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னை இணை அமைச்சராக பொறுப்பேற்று சிலகாலம் குப்பை கொட்டினார்(அரசியலில் ). பின்னர் மகிந்தவுடன் நல்ல நிலை இல்லாது போகவே இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகர பக்கம் நின்றார். இப்போது ஒரு பேச்சு மூச்சையும் காணவில்லை. இலங்கையின் கிரிக்கெட் தலைவராக உயர்ந்த பார்வையில் இருந்த ரணதுங்க அரசியலில் காமடி பீசாகவே பார்க்கப்பட்டார்.


இந்த நிலையில் சனத் அரசியலில் விரும்பி வரும் பட்சத்தில் விளையாட்டுத்துறை அமைச்சினை குறிவைத்துத்தான் அதிகமாக களமிறங்குவார். ஒருவேளை வெற்றிபெற்று விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பும் அளிக்கப்பட்டால் நம்ம மகேலாவினதும் சங்காவினதும் நிலைதான் கவலைக்கிடமானதாக போய்விடும் , சனத்துக்கு இவர்கள் வைத்த ஆப்பிற்கு பதில் ஆப்பு இவர்களுக்கு காத்திருக்கலாம். சனத் அரசியலுக்கு வந்து ஒன்றும் சாதிக்க போவதில்லை ஆனால் வெற்றிபெற்று விளையாட்டுத்துறை அமைச்சரானால் சனத்தின் பழிவாங்கும் படலத்தை காணலாம் என்று நினைக்கிறேன். தலைவர் மகிந்தாவின் வழிதானே தொண்டன் வழியும் ( பழி வாங்கிறதில இல்லை................. என்று சொன்ன நம்பவா போறீங்க? )

2 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

'94-'99 கால பகுதிகளில் நான் இன் ரசிகனாக காலத்தில் அந்த evergreen SL-squad இல் சனத் தான் பயம் அறியா தளபதி ..... அவர் open batting பண்ணால் அடுத்த அரை மணி நேரத்துக்கு மூச்சு கூட வாங்க மறந்துடுவேன் ......
ஆனால் இன்று அவரது நிலைமை ???****!!!...

சனத்தை பத்தி உங்கள் பதிவுகள் வாசித்தேன் ...பீல் பண்ணி எழுதி இருந்திங்க . சூப்பர் !

எப்பூடி ... said...

chosenone

//ஆனால் இன்று அவரது நிலைமை ???****!!!...//

இன்றைய சனத்தின் நிலைக்கு சனத்தின் பேராசையும் ஒருகாரணம் என்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)