Tuesday, February 16, 2010

சென்னை பாக்ஸ் ஆபிசில் அசல்,தமிழ்படம்,தீ.வி.பி

சென்றவாரம் தீராத விளையாட்டுப்பிள்ளை மற்றும் ரசிக்கும் சீமானே படங்கள் ரிலீசாயின.சத்யம்,தோரணை என இரண்டு ப்ளாப்புகளைக் கொடுத்திருந்த விஷாலுக்கு தீ.வி.பி முக்கியமான படமாகவிருந்ததது.சன்பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிட்டதால் வழக்கம் போல அரை மணிக்கொரு முறை மக்களின் பொறுமை சோதனைக்குட்பட்டு வருவது தெரிந்ததே.மற்றொரு புதுரிலிசான ரசிக்கும் சீமானே படம் வெளிவந்ததது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் இது புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படமல்ல.அறிமுககாலங்களில் அடுத்த தலைமுறை முன்னணி நடிகராக வருவாரென ஆருடம் கணிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் நவ்யாநாயர் நடித்து வெளியான படம்.

சென்னை பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை அஜித்தின் அசல் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்திருக்கின்றது.திரையரங்குகள் குறைக்கப்பட்டதாலும் முதல்வார முற்பதிவு கணிசமாகவிருந்ததாலும் தொடர்ந்து 85%கொள்ளளவுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.ஆனாலும் வசூல் பெருமளவால் வீழ்ச்சி கண்டுள்ளது.இரண்டாம் வார இறுதியில் அசல் சென்னையில் பெற்றிருக்கும் மொத்த வசூல்1.56கோடி.இறுதி மூன்று நாட்களில் இது வசூலித்தது 37,11,750(இந்திய ரூபாய்களில்).

இருப்பினும் இதை விட அதிக திரைகளில் திரையிடப்பட்ட சண் பிக்சர்ஸ் வெளியீடான விஷாலின் தீராதவிளையாட்டுப்பிள்ளை அசலை விடவும் குறைவான வசூலையே பெற்றிருக்கின்றது. மக்களுக்கு சண்ணின் விளம்பரத்தின் மீதான நம்பிக்கை குறைவடைந்ததாக எடுத்துக் கொள்ள முடியுமாவெனத் தெரியவில்லை.முதல் மூன்று நாட்களில் இது வசூலித்திருப்பது 30,52,823(இந்திய ரூபாய்களில்). ஆரம்ப வசூலே பெருமளவு திருப்தியளிக்காத நிலையில் தொடர் தோல்விகளிலிருக்கும் விஷாலுக்கு இப்படம் கைகொடுக்கும் என்பது சந்தேகமே.2010 இன் முதல் ஹிட் என அறிவிக்கப்பட்ட தமிழ்ப்படம் தொடர்ந்தும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.இப்படத்திற்கு வாரஇறுதியில் டிக்கட் கிடைப்பது இன்னமும் அரிதாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழ் சினிமாவில் ஒருபுதிய முயற்சியாக வெளிவந்த தமிழ்ப்படம் கோடம்பாக்கத்தில் சிலரை கோபமடையச் செய்திருந்தாலும் மக்கள் இப்படத்திற்கு அளிக்கும் வரவேற்பு கண்டிப்பாக முன்னணி நாயகர்களை யோசிக்க வைத்திருக்கும்.கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சிறிய பட்ஜெட் படமொன்று ஆண்டின் முதல் ஹிட் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.(2008-அஞ்சாதே,2009- வெண்ணிலா கபடிக் குழு ) சென்னையில் மட்டும் இதன் மொத்த வசூல்1.27 கோடி.இறுதி மூன்று நாட்களில் தமிழ்ப்படம் வசூலித்தது 25,11,499 (இந்திய ரூபாய்களில்)

நான்காவது இடத்தில் வெங்கட் பிரபுவின் கோவா.வெங்கட் பிரபுவுக்கு ஹாட்ரிக் மிஸ்.ஆனால் படம் ஓரளவு நன்றாகவே போய்கொண்டிருக்கின்றது.சென்னையில் இதன் மொத்த வசூல் 1.43கோடி

ஐந்தாவது இடத்தில் செல்வாவின் ஆயிரத்திலொருவன்.புத்திய படங்களின் வருகை வெகுவாக இதன் வசூலின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த இப்படம் சென்னையில் மட்டும் வசூலித்தது 3.12கோடி.

சென்ற வார இன்னொரு புதுவரவான ரசிக்கும்சீமானே படம் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை என்பது இதன் வசூலிலிருந்து தெரிகிறது.முதல் மூன்று நாட்களில் இதன் வசூல் 2,22,608 (இந்திய ரூபாய்களில்) அடுத்த வாரம் எந்த பெரிய படங்களும் ரிலீஸ் இல்லை என்பதால் பெரியளவு மாற்றங்கள் இருக்காதென நம்பலாம்.

6 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

அசலின் வெற்றி ஒரு உண்மையான வெற்றி எனலாம் எப்படி என்றால் ஒரு பக்கம் சிடி தொல்லை .
படத்திற்கு சரியான விளம்பரம் இல்லை
என்று பல மைனஸ் பாயிண்ட் இருந்தாலும் இப்படம் தொடர்ந்து வசூலில் முதல் இடத்தில இருப்பதிர்க்கு காரணம் அஜித் மட்டுமே

ஆனாலும் இனி மேலும் அஜித் அவரை நம்பும் ரசிகன் ரசிக்கும் விதத்தில் படத்தை கொடுத்தால் மட்டுமே நல்லது.
அது அவர் ரசிகருக்கு மட்டும் இல்லை அவரை நம்பி பல கோடி பணத்தை போடும் தயாரிப்பாளருக்கும் நன்றாக இருக்கும்
புது படத்தை எடுத்து தொடர்ச்சியாக தோல்வி கொடுப்பதை விட
மற்ற மொழிகளில் ஹிட் ஆனா தனக்கு ஏற்ற நல்ல கதை தேர்ந்த்தேடுது வெற்றி கொடுப்பதே இப்போதய மினிமம் உத்ரவாதம்

(இதைதான் இனி விஜய் செய்ய போறார் இப்போ விஜய்யை காப்பற்ற போவது கேரளா சேட்டன்கள்தான் எப்படியோ வெற்றி வந்தால் சரி அதுதான் விஜய் பாலிசி )

Santhappanசாந்தப்பன் said...

பைசா கணக்கோட புள்ளி விபரம் சொல்வீங்க போல இருக்கே!

ஆமா, இந்த கணக்கு எல்லாம், 40 ரூபாய் டிக்கெட்ட, 40 ரூபாய்க்கே வித்த கணக்கு....

சென்னை மற்றும் குரோம்பேட்டை, நங்க நல்லூர் தியேட்டர்ல, ஒரே விலை 50 ரூபாய், 50 ரூபாய்ன்னு கூவி கூவி விப்பாங்களே... அந்த நிலவரம்...

அப்புறம், தியெட்டர்காரவுங்களே ஆள வச்சு பிளாக்ல சொல்வாங்களே..அந்த நிலவரம்... எல்லாம் சொன்னீங்க‌ன்னா ந‌ல்லாயிருக்கும்...

Santhappanசாந்தப்பன் said...

//அடுத்த வாரம் எந்த பெரிய படங்களும் ரிலீஸ் இல்லை என்பதால் பெரியளவு மாற்றங்கள் இருக்காதென நம்பலாம். ///

அப்போ "விண்ணைத் தாண்டி வருவாயா" எப்போதாங்க ரிலீஸ்??

Unknown said...

வருங்கால முதல்வர் ஸ்ரீகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

chosenone said...

""தமிழ் படம் "" வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ....ஆனால் பிரான்சில் திரையிடப்படவில்லை .dvd எப்ப வருமோ ?

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//புது படத்தை எடுத்து தொடர்ச்சியாக தோல்வி கொடுப்பதை விட
மற்ற மொழிகளில் ஹிட் ஆனா தனக்கு ஏற்ற நல்ல கதை தேர்ந்த்தேடுது வெற்றி கொடுப்பதே இப்போதய மினிமம் உத்ரவாதம் //

இதுக்கு அஜித் பேசாம கார் ரேசையே ஓடலாம் :-)))


....................................

பிள்ளையாண்டான்


//சென்னை மற்றும் குரோம்பேட்டை, நங்க நல்லூர் தியேட்டர்ல, ஒரே விலை 50 ரூபாய், 50 ரூபாய்ன்னு கூவி கூவி விப்பாங்களே... அந்த நிலவரம்...//

//அப்புறம், தியெட்டர்காரவுங்களே ஆள வச்சு பிளாக்ல சொல்வாங்களே..அந்த நிலவரம்... எல்லாம் சொன்னீங்க‌ன்னா ந‌ல்லாயிருக்கும்...//


இதுக்கெல்லாம் கணக்கு என்கிட்ட கேட்காதீங்க, இயக்குனர் சங்கர் கிட்ட கேளுங்க, அவருக்குத்தான் இந்த மேட்டருகள் அத்துப்படி. தியேட்டர்களில் வழங்கும் புள்ளி விபரங்கள்தான் இவை, பிளாக்கில விற்பவர்களின் புள்ளி விபரத்தை யாரிடம் போய் கேட்பது?

//அப்போ "விண்ணைத் தாண்டி வருவாயா" எப்போதாங்க ரிலீஸ்??//

அடுத்த வாரம், feb 26

........................................

பேநா மூடி
//
வருங்கால முதல்வர் ஸ்ரீகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்//


வருங்கால பிரதமர் சிபிராஜ் எங்க பக்கம், மறந்திராதீங்க.

........................................

chosenone

//""தமிழ் படம் "" வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ....ஆனால் பிரான்சில் திரையிடப்படவில்லை .dvd எப்ப வருமோ ?//

இங்க மட்டும் என்ன வாழுதாம், இன்னும் திருட்டு d.v.d கூட வரல.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)