Friday, February 12, 2010

இந்தியா, பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால்...இது சரித்திர, அரசியல், பூகோள பதிவல்ல, இது ஒரு கிரிக்கெட்(கற்பனை)பதிவு

இன்று இந்தியா, பாகிஸ்தான் பிரியாதிருந்தால் இந்திய, பாகிஸ்தான் ஒருங்கிணைந்த அணி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால் 1990 முதல் இன்றுவரை (2010 ) உலகில் no 1 அணியாக இருந்திருக்கும் வாய்ப்பு அதிகம். அப்படி இருந்திருந்தால் இந்த 20 ஆண்டுகால கனவு அணியில் யார்யார் இடம்பிடிக்கிறார்கள் என்பது எனது பார்வையில் .......

துடுப்பாட்ட வரிசைப்படி ஒருநாள் போட்டி அணி

1 சச்சின் டெண்டுல்கர்

2 சாயிட் அன்வார்

3 ராகுல் திராவிட்

4 முகமட் யூசப்

5 இன்சமாம் உல் ஹாக்

6 யுவராஜ் சிங்

7 மகேந்திர சிங் டோனி (விக்கட் காப்பாளர்)

8 வாசிம் அகரம் (தலைவர் )

9 வக்கார் யூனிஸ்

10 சொஹைப் அக்தர்

11 சக்லின் முஷ்டாக்

12 ஆம் வீரர் - சாயிட் அப்ரிடி

சாயிட் அன்வருக்கு போட்டியாக கங்குலியும், சக்லினுக்கு போட்டியாக கும்ளேயும், யுவராஜ்சிற்கு போட்டியாக அப்ரிடியும் உள்ளனர். அன்வர் கங்குலியைவிட தொழில்நுட்ப ரீதியாகவும் எந்த மாதிரியான ஆடுகளத்திலும் ஆடுவதிலும் சிறப்பானவர், அது தவிர அன்வர் கங்குலியைவிட அதிகமான கிரிக்கெட் ஷொட்ஸ் விளையாடுவதிலும் வல்லவர். அதேபோல கும்ளேயை விட சக்லின் குறைந்த எக்கனமியும் , சிறந்த அவரேஜும் , அதிகமான சராசரி விக்கெட்டுகளும் (ஒரு போட்டியில் ) என சிறப்பான தகமைகளை கொண்டுள்ளார். யுவராஜ் , அப்ரிடி விடயத்தில் இருவரும் சகலதுறை வீரர்களாக இருந்தாலும் யுவராஜ் துடுப்பாட்டத்திலும், அப்ரிடி பந்து வீச்சிலும் சிறப்பானவர்கள். ஐந்தாவது பந்து வீச்சாளராக சச்சினும் பந்து வீசுவார் என்ற எடுகோளிலேயே யுவராஜ் அணியில் இடம் பிடிக்க முடிந்தது, இல்லாவிட்டால் ஆறாம் இலக்கத்தில் அப்ரிடிதான் இடம் பிடித்திருப்பார்,ஆனால் துடுப்பாட்டவரிசையின் பலம் குறைவடைந்திருக்கும். இந்த அணியின் பலவீனம், ஐந்தாவது பந்து வீச்சாளர்தான்.

துடுப்பாட்ட வரிசைப்படி டெஸ்ட்அணி

1 வீரேந்திர சேவாக்

2 சாயிட் அன்வர்

3 ராகுல் திராவிட்

4 சச்சின் டெண்டுல்கர்

5 முகமட் யூசப்

6 இன்சமாம் உல் ஹக்

7 மகேந்திர சிங் டோனி

8 வசீம் அகரம்

9 அணில் கும்ளே

10 ஜவகல் ஸ்ரீநாத்

11 வக்கார் யூனிஸ்

12 ஆம் வீரர் - ஹர்பஜன் சிங் இந்த அணியில் பெரிதாக மாற்றங்கள் தேவைப்படாவிட்டாலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில்ஸ்ரீநாத்திற்கு பதில் ஹர்பஜன் சிங் இணைக்கபடுவார்.

இப்பிடி வேல வெட்டி இல்லாம நிறைய கனவு அணிகள் எழுதி வைத்துள்ளேன் , அப்பப்ப பதிவில எதிர்பாருங்க.....

3 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

ரூம் போட்டு யோசிப்பிங்களோ ???

ஆனால், நல்ல வேலை யாழ்பானத்துல
சிவசேனா காரனுங்க யாரும் இல்ல ....
இல்லன்னா உங்கட பிஞ்சி உடம்ப பஞ்சர் பண்ணி இருப்பாங்க !!!!

திவியரஞ்சினியன் said...

தமிழ்நாட்டில் திறனிருந்தும் பலவீரர்கள் களமாடமிடியாது பாராபட்சமான தேர்வினால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல காலம் பாக்கிஷ்தான் என்ற ஒருநாடு உருவாகி, அந்த வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு வழங்கியிருக்கே.......அதைப்போய் புரிஞ்சுக்கவில்லையே!!!!!

யாழ்ப்பாணத்தில் இல்லை இந்தியாவில் சிவசேனா இருந்தாக்கூட சந்தோசப்பட்டிருக்கும் அகண்டபாரதக் கனவை பதிவாக்கியதை எண்ணி!!!!!!

பாக்கிஷ்தான் என்றவொரு நாடு உருவாகியிருக்காவிட்டால், வசிம் அக்ரமோ அல்லது அன்வரோ துடுப்பாட்டக் களத்தில் முகங்காட்டியிருக்க முடியாதுங்கோ!!!!

அ.ஜீவதர்ஷன் said...

@ chosenone

சிவசேனா எல்லாம் நம்ம ராஜபக்ச குடும்பத்துக்கு முன்னால இல்லாம போயிடுவாங்க, எப்பூடி :-)

........................................

திவியரஞ்சினியன்

//தமிழ்நாட்டில் திறனிருந்தும் பலவீரர்கள் களமாடமிடியாது பாராபட்சமான தேர்வினால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல காலம் பாக்கிஷ்தான் என்ற ஒருநாடு உருவாகி, அந்த வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு வழங்கியிருக்கே.......அதைப்போய் புரிஞ்சுக்கவில்லையே!!!!!//

இது கனவு அணிங்க, உலக கனவுஅணி என்றால் எல்லோருக்கும் உலக அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்குமா? இதை அனுபவிக்கனும், ஆராயக்கூடாது...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)