Thursday, February 11, 2010

திருமதி அனோமா பொன்சேகரா அவர்களுக்கு...திருமதி அனோமா பொன்சேகரா அவர்களுக்கு!!!
உங்கள் கணவருக்கு ஓட்டுப்போட்ட சமூகத்தில் இருந்து எழுதிக்கொள்வது....

உங்கள் கணவரை கைது செய்து விட்டதற்காக வருந்தும் உங்கள் இதயத்திற்கு எமது ஆறுதல்கள். அவர் கைது செய்யப்படவில்லை, கடத்தப் பட்டிருக்கிறார் என நீங்கள் தொலைக்காட்சியில்    புலம்பியபோதும், அரசாங்கம் அவரை கைது செய்ததாக  கூறுவதால் எமக்கு உண்மை சரியாக தெரியவில்லை. ஆனால் நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்த உங்கள் கணவர் இரவோடு இரவாக கடத்தப்பட்டதற்கு சீ.. கைது செய்யப்பட்டதற்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்து கொள்கிறோம். கைது செய்யப்பட்டு 24 மணி நேரமாகியும் என்னவானார் என்பது தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு எப்படி ஆறுதல்  கூறுவதென்று தெரியவில்லை.

சிறையில் உணவு கொடுக்கிறார்களோ தண்ணீர் கொடுக்கிறார்களோ என நீங்கள் ஏங்குவது எமக்கு புரிகிறது. அவரை துன்புறுத்துகிறார்களா ? கொன்று விடுவார்களா? என நீங்கள் கண்கலங்குவது எமக்கு தெரிகிறது. உண்மையை சொன்னால் அவர் உயிருடன் வருவாரா? இல்லையா? என்பதே உங்களுக்கு சந்தேகாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் சாகடிக்கபடமாட்டார் அம்மையாரே, எப்போது இவருக்கு கீழே வேலைபார்த்த ராணுவவீரர் இவரது பிடரியை பதம் பார்த்தாரோ அப்பதே அவர் மனதளவில் இறந்திருப்பார். ஆனாலும் நிச்சயமாக அவர் மீண்டு வருவார், அது காலத்தின் கட்டாயம்.

அப்படி வரும்போது அவர் இல்லாதபோது (இல்லாத நேரத்தில் ) , அவரை பற்றிய தகவல்கள் தெரியாமல் நீங்கள் பட்ட கஷ்டங்களை அவரிடம் சொல்லி மனம் விட்டு அழுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் உள்ள பாரம் குறையும். அப்படி அவரிடம் அழும்போது இதையும் சேர்த்து கூறுங்கள் , "உங்கள் கணவர் ராணுவ தளபதியாக இருந்த காலத்தில் காணாமல்போன ஆயிரமாயிரம் தமிழ்  இளைஞர்களும் யுவதிகளும் இருக்கிறார்களா? இல்லையா? இருந்தால் எங்கிருக்கிறார்கள்? சித்திரவதை படுகிறார்களா? சாப்பாடு கிடைக்கிறதா? அவர்களது மனநிலைமை இப்படி இருக்கும்? என்று தினம் தினம் வருடக்கணக்காக ஏங்கும் தாய், தந்தையரும், மனைவி, பிள்ளைகளும், அண்ணன் ,தங்கைகளும்,அக்கா , தம்பிகளும் கணம் கணம் தங்கள் காணாமல் போன உறவுகளை நினைத்து இப்படித்தானே கலங்கியிருப்பார்கள், கலங்கிக்கொண்டிருப்பார்கள் , இனியும் கலங்குவார்கள் என்று மட்டும் கூறுங்கள்".

"ஒவ்வொரு தடவையும் சாப்பாடில் கைவைக்கும்போதும் அவன் ஞாபகம் வருகிறது, பிள்ளை சாப்பிட்டானா?இல்லையா? எப்படி அவனை வைத்திருக்கிறார்களோ? அவன் இருக்கிறனா? இல்லையா? என இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும்போது எப்படி சோறு , தண்ணி இறங்கும்?" என்று இன்னமும் கதறும் தாய்மார்கள் சார்பாக இந்த மடல்.

இது குத்தி காட்டுவதற்காக அல்ல,குத்திய வடுவை காட்டுவதற்காக.....

இது தான் அவர் உரையாறிய வீடியோ காட்சி  

10 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

உயிர் என்பது அனைவருக்கும் உயர்ந்த்தது இதே நபர்
தன் அதிகார களத்தில் செய்த கொடுமையை அவர் மனைவி சொல்லி இருந்தால் சரி
ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் செல்ல காரணமாக இருந்த நபரின் ஒரு உயிருக்கு ஆபத்து என்றவுடன் கதறும் கதறல் அப்போது சென்ற உயிர்களையும் நினைக்க வேண்டும்
மரணம் அடுத்தவன் வீட்டில் நடந்தால் அது செய்தி அதே தன் வீட்டில் நடந்தால் துக்கம் என்ற மனநிலை மாறாத வரை உலகில் சண்டை சச்சரவு தேவையற்ற படுகொலைகள் தொடரும்
எல்லா உயிருக்கும் வலி என்ட்பது ஒன்றே அதை அவன் அவன் சந்திக்கும் போதுதான் அதன் உண்மையான் வலி அவனுக்கு தெரியும்

கெட்டவனாக இருந்தாலும் சரி நல்லவனாக இருந்தாலும் சரி உயிர் வலி என்பது ஒன்றே அனைவரும் சிந்தித்தால் சரியே

chosenone said...

இப்ப !! இப்ப !!
இப்ப நம்புறேன்!
"உலகம் ஒரு உருண்டை தான்"

vakeeson said...

தன் வினை தன்னை சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்.

சூர்யகதிர் said...

சும்மா தமிழில் சொல்லி எங்களுக்குள் அழாமல்,
இதையே தான் நான் சரத் போன்செகவுடைய மகளுக்கும் சொலி இருக்கிறேன்

http://thissidesrilanka.blogspot.com/

என்.கே.அஷோக்பரன் said...

“நச்” - சொல்வதற்கு வேறு வார்த்தையில்லை.
மனதை மிகவும் துயரத்தில் இறுக்கமாக்கிவிட்டது.

அ.ஜீவதர்ஷன் said...

@ arumbavur

@ chosenone

@ vakeeson

@ சூர்யகதிர்

@ என்.கே.அஷோக்பரன்


உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

நிலாமதி said...

அழ கான் தெளிவான வலி உணரவைக்கும் மடல் வாழ்த்துக்கள் .சொல்லவிரும்பியதை சொல்லிவிடீர்கள் .அவர்கள் வாசித்து உணர்ந்தால் இன்னும்மகிழ்ச்சி...

EKSAAR said...

//எப்போது இவருக்கு கீழே வேலைபார்த்த ராணுவவீரர் இவரது பிடரியை பதம் பார்த்தாரோ அப்பதே அவர் மனதளவில் இறந்திருப்பார்.//
touching

உயிரின் மதிப்பு எப்போதும் சமம்தான்.. அதேபோல் கௌரவமும்

சந்தனமுல்லை said...

ட்விட்டர் வழி வந்தேன்....இப்போதாவது வலியை உணர்ந்தால் சரி!

அ.ஜீவதர்ஷன் said...

@ நிலாமதி
@ என்ன கொடும சார்
@ சந்தனமுல்லை


நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)