Monday, February 8, 2010

எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் [ 07/02/2010]


இந்த பதிவில் மைக்கல் ஹசி , ஹசிம் ஆம்லா, கலிஸ், அக்மல் சகோதரர்கள்.  பற்றியும் ,இங்கிலாந்து கால்ப்பந்தாட்ட அணியின் தலைமைத்துவ மாற்றம் பற்றியும் , ஆஸ்திரேலியன் ஓபன் கிரான்சிலாம் போட்டிகளின் பின்னர் தரவரிசையில்  மாற்றங்கள் பற்றியும்  ...............


இந்த வாரம் இந்திய ,தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியின் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் நாக்பூர் வழமையான சொதப்பல் இந்திய ஆடுகளமாக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டி சமநிலையிலேயே அதிகம் முடிவடையும் என்று எதிர்வுகூரலாம். மற்றும் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுடனான தொடரை முழுவதுமாக இழந்து (மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு T20 ) வெற்றிகரமாக நாடு திரும்பியது. அடுத்து ஆஸ்திரேலியாவுடன் இன்று முதலாவது ஒருநாள் போட்டியை ஆடிய மேற்கிந்திய தீவுகள் எதிர்பார்ப்பை கொஞ்சமும்  வீணடிக்காமல் தோல்வியடைந்தது. வீழ்த்தப்படக்கூடிய நிலையில் உள்ள ஆஸ்திரேலிய ஏன் வீழ்த்தபடாமல் உள்ளது என்பதை ஒரு ஆய்வு பதிவாக விரைவில் எழுதுதலாமென்று நினைக்கிறேன். இந்த போட்டிகள் முடிவுகள் முற்கூட்டியே தெரிந்த போட்டிகளாக இருப்பதனால் அவற்றின் விபரங்களை ஆழமாக பார்க்க வேண்டாமென்று நினைக்க்ன்றேன்.


ஆனால் சிலரை பற்றி முக்கியமாக குறிப்பிட்டுதான் ஆகவென்றும். இதில் முக்கியமானவர்கள் மைக்கல் ஹசி , ஹசிம் ஆம்லா, கலிஸ், அக்மல் சகோதரர்கள்.


மைக்கல் ஹசி , மைக்கல் பெவனின் இடத்தை ஓரளவேன்னும் பூர்த்தி செய்துள்ளார் என்றே கூறவேண்டும், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும்போது போட்டியை கடைநிலை வீரர்களுடன் இணைந்து வெற்றிக்கு இட்டுசெல்வது பவனுக்கு கைவந்த கலை, இப்போது ஹசி இவ்வாறான போட்டிகளை வெற்றிப்பாதைக்கு இட்டுசெல்கிறார். இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும்போது 6 , 7 ஆம் இலக்கங்களில் ஹசி ஆடுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரும் பலமே. ஆனால் முதலாவதாக துடுப்பெடுத்தாடும் போது ஹசி இறுதி ஓவர்களில் ஓட்டங்களை அதிகரிப்பதை காட்டிலும் தனது விக்கட்டை சரியவிடாமல் பார்ப்பதிலேயே அதிக கவனம் எடுப்பது போலுள்ளது, இது அவரது துடுப்பாட்ட சராசரியை பாதுகாப்பதற்காக என்றே நினைக்கிறேன்.


கலிசும் ஆம்லாவும் இணைந்து இந்தியாவுக்கு குடைச்சலை கொடுத்தாலும் இதில் கவனிக்க படவேண்டிய முக்கிய விடயம் அண்மைக்காலமாக அம்லாவின் சிறப்பான டெஸ்ட் போட்டிகளின் பெறுபேறுகள். இறுதி இரண்டு ஆண்டுகளில் 55 சராசரியில் 1800 ஓட்டங்களை பெற்றுள்ள ஆம்லா தென்னாபிரிக்காவின் நீண்டநாள் குறையான மூன்றாம் இலக்கத்தை ஈடுசெய்வார் என்று நம்பலாம். அதேபோல தென்னாபிரிக்காவின் 'இரும்புத் தூண்' என வர்ணிக்கப்படும் 'கலிஸ்' இந்த தடவையும் இரட்டை சதத்தை தவறவிட்டுள்ளார். இவர் 34 சதங்கள் அடித்த போதும் இதுவரை ஒரு இரட்டை சதம் கூட பெறவில்லை, அதிக பட்சமாக ஆட்டமிழக்காமல் 189 ஓட்டங்களையே பெற்றுள்ளார்.அக்மல் சகோதரர்கள் , இவர்கள் இருவரும்தான் இன்றைய தோற்றுப்போன பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கை, இருவரும் ஒன்றாக இலங்கை தொடரிலிருந்து விளையாட ஆரம்பித்ததிலிருந்து ஒருவர் இல்லாவிட்டால் மற்றவர் ஓட்டங்களை குவித்து வருகிறார்கள். இதில் தம்பியே அண்ணனைவிட அதிக சிறப்பாக ஆடிவருகிறார்,இருவரும் உயரம் குறைவாக இருந்தும் பெரிய சிச்சர்களை(big six) அடிப்பதில் கில்லாடிகளாக இருப்பது ஆச்சரியம், இதில் உமர் கிரிக்கெட் சொட்டும் (shots ) நன்றாகவே விளையாடுகின்றார், இவர்கள் இருவரையும் பார்க்கும்போது ஆரம்பகால அண்டி, கிராண்ட்(Andy Flower, Grant Flower) பிளவரை ஞாபகப்படுத்துகின்றனர். பாகிஸ்தான் திருந்தாவிட்டால் இவர்களது திறமைகளும் வீணக்கப்பட்டுவிடும்.இங்கிலாந்து கால்ப்பந்தாட்ட அணியின் தலைவர் 'ஜோன் டெரி'( John Terry) அணித்தலைமை பொறுப்பிலிருந்து நீக்க பட்டுள்ளார். சென்ற யூரோ கிண்ண போட்டிகளுக்கு இங்கிலாந்து தகுதிபெறவில்லை என்பதுவே முக்கிய காரணமாக இருந்தாலும் அதனை குறிப்பிடவில்லை. புதிய அணித்தலைவராக மஞ்சஸ்டர் யுனைட்டட் அணியின் தடுப்புவீரர்(back) வீரர் 'ரியோ பெர்டினன்ட்' ( Rio Ferdinand) தெரிவாகியுள்ளார்.


பெர்டினன்ட்(76) டெரியைவிட(58) கூடுதலான போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஆடியுள்ளார். ஆனாலும் அதிகமானவர்களால் இங்கிலாந்தின் அடுத்த தலைவராக லிவர்பூலின் 'ஸ்டீவன் ஜெரால்டு' (Steven Gerrard) அல்லது செல்சியின் 'பிராங் லம்பாட்' (Frank Lampard) ஆகியோரில் ஒருவரே எதிர்பார்க்க பட்டவர்கள். பெர்டினன்ட் பலதடவை பல புகார்களில் சிக்கியுள்ளவர்,இதனால் பலதடவைகள் போட்டிகளில் விளையாட தடைசெய்யப்பட்டுமுள்ளார், மைதானத்திலும் இவரது நடத்தை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை, இவரால் இங்கிலாந்தை சரியாக வழிநடத்த முடியுமா? இங்கிலாந்து இரண்டாம் சுற்று வரையாவது முன்னேறுமா? என்ற கேள்விகளுக்கு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் விடையை தெரிந்து கொள்ளலாம்.நடந்து முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிரான்சிலாம் போட்டிகளின் பின்னர் தரவரிசையில் பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.ஆண்கள் பிரிவில் 'ரபேல் நடால்' 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் (ஐந்தாண்டுகளுக்கு பின்னர்) முதல் முறையாக நான்காமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார், அண்மைக்காலமாக இவரது மோசமான உடற்தகுதியே இந்த பின்னடைவுக்கு முக்கியகாரணம். அதே நேரம் செர்பியாவின் 'டியோக்கோவிக்' முதற்தடவையாக இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார், ஸ்காட்லாந்தின் 'அண்டி முரே' மூன்றாமிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆனால் முதல்தரவீரர் 'ரோஜெர் பெடரர்' இரண்டாமிடத்தைவிட 3000 புள்ளிகளுக்குமேல் அதிகமாகபெற்று(11350 புள்ளிகள்) நெருங்க முடியாத உச்சத்தில் உள்ளார்.அதேபோல பெண்கள் பிரிவில் 'செரீனா' தனக்கு அடுத்ததாக இருக்கும் 'சபீனாவை' விட 2500 புள்ளிகளுக்குமேல் அதிகமாகபெற்று (9195 புள்ளிகள்) தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறார்.

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)