Sunday, February 7, 2010

அசலுக்கு ஆப்பு காத்திருக்கு....


தமிழக முதல்வர் கலைஞருக்கு ஒரு வழியாக ஆடிப்பாடி நன்றி தெரிவிச்சாச்சு. அவரும் ரொம்ப புளகாகிதம் அடைந்துள்ளார்.ரஜினி, அமிதாப், கமல் என பெரிய நடிகர் பட்டாளமே வாழ்த்த இனிதாக நிறைவடைந்தது அந்த கேவலம்கெட்ட விழா.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் அஜித் சனியனை தூக்கி பனியனுக்குள் போட்டதுதான். எப்படி அசலை தோற்கடிக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு கையில் அல்வா மாதிரி அஜித்தின் பேச்சு அமைந்துள்ளது. அஜித் நடிகர்களை கட்டாயபடுத்தி விழாக்களுக்கு அழைப்பாதாக கூறியதும், "காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள்தான் தீர்க்கவேண்டும் அதற்கு நடிகர்கள் என்ன செய்ய முடியும்" என்று கூறியதும் அதிகமாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகலாம். இந்தவிடயத்தில் அஜித்தைவிட அதிகம் பாதிக்கபட்டதாலோ என்னமோ ரஜினி உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார். இதனால் ரஜினியையும் வம்புக்கிழுக்க ஒரு கூட்டம் தயாராகினாலும் ஆச்சரியமில்லை.


அஜித் கூறிய கருத்துக்கள் என்னை பொறுத்தவரை சரியானவை, "போராட்டத்திற்கு எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள், அதே நாங்கள் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கிறார்கள்" போன்ற வாசகங்கள் நச்... , ஆனால் அவைதான் அஜித்தின் அசலுக்கு ஆபத்தாகுமோ என்பதுதை அதிக காலம் காத்திருக்க தேவையில்லை, நாளையே மீடியாக்களினதும் , நடிகர் சங்கத்தில் உள்ள வெட்டி ஆசாமிகளினது பிதற்றல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

கலைஞர் துதிபாடும் நிகழ்வில் வழமைபோல ரஜினி சொன்ன 'குட்டிக்கதை' உங்களுக்காக


ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப்போக 300 ரூபாய் பஸ் செலவு, மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான்,ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களது பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஒருவர் ஹோட்டலுக்கு போய் "என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஹோட்டல் முதலாளி "நீங்கள் சாப்பிடுங்கள் ,உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான்" என்று சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்னபின்னர் சிக்கன், மட்டன் என எவ்வளவு சாப்பிடமுடியுமோ அவளவையும் சாப்பிடுறார். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவர் "என் பேரன் வந்து பணம் கொடுப்பான்"என சொல்கிறார். அதற்க்கு ஹோட்டல் முதலாளி "அது இருக்கட்டும்,உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும்" அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் கழட்டிக்கொள்கிறார்.

"இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, கலைஞர் கொடுக்கிற வீட்டை ஏமாத்தி வாங்கினா. உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது"என கூறிய ரஜினி தொடர்ந்து "கலைஞர் இடம் கொடுப்பது, வீடு கட்டிக்கொடுப்பது பெரியதல்ல, கலைஞர் கொடுக்கும் இந்த வீடு கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களுக்கு போய் சேரவேண்டும். பணக்காரர்கள் இதில் கையை நீட்டிவிடாதீர்கள்,அப்போதுதான் கலைஞர் உண்மையாக சந்தோஷப்படுவார்.,நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன், என் மனதில் பட்டதைதான் பேசுவேன்" என கூறினார்.

ஆகா ரஜினியும் அஜித்தும் மனதில் பட்டத்தை கூறிவிட்டார்கள், தாங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ள விரும்பும் அட்ரஸ் இல்லாத சத்தியராஜ் வகையறாக்கள் ஆரம்பிக்கலாம்.

கிளம்புங்க !!!! வெட்டி ஆபிசருன்களா கிளம்புங்க.....!

கமல்தான் பாவம் வழமையாக கலைஞருக்கு அருகில் ஒரு சீற்று புக்கிங்கில இருக்கும் , நேற்று அமிதாப் வந்ததில அந்த சீற்று கிடைக்காம போச்சு, "வருத்தப்படாதீங்க கமல் சார் அடுத்தடுத்த மாசம் இன்னொரு பாராட்டுவிழா கலைஞர் வைக்காமலா போய் விடுவார் அப்ப உட்காரலாம்".

19 வாசகர் எண்ணங்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரஜனியின் கதை அருமை!
இது கலைஞருக்கும் சேர்த்துச் சொன்னது போல
இருக்கு!

ஹாய் அரும்பாவூர் said...

அஜித் பணத்திற்கு புகழுக்கு ஆசைப்படாத ஒரு நல்ல மனிதன் .மனதில் பட்டதை சரி என்றால் பயப்படாமல் பேசுவார்.
அதனால் தான் இதனை தோல்வி படம் கொடுதும் அவரின் ரசிகர் இன்னும் அவரின் ரசிகராக இருப்பது

எத்தனை இடர்கள் வந்தாலும் அஜீத் அஜித் என்றுமே நிஜ வாழ்க்கை ஹீரோ

kuruvi said...

அஜித் உண்மையிலேயே தைரியமான ஆள் போல இருக்கு. எனக்கு அஜித் புடிக்காது. ஆனா இப்போ அஜித் மேல மதிப்பு வந்திருக்கு.

kailash,hyderabad said...

அஜித் பேசியது மிகவும் சரிதான். அரசில்வாதிகள் எப்போதும் நடிகர்களின் பிரபலத்தை உபயோகப்படுத்திக்கொண்டு
காரியம் முடிந்ததும் கறிவேப்பிலை தூக்கி எறிந்து விடுவார்கள். ஜெயலலிதா முகத்திலடித்தாற்போல் செய்வார் (தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் செந்தில், அம்பிகா,ராதா,மனோரமா அதிமுகவில் எங்கே ?) காங்கிரஸ் சிவாஜியை எவ்வளவு வருடங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தியது?.
இதை கலைஞர் நாசுக்காய் செய்வார்.கலைஞரிடம் இருந்து தப்பியவர் MGR மட்டுமே. அவர் முதல்வரானது நடிகர் என்பதால் அல்ல. கஷ்டப்படுபவர்களுக்கு என்றும் உதவிய உள்ளமே காரணம். அதை புரிந்து கொள்ளாமல் நடிகர்கள் நாற்காலி கனவு காண்கிறனர் நேற்று வந்த விவேக் உள்பட.
( எப்புடி, இந்த நடிகர்கள் வளரும் வரை அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் வளர்ந்து விட்டு பிரபலமானவுடன்
நான் அந்த ஜாதி,இந்த ஜாதி,என்று பேசுவதை பற்றி கொஞ்சம் எழுதுங்க தலைவரே! செந்தில்.விவேக் நகைச்சுவையை அவர்கள் குறிப்பிட்ட ஜாதி என்பதாலா நாம் ரசித்தோம்?)

நேற்று அஜித் பேசியது தன்னை உணர்ந்த பேச்சு. எங்கள வேலை நடிப்பது அதை நிம்மதியாக செய்ய விடுங்கள் என்கிறார்,அதேபோல ரஜினி கூறியதும் சரிதான். எனக்கென்னவோ ரஜினி சொல்வது கலைஞா குடும்பத்துக்குத்தான் பொருந்தும் போலிருக்கிறது.மகா ஆ ராசா கலைஞா வாழ்க.

ஞானப்பழம் said...

ச்சே.. அஜீத்தின் பேச்சை கேட்டிருக்கலாம் போல.. தவறவிட்டுட்டேனே....
ரஜினியின் கதை அருமை.. ஆனால் கதை ஆரம்பித்தவுடன் முடிவை யூகிக்க முடிந்தது.. இருந்தாலும் கருத்து நல்லாயிருந்தது...

எங்க ஊர்ல தமிழ் படம்தான் ஹவுஸ் புல்லில் ஓடிக்கொண்டிருக்கிறது!!

chosenone said...

பெயருக்கு பின்னால் பட்டமும் , கோடி கனக்கில் சம்பளமும் ,புகழும் அந்தஸ்தும் தந்தது மக்கள் தான்.
அதே மக்களுக்கு கொசு தொல்லை பிரச்சனையை திர்த்து வைக்க உங்களை கூப்பிடவில்ல ....உயிர் பிரச்சனை !!! இரண்டு சந்தர்பம் !!! இரண்டையும் புறக்கநித்திர்கள்.....

சரி! உங்கள் வாதத்துக்கு வருவோம்.
" எங்களை நடிக்கிற வேலைய மட்டும் பார்க்க விடுங்கள் ..பஞ்சமா இருக்கட்டும்,பிணக்குவியலா இருக்க்கடும் அது அதிகார வர்கத்தின் பிரச்சனை .." இது தானே...
முதுகெலும்பு உடைந்து பிறகும் நடித்திகொண்டே car racing ல் பங்கேற்க முடியுற உங்களால் மக்கள் பிரச்சனைக்காக ஒரு பொழுதை கழிப்பதுக்கு என் இவளவு கஷ்டம் !!!?

இப்படி செய்வதற்கு நீங்கள் ,,,
ஒன்று ,பயங்கர சுயநலவாதியாக இருக்கவேண்டும் அல்லது "socially blinded"ஆக இருப்பது stylish ஆக இருக்குறது என்று நீங்கள் தவறான புரிதலுக்கு உள்ளாகி இருக்க வேண்டும் ...

சமூகத்தின் மீது அக்கறை கொள்வது ஒரு கலைஞனின் தார்மிக பொறுப்பு ....
அது கட்டாயமாக்கவும் முடியாது ,அப்படி செய்யாதவன் குற்றவாளி என்றும் சொல்லமுடியாது ...அஜித்தும் அப்படிதான் .*****'
ஒரு பிரமாண்ட மேடையில் தன் குறையை indirect ஆகவும் பெருமையாக [sub-consciously !*] ஏற்றுகொண்ட அஜித்தின் நேர்மையும்,துணிவும் பாராட்டுவீர்களா ? **********அல்லது *********
ஒரு பாமரனுக்கு இருக்க கூடிய சமூக அக்கறை கூட இல்லாமல் புகளின் உச்சியில் இருக்க கூடிய அஜித் போன்ற கலைஞன் சுயநலமாக நடந்துகொள்வது குறித்து கோபம் அடைவீர்களா ?
எனக்கு இது ரெண்டும் !!!!

அ.ஜீவதர்ஷன் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris)

//ரஜனியின் கதை அருமை!
இது கலைஞருக்கும் சேர்த்துச் சொன்னது போல
இருக்கு!//


why blood? same blood -:)


.....................................

arumbavur

//அஜித் பணத்திற்கு புகழுக்கு ஆசைப்படாத ஒரு நல்ல மனிதன் .மனதில் பட்டதை சரி என்றால் பயப்படாமல் பேசுவார்.//

நியமான வார்த்தைகள்

..........................................

kuruvi

//அஜித் உண்மையிலேயே தைரியமான ஆள் போல இருக்கு. எனக்கு அஜித் புடிக்காது. ஆனா இப்போ அஜித் மேல மதிப்பு வந்திருக்கு.//

நானும் அஜித்தின் ரசிகனில்லை, ஆனால் அவரின் நேர்மை புடிச்சிருக்கு

......................................

kailash,hyderabad

//செந்தில்.விவேக் நகைச்சுவையை அவர்கள் குறிப்பிட்ட ஜாதி என்பதாலா நாம் ரசித்தோம்?//

நெத்தியடி, இவர்களில் சரத்குமாரை விட்டுவிட்டீர்கள்.

........................................

ஞானப்பழம்

//ச்சே.. அஜீத்தின் பேச்சை கேட்டிருக்கலாம் போல.. தவறவிட்டுட்டேனே....//

எதுக்கு கலைஞர் டிவி இருக்கு , அதிகமாக காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகலாம், கலைஞர்தான் காதல் மன்னனாச்சே.


//ரஜினியின் கதை அருமை.. ஆனால் கதை ஆரம்பித்தவுடன் முடிவை யூகிக்க முடிந்தது..//

எனக்கும்தான்.

//எங்க ஊர்ல தமிழ் படம்தான் ஹவுஸ் புல்லில் ஓடிக்கொண்டிருக்கிறது!!//

நல்ல விடயம், எங்க ஊர்ல படம் ரிலீஸ் ஆகல, கந்தகோட்டை எல்லாம் எடுக்கிறாங்க இத எடுக்கல, கொடுமை...

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

ஈழப்பிரச்சினையில் அஜித் அல்ல தமிழகத்தின் அரசியல் புள்ளிகளிலிருந்து நடிகர்கள் வரையில் உண்மையான அக்கறை யாருக்கும் இல்லை, இதில் வைக்கோவும் ஒன்றுதான் கலைஞரும் ஒன்றுதான். ரஜினியும் ஒன்றுதான் அஜித்தும் ஒன்றுதான். உண்மையை சொல்லபோனால் இது அவர்களுக்கு இரண்டாம் தரப்பு பிரச்சினைதான். இதில் எமக்கு உதவாதவர்களை விட துரோகிகளையே மன்னிக்க முடியாது. இறுதிநேரத்தில் கூட நாடகமாடிய அந்த துரோகிகள் யாரென்று உங்களுக்கு புரியுமென்று நினைக்கிறேன்.இந்த விடயத்தில் அஜித்தின் கூற்றை உங்கள் பார்வையில்சரியென ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் நடிகர்களை வைத்து காசு பார்க்கும் பொருட்டு சிங்கப்பூர் , மலேசியா களியாட்ட நிகழ்வுகளுக்கும் , பெப்சி சங்கவிழா, விபச்சாரிகளுக்கு ஆதரவு தர ஒரு கண்டன கூட்டம் என அனைத்துக்கும் வரவேண்டும் என கட்டாயப் படுத்துவது சரியா? கட்டாயப்படுத்துவதால் எதையாவது சாதிக்க முடியுமா?

தமிழக அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்ற சொற்களையே காதில் வேண்டாத கர்நாடக நடிகர்கள் சொன்னதும் காவிரியை திறந்து விடப் போகிறதா? ஒவ்வொரு முறையும் அந்தந்த பிரச்சினையை தீர்க்கபோய் இறுதியில் ரஜினியை வம்பில் மாட்டிவிடுவதாய்தானே முடிந்துள்ளது, பின்னர் அந்த பிரச்சினைகள் தீராமல்போக அனைவரும் தத்தமது வேலைதானே பார்த்தார்கள், கிடைக்காதென்று தெரிந்த ஒன்றுக்காக போராடுவது மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?

அதற்காக போராட்டங்கள் நடாத்த கூடாதென்றில்லை.அனால் போராட்டம் 1% ஆவது வெற்றி அளிக்க கூடியதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

................................

அ.ஜீவதர்ஷன் said...

Muthulinkam

இவரது பின்னூட்டல் நீக்கபட்டுள்ளது அதில் உள்ளது.

//பேப்-------- ஓ........கிளம்பு தலய பெற்றிகதைக்க எந்த தறுதலைக்கும் உரிமகிடயாதுடா பேப்--------//

முட்டாளே! நீ பிறப்பு உறுப்பின் மீதும் இனப்பெருக்கம் மீதும் வைத்திருந்த ஈடுபாட்டை உனது விளக்கத்திலும் கொஞ்சம் வைத்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டாய். ஒழுங்காக வாசி இந்த பதிவு அஜித்துக்கு சாதகமான பதிவுதான். உன்னை போன்ற முட்டாள் ரசிகர்கள்தான் அஜித்துக்கு சாபம்.

Yoganathan.N said...

//அதே மக்களுக்கு கொசு தொல்லை பிரச்சனையை திர்த்து வைக்க உங்களை கூப்பிடவில்ல ....உயிர் பிரச்சனை !!! இரண்டு சந்தர்பம் !!! இரண்டையும் புறக்கநித்திர்கள்..... //

சரி, நீங்களே, சொல்லுங்கள்... நடிகர் நடிகைகள் இலங்கை பிரச்சனைக்காக உண்ணா விரதம் இருந்தார்களே - என்ன சாதித்தார்கள்??? அவர்களால், பிரச்சனையை தீர்க்க முடிந்ததா???

//முதுகெலும்பு உடைந்து பிறகும் நடித்திகொண்டே car racing ல் பங்கேற்க முடியுற உங்களால் மக்கள் பிரச்சனைக்காக ஒரு பொழுதை கழிப்பதுக்கு என் இவளவு கஷ்டம் !!!?//

அவர், தான் வர மாட்டேன் என்று சொல்லவில்லை. மற்றவர்களையும் போகக் கூடாது எனவும் சொல்லவில்லையே... 'வற்புருத்தி' யாரையும் இது போன்ற, சில அரசியல்வாதிகளின் உள்கூத்து மற்றும் சுயநலத்திற்காக வரவழைப்பது எந்த விததில் நியாயம் என்று தான் கேட்டார்.

பி.கு அவர் பொதுவாகவே சொன்னார். காரணம் பல சினிமா விழாக்களுக்குக் கூட நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளா விட்டால் ரெட் கார்டு போடுவோம் என சங்கத்தில் பதவியில் உள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள்... இது பல முறை நடந்திருக்கிறது. அவரது அந்த பொதுவான வேண்டுகோளை நீங்கள் இலங்கை பிரச்சனையில் கோர்த்து விடுவது சரியல்ல...

kumar said...

KUMAR FROM CHENNAI...
காவேரி பிரச்சினைக்காகவும், ஈழப்பிரச்சினைக்காகவும் ஒரு நாள் அடையாளமாக மேடையில் வந்து அமர அஜித் ரஜினி போன்றவர்களுக்கு வலிக்கிறது ..... தமிழ் பற்று உள்ளவர்களாக நடிக்கக் கூட கரி வலிக்கிறது என்றால், தமிழ் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டியது தானே...தமிழர்களின் உழைப்பினால் வந்த பணம் மட்டும் வேண்டும்.. ஆனால்,தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கக் கூட வேண்டாம்.. அதில் , தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று காண்பிக்க,அடையாள உண்ணா விரதத்தில் கூட பங்கேற்க மனமில்லை என்றால் , தயவு செய்து தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டாம்... அவரவர் தாய்மொழி சினிமாவில் மட்டும் நடித்தால் போதும்...

kumar said...

குறிப்பாக அஜித்திற்கு, சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்கிறார், எனில்,முதலில் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு... ரசிகர்களை சினிமாவாக மட்டும் பார்க்க சொல்லுங்கள்.....

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

உங்கள் கருத்துக்கு நன்றி.

kumar


உங்கள் கருத்து வேடிக்கையாக உள்ளது, கட்டாயப்படுத்தி போராட்டத்துக்கு வரவைப்பதிலும் பார்க்க அவரவர் போக்கிலேயே விடுவதுதான் நல்லது. எல்லோருக்கும் ஒரு சுயம் உள்ளது அது கட்டாயப்படுத்துவதால் மாறுமானால் அது திணிப்பாகத்தான் இருக்கும். வேற்று மொழிக்காரர்கள் தமிழ் நாட்டில் வேலை செய்தால் அவர்கள் தமது மாநிலத்துக்கு எதிராக தமிழ் நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று கடாயப்படுத்துவது தமிழனுக்குதான் அவமானம். இப்படி பிச்சை எடுத்துதான் தமிழையும் , தமிழர் பாரம்பரியத்தையும் வளர்க்க வேண்டுமா?

ஒகேனக்கல் போராட்டத்திற்கு வந்திருந்த ரஜினிக்கு உங்கள் தமிழன் சத்தியராஜ் கொடுத்த மரியாதையை பற்றி உங்களுக்கு தெரியாதா? பேசவந்த விடயத்தை விடுத்து அன்று சத்தியராஜ் தனிமனித தாக்குதல் நடாத்தும்போது எங்கு இருந்தீர்கள். நீங்கள் வேற்று மாநிலத்தில் வேலைபார்க்கும்போது தமிழ்நாட்டுக்கு எதிராக போராட அழைத்தால் போவீர்களா? அவர்களை நடிக்ககூடாதென்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை, வேண்டுமென்றால் அவர்கள் படத்தை பார்க்க வேண்டாமென்று தமிழர்களிடம் கூறுங்கள், நிச்சயம் அவர்களால் அதை ஏற்றுகொள்ள முடியாது. நடிகன் பணத்தை புடுன்குகிறான் என்று கூறுவது தவறானது, ரசிகர்கள் அதை ரசிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் , மனநிறைவுக்கும் கொடுக்கும் கூலிதான் நடிகனுக்கு கிடைக்கும் பணம்.

கட்டாயப்படுத்துவதால்தான் தமிழை வளர்க்க வேண்டுமென்ற நிலையில் தமிழும் இல்லை தமிழனுமில்லை , 'கல் தோன்றி முன்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழை' தொட்டதற்கும் பயன்படுத்தாதீர்கள். அந்த ஆண்டவனே நினைத்தாலும் அழியாத மொழி, தமிழ்மொழி அழியாமல் இருப்பதற்கு எமது கலாச்சாரம் அழியாமல் பார்த்து கொள்ளவேண்டுமே அன்றி, இன்னொருவனை எமது மொழியும் எம்மையும் பாதுகாக்க சொல்வது தமிழுக்கும் அவமானம், தமிழனுக்கும் அவமானம்.

உங்கள் கருத்துக்கு நன்றி


kumar

//குறிப்பாக அஜித்திற்கு, சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்கிறார், எனில்,முதலில் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு... ரசிகர்களை சினிமாவாக மட்டும் பார்க்க சொல்லுங்கள்.....//

இந்த விடயத்தை பற்றி நான் எழுதவில்லை, கட்டாயப்படுத்துவது பற்றியே இங்கு குறிப்பிட்டு உள்ளேன் . இதற்கு அஜித்தான் பதில் சொல்ல வேண்டும்.

Rajesh V Ravanappan said...

சுனாமி பாதிப்பு ஆன போது இவங்க யாருமே குழந்தையா இருந்திருக்க மாட்டங்கன்னு நினைகிறேன் , அப்ப இவங்க சமூக அக்கறை எங்க போயிருந்தது?.. அப்பவும் இப்பவும் - மாற்றம் ஆட்சி மட்டுமே.. இப்ப நடக்குதுன்னா அது ஆட்சி உள்குத்தே!!
அண்டை மாநிலத்திலையும், அண்டை நட்டு பிரச்சினையிலும் அக்கறை காட்டும் சூப்பர் ஹீரோக்கள் தமிழக பிரச்சினையில் எந்தளவு பங்களிகிறார்கள் என்று நாடு அறியும்..
ஒரு பக்கம் தமிழ் சினிமா உலக சினிமா மாதிரி வரணும்னு கோஷம்.. மறு பக்கம் அவங்கள வேல பாக்க விடாம உங்க வீட்டு வேல பாக்க கூப்பிடுறது ..
எனக்கு என்னமோ கலைஞர் இனியொரு MGR வராம பாத்துகிரார்னு தோணுது.. எல்லா நடிகர்களையும் கைகுள்ள போட்டுகிட்டார்.. இனி யாராலும் இவருக்கு எதிரா கருத்து சொல்ல முடியாது.. சொன்னா அது துரோகமா காட்டப்படும்.. ஆனா அஜித் கலைஞரின் முற்றுபுள்ளியை தொடர்ப்புள்ளி(கமா) ஆக்கிட்டார் அவருக்கே தெரியாமல்... காலம் பதில் சொல்லும் ...

kumar said...

நீங்கள் ரஜினியையோ, அஜித்தையோ ஒரு நடிகர் என்ற முறையில் பேசியவை அனைத்துமே சரியானவைதான்.... ஆனால், தமிழ்நாட்டில் அதையும் தாண்டி அவர்கள் ஒரு தலைவராகப் (Social Icon) பார்க்கப்படுவதுதான் இங்கு பிரச்சினை....

தமிழ்நாட்டின் Icon என்றால் தமிழனாக வாழுங்கள்.. இல்லை இது ஒத்து வராது என்றால் வெறும் நடிகனாக மட்டுமே இருங்கள்.... இதுதான், நான் சொல்ல வந்தது... இதற்கு காரணம் நடிகர்கள் இல்லை... தமிழ்நாட்டு இளைஞர்கள் தான்.... இருந்தாலும் தங்களுக்கு அந்த image பிடிக்கவில்லை எனில், தாங்களாகவே வெளியே வர வேண்டிய பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது....(ரசிகர் மன்றங்களை கலையுங்கள்,நடிக்க மட்டும் செய்யுங்கள்...சினிமா பற்றி மட்டும் பேசுங்கள்...தமிழ்நாட்டைப் பற்றி தயவு செய்து பேசாதீர்கள்.. )

Anonymous said...

ஒருவர் நடிகராக இருக்கின்றார் என்பதற்காக அவருக்கு என்று எந்த விருப்பு வெறுப்புகளும் இருக்க கூடாதா? ஒரு சாதாரண மனிதனாக அல்லது ஒரு சராசரி தமிழனாக இருந்து மற்றவர்களெல்லாம் இந்த பிரச்சினைகளின் போது என்ன செய்து விட்டார்கள்? ஏதோ நடிகர்கள் மீது ஒரு தனிப்பட்ட வெளிச்சம் இருப்பதனால் அவர்கள் மற்றவர்களின் ஏளன சொல்லுக்கு ஆட்பட வேண்டுமா? இது என்ன அவர்களின் தலை எழுத்தா? முதலில் ஒவ்வொரு தமிழனும் தமிழனாக வாழட்டும். பிறகு மற்றவர்களை குறை சொல்லலாம்.

இப்படிக்கு
ஒரு சராசரி தமிழன்.

குறிப்பு - உடனே யாரும் தயவு செய்து மறைந்த சகோதரர் முத்துக் குமாரை குறிப்பட்டு பேச வேண்டாம்.

Unknown said...

ஈழ தமிழர் கள் எல்லாருமே இந்தியாவில் சமூக விரோத செயல்களை செய்கிறார்கள் அவர்கள் ஈழத் தமிழர்கள் அல்ல

அவர்கள் இலங்கை தமிழர்கள் alla

மானம் கெட்ட தமிழர்கள்

எனது இந்திய நாட்டின் துரோகிகள்!!!

Unknown said...

vijay;ஈழ தமிழர் கள் எல்லாருமே இந்தியாவில் சமூக விரோத செயல்களை செய்கிறார்கள் அவர்கள் ஈழத் தமிழர்கள் அல்ல

அவர்கள் இலங்கை தமிழர்கள் alla

மானம் கெட்ட தமிழர்கள்

எனது இந்திய நாட்டின் துரோகிகள்!!!

அ.ஜீவதர்ஷன் said...

@ Priyan

@ kumar

@ vvNandaa

@ ultimate

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன், உங்கள் வருகைக்கு நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)