Friday, February 5, 2010

இது நகைச்சுவை மட்டுமே....

கடவுள் , மதங்கள்  பற்றிய விவாதம் இல்லை , வேண்டாம் !!!!

இது சிரிக்க மட்டுமே ....

scene-1

ஒரு மலை உச்சியில் சைவ , கிறிதவ , முஸ்லிம் ,பௌத்த மதத்தை சார்ந்த நான்குபேர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர் . யார் கடவுள் பெரியவர்? என்பதுதான் அந்த வாக்குவாதம். வாக்குவாதம் முற்றிய நிலையில் சரி இந்த மலையிலிருந்து நால்வரும் குதிப்போம் யார் கடவுள் காப்பாற்றுகிறாரோ அவர்கள் மதம்தான் சிறந்தது என முடிவெடுக்கிறார்கள். முதலில் கிறிஸ்தவர் " ஏசுவே " என கத்திய படி குதிக்கிறார், அவரை ஜேசு காப்பாற்றி விடுகிறார், அடுத்து பௌத்தர் "புத்தா " என்று அலறியபடி குதிக்க அவரை புத்தர் காப்பாற்று கிறார், அடுத்து முஸ்லிம் "அல்லாவை" அழைத்துகொண்டு குதிக்க அல்லா காப்பாற்றி விடுகிறார். இறுதியாக சைவ மதத்தவர் "அப்பனே முருகா " என்று கத்தியபடி பாய்கிறார், அவரை யாரும் காப்பாற்றவில்லை, இறந்து விடுகிறார். நேராக முருகனிடம் போகிறார், "இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே முருகா" என புலம்புகிறார், அதற்கு முருகன் "நீ அப்பனே முருகா என்றாய், நான் நினைத்தேன் அப்பன் காப்பாற்றுவாரென்று அப்பன் நினைத்தார் நான் காப்பாற்றுவேன் என்று இறுதியில் இருவரும் உன்னை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது" என்றார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

இது சிந்திப்பதற்கு
scene-2

ஒரு முருகபக்தர் 'முருகனிடம்' நல்ல பக்தி வைத்திருந்தார், அவர் தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் அது முருகனால் நீங்கிவிடும் என நம்பினார்.ஒருநாள் மழைவெள்ளம் ஆற்றை உடைத்து ஆற்றுத்தண்ணீர் ஊருக்குள் நுழைந்து விட்டது. அனைவரும் தப்பி ஓடுகிறார்கள்,ஆனால் இந்த பக்தர் மட்டும் முருகன் காப்பாற்றுவார் என போகாமல் இருக்கிறார். வெள்ளம் இடுப்பளவிற்கு வந்தபோது இவரது உதவியாளர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இவர் செல்ல மறுத்துவிட்டார். பின்னர் கழுத்தளவு வெள்ளத்தில் கூட இவரை மீட்புகுழுவினர் அழைத்தபோதும் முருகன் காப்பாற்றுவார் என மறுத்துவிட்டார். சிறிது நேரத்தின் பின்னர் இவர் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறிய படகில் வந்தவர்கள்
இவரது தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற்ற, இவர் அவர்களிடமிருந்து எகிறி "முருகன் காப்பாற்றுவார்" என கூறி வெள்ளத்தினுள் விழுகின்றார். சிறிது நேரத்தில் இறந்தவருக்கு சரியான கோபம், நேராக முருகனிடம் சென்று புலம்புகிறார், அதற்கு முருகன் சொல்கிறார் "நான் என்ன உன்னை நேரில் வந்தா காப்பாற்றமுடியும், அதற்காகத்தான் நான் உன்னை மூன்று தடவைகள் காப்பாற்ற மனிதர்களை அனுப்பினேன், இறுதியாக உன் தலை முடியைகூட இழுத்து ஒருவர் காப்பாற்ற முயற்சிசெய்தார் , நீதான் அழுங்கு பிடியாக இருந்துவிட்டாய் " என்றார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

இதுவும் சிரிக்க மட்டுமே....

scene-3

ஒரு படகில் அமெரிக்கன். ஜப்பானியர், சீனர் , சிங்களவர் , யாழ்ப்பாணத்தமிழர் என ஐந்துபேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அமெரிக்கன் கையில் வைத்திருந்த சிகரட் விழுந்து விட்டது, அவன் அதை தூக்கி கடலில் போட்டான், உடனே நம்மாளு (தமிழன் ) "எதற்காக எறிகிறீர்கள் காயவைத்து பாவிக்கலாமே" என்றார் அதற்கு அந்த அமெரிக்கன்" இது எங்கள்கள் நாட்டில் நிறைய இருக்கிறது "என்றார். அதேபோல சீனாகாரர் கட்டியிருந்த கடிகாரத்தில் தண்ணீர் பட்டுவிட்டதென்று அதை தூக்கி கடலில் எறிந்துவிட்டார் . உடனே நம்மாளு "அடப்பாவி காய வைத்திருக்கலாமே" என்றதற்கு அவரும் " இது எங்கள்கள் நாட்டில் நிறைய இருக்கிறது " என்ற அதே பதிலைத்தான் கூறினார்.

அடுத்து ஜப்பான்காரன் ஒரு சிறிய வானொலி நனைந்துவிட்டதென்று கடலில் ஏறிய நம்மாளு அதே ஆச்சரியத்துடன் "எதற்காக எறிகிறீர்கள் காயவைத்து பாவிக்கலாமே" என கேட்க அவரும் " இது எங்கள்கள் நாட்டில் நிறைய இருக்கிறது "என அதே பதிலை சொன்னார். அதேபோல சிங்களவர் கையில் வைத்திருந்த ரப்பர் பொருள் ஒன்றை கடலில்வீச நம்மாளு அதே கேள்வியை அவரிடம் கேட்க அவரும் அதே பதிலை சொன்னார். இவருக்கு பொறுமை இல்லை "அவனவன் எதை எதையோ எல்லாம் தூக்கி கடலில் எறிகிறான் நமக்கென்று கையில் ஒன்றுமே இல்லையே " எனஏங்கியவர் திடீரென் அருகிலிருந்த சிங்களவரை கடலில் தள்ளி விட்டார், எதற்காக இப்படிச் செய்தாய் என மற்ற மூவரும் கேட்க நம்மாளு "இது நம்ம இடத்தில நிறைய இருக்குது " என்றார்.



21 வாசகர் எண்ணங்கள்:

arumbavur said...

"இது நம்ம இடத்தில நிறைய இருக்குது " என்றார்.


வேற கருத்து சொல்ல ஒன்றும் இல்லை
சூப்பர்

வால்பையன் said...

:-)

வால்பையன் said...

:-)

chosenone said...

scene3.......sooper

ஸ்ரீநி said...

டாடாடாடாடாடாடாய்...........
பெண்ணிய குழுக்களா கூபுடுங்கடா ........
எப்பூடி ஒரு ஆணாதிக்க சிந்தனை ....
பெண்களுக்கு நகைச்சுவையில் உரிமை இல்லியா...
இதை கண்டித்து முதலமைச்சர் வீட்டு POMERANIAN நாய் கடற்கரையில வாக்கிங் வர்ற நேரமா பத்து ஊர்வலம் ஏற்பாடு பண்ணுங்கடா.........

இப்படிக்கு - சும்மா கிடந்த சங்க, ஊதிக் கெடுக்கும் ஆண்டிகள் சங்கம்
( இப்போதைக்கு இவ்ளோதான் டேர்றோர் எபக்ட் !!!!! )

பாஸ்கரன் said...

//அவர் முருகனால் தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் நீங்கிவிடும் என நம்பினார்//

தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் அது முருகனால் நீங்கிவிடும் என நம்பினார்.

எனக்கும், scene3 தான்...

வரதராஜலு .பூ said...

:)

பேநா மூடி said...

மூன்றாவது சிரிப்பதற்க்கு மட்டுமா... என்ன

ஞானப்பழம் said...

"பாவிக்கலாமே" என்பது என்ன பொருள் தருகின்றது?

மூன்று காட்சிகளுமே எனக்கு பிடித்திருந்தது! மூன்றாம் காட்சியில் ஒரு இந்தியரும் அந்த படகில் போயிருந்தால் எதை எறிந்திருப்பார் என்று சொல்லுங்களேன்...

kumar said...

பாஸ்கரன் சொன்னது…

//அவர் முருகனால் தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் நீங்கிவிடும் என நம்பினார்//

தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் அது முருகனால் நீங்கிவிடும் என நம்பினார்.

சரியான திருத்தம்... நன்றி பாஸ்கரன்...

எப்பூடி ... said...

arumbavur @

வால்பையன் @

chosenone @

ஸ்ரீநி @

பாஸ்கரன் @

வரதராஜலு .பூ @

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், சிரிப்பிற்கும் -:) நன்றி

எப்பூடி ... said...

பேநா மூடி

//மூன்றாவது சிரிப்பதற்க்கு மட்டுமா... என்ன//

ஆமாங்க , நம்புங்க -:)

........................................

ஞானப்பழம்

//"பாவிக்கலாமே" என்பது என்ன பொருள் தருகின்றது?//


உபயோகப்படுத்தலாமே

//மூன்றாம் காட்சியில் ஒரு இந்தியரும் அந்த படகில் போயிருந்தால் எதை எறிந்திருப்பார் என்று சொல்லுங்களேன்...//


அவர் தனக்கு அருகிலிருந்த தமிழக அரசியல்வாதியை தள்ளிவிட்டிருப்பார்-:)

எப்பூடி ... said...

kumar @

பாஸ்கரன் @

பிழையை சுட்டிக்காட்டியமைக்கு இருவருக்கும் நன்றி.

V.A.S.SANGAR said...

முருகா! முருகா

ஞானப்பழம் said...

அவர் தனக்கு அருகிலிருந்த தமிழக அரசியல்வாதியை தள்ளிவிட்டிருப்பார்-:)//
ஹிஹி.. நாங்க மனுசர்களக் கண்டாலே தள்ளிவிட்டுருவோம்.. எங்கூர்லதான் அது நிறைய இருக்கே!!

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ :-)

எப்பூடி ... said...

V.A.S.SANGAR @

சிங்கக்குட்டி @

நன்றி

............................

ஞானப்பழம்

//ஹிஹி.. நாங்க மனுசர்களக் கண்டாலே தள்ளிவிட்டுருவோம்.. எங்கூர்லதான் அது நிறைய இருக்கே!!//

இது உங்களைவிட சீனாக்காரனுக்கு நன்றாக பொருந்தி இருக்கும்

kumar said...

//அவர் முருகனால் தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் நீங்கிவிடும் என நம்பினார்//

தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் அது முருகனால் நீங்கிவிடும் என நம்பினார்.

உங்கள் பதிவில் இந்த திருத்தத்தை செய்வீர்கள் என எதிர்பார்த்தேன்... ஏனெனில் , ஆபத்தானது முருகனால் ஏற்பட்டது என்ற பொருளாகிவிடும்...

எப்பூடி ... said...

kumar

//தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் அது முருகனால் நீங்கிவிடும் என நம்பினார்.
உங்கள் பதிவில் இந்த திருத்தத்தை செய்வீர்கள் என எதிர்பார்த்தேன்... ஏனெனில் , ஆபத்தானது முருகனால் ஏற்பட்டது என்ற பொருளாகிவிடும்...//



நான் அதை திருத்தினால் உங்கள் பின்னூட்டல் வருபவர்களுக்கு புரியாதென்பதற்காகவே மாற்றவில்லை. இதோ மாற்றிவிடுகின். நன்றி

r.v.saravanan said...

ஹி ...ஹி....ஹி...ஹி

எப்பூடி ... said...

r.v.saravanan

சிரிப்பிற்கு நன்றி :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)