Thursday, February 4, 2010

விஜய்கூட சேர்ந்து அஜித்தும் விக்ரமும்....

இம்மாதம் ஆறாம் திகதி கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டுவிழா பிரம்மாண்டமாக இருக்கப்போவது உறுதி.இதற்கு முன் பல பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் பல நடைபெறவிருந்தாலும் இவ்வருடத்தின் முதலாவது பாராட்டுவிழாவாக இது இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது."மி த பெஸ்ட்" என்று இந்த பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் நம்ம சினிமா சிகாமணிகள்.திரைப்படத் தொழிளார்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்டிக் கொடுத்ததற்காக நடைபெறுகிறது இந்தப் பாராட்டு விழா.ரஜினி கமல் பங்கு பெறுவது உறுதியாகிவிட்டநிலையில் முதல்வரின் இருபக்க சீட்டும் புக்கிங்.வழமை போல நமிதா,முமைத்கான்,ரகசியா போன்றோரின் கலைச்சேவை நிச்சயம் இருக்கும்.இப்ப மாட்டர்க்கு வருவோம்.அண்மையில் தமிழ் பற்றி கலைஞர் எழுதி ரஹ்மான் இசையமைத்த பாடலுக்கு நடனமாட போகிறவர்கள் தான் ஹைலைட்டே.தல தளபதி சியான் மூணு பேரும் ஒண்ணா மேடையில இப்பாடலுக்கு ஆடப் போறதா பேச்சு அடிபடுது.ங்கொக்கமக்க,மூணு பேரையும் ஒண்ணா ஒரு விழாவில பார்க்கிறதே அபூர்வம்.(இதுக்கு முன்னாடி தமிழகவிருதுவழங்கும் விழாவுக்கு ஒண்ணா வந்திருக்கணும் ).இதில ஒரே மேடையில டான்சா? அட்ட்ரா சக்க அட்ட்ரா சக்க,திரையிலதான் பெரிய நடிகர்கள ஒண்ணா பார்க்கிற வாய்ப்புதான் தமிழ் ரசிகர்களுக்கு இல்லை,மேடையில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதல்வர் வாழ்க வாழ்க வாழ்க.அஜித் மேடையில் பேசுவதே அத்தி பூத்தாற்போல ,இப்போ டான்சு ,அதுவும் விஜய் கூட,விக்ரமும் சேர்ந்து,ஆகா வேண்டாம் மக்களே வேண்டாம்.வேறெந்த விசயத்தில என்றாலும் பருவாயில்லை ஆனா இந்த விஷயம் மட்டும் உண்மையாக நடந்தால் தளபதி கூட இந்த விஷயத்தில தலயும்,சியானும் மூக்குடைபடப்போவது உறுதியோ உறுதி.என்னமோ உங்க ரெண்டு பேரோட தைரியம் எனக்குப் பிடிச்சிருக்கு.

அப்பாடா நாமளும் விஜய பற்றி பெருமைய ஒரு பதிவு எழுதிட்டோம்ல.

யாரப்பா நான் முதல் தடவையா விஜயை பற்றி நல்லா எழுதேக்க "ஒருவேளை இந்த நடன ஏற்பாடும் நம்ம எஸ். ஏ. சி வேலையா இருக்குமோ? " என்று சொல்லுறது, தொலைச்சுபோடுவன் தொலைச்சு......

11 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

நல்லாயிருந்த நல்லயிருப்போம்

ஹாய் அரும்பாவூர் said...

எல்லாம் கால கொடுமை
வேற என்ன சொல்ல
"சினிமாக்காரங்க பாவம் ரொம்ப ஏழைங்க அரசு உதவி தொடரட்டும் "

Unknown said...

பாவம் சினிமா

Unknown said...

அருமையான மேட்டர் தான்

chosenone said...

ச்சச்ச்ச்சச்ச்ச்சப்பா முடியல
இவிங்க ஒண்டா சேந்து கும்மி அடிக்க போறத ஆஸ்கார் range க்கு பில்டப் பான்னுரின்களே !!!ஏன் இந்த கொலை வெறி!
உருப்படியா ஒரு வெற்றி படம் கொடுக்க வக்கில்ல ,அனால் எடுக்குற பைசாவும் குறைக்க மாட்டான் பண்ணுற பில்டப்புக்கும் குறைக்க மாட்டான் ......

தமிழ் ரசிகனை நெனச்சா எனக்கு பாவமா இருக்கு.{வடிவேலு ஸ்டைலில்}
இவிங்க எவளவு மொக்கை போட்டாலும் அதை உட்காந்து ரசிக்கிறான் பாருங்க ....அவன் ரொம்ம்ம்ப நல்லவங்க ...

chosenone said...

கருணாநிதி மாதிரி ஒரு "hardcore ஜால்ரா விரும்பி" யை நான் பார்த்ததே இல்லை ;சாமி !!!!!!!!!

Yoganathan.N said...

இந்த விசயம் அஜித், விஜய், விக்ரமுக்கு தெரியுமா???

kailash,hyderabad said...

வேஸ்ட் ஆப டைம். இவங்களுக்கு வீடு கிடைக்குது. மக்களுக்கு என்ன கிடைக்குது?

அ.ஜீவதர்ஷன் said...

negamam

//நல்லாயிருந்த நல்லயிருப்போம்//

சத்தியமா புரியல...


......................................

arumbavur

//"சினிமாக்காரங்க பாவம் ரொம்ப ஏழைங்க அரசு உதவி தொடரட்டும் "//

அவ்வ்வ்வவ்வ்வ்.........

.......................................

V.A.S.SANGAR

// பாவம் சினிமா//

சினிமா மட்டும்தானா? அப்ப நாங்க?

.....................................

பேநா மூடி

//அருமையான மேட்டர் தான்//

நன்றி


..................................

chosenone

//கருணாநிதி மாதிரி ஒரு "hardcore ஜால்ரா விரும்பி" யை நான் பார்த்ததே இல்லை ;சாமி !!!!!!!!!//

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கப்புறம்..... இல்லயில்ல முதல் நம்ம கலைஞர்தான்.


.....................................

Yoganathan.N

//இந்த விசயம் அஜித், விஜய், விக்ரமுக்கு தெரியுமா???//

யாருக்கு தெரியும் -:)

.....................................

kailash,hyderabad

//வேஸ்ட் ஆப டைம். இவங்களுக்கு வீடு கிடைக்குது. மக்களுக்கு என்ன கிடைக்குது?//

இலவச டிவி எதுக்கு குடுத்தாரு ? இதெல்லாம் பார்க்கத்தான்.

பா.வேல்முருகன் said...

// "ஒருவேளை இந்த நடன ஏற்பாடும் நம்ம எஸ். ஏ. சி வேலையா இருக்குமோ? " என்று சொல்லுறது, //

நான் நென்ச்சேன். நீ சொல்ட்ட..

அ.ஜீவதர்ஷன் said...

Vels

//நான் நென்ச்சேன். நீ சொல்ட்ட..//


ஒரே மாதிரி திங் பண்ணுறமோ.....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)