Wednesday, February 3, 2010

ஹோலிவூட் ரவுண்ட்டப்சாயங்கள் வேண்டாமே

சென்றவாரம் ரிலிசான நான்கு தமிழ் படங்களில் அனைவரையும் கவர்ந்தது "தமிழ்ப்படம்" தான்.அனைத்து விமர்சனங்களையும் படித்ததும் கடுப்பாகிவிட்டேன்,அட நம்ம இடத்தில ரிலீஸ் ஆகலைங்க,கடுப்பேத்துறாங்க மை லாட்ஸ்.நீண்டநாட்களின் பின்னர் ஒரு முழுநீள நகைச்சுவைத் திரைப்படம்,ஒரு புதிய முயற்சி,கண்டிப்பாக பட்டையை கிளப்பப்போவது உறுதி.முதன்முறையாக அனைத்து பதிவர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களையே எழுதியிருந்தார்கள்,அதுவே ஒரு சாதனைதான்.

ஆனாலும் ரஜினிக்கு செமத்தியா கொடுத்திருக்காங்க,விஜய் தூக்கு போட்டிறலாம் என்கிற ரேஞ்சில இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் வேண்டாமே.நிச்சயம் இது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மனதில் ஒரு எதிர்மறையான மனநிலையினை ஏற்படுத்தும்,இது இவர்களது இயலாமையின்(தாழ்வு மனப்பான்மையின்)வெளிப்பாடு.எழுபத்தைந்து ஆண்டுகால சினிமாவில் பாரம்பரியமாக இருக்கும் சில விடயங்களை வைத்து ரசிகர்களை கவரும் வகையில் ஒருபடம்.காதல்,ஆக்ஷன்,த்ரில்லர் போன்று இதுவும் ஒரு genre of film making.அதை விடுத்து ஷக்தி சிதம்பரம் சத்யராஜ் கூட்டணி படங்கள்போல எந்தவொரு தனிமனித தாக்குதல்களோ உள்நோக்கங்களோ நிச்சயம் இல்லை.ரசிக்கவேண்டிய இப்படத்தை வேறுசாயங்கள் பூசாது ரசிப்போம். உங்களுக்கு தமிழ் வருமா?பாலாவின் "அவன் இவன்" பற்றி ஏற்கனவே தெரிந்ததே.சரத்தின் மகள் வரலக்ஷ்மி தான் ஹீரோயின் என முடிவாகியிருந்த போதும் சில காரணங்களால் ஜனனி ஐயர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.இவர் பிறந்தது படித்தது எல்லாம் சென்னைதான்.இதுதான் அவருக்கு முதல் படமெனினும் தேசிய பிராந்திய ரீதியாக நூற்றைம்பது விளம்பரங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது தான் லட்சியமாம்.

கிரீடம், பொய்சொல்லப்போறோம் படங்களின் இயக்குனர் விஜய்தான் ஜனனிக்கு குரு.இவர்தான் பாலா படத்திற்கு ஹீரோயின் தேடுவதால் ஜனனியை பாலாவுக்கு அறிமுகம் செய்தவர்.தன் குரு மூலம் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகக் கூறுகிறார்.த்ரிஷாவிற்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.இவராவது ஜொலிப்பாரா? த்ரிஷா தமிழ் சரியாக பேசாததற்கு நம்ம T.R ஒரு மேடையில டர் ஆக்கினார் ஞாபகமிருக்கா? இந்த அம்மணிக்கு ஆச்சும் தமிழ் வருமா?
அசத்துமா அசல் ?
இந்த வார இறுதியில் (5 ஆம் திகதி ) அஜித்தின் அசல் வெள்ளித்திரைக்கு வருகின்றது. டிக்கர் விற்பனைகள் சூடு பிடித்திருக்கும் நிலையில் king of opening என செல்லமாக அழைக்கப்படும் அஜித்தின் opening ஐ அசல் பெறுமென்றாலும் தொடர்ச்சியாக படம் ஓடுவது சரணின் கைகளிலேயே தங்கிஉள்ளது. அண்மைக்கால சரணின் படங்கள் பெரியளவில் போகாவிட்டாலும் என்னை பாதித்த ஒரு படம் 'வட்டாரம்'. சில நேரங்களில் அதிகமானவர்களுக்கு சரணின் திரைக்கதை விளங்குவதில்லை(அண்மைய படங்களில்), இதுதான் சரணின் அண்மைக்கால படங்களின் தோல்விக்கு காரணமாக கூட இருக்கலாம் . அசலில் அந்த குறை இருக்காதென்று நம்பலாம்.

அஜித் சரணுடன் இணையும் நான்காவது படமாக அசல் இருந்தாலும் முதல் மூன்று வெற்றிப்படங்களிலும் கூட இருந்த மோகன மகேந்திரன்(கலை ), வெங்கடேஷ் (ஒளிப்பதிவு ) என்பவர்கள் இல்லாமல் புதிய கூட்டணியில் அசல் உருவாகியுள்ளதால் , நிச்சயம் படத்தின் 'நிறம்' வேறுமாதிரியாக தான் இருக்கும். அது நன்றாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.(பதிவர்களின் விமர்சனகளை பார்த்து அல்ல ). மாறும் அஜித் சிவா என்னும் பெயரில் நடிக்கும் ஆறாவது படமிது, இதற்கு முன்னர் ஆழ்வார், ஏகன் என இரண்டு பிளாப் படங்களும் காதல் மன்னன், வில்லன், வாலி என மூன்று ஹிற்களிலும் நடித்துள்ளார். அவற்றில் வாலியும் வில்லனும் இரட்டை வேடங்கள், இப்போ அசலும் இரட்டை வேடம், அப்போ செண்டிமெண்டா பார்த்தால் அசல் ஒரு ............?

இதற்கிடையில் அஜித்திற்கு இன்னுமொரு சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. எப்போதும் அஜித்தை குறிவைத்து தாக்கும் சன் நெற்வேர்க் அசல் வெளியாகிய அடுத்த வாரமே (feb 12) விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளையை' வெளியிடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் 'அசல்' 'தீராத விளையாட்டு பிள்ளையை' பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றிநடை போடுமானால் அது தொடர்ச்சியாக சன்னுக்கு விழும் இரண்டாவது அடியாகும் (முதலடிதான் எல்லோருக்கும் தெரியுமே ). சன்னின் பலமா , அஜித்தின் பலமா ஜெயிக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.சன்னை தாக்கவரும் கலைஞர்

அஜித்தை சன் டிவி குறி வைக்கின்ற தென்றால் சன் டிவியை கலைஞர் டிவி குறி வைக்கின்றது . தீராத விளையாட்டு பிள்ளை ரிலீசாகி சரியாக ஒரு வாரத்தில் (feb 19 ) திரிசா, சிம்பு நடிக்க கெளதம் வாசுதேவ மேனன் ஏதோவொரு ஆங்கில படத்தையோ அல்லது நாவலையோ கொப்பி பண்ணி மணிரத்தினத்தின் வசனநடையில் பேஸ்ட் செய்துள்ள 'விண்ணை தாண்டி வருவாயா' ரிலீசாகின்றது., இதனை வாங்கி ரிலீஸ்செய்வது நம்ம உதய நிதியின் 'குருவி, ஆதவன் ' புகழ் 'ரெட் கெயின் மூவிஸ்'. இது சிம்புவுக்கும் விசாலுக்குமான போட்டி என்பதைவிட சன்னுக்கும்(டிவி ) , கலைஞருக்குமான(டிவி) போட்டி என்றால் சரியாக இருக்கும், உதயநிதி ஒரு படத்தை முதல் தடவையாக வாங்கி வெளியிடும் அதேநேரம் தயாநிதிமாறன் இதில் அதிக முன்னனுபவம் உள்ளவர், கலைஞரின் எந்தப்பேரன் ஜெயிக்கபோகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்தடுத்த மூன்று வாரங்களில் மூன்று பெரியபடங்கள் ரிலீசாவதால் அந்த படங்களுக்குள் கடுமையான போட்டி நிலவுகிறதோ இலையோ விமர்சனம் எழுதுவதில் நம்ம பதிவர்களுக்குள் கடுமையான போட்டி(யார் முதலில் எழுதுவதென்று ) இருக்குமென்று நம்பலாம்.

9 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

எது எப்படியோ இந்த ஆண்டின் முதல் வெற்றி படம் என்ற பெயரை தமிழ் படம் பெற்றுவிட்டது

சன் டிவி கலைஞர் டிவி போட்டி என்பது எல்லாம் நமக்குதான் நாளையே அவர்கள் ஒன்று சேர்வார்கள்

இனிமேல் டைட்டில் பாடல் சண்டை வைக்க தயங்குவார்கள் அது உண்மை
ரஜினி தவிர என்ன ஸ்டைல் மறுபெயர் ரஜினி

அசல் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறன் நல்ல கதையை மட்டும் நம்பி வந்தால்

விண்ணை தாண்டி வருவாய வெற்றியோ தோல்வியோ ஆனால் பாடல் சூப்பர் ஹிட

Yoganathan.N said...

//வாலியும் வில்லனும் இரட்டை வேடங்கள், இப்போ அசலும் இரட்டை வேடம், அப்போ செண்டிமெண்டா பார்த்தால் அசல் ஒரு ............? //

எப்படி எல்லாம் யோசிக்குறாங்க பாருங்கையா... ஹிஹிஹி

//நன்றாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.(பதிவர்களின் விமர்சனகளை பார்த்து அல்ல ). //

இது மேட்டருரு... :)

'அசல்' 'தீராத விளையாட்டு பிள்ளையை', 'வீண்ணைத் தாண்டி வருவாயா', 'கோவா', 'தமிழ் படம்' - எல்லாவற்றுக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்.

மிகவும் 'nervous'-ஆக இருக்கிறது நண்பரே...

Raju said...

கௌதம்-மணிரத்னன் காப்பி பேஸ்ட் கலக்கல் சொல்லாடல்..!

மனோரஞ்சன் said...

உங்கள் பதிவுகளை அடிக்கடி வாசித்து வருபவன் நான். அதிலும் குறிப்பாக சினிமாப்பதிவுகள். நல்லாவே எழுதுறீங்க.

சரி மேட்டருக்கு வாறேன்...
//
ஆனாலும் ரஜினிக்கு செமத்தியா கொடுத்திருக்காங்க,விஜய் தூக்கு போட்டிறலாம் என்கிற ரேஞ்சில இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் வேண்டாமே.நிச்சயம் இது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மனதில் ஒரு எதிர்மறையான மனநிலையினை ஏற்படுத்தும்,இது இவர்களது இயலாமையின்(தாழ்வு மனப்பான்மையின்)வெளிப்பாடு.எழுபத்தைந்து ஆண்டுகால சினிமாவில் பாரம்பரியமாக இருக்கும் சில விடயங்களை வைத்து ரசிகர்களை கவரும் வகையில் ஒருபடம்.//
உண்மை, அனைவரும் உணரவேண்டிய உண்மை.

ஆனால் இதில் தெரியும் அந்த நியாயமான பேச்சு,
//திரிசா, சிம்பு நடிக்க கெளதம் வாசுதேவ மேனன் ஏதோவொரு ஆங்கில படத்தையோ அல்லது நாவலையோ கொப்பி பண்ணி மணிரத்தினத்தின் வசனநடையில் பேஸ்ட் செய்துள்ள 'விண்ணை தாண்டி வருவாயா'//
இதில் எனக்கு தெரியவில்லை.
உண்மைதான் 'ப‌ச்சைக்கிளி முத்துச்சரம்' கொப்பி & பேஸ்ட் தான். ஆனால் அதற்காக ஒரு படம் வெளி வருவதற்கு முன்பே, இப்படி விமர்சிப்பது சரியாகப் படவில்லை. ஏதோ தனிப்பட்ட கோபம் போல் தெரிகின்றது. தவிர கெளதமின் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரண‌ம் ஆயிரம்' போன்றவை நல்ல படங்கள் தானே.
இதேப்போல் உங்கள‌து வேறு சில பதிவுகளிலும் உணர்ந்தேன். பாத்துக்குங்க‌ பாஸ்...!

Unknown said...

வர வர ரொம்ப நல்லா எழுதுறிங்க...

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.


.......................................

Yoganathan.N


//மிகவும் 'nervous'-ஆக இருக்கிறது நண்பரே...//

don't worry be happy.


......................................


♠ ராஜு ♠

//கௌதம்-மணிரத்னன் காப்பி பேஸ்ட் கலக்கல் சொல்லாடல்..!//

நன்றி

....................................

மனோரஞ்சன்

//உண்மைதான் 'ப‌ச்சைக்கிளி முத்துச்சரம்' கொப்பி & பேஸ்ட் தான். ஆனால் அதற்காக ஒரு படம் வெளி வருவதற்கு முன்பே, இப்படி விமர்சிப்பது சரியாகப் படவில்லை. ஏதோ தனிப்பட்ட கோபம் போல் தெரிகின்றது. தவிர கெளதமின் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரண‌ம் ஆயிரம்' போன்றவை நல்ல படங்கள் தானே.//


காக்க காக்க நல்ல படம்தான். ஆனால் வாரணமாயிரம் ஒரு ஆங்கில படத்தி தழுவல்தான், அதேபோல வேட்டையாடு விளையாடும் ராஜேஷ் குமாரின் நாவலின் தழுவல்தான். அடுத்து எனக்கு கௌதம்மேனன் மீது தனிப்பட்ட ரீதியில் எப்படி கோபம் வரும்? ஆனால் அவர் தேவையில்லாமல் மற்ற கலைஞர்களின் படைப்பை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமாவையும், சுப்ரமணியபுரதத்தையும் அதன் இயக்குனர்களையும் எதற்காக தாக்கி பேசவேண்டும். இவர் சுயமாக சிந்தித்து படமெடுப்பவர் என்றால் கூட பருவாயில்லை, இவரே ஒரு கொப்பி பேஸ்ட் தானே? அதுதவிர அப்புறம் இவர் எப்படி மற்றவர்களது படைப்புகளை விமர்சிக்க முடியும். இது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள்.

இருந்தாலும் இனிவரும் காலங்களில் தேவையில்லாமல் எனக்கு பிடிக்காதவர்களை பற்றி திணித்து எல்துவதை தவிர்க்கிறேன். உங்கள் அறிவுரையை பின்பற்ற முயற்சிக்கிறேன்.

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி சொன்னது…

//வர வர ரொம்ப நல்லா எழுதுறிங்க...//

ஆமா என்ன வர வர ? ஹி ஹி....

Unknown said...

முன்ன விட நல்லா எழுதுறிங்கன்னு சொன்னேன்..., ஹி ஹி

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//முன்ன விட நல்லா எழுதுறிங்கன்னு சொன்னேன்..., ஹி ஹி//

நன்றி நன்றி...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)