Tuesday, February 2, 2010

'கோவா' அசத்தலான ஆரம்பவசூல்.சென்றவாரம் கோவா, ஜக்குபாய், தமிழ்ப்படம் என எதிர்பார்ப்பை எகிறவைத்த முக்கியமான மூன்று படங்கள் வெளியாகின. இவற்றில் அதிகமான பதிவர்களால் வரவேற்கப்பட்ட படமாக 'தமிழ்படம்' இருந்தது. அதிகமானவர்களது திட்டுக்கள் 'கோவாவிற்கே' கிடைத்தது. 'ஜக்குபாயை' பாவம் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் சென்றவார சென்னை box office நிலவரப்படி 'கோவா' தனக்கு போட்டியான 'தமிழ்ப்படத்தை' விட இருபதுலட்சம் ரூபாயை அதிகமாக வசூலித்துள்ளது, இது வெறும் மூன்று நாட்களில் கிடைத்த வசூல்தான், இந்த வசூல் தொடருமா? 'கோவா' வெற்றிக்கனியை சுவைக்குமா என்பதை அடுத்தடுத்த வாரங்களின் box office நிலவரங்களின்படி தெரிந்துகொள்ளலாம்.கடந்த மூன்று நாட்களின் பிரகாரம் 88 % ஆரம்பகட்ட காட்சிகளுடன் 'கோவா' கிட்டத்தட்ட 47 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது, 'தமிழ்படம்' 90 % ஆரம்பகாட்சிகளுடன் கிட்டத்தட்ட 26 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது. தமிழகத்தின் 'அடுத்த முதல்வர்' லிஸ்டில் இருக்கும் சரத்குமாரின் 'ஜக்குபாயின்' ஆரம்பம் படுமோசமாக இருந்தது, 68 % காட்சிகளுடன் வெறும் 9 இலட்ச ரூபாயையே இது வசூலித்துள்ளது. மக்கள் ஆதரவு உள்ளதாக பில்டப் அடிக்கும் சரத்குமாருக்கு சுந்தர்.c ஐ விட குறைவான ஓப்பினிங்கே (opening) கிடைத்துள்ளது, இந்த மூன்று நாட்களின் வசூலில் ஜக்குபாய்க்கும் நான்காம் இடமே கிடைத்தது. 2005 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஐயா' படத்திற்கு பின்னர் சரத்குமார் எந்தவொரு வெற்றிப்படமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , இறுதி ஐந்து ஆண்டுகளாக ஒரு வெற்றிப்படத்திற்காக ஏங்கும் சரத்திற்கு 'ஜக்குபாய்' பத்தோடு பதினொன்றுதான்.பதிவர்கள் எவ்வளவுதான் மோசமாக விமர்சித்தாலும் ஆயிரத்தில் ஒருவன் இன்னமும் வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறது, புதிய படங்கள் வந்தபோதும் வசூலில் மூன்றாமிடத்தில் 70 % காட்சிகளுடன் கடந்த மூன்று நாட்களில்மட்டும் 23 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது, இது 'தமிழ்படத்தை' விட 3 இலட்சம்தான் குறைவாக உள்ளது என்பது கவனிக்கபடவேண்டியது. மொத்தமாக இதுவரை சென்னையில் மட்டும் 2 .7 கோடி வசூலித்திருந்தாலும் தயாரிப்பு செலவுடன் பார்க்கும்போது ஆயரத்தில் ஒருவன் முழுமையான வெற்றிப் படமில்லை , அதேநேரம் முழுமையான தோல்விப்படமுமில்லை.அதேபோல தனுசின் 'குட்டியும்' சுமாரான வசூலையே பெற்றிருக்கின்றமையால் அதுவும் வெற்றிப்படமல்ல.

அடுத்த வாரம் 'அசல்' ரிலீசாகும் பட்சத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழலாம், 'அசல்' பற்றிய விசேட தகவல்கள் நாளைய 'கொலிவூட் ரவுண்டப்' பதிவில்.

5 வாசகர் எண்ணங்கள்:

Paarvai said...

Nice .... will see after Aasal

Unknown said...

நல்லா இருக்கு...,

ஞானப்பழம் said...

தமிழ் படம் கதையே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.. அதனால் அதை கோவாவோடோ சக்குபாயோடோ ஒப்பிடாதீர்கள்.. தமிழ் படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பையும் அதற்க்குண்டான வரவேற்ப்பையும் பாருங்கள்.. நான் எந்த படங்களையுமே பார்க்கவில்லை.. அதனால் அதிகமான கருத்து சொல்ல விருப்பம் இல்லை..

அ.ஜீவதர்ஷன் said...

velanaiTamilan

//will see after Aasal//

ok.

...................................

பேநா மூடி

//நல்லா இருக்கு...,//


நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//தமிழ் படம் கதையே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.. அதனால் அதை கோவாவோடோ சக்குபாயோடோ ஒப்பிடாதீர்கள்.. தமிழ் படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பையும் அதற்க்குண்டான வரவேற்ப்பையும் பாருங்கள்..//

உங்களுக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தமிழ் படத்திற்கு எதிராக எழுதவில்லை. யாழ்ப்பாணத்தில் தமிழ் படம் ரிலீசாகாத கடுப்பில் இருப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் திட்டமிட்டே கோவாவையும், ஆயிரத்தில் ஒருவனையும் சிலர் தோற்கடிக்க பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தமிழ் படத்திற்கு ஆதரவு கொடுப்பதில் எந்த தவறுமில்லை, ஆனால் கோவாவை பின்னுக்குதள்ளிவிட்டு 'தமிழ் படம்' அமோகமான் ஒப்பினிங் பெற்றுள்ளது என்றஅவர்களது பொய் பிரச்சாரத்தை உடைக்கவே இந்த உண்மையான box office repor .

அடுத்த பதிவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)