Monday, February 1, 2010

எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் [ 01/02/2010]


ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகள்{Australian open},Manchester united அணிக்கும் Arsenal அணிக்கு மிடையிலான போட்டி,பாகிஸ்தான் , ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பற்றிய தகவல்கள் ...........
ஒரு வழியாக ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகள் முடிவடைந்து விட்டன, ஆண்கள் பிரிவில் உலகின் முதல்தரவீரரான சுவிட்சலாந்தின்ரோஜர் பெடரரும் பெண்கள் பிரிவில் உலகின் முதல்தர வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் பட்டங்களை வென்றனர். இது பெடரருக்கு 16 ஆவது கிரான்சிலாம் பட்டமாகும், அதேபோல செரீனாவுக்கு 12 ஆவது பட்டமாகும்.

பெடரரின் கதை அவ்வளவுதான் என்றவர்களுக்கும் , எப்போது ஒய்வுபெரப்போகிரீர்கள் என்று கேட்டவகளுக்கும் சரியான பதிலை பெடரர் வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக மோசமான போமில்(form) இருந்த பெடரர் காலிறுதிக்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்தார் என்றே சொல்லலாம். இன்றைய இறுதியாட்டத்தில் இங்கிலாந்தின் அண்டி முறேயை 6-3, 6-4, 7-6 என்ற செற் கணக்கில் தோற்கடித்து அதிக ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்றவர்கள் பட்டியலில் அன்றே அகாசியுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.


போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து ஊடகங்கள் அண்டி முரேக்கு குடுத்த அலுப்பறை தாங்கமுடியல. இது முரேயுக்கு பதினேழாவது கிரான்சிலாமாம் பெடரரும் முதல் கிரான்சிலாமை 17 ஆவது கிரான்சிலாம் போட்டிகளில்தான் பெற்றாராம், அப்படி என்றால் கிண்ணம் முரேக்குதான் என எதிர்வுகூறின. முரேயும் தன்பங்கிற்கு முன்னர் பெடரரிடம் தோற்றபோதெல்லாம் முழுமையான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தவில்லை என்றும் , இறுதிப்போட்டியில் அதனை வெளிப்படுத்த போவதாகவும் கூறியிருந்தார். முரே சொன்னதுபோல அவரது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆனால் பாவம் பெடரருமல்லவா தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். அதனால்தான் முதல் மூன்று செற்களிலேயே போட்டி முடிவடைந்து விட்டது.

பெண்கள் பிரிவில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஆடவந்த முன்னால் முதல்தர வீராங்கனையான பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் இறுதிப்போட்டிவரை வந்தது அவரது உடல்தகுதியும் , திறனும் மங்கவில்லை என்பதை காட்டியது. இறுதிப்போட்டிகளில் செரீனாவை தவிர வேறுயாராவது வந்திருந்தால் கிண்ணத்தை கைப்பற்றி இருந்தாலும் கைப்பற்றி இருப்பார். அடுத்து அவருக்கு சாதகமான பிரெஞ்சு (களிமண்தரை) கிண்ணம் வருவதால் அங்கு ஒரு கிண்ணத்தை ஹெனினிடம் எதிர்பார்க்கலாம்.
இந்த வாரம் Man Utd அணிக்கும் Arsenal அணிக்கு மிடையிலான போட்டி விறுவிறுப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கபட்டபோதும் Arsenal கோல் காப்பாளர் Almunia விட்ட ஆரம்ப தவறால் (own goal) ஆட்டம் Man Utd கைக்கு சென்றுவிட்டது. இறுதியில் Man Utd 3-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று Premier League இல் இரண்டாமிடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது. Chelsea தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகின்றது.
பாகிஸ்தான் , ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியையும் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தாரைவார்த்து கொடுத்தது. ஆரம்பத்தில் விக்கட்டுகள் இழந்தாலும் நிதானமாக ஆடிய உமர்(67), அலாம்(63) இளம்ஜோடி 212 என்னும் ஓரளவு போராடும் (பெர்த் ஆடுகளமென்பதால் ) இலக்கிற்கு இட்டுச்சென்றது. எதிர்பார்த்தது போல ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும் இறுதியாக ஹசியின்(ஆட்டமிழக்காமல் 40 ) உதவியுடன் 8 விக்கட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா போட்டியை வென்றது. முன்னதாக பாண்டிங் 55 ஓட்டங்களை பெற்றார். ஆட்டநாயகனாக CJ McKay யும் தொடர்நாயகனாக RJ Harrisum தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அடுத்தவாரம் மீண்டும்  விளையாட்டு தகவல்களோடு  சந்திப்போம்

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)