Wednesday, February 17, 2010

ஹோலிவூட் ரவுண்டப் [17/02/2010]மாத்தி மாத்தி குழப்புராங்கையா  ....

 கே.வி ஆனந்த் படத்தில் இருந்து விலகிய சிம்புவிற்கு பதிலாக ஜீவா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதேஸ்' தயாரிப்பில் பூபதிபாண்டியன் இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடிப்பதாக இருந்தது. இருந்த புதிய படத்தில் இருந்து பூபதிபாண்டியன் இப்போது விலகியுள்ளார், விக்ரம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த '24 ' திரைப்படத்தில் இருந்து விக்ரம்குமார் மாற்றப்பட அவருக்கு பதில் பூபதிபாண்டியன் விக்ரமின் புதிய படத்தை('24 ') இயக்குவதாலேயே சிம்புவின் படத்தை பூபதிபாண்டியன் இயக்க முடியாமல் போனது.அதே நேரம் விக்ரம்குமாரை நீக்கியதால் ரகுமானும், p.c. ஸ்ரீராமும் '24 ' திரைப்படத்திலிருந்து விலக இப்போது மணிசர்மா இசையமைக்கப்போகிறார்.அதேநேரம் அஜித் அடுத்ததாக வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பதாக பேச்சுக்கள் இருந்தது, ஆனால் அவர் கவுதம்மேனனின் புதிய படத்தில் நடித்த பின்னரே வெங்கட்பிரபு படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்,அஜித் நடிக்கும் கவுதம்மேனனின் புதிய படத்தில் அஜித்திற்கு நாயகி இல்லை. அஜித்தின் படம் முடியும்வரை காத்திருக்க வேண்டியிருப்பதால் இந்த இடைவெளியில் லிங்குசாமி தயாரிப்பில் பூபதிபாண்டியன் முன்னர் இயக்கவிருந்த சிம்புவின் புதிய படத்தை வெங்கட்பிரபு இப்போது இயக்கப்போகிறார். இப்பிடி மாத்திமாத்தி இயக்கி எங்களுக்கு தலை சுற்றாவிட்டால் சரி.நாங்களும் வாழ்த்துவோம் 


நடிகர் சங்கத்தால் நிகழ்த்தப்பட்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா ' நிகழ்ச்சி முடிவடைந்து அதுபற்றிய பேச்சு குறைவடையும் முன்னர் கலைஞர் அவர்கள் இன்னுமொரு பாராட்டுவிழாவுக்கு சமூகமளித்துள்ளார், சங்கத்தமிழ்ப் பேரவை சார்பாக நடைபெற்ற பாராட்டுவிழாவே அதுவாகும். கருணாநிதி பாராட்டுக்கு அலையும் அற்ப மனிதர் என்று தெரியும்,ஆனால் இப்படியா ? ஒவ்வொரு வாரமும் பாராட்டு விழாவா ? கூடவே ரஜினியும் கமலுமா? இந்த கூத்துக்கு அளவே இல்லையா? இப்படி எல்லாம் புலம்பக்கூடாது, ஏனெனில் சிலநேரம் இப்போதும் கலைஞர் ஏதாவதொரு பாராட்டு விழாவில் இருந்தாலும் இருப்பார். இல்லாவிட்டால் தேவர்மகன் "சிவாஜி" பேரப்பிள்ளைகளை பாட்டுப்பாட சொல்வதுபோல கலைஞரும் தனது பூட்டப் பிள்ளைகளை தன்னை பற்றி புகழசொல்லி விட்டு தூங்கிக்கொண்டிருப்பார். கலைஞர் புகழ் வாழ்க.... நாமும் வாழ்த்துவோம்.அதிமேதாவி  கவுதம்மேனன்


கவுதம்மேனன் பற்றி தப்பாக எழுதினால் சிலர் கோவிக்கிறார்கள், ஆனால் என்ன செய்வது அவரது லூசுக்கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 'விண்ணை தாண்டி வருவாயா ' படத்திற்கு இரண்டு இறுதிக்கட்ட காட்சிகள் (climaxes) தயார் நிலையில் வைத்துள்ளாராம், ஒன்று சந்தோசமாகவும், ஒன்று சோகமாகவும் இருக்குமாம். இந்து ,கிறிஸ்தவ காதலை மையமாக கொண்ட இந்த படத்திற்கு சோகமான இறுதிக்கட்ட காட்சிகளே படத்தில் இடம்பெறுமாம் , படம் வரவேற்பை பெறாவிட்டால் அதற்கு பதில் சந்தோசமான இறுதிக்கட்ட காட்சிகள் மாற்றப்படுமாம் . இது கவுதம்மேனனுக்கு முதல்தரமில்லை, முன்னர் வேட்டையாடு விளயாடுவிலும் இரண்டு இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கியிருந்தார், ஜோதிகா இறப்பது போன்றும் உயிருடன் இருப்பது போன்றும் இரண்டு காட்சிகள் தயார்நிலையில் இருந்தாலும் முதல் தடவை பயன்படுத்திய இறுதிக்கட்ட காட்சிகள் பின்னர் மாற்றப்படவில்லை, ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயாவின் இறுதிக்கட்ட காட்சிகள் மாற்றப்படுமா இல்லையா என்பதை இன்னும் ஒரு பத்து நாளில் தெரிந்து கொள்ளலாம். இப்படி தனது கதையிலேயே நம்பிக்கை இல்லாத கவுதம்மேனன் சசிக்குமாரையும், லிங்குசாமியையும் விமர்சித்ததை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

குறிப்பு - கிரீடம், காதலர் தினம் போன்ற சில படங்களின் இறுதிக்கட்ட காட்சிகள் மாற்றப்பட்டாலும் அவை முன்னர் திட்டமிடப்பட்டு எடுக்கப்படவில்லை.

13 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

பாலசந்தரின் புன்னகை மன்னன் இரண்டு முடிவுடன் வெளியானதாக கேள்வி பட்டேன்..,

பின் குறிப்பு :- அந்த படம் வந்தப்போ நான் பிறக்கவே இல்ல

chosenone said...

இந்த கவுதம் மேனன் தன்னை என்னமோ அகிரா குரசோவா , தரண்டினோ range க்கு நினைத்துகொன்டு இருக்கிறார் போல !!!!!
சீரியசான மொக்கச்சாமி !!!
பேரரசு கூட சுயமா சிந்தித்து தான் கழுத்தறுப்பான் , அனால் இவனுக்கு அதுக்கு கூட ஹாலிவுட் தழுவல்
இதுல வேற இவருக்கு ஒவ்வொரு படத்துக்கும் அமெரிக்க போக இல்லாட்டி கதை incomplete ஆ பீல் பண்ணுவாராம்.*
நான் சொன்னதில் யாருக்காவது மாற்றுகருத்து இருந்தால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த *** படங்களை தெரிவு செய்து பாருங்கள் ....ஆக்கபூர்வமான 70-80(era of 3-K's) களுக்கு பிறகு 90களில் இறுதியில் இருந்து இன்று வரை தமிழ் சினிமா படும் பாடு உங்களுக்கு புரியும் .....
பி:கு :
இதில் அடிக்கடி விதிவிலக்காய் அமைந்த சில படங்களை மறுப்பதுக்கு இல்லை ...

chosenone said...

திறுத்தம்::::::::::::::::
///நான் சொன்னதில் யாருக்காவது மாற்றுகருத்து இருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் வெளிவந்த best of the best ஹாலிவுட் படங்களை தெரிவு செய்து பாருங்கள் ///
நன்றி!

Unknown said...

"Kakka Kakka" also got an alternate climax. Having an alternate climax doesn't means director is not believing his story, it only shows in Tamil cinema how much a director is compelled to compromise for the success of a movie. Our tamil audience are still not matured to accept negative climax.

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//பாலசந்தரின் புன்னகை மன்னன் இரண்டு முடிவுடன் வெளியானதாக கேள்வி பட்டேன்.., //


நீங்கள் சொல்வதுபோல முடிவு மாற்றப்பட்டிருக்கலாம், ஆனால் முதலே திட்டமிட்டு இரண்டு முடிவு எடுக்கப்பட்டிருக்காதென்று நினைக்கிறேன்.


...............................................
chosenone

//இதுல வேற இவருக்கு ஒவ்வொரு படத்துக்கும் அமெரிக்க போக இல்லாட்டி கதை incomplete ஆ பீல் பண்ணுவாராம்.*//

இல்லாட்டி மட்டும் complete பண்ணித்தானே கிழிக்கிறார்...

.................................................

James Arputha Ra

//Our tamil audience are still not matured to accept negative climax.//

மிகவும் தவறான கருத்து. வாழ்வே மாயம், நாயகன், முதல் மரியாதை, பாரதி கண்ணம்மா, பிரியமுடன், ரமணா, காதல்,சுப்ரமணியபுரம் .... என வெற்றிபெற்ற negative climax திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம், இவை அனைத்தும் திணிக்கப்படாமல் கதைக்கேற்ப உருவாக்கப்பட்ட negative climax திரைப்படங்கள் என்பதால் வெற்றிபெற்றன.

chosenone said...

arputha raj....you must see the best of the best english films of past two decades to unveil the real faces of directers like gautham menon k.s ravikumar..etc...
you'll feel how cheap they have been.
///Our tamil audience are still not matured to accept negative climax.//

how can a tamil film's climax be more negative than ""parutthi veeran""!!!
either ameer didnt make a alternate climax nor the tamil audience rejected the film .

besides, there is no any unique standards to mesure aundiece's maturity . the only fact is that "creator" and the "audience" are interdependent...
cretor almost reflects the audience and amost audience reflects the creator.
non of them can be too far away from another.

chosenone said...

யாராவது brad pitt, morgan freeman நடித்த "sevan" படத்தை பார்த்து இந்த gautham menon சுயமா சிந்திக்கிறதா சொல்லட்டும் ....

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Yoganathan.N said...

//வாழ்வே மாயம், நாயகன், முதல் மரியாதை, பாரதி கண்ணம்மா, பிரியமுடன், ரமணா, காதல்,சுப்ரமணியபுரம் .... என வெற்றிபெற்ற negative climax திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம், இவை அனைத்தும் திணிக்கப்படாமல் கதைக்கேற்ப உருவாக்கப்பட்ட negative climax திரைப்படங்கள் என்பதால் வெற்றிபெற்றன.//

பிரியமுடன் - விஜய் படம் தானே??? அதில் 'negative climax' இருந்ததாக எனக்கு நினைவில் இல்லையே...

வேலூர் ராஜா said...

mukavariyil kooda padam vantha piraku climax matrappattathu

அ.ஜீவதர்ஷன் said...

அக்பர்

//பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

நன்றி

.....................................

Yoganathan.N

//பிரியமுடன் - விஜய் படம் தானே??? அதில் 'negative climax' இருந்ததாக எனக்கு நினைவில் இல்லையே...//


விஜயை ஒரு போலீஸ்காரர் இறுதிகாட்சியில் சுட்டுக்கொல்வார் , அந்த போலீஸ்காரர் வேறு யாருமல்ல எஸ். ஏ. சந்திரசேகர்

இதனது கிளைமாக்ஸ்சும் மாற்றப்பட்டிருக்கவேண்டும் , ஆனால் முதலே திட்டமிட்டு இரண்டு கிளைமாக்ஸ் எடுக்கப்படவில்லை.

........................................


வேலூர் ராஜா

//mukavariyil kooda padam vantha piraku climax matrappattathu//

ஆமாம் , ஆனால் இதுக்கும் பின்னர் சிறுபகுதி மீண்டும் ஷூட் செய்யப்பட்டே மாற்றப்பட்டது. ஆனால் யாரும் கவுதம் மாதிரி இரண்டு கிளைமாச்சை முதலே தயார் நிலையில் வைத்திருக்கவில்லை

bandhu said...

இரண்டு climax எடுத்தால் என்ன? it is just an insurance against a huge investment. It is much better than finding it later that an alternate climax could hav made the difference

R.Gopi said...

அஜீத் நடித்த முகவரி படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் இருந்ததாக நினைவு...

ஒன்று அவர் இசையமைப்பாளராக ஆவது போல்.. மற்றொன்று அவர் அந்த முயற்சி கை கூடாமல், வேலைக்கு போவது போலும்... சரியா??

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)