Wednesday, February 10, 2010

கோலிவூட் ரவுண்ட் அப் 10/ 02/2010கெளதமுடன் சமிராசமிராரெட்டி மீண்டும் கவுதம்மேனனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.வாராணம்ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு சமிராவை அறிமுகம்செய்த கவுதம் சிவாஜி ப்ரோடக்ஷனுடன் இணைந்து அஜித்தை வைத்து இயக்கவிருந்த படத்திலும் சமிரவையே ஒப்பந்தம் செய்திருந்தார்.பின்னர் சில காரணங்களுக்காக கெளதம் வெளியேறினாலும் சமிரா அசலில் நடித்திருந்தார்.இப்போது விண்ணைத்தாண்டிவருவாயா படம் முடிவடைந்த நிலையில் கெளதம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறாராம் சமிரா.அஜித்தின் ஐம்பதாவது படத்தை கெளதம் இயக்கப்போவது ஓரளவு உறுதியான நிலையில் அந்தப் படத்திற்கு முன்னர் சமிராவை வைத்து இயக்கும் படத்தை இயக்கலாம் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் நடிக்கத் தயங்கும் விலைமாது காரக்டரில் நடிக்கிறார் சமிரா.ஒரு இரவில் நடக்கும் ஒரு சம்பவத்தால் பலரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்ற கருவில் ஒரு த்ரில்லராக இந்த படம் இருக்குமாம்.முன்னர் சூர்யா,அசினை வைத்து ஆரம்பித்து பின்னர் கை விடப்பட்டு பின் த்ரிஷா நடிப்பதாக இருந்த சென்னையில் ஒரு மழைக்காலம் தான் இந்தப்படமென்றும் கூறப்படுகிறது.ஒருவழியாக படம் வெளிவந்தால் கெளதம் மேனன் கட்டிகாத்த அந்த பலவருடப் பொக்கிஷ கதை என்னவென்று நாமும் தெரிந்து கொள்ளலாம்.


சென்னை அசல் பாக்ஸ் ஆபிஸ்சென்ற வார இறுதியில் வெளியாகிய அசல் அனைவரும் எதிர் பார்த்தது போல சென்னை பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் அசல் வசூலித்தது அறுபத்தி மூன்று லட்சங்கள்.இதன் மூலம் தான் கிங் ஒப் ஒபிநிங் என்பதை அஜித் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.வேறு நடிகர்களின் படம் (ரஜினி கமல் தவிர்த்து )இதனை விட அதிகம் வசூலித்திருந்தாலும் அவை அசலைவிட அதிக திரைகளில் திரையிடப்பட்டவை.வெறும் பதிமூன்று திரைகளில் இந்த வசூலினை அசல் பெற்றது சாதனையே.இருந்தாலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் படத்தின் வெற்றி சந்தேகமே.

இதற்கு  முதல்வாரம் ரிலிசாகிய கோவா தமிழ்ப்படம் என்பவற்றில் அனைவரின் வரவேற்பையும் பெற்ற தமிழ்ப்படம் கோவாவை ஓவர்டேக் செய்து இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.இறுதி மூன்று நாட்களில் இது வசூலித்தது இருபத்தாறு லட்சங்கள்.திரையரங்குகள் குறைக்கப்பட்டதால் வசூல் குறைவடைந்தாலும் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது கோவா.வார இறுதில் இது வசூலித்தது இருபத்தியாறு லட்சங்கள்.

பொங்கல்ரிலிசான ஆயிரத்தில் ஒருவன்,குட்டி என்பன ஆவரேஜ் லீக்கில் சேர்க்கப்பட்டாலும் ஆயிரத்தில்ஒருவன் சென்னையில் மட்டும் மூன்று கோடியைத் தாண்டிவிட்டது.குட்டிஒருகோடி ஐம்பத்தைந்து லட்சங்களை வசூலித்தாலும் தொடர்ந்து ஹிட்டடித்த தனுஷுக்கு சறுக்கலே. அடுத்த வார இறுதியில் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை திரைகாணவிருப்பதால் என்ன மாற்றம் நிகழுமெனப் பார்க்கலாம்.இது சன் பிக்சர்ஸ் வெளியீடு என்பதால் புதிதாக என்ன ஆபர் கிடைக்குமென பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.தியேட்டரில் டிக்கட் எடுப்பவர்களை சன்னில் பங்குதாரர் ஆக்கினாலும் ஆக்குவார்கள்.பார்ப்போம்


இல்லை "24"படங்கள் குறித்த திகதியில் ரிலிசாகததாலே தனது ஏறுமுகமான காரியரில் சறுக்கலை சந்தித்த விக்ரமுக்கு இன்னுமொரு தடைக்கல்.விக்ரம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருந்த "24"கைவிடப்பட்டுள்ளது.மோகன் நடராஜன் தயாரிப்பில் இலியானா ஜோடியாக நடிக்க ஒருவாரம் படப்பிடிப்பு நடைபெற்ற இப்படம் கை விடப்பட்டதாகவும்,விக்ரம்குமாருக்குப் பதில் இப்படத்தை பூபதிபாண்டியன் இயக்கப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது.சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் விக்ரம் கால்ஷிட் வாங்கிய மோகன் நடராஜன் இயக்குனரை மாற்றி மாற்றி இன்னமும் படம் எடுத்தபாடுல்லை.ரவிக்குமார் எடுப்பதாகவிருந்து பின்னர் விக்ரம்குமார் எடுப்பதாகக் கூறிய இப்படம் இப்போது பூபதிபாண்டியன் வசம்."24"படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இலியானா இப்படத்திற்கும் நாயகியாகத் தொடர்வார்.ஸ்கிரிப்ட் ஒழுங்காகத் தயாரில்லததால் விக்ரம்குமார் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சாமிக்குப் பின்னர் விக்ரம் போலிசாக நடிக்கும் இப்படம் காமடி+ஆக்ஷன் படமாக இருக்கும்.தேவி ஸ்ரீ பிரசாத் இசைஅமைக்க வைத்தி ஒளிப்பதிவாளராக கடமையாற்றுகிறார்.மார்ச் ஐந்தாம் திகதி ஷூட்டிங் கிளம்பி தொண்ணூறு நாட்கள் ஒரே ஷெடூலில் இப்படத்தை முடிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 15 ரிலிஸ் என திட்டமாம்.இப்படமாவது சொன்ன திகதியில் முடியுமா !!!!


குட்டி குட்டி பிட்ஸ்விமர்சகர்களால் நையப் புடைக்கப்பட்டு டேமேஜ் செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் சென்ற வாரம் டப் செய்து தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போடுகிறதாம்.மூன்று நாட்களில் தொண்ணூற்று மூன்று சென்டர்களில் இதன் வசூல் ஒருகோடி எழுபத்தெட்டு லட்சங்கள்.மாற்றான் தோட்டத்து மல்லிகை
 -----------------

போயஸ்கார்டனிலுள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற ரஜினி மகளின் நிச்சயதார்த்தத்துக்கு பத்திரிகை கொடுத்துள்ளார்.இதனால் போயஸ்கார்டனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.புயல் வரும் போதே பூச்செண்டு கொடுத்தவர்,இது அழைப்பு பத்திரிக்கை.அவ்வளவே
-----------------
பசங்க புகழ் பாண்டிராஜ் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.மு.க தமிழரசு தயாரிக்கும் இப்படத்தில் அவரின் வாரிசு அருள்நிதி நாயகனாக நடிக்கிறார்.நாயகி சுனைனா.
 -----------------
"கோ" வுடன் சிம்பு "கா" விட்டதால் ஜீவாவை நாயகனாகி ஷூட்டிங் கிளம்பிவிட்டார் ஆனந்த்.தொடர்ந்து இரு படங்களை இயக்குனரின் கீழ் எப்படி நடிப்பது என்று ஜோசித்தாரோ என்னமோ.அட வடை போச்சே...

10 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

குட்டி பிட் இல்லை கலக்கல் பிட்
இணைய உலகில் ரஜினிக்கு பிறகு அதிக ஆதரவு அஜித்திற்கு மட்டும் இருக்க என நினைக்கிறேன் உங்கள் கருத்து

Unknown said...

விக்ரம்க்கு நேரம் சரி இல்லங்க...,

Unknown said...

//இதன் மூலம் தான் கிங் ஒப் ஒபிநிங் என்பதை அஜித் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.வேறு நடிகர்களின் படம் (ரஜினி கமல் தவிர்த்து )இதனை விட அதிகம் வசூலித்திருந்தாலும் அவை அசலைவிட அதிக திரைகளில் திரையிடப்பட்டவை.வெறும் பதிமூன்று திரைகளில் இந்த வசூலினை அசல் பெற்றது சாதனையே//

ஹி ஹி..., விடுங்க விடுங்க...,

தமிழ் குமார் said...

மாயவரம்,தஞ்சாவூர்,திருச்சில அசல வெள்ளிகிழமை தூக்குறாங்கப்பு. இதுல கிங்,ஜோகர்னு

Singa Muthu said...

நேற்று முந்தினம்(monday) அசல் படம் பார்க்கச் சென்றேன்..டிக்கட் கிடைக்கவில்லை ...இதுக்கு என்ன சொல்றிங்...

வரதராஜலு .பூ said...

விக்ரம் -:(
நைஸ் ரவுண்டப்

வேலூர் ராஜா said...

அசல் வசூலிலும் அசல்தான்

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//இணைய உலகில் ரஜினிக்கு பிறகு அதிக ஆதரவு அஜித்திற்கு மட்டும் இருக்க என நினைக்கிறேன் உங்கள் கருத்து//


என்னை பொறுத்தவரை இணைய உலகில் ரஹுமான், கமல்,அஜித் இந்த மூவருக்கும்தான் அதிகமான ஆதரவு உள்ளது.


....................................


பேநா மூடி

//விக்ரம்க்கு நேரம் சரி இல்லங்க...,//

ராவணா கைகொடுக்கிறதா என்று பார்ப்போம் .


//ஹி ஹி..., விடுங்க விடுங்க...,//

ஆகா... இது உங்க ஏரியா இல்ல -:(


.........................................

தமிழ் குமார்

//மாயவரம்,தஞ்சாவூர்,திருச்சில அசல வெள்ளிகிழமை தூக்குறாங்கப்பு. இதுல கிங்,ஜோகர்னு//


தொடர்ந்து நாலு படம் பிளாப் என்றால் கடுப்பு இருக்கத்தான் செய்யும் , உங்க உணர்வு புரிகிராது. better luck next time


......................................

Singa Muthu

//நேற்று முந்தினம்(monday) அசல் படம் பார்க்கச் சென்றேன்..டிக்கட் கிடைக்கவில்லை ...இதுக்கு என்ன சொல்றிங்..//

ஏதாவது ஆந்திரா, கர்நாடகா என்று பினாத்துவாறு ,அவருகிட்ட போயி நியாயம் பேசிக்கிட்டு....

........................................

வரதராஜலு .பூ

//விக்ரம் -:(//

அப்பிடி சிரிக்காதீங்க பாஸ், ராவணாவை அதிகம் நம்பி இருக்கிறன், அது சொதப்பினா நானும் சேர்ந்து சிரிக்கிறான்....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்


........................................

வேலூர் ராஜா

//அசல் வசூலிலும் அசல்தான்//

அடுத்த வாரம் எப்படியும் தெரிந்துவிடும்

Unknown said...

இவன் படத்தையும்,ஒரு படம் எண்டு கதைக்கிறியள்.கறுமம்

அ.ஜீவதர்ஷன் said...

ஐங்கரன்

//இவன் படத்தையும்,ஒரு படம் எண்டு கதைக்கிறியள்.கறுமம்//

எவன் படத்தை ?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)