Wednesday, January 13, 2010

கோலிவுட் ROUND UP( 12 / 01 / 2010 )

தனுஷின் சகலன்


தமிழ்த்திரையுலக தலைமகன் வீட்டில் ஒருசுபச்செய்தி.செல்வி சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் திருமதி சௌந்தர்யா அஷ்வின்குமாராக மாறப் போகிறார்.அதுதாங்க ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் தொழிலதிபர் ராம்குமாரின் மகன் அஷ்வினுக்கும் வரும் பெப்ரவரி 17ம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.ஏற்கனவே இவர்களுக்குள் அறிமுகம் இருந்ததால் ரஜினி சௌந்தர்யாவின் விருப்பத்திற்கு ஒகே சொல்லிவிட்டாராம்.சௌந்தர்யாவின் தயாரிப்பில் உருவான வெங்கட் பிரபுவின் கோவா இம்மாதம் 29ந்திகதி வெளியாகிறது.புதுமணத்தம்பதியாகப் போகும் அஸ்வின்,சௌந்தர்யா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.பட்டத்தைப் பறக்க விட்ட தல 


 

அசல் படத்திலிருந்து அஜித் எந்தவொரு பட்டதையும் பயன்படுத்தப் போவதில்லையாம்.இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சமீபகாலமாக இந்திய சினிமா வேறு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சமயத்தில், சில மரபுரீதியான மாற்றங்களை நான் வரவேற்க ஆசைப்படுகிறேன்.எனவே, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நான் நடித்து வெளிவரும் அசல் படத்திலிருந்து ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டம், பட டைட்டில்களிலோ, இனி வரும் விளம்பரங்களிலோ பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்"என்று கூறியதோடு அசல் விளம்பரங்களிலும் இதனைக் கடைப்பிடிக்குமாறு தயாரிப்பாளர் ராம்குமாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.(இதுசம்பந்தமாக சென்றபதிவில் ஒரு தகவலை கூறியிருந்தேன் )'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆகும்' என்று 'சின்ன' என்ற பட்டப்பெயரை 'இளைய' என்று மாற்றிய தும்பு நடிகர்கள்,தளபதிகள் இதனை கவனத்தில் கொண்டால் நலம்.இதுவரை புகழ்ச்சிப்பட்டப் பெயர்களை வைக்காதிருந்த முன்னணி நடிகர்கள் விக்ரமும் சூரியாவுமே.இப்போது அஜித்தும் இணைந்துள்ளார்.ஆரோக்கியமான மாற்றம்!!


T.R ஆன தனுஷ்


 

T.R  ஆகிவிட்டார் தனுஷ்,யாரும் அதிர்ச்சி ஆகவேண்டாம்.பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் குட்டி படத்தில் ஸ்ரேயாவுடன் ஒரு டூயட் கூட இல்லையாம் தனுஷுக்கு.படத்தில் ஸ்ரேயாவை தொட்டு நடிக்கும் காட்சியே கிடையாதாம்.இப்போ புரிஞ்சிருக்குமே.தனுஷ் ஏன் ரீ.ஆர் என்று. தெலுங்கில் ஆர்யா என்ற பெயரில் வெளியாகி சக்கை போடு போட்ட படம்தான் குட்டி.முக்கோணக் காதலை மையமாக கொண்ட கதையெனினும் இது முன்னைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்குமென்று கூறியிருக்கிறார் தனுஷ்.படம் முழுதும் ரொமான்ஸ் இருக்கும்,ஆனாலும் எனக்கும் ஸ்ரேயாவிட்கும் டூயட்டே கிடையாது என்கிறார்.இது கூட புதுசா இருக்கே.


எஸ்.எ.சி டெரர் 


கமல் விக்ரம் சூர்யா போன்றோர் சுதாகரிப்பது நல்லது.இத்தால் நான் உங்களுக்கு அறியத்தருவது யாதெனில் 2011ஆம் ஆண்டு முதல் இளைய தளபதி விஜய் அவர்கள் அவார்டுக்கான படங்களில் நடிக்கப்போகிறார்.இந்த அறிவிப்பை வழங்கியிருப்பவர் தளபதி எஸ் எ சந்திரசேகர் அவர்கள்.விஜய் இளையதளபதி என்றால் வேறயாரு தளபதி? . திண்டுக்கல் மாவட்டம்,​​ ஆத்தூர் அருகே காமராஜர் சாகர் அணைக்கட்டில் நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்புக்காக,​​ சென்றிருந்த இயக்குநர் சந்திரசேகர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது வழங்கிய பேட்டியில்" ரஜினியின் பார்முலாவைத்தான் விஜய் பின்பற்றுகிறார்.​ ரஜினியின் படங்கள் எல்லாமே வெற்றிப் படங்கள். அதேபோல்,​​ என் மகன் விஜய் படங்களும் வசூலில் வெற்றி பெற்று வருகின்றன.விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை.​ வேட்டைக்காரன் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது"என வழக்கம் போல காமடி பண்ணிய இவர் அடுத்து கூறியதுதான் ஹாட் தகவல்."விஜய் வித்தியாசமான படங்களில், வேடங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகே விஜய் நடிக்கும் அவார்டு படங்கள் தயாரிக்கப்படும்"என்றார்.இதன்மூலம் விஜய் யாரைப் பின்பற்றி நடிக்கிறாரென கண்டுபிடிக்க மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த எமக்கு அந்த ரகசியத்தைக் கூறிய எஸ் எ சீக்கு நன்றிகள்.நாம சும்மா இருந்தாலும் எஸ் எ சி விடமாட்டார் போலிருக்கே.


விவேக்நாயுடு


பரத் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும்"தம்பிக்கு இந்தஊரு" படத்தின் ஹைலைட்டே விவேக்கின் காமடி தானாம்.பரத்,சனாகான் விவேக் நடிக்க பத்ரி இயக்கும் படம்தான் தம்பிக்கு இந்தஊரு.படத்தின் முதல்பாதி சிங்கப்பூரில் நடந்து இடைவேளையின் பின் கதை சென்னைக்கு நகர்கிறதாம்.இந்தப் படத்தில் பரசுராம்நாயுடு என்னும் காரக்டரில் நடிக்கிறாராம் விவேக்.தசாவதாரம் பல்ராம்நாயுடு காரக்டருக்கும் இதுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.இம்மாதம் 19ம்திகதி ரிலீசுக்கு திட்டமிட்டுள்ளனர். பொங்கல் படங்கள் வந்து ஒரு வாரத்தினுள் ரிலீஸ் பண்ணுவதற்கு சாத்தியங்கள் குறைவே.அண்மைக்கால எந்தப் படங்களிலும் விவேக்கின் காமெடி எடுபடாத நிலையில்,நடிகர்சங்க கூட்டத்தில் கண்டபடிபேசி எக்குத்தப்பாக மாட்டியிருந்தார் சின்னக்கலைவாணர் .இந்தப் படமாவது இவருக்குக் கைகொடுக்குமா பார்ப்போம்.நமக்கு சிரிப்பு வந்தா சரிதான்.

 
அப்பாடா !!! ரிலீஸ்......


யுவன் , செல்வாக்கு இடையிலான முறுகல் முடிவுக்கு வந்தாலும் வந்துவிடும்.ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைக்கு வருவது பெரும்பாடாக இருக்கிறது.பொங்கலுக்கு வெளியாகுமென எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் செல்வராகவன் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தாலே படத்தை ரிலிஸ் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோர்ட்டில் தடைஉத்தரவு வாங்கியிருந்தார் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர்.ஒருவழியாக தடைநீங்கி டிக்கட்டுகளும் முன்பதிவு முடியம் தருவாயில் புதுக்குழப்பம்.தங்களுக்கு தரவேண்டிய சம்பளப்பாக்கி ஏழு லட்சம் தரவில்லையென போலீசில் புகார் தந்துள்ளனர் 100துணைநடிகர்கள் பேர்.எப்படியோ படம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகிவிடும்.இரண்டரை வருட எதிர்பார்ப்பையும் தயாரிப்பாளரையும் காப்பாற்றினால் சரி.

6 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

இப்போ எல்லாம் நான் சினிமா செய்தி என்றால் முதலில் பார்ப்பது எப்படியும் எப்படி எப்படீஈஈஈஈ எப்புடிஈஈஈஈ மட்டுமே விரிவான செய்தி தரமான செய்தி நாடு நிலையான செய்தி எப்புடீஈஈஈ
பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் அரும்பாவூர் ப்ளாக் சார்பாக

கிரி said...

:-)

நீங்கள் இதைப்போல அடிக்கடி எழுதுவதால் தலைப்பில் தேதியையும் சேர்த்துக்கொண்டால் படிப்பவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்

Think Why Not said...

'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆகும்'

:D

"ராஜா" said...

//விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை..

அப்பச்சன் கேட்டுகோங்க.. ATMல எல்லாரும் பணத்த எடுப்பாங்க நீங்க மட்டும் பணத்த விட்டீங்க,

//வேட்டைக்காரன் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது

படம் பாக்க 25,000 ரூபாய் தந்தும்(இது விஜய் இது வரைக்கும் எடுத்த "பிச்சையிலேயே" வித்தியாசமான பிச்சையா இருக்கே ! ) யாரும் போக மாட்டேங்கிறான் இதுல சாதன வேறயா ....ஆண்டவா இது என்னடா ஒரு சோதன?? ...

//விஜய் வித்தியாசமான படங்களில், வேடங்களில் நடிப்பது....
மொதல சாதாரணமா நடிக்க சொல்லுங்க.. அப்புறம் வித்தியாசமா நடிக்கலாம்ல

//2011-ம் ஆண்டுக்குப் பிறகே விஜய் நடிக்கும் அவார்டு படங்கள் தயாரிக்கப்படும்

2012ல உலகம் அழிய போகுது, தமிழ் நாடு 2011லேவா?

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//இப்போ எல்லாம் நான் சினிமா செய்தி என்றால் முதலில் பார்ப்பது எப்படியும் எப்படி எப்படீஈஈஈஈ எப்புடிஈஈஈஈ மட்டுமே விரிவான செய்தி தரமான செய்தி நாடு நிலையான செய்தி எப்புடீஈஈஈ//

ஏங்க இப்பிடி ?

//பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் அரும்பாவூர் ப்ளாக் சார்பாக//

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

....................................

கிரி சொன்னது…

:-)

//நீங்கள் இதைப்போல அடிக்கடி எழுதுவதால் தலைப்பில் தேதியையும் சேர்த்துக்கொண்டால் படிப்பவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்//

உங்கள் அறிவுரைக்கு நன்றி, இப்பொது மாத்தியாச்சு, இனிவரும் காலங்களிலும் இதை பின்பற்றுகின்றேன்.

.......................................

Thinks Why Not

// 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆகும்'//

மில்லியன் டாலர் கேள்வி..... ஹி ஹி ஹி

....................................

"ராஜா" from புலியூரான்


// அப்பச்சன் கேட்டுகோங்க.. ATMல எல்லாரும் பணத்த எடுப்பாங்க நீங்க மட்டும் பணத்த விட்டீங்க,//

சூப்பர் பஞ்ச்...

Paarvai said...

இப்படியும் கொடுமை இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்
௯௯*03526666666
http://thatstamil.oneindia.in/movies/specials/2010/01/vettaikaran-completes-40-days-30.html

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)