Wednesday, January 20, 2010

கோலிவூட் ROUND UP ( 20 / 01 / 2010 )


இதுதான் ரஜினி...


எந்திரனின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ரஜினி மும்மரமாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய படங்களை பார்ப்பதை மறக்கவில்லை . இந்தவகையில் கடந்த வாரம் ரஜினி பார்த்த படங்கள் 'ஆயிரத்தில் ஒருவன் ' மற்றும் 'குட்டி ' என்பனவாகும். இதில் ஆயிரத்தில் ஒருவனை தயாரிப்பாளர் ரவீந்திரனின் அழைப்பின் பேரிலே பார்த்த ரஜினி கார்த்தியையும், செல்வாவையும் வழமைபோல வியந்து பாராட்டியுள்ளார். நல்லவேளை இந்தத்தடவை ரஜினி படத்தை பாராட்டி கடிதம் வழங்கவில்லை , இல்லாவிட்டால் ரஜினியால்தான் படம் ஓடுவதாக ஒரு தரப்பு கூற, இதுதான் சாட்டென்று ரஜினிக்கு எதிரான குரூப்பு ரஜினியை இஸ்ரத்துக்கு விமர்சித்திருக்கும். தலைவா கிரேட் எஸ்கேப்.....

அடுத்து ரஜினி 'குட்டி ' படத்தை பார்த்தது அவர் சன் மியூசிக்கிற்கு போன் பண்ணியதாலேயே தெரியவந்தது, தனுஸ் பங்குபற்றிய ஒரு நேரடி நிகழ்ச்சியை தொகுப்பாளர் அடம்ஸ் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். வழமை போல தனுஸ் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். திடீரென் ஒரு அழைப்பு வந்தது, அழைத்தவர் " நான் ரஜினி பேசிறன் 'குட்டி' படம் பார்த்தேன் , நல்லாயிருக்கு , வணிகரீதியாக படம் வெற்றியடையும், தனுஸ் நன்றாக நடித்திருக்கிறார், பாராட்டுக்கள்" என்றார். தொகுப்பாளருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவரது படபடப்பு அதிகரித்தது, அந்தநேரம் பார்த்து ரஜினி " அடம்ஸ் உங்க புரோகிராம் எல்லாம் பார்ப்பேன் , நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் " என்றார். அடம்ஸ் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினார்.

தனக்கு ஆஸ்கார் கிடைத்ததைவிட மகிழ்ச்சி என்கிறார், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்கிறார், ரஜினியின் குரல் சிம்மக்குரல் என்கிறார் , இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்கிறார். இப்படியே உளறிக்கொண்டிருந்த அடம்ஸ்சிற்கு தொடர்பிலிருந்து ரஜினி சென்ற பின்னர் ஒரு பாடல் ஒளிபரப்பிய பின்னரும் உளறல் அடங்கவில்லை. இதெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தனுஸ் கூறினார் "இதே போலத்தான் எனக்கும் 'காதல் கொண்டேன்' படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்னை அழைத்து அரை மணிநேரம் பேசும்போதும் இருந்தது, அப்போது நான் யாரென்றே அவருக்கு தெரியாது, அதே போல அந்த அரைமணி நேரம் அவர் என்ன பேசினார் என்பதும் எனக்கு தெரியாது, நீங்கள் இப்போது உள்ளது போலத்தான் நான் அப்போது இருந்தேன் " என்றுகூறி சிரித்தார். இதுதான் ரஜினி ....செல்வாவின் லாஜிக்பத்திரிகையாளர் சந்திப்பில் செல்வராகவனை குடைவதர்கேன்றே சென்றவர்களுக்கு தக்க பதிலை செல்வா வழங்கியுள்ளார். இந்தப்படம் முழுக்க முழுக்க கற்பனை என்று கூறிய செல்வா இது உண்மையான வரலாற்று சம்பவமில்லை என்பதை தெளிவு படுத்தினார். அப்போது செல்வாமீது "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?" என்ற புகார் வைக்கப்பட்டது, அதற்கு பதிலளித்த செல்வராகவன் "இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்" என்றார்.

ஒருசிலர் ஆயிரத்தில் ஒருவனது மையக்கரு 'கிளாடியேட்டர்' படத்தின் மையக்கருவுடன் ஒத்துப்போவதாக கூறுகிறார்கள், அப்படிப்பார்த்தால் 'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும்' என்ற மகாபாரதத்தின் மையக்கருவை வைத்துதானே அதிகமான ஆங்கில மற்றும் ஜாக்கிச்சான் அக்ஷன் படங்கள் வந்தன , அப்படியென்றால் அவர்கள் மகாபாரதத்தின் மையக்கருவை காப்பியடிக்கின்றாரா? இப்படியும் விதண்டாவாதம் பேசலாம். எப்படி ஒரு படத்தை எடுத்தாலும் ஏதாவதொரு மொழியில் வந்த ஒரு படத்தின் மையக்கரு இருக்கத்தான் செய்யும். அப்படி இல்லாமல் ஒரு படம் வருகிறதென்றால் அது நம்ம ' இயக்குனர் பள்ளத்தாக்கு ' பேரரசு படமாத்தான் இருக்கும்.

லாஜிக் மீறல்கள் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலைத்த செல்வராகவன் ""ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள். 'அவதார்' படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்." என்றார். ஆயிரத்தில் ஒருவனுக்கு லாஜிக் இல்லை என்பதற்கு செல்வா கூறிய பதில் திருப்தியாக இல்லாவிட்டாலும் அதில் ஒரு லாஜிக் இருந்தது.
சௌந்தர்யாவின் அடுத்த அவதாரம்.


வெறுமனே ரஜினியின் மகள் என அடையாளம் காணப்பட்ட சௌந்தர்யா 'சந்திரமுகி' திரைப்படத்தின் டைட்டில் வடிவமைப்பு மூலம் சினிமா உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அன்பே ஆருயிரே படத்தில் இவரது கிராபிக்ஸ் திறமை (மயிலிறகே பாடலில் ) பாராட்டப்பட்டது. பின்னர் இவர் ரஜினியை வைத்து இந்தியாவின் முதலாவது 'வாழும் நாயகனை' வைத்து உருவாகும் அனிமேசன் படமான 'சுல்த்தான் தி வாரியார் ' ஐ இயக்கி தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்தினார், படத்தின் 80 % ஆனா வேலைகள் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். 'ஆக்கர் ஸ்டுடியோ' என்னும் பெயரில் இவரது சொந்த தயாரிப்பாக வெங்கட் பிரபு இயக்கம் 'கோவா' திரைப்படம் இந்த மாதத்தின்  29 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது. படத்தின் மீது இடைக்காலத்தடை, நிதிப்பிரச்சினை என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவர அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற் போல் 'கோவா' வின் இசை வெளியீட்டுவிழா இடம்பெற்றது.இப்போது கோவாவின் உரிமையை வாங்குவதில் முக்கிய விநோயோகஸ்தர்களுக்குள் ஏற்பட்ட இழுபறி நிலையில் தானே படத்தை வெளியிடப்போவதாக சௌந்தர்யா அறிவித்துள்ளார். தனது சினிமா வாழ்வில் சௌந்தர்யா எடுத்திருக்கும் புதிய அவதாரம் 'விநோயோகிஸ்தர் ' ஆகியது. அப்பாவின் ஆசியுடன் ஆரம்பித்திருக்கும் இந்தப்புதிய களத்திலும் வெற்றிபெறுவாரா? இரண்டு வாரம்பொறுத்திருங்கள்.குட்டிக்குட்டி துணுக்குகள்* நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த அனன்யா தனுசுடன் ஜோடி சேர்கிறார், படத்தின் பெயர் 'சீடன்' , சுப்ரமானிய சிவா இயக்கும் இந்தத்திரைப்படத்திற்கு இசை அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் தீனா .

* "நான் எதற்க்காக வித்தியாசமாக நடிக்க வேண்டும் , சுறாவும் வேட்டைக்காரனைப் போன்றதொரு கதையே" என திருவாய் மலர்ந்துள்ளார் இளைய 'தலைவலி' விஜய்.

* A .R ரகுமான் இசையமைத்த 'கப்பில்ஸ் ரீட்ரிட்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 2010-ம் ஆண்டின் ஆஸ்கார் விருது போட்டி பிரிவில் இடம் பெறுகிறது, இதை ரகுமானே கூறியுள்ளார். அடுத்தடுத்த வருடம் ஆஸ்காரை வென்று ரகுமான் தமிழனுக்கு மேலும் பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* ஏந்திரன் படத்தின் சிறிய ஆடியோ வெளியாகியுள்ளது, 3 .6 நிமிடப்பாடளாக வெளியாகியுள்ள 'என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்...' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் ரகுமான் ட்ராக் பாடும்போது சுடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதாம். இந்தப்பாடலை நான் கேட்காததால் இந்தச்செய்தியின் உண்மைத்தன்மை எவ்வவளவு என்பதை கூறமுடியவில்லை.

* ஜக்குபாயின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள், இதில் சிறப்பம்சம் என்னவென்றால் முதல்வர் கருணாநிதியின் பேசுகின்ற மாதிரியானதொரு புகைப்படம் அந்த சிறிய விளம்பர ட்ரெயிலரில் பெரிதாக காண்பிக்கப்பட்டது. கடலிலே போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேனென்பது இதைத்தானோ?

11 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

"நான் எதற்க்காக வித்தியாசமாக நடிக்க வேண்டும் , சுறாவும் வேட்டைக்காரனைப் போன்றதொரு கதையே"....-.விஜய் -
ஆ...ஆஹா..எவ்வளவு அடி மேல் அடி விழுந்தாலும் ஒன்னுமே தெரியாத மாதிரி இருக்காரே...இவரு இம்புட்டு நல்லவரா.......

ஹாய் அரும்பாவூர் said...

"நான் எதற்க்காக வித்தியாசமாக நடிக்க வேண்டும் , சுறாவும் வேட்டைக்காரனைப் போன்றதொரு கதையே" என திருவாய் மலர்ந்துள்ளார் இளைய 'தலைவலி' விஜய்.

கடவுள்தான் விஜய் ரசிகர்களை காப்பாற்ற வேண்டும்
தன் ரசிகனை மதித்தாவது நல்ல கதை உள்ள படத்தில் நடிப்பாரா விஜய்
சிறப்பான ரவுண்டு அப்

Yoganathan.N said...

//இதுதான் ரஜினி... //
வழக்கம் போல ரஜினி சார் அசத்தல்... புதிய முயற்சிகளையும் வளர்ந்து வரும் களைஞர்களையும் தட்டிக்கொடுப்பதிலும், ஊக்குவிப்பதிளும் ரஜினி சார் ஒரு முன்னோடி. அஜித் சாரும் இதில் அடங்குவார்... ஹிஹிஹி

//செல்வாவின் லாஜிக் //
நீங்கள் சொன்னது போல செல்வாவின் பேச்சில் லாஜிக் இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். இருப்பினும், வரவேற்கத்தக்க முயற்சி. மனமார பாராட்டலாம்.

//சௌந்தர்யாவின் அடுத்த அவதாரம்.//
ஆல் தி பெஸ்ட்.

//குட்டிக்குட்டி துணுக்குகள் //

1. இதே சுப்ரமானிய சிவா தானே யோகி படம் எடுத்தார்???
2. நோ காமெண்ட்ஸ்.
3. வாழ்த்துகள் ரகுமான் சார். ஆல் தி பெஸ்ட்.
4. புது செஇதியாக உள்ளது. சக ரகுமான் நண்பர்களிடம் இதைப் பற்றி விசாரிக்க வேண்டும்.
5. ஜக்குபாய்கு வாழ்த்துகள்.

வெற்றி said...

எப்படிங்க இவ்ளோ மேட்டர் தெரியுது உங்களுக்கு?
சினிமாத்துறையில வேலை செய்யுறீங்களா?

Unknown said...

//'அவதார்' படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்."//

உண்மை தான்..,

Kitcha said...

""ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள். 'அவதார்' படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்." என்றார். ஆயிரத்தில் ஒருவனுக்கு லாஜிக் இல்லை என்பதற்கு செல்வா கூறிய பதில் திருப்தியாக இல்லாவிட்டாலும் அதில் ஒரு லாஜிக் இருந்தது.

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//ஆ...ஆஹா..எவ்வளவு அடி மேல் அடி விழுந்தாலும் ஒன்னுமே தெரியாத மாதிரி இருக்காரே...இவரு இம்புட்டு நல்லவரா.//

தெரியலேயப்பா...


....................................

arumbavur

//கடவுள்தான் விஜய் ரசிகர்களை காப்பாற்ற வேண்டும்
தன் ரசிகனை மதித்தாவது நல்ல கதை உள்ள படத்தில் நடிப்பாரா விஜய்//

சத்தமா பேசாதீங்க, அப்புறம் விஜய் கோவிச்சுக்கபோறாரு....


....................................

Yoganathan.N


//வழக்கம் போல ரஜினி சார் அசத்தல்... புதிய முயற்சிகளையும் வளர்ந்து வரும் களைஞர்களையும் தட்டிக்கொடுப்பதிலும், ஊக்குவிப்பதிளும் ரஜினி சார் ஒரு முன்னோடி. அஜித் சாரும் இதில் அடங்குவார்... ஹிஹிஹி//


கிளம்பீற்ராயய்யா கிளம்பீற்ராறு ..ஹி ஹி ஹி

................................


வெற்றி

//எப்படிங்க இவ்ளோ மேட்டர் தெரியுது உங்களுக்கு?
சினிமாத்துறையில வேலை செய்யுறீங்களா?//

அவளவு சத்தமாவா கேக்குது...

...................................

பேநா மூடி @

Kitcha @

நன்றி

balavasakan said...

நண்பா நீங்கள் யாழ்ப்பணமா நானுந்தான் எங்கே உள்ளீர்கள்....அறியலாமா...!

அ.ஜீவதர்ஷன் said...

Balavasakan

//நண்பா நீங்கள் யாழ்ப்பணமா நானுந்தான் எங்கே உள்ளீர்கள்....அறியலாமா...!//

கொக்குவில், நீங்கள்...

balavasakan said...

அடப்பாவி... நான் கந்தர்மடம் ...ஆனா கொக்குவில் எனக்கு அத்துப்படி... நண்பர்கள் உள்ளார்கள் எனது மெயில் vsvskn@gmail.com
சும்மா ஒருமுறை மெயிலி விடுங்கள்

அ.ஜீவதர்ஷன் said...

Balavasakan …

//அடப்பாவி... நான் கந்தர்மடம் ...ஆனா கொக்குவில் எனக்கு அத்துப்படி... நண்பர்கள் உள்ளார்கள் எனது மெயில் vsvskn@gmail.com சும்மா ஒருமுறை மெயிலி விடுங்கள்//

ok, ஆனா எனக்கு இங்கிலீசு வராது, முடிஞ்ச வரை தமிழில மேயிலுங்கோ.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)