Thursday, January 28, 2010

கெட்டப் மாத்தும் விஜய் குழப்பத்தில் சூரியா.


விஜய் நடிக்கும் அடுத்த படமான சுராவையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு சூட்டை தணிக்க கடல் காற்றில் தமன்னாவுடன் டூயட் பாடுகிறாராம் தளபதி. மீனவனாகவோ அல்லது கடல் பிரதேசத்தில் வசிப்பவராகவோ சுராவில் விஜய் நடித்துள்ளார். இதனால் விஜய் லுங்கி கட்டி நடித்தாலும் ஆச்சரியமில்லை, அவ்வாறு நடித்தால் 'புதியகீதை' திரைப்படத்தில் ஆறு விரல்களுடன் நடித்ததற்கு பின்னர் தளபதி கெட்டப் மாத்தும் படமாக சுறா விளங்கப்போகிறது. படப்பிடிப்பில் இருந்த விஜய் தனக்கு ஒத்தாசை புரிந்த கடல்வாழ் சமூகத்திற்கு விருந்து வைத்துள்ளார். (யாரப்பா அங்க தயாரிப்பாளர் காசில என்று முனுமுனுக்கிறது ). வேட்டைக்காரனில் போன பெயரை சுராவில் மீட்டெடுக்க சன் பிக்சர்ஸ்ம் விஜயும் ஏப்ரலில் சுறா ரிலீசிற்காக காத்திருக்கிறார்கள்.சூரியா வீட்டுக்கு ரெயிடு நடந்ததும் நடந்திது விஜய் மேலயும், உதயநிதி மேலயும் சந்தேகமான பேச்சுக்கள் கிளப்பி விடப்பட்டன.இந்த பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது உதயநிதி, சூரியாவையும் கார்த்தியையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளாராம். பின்னர் கார்த்தியிடம் எமது கூட்டணியில் அடுத்த படம் விரைவில் ஆரம்பிக்கப் படுமென்று கூறியுள்ளாராம். இந்த விடயத்தில் எனக்கு சில சந்தேகங்கள் , யாராச்சும் சொல்லித்தான் ரெய்டு வருவாங்களா? அவங்க தானாக எதையுமே கண்டுபிடிக்க மாட்டாங்களா? அப்புறம் சூரியாகிட்ட காசிருக்கிறது விஜய்க்கும் , உதயநிதிக்கும் மட்டும்தான் தெரியுமா ?

ஒருவேளை நம்மாளுங்க ஜோதிகாதான் சூரியாகிட்ட குச்சிமிட்டாய் வாங்க காசு கேட்டாங்க, சூரியா காசு குடுக்காததால ஜோதிகாதான் மாட்டிவிட்டுட்டாங்கன்னு எழுதினாலும் ஆச்சரியமில்லை.சவுந்தர்யா மீது இன்னுமொரு புகார் கூறப்பட்டுள்ளது, இரண்டு கோடி ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு அதனை திருப்பி தரவில்லை என்பதுதான் அந்தப் புகார். பணத்தை மீள தருவதாக கூறியதால் கோவா ரிலீசிற்கு ஆபத்தில்லை என்றாலும் கோவாவின் தயாரிப்பு செலவுடன் ஒப்பிடுகையில் இரண்டுகோடி ரூபா ஒரு பெரியதொகையா? அதனை திருப்பி கொடுக்குமளவிற்கு சவுந்தர்யாவிடம் பணமில்லையா? தனது சொந்தக்காலில் நிற்பதாக கூறிக்கொண்டு வீட்டில் பணமிருக்க வட்டிக்கு கடனை வாங்கி படமெடுத்து இப்போது அவருக்கும் கெட்டபெயர், எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்றுகாத்திருப்பவர்கள் இதை வைத்து ரஜினியையும் குறைகூறுவதால் அவருக்கும் கெட்டபெயர்.

சவுந்தர்யா அவர்களே ,

சொந்தக்காலில் நிற்பதற்காக கடன் வாங்கி படமெடுக்கும் உங்களுக்கு ரஜனியின் மகள் இல்லை என்றால் இவ்வளவு பெரும் தொகையை கடனாக கொடுப்பார்களா? அங்கும் அப்பாவின் பெயர்தானே இஸ்சூரிட்டியாக இருக்கிறது, இதற்கு அப்பாவிடமே கடனை வாங்கலாமே. தலைவர்மீது வராத விமர்சனங்களா உங்கள்மீது வந்துவிடப் போகிறது, ஆனால் அவர்மீது ஒருபோதும் பணமோசடி குறித்து புகார்கள் வந்ததில்லை. நீங்கள் சொந்தக்காலில் நின்றாலும்சரி வாடகைகாலில் நின்றாலும்சரி தயவுசெய்து இன்னொருமுறை பணமோசடி என்று உங்கள் பெயரை பத்திரிகைகளில் வரவிடாதீர்கள். அது உங்களுக்கும் கெட்டபெயர், தலைவருக்கும் மனசஞ்சலம், எங்களுக்கும் அவமானம். மற்றப் படி உங்களை குறை சொல்ல ஒன்றுமில்லை , கோவாவிற்கு வாழ்த்துக்கள், சுல்த்தானுக்கு எதிர்பார்ப்புக்கள்.

15 வாசகர் எண்ணங்கள்:

Admin said...

மிக நன்று....
//இதனால் விஜய் லுங்கி கட்டி நடித்தாலும் ஆச்சரியமில்லை, அவ்வாறு நடித்தால் 'புதியகீதை' திரைப்படத்தில் ஆறு விரல்களுடன் நடித்ததற்கு பின்னர் தளபதி கெட்டப் மாத்தும் படமாக சுறா விளங்கப்போகிறது.//

சிரிப்பை அடக்க முடியவில்லை

பாலா said...

///'புதியகீதை' திரைப்படத்தில் ஆறு விரல்களுடன் நடித்ததற்கு பின்னர் தளபதி கெட்டப் மாத்தும் படமாக சுறா விளங்கப்போகிறது////


வித்தியாசமான முயற்சிகளை வரவேற்போம்!! ;)

ஹாய் அரும்பாவூர் said...

'புதியகீதை' திரைப்படத்தில் ஆறு விரல்களுடன் நடித்ததற்கு பின்னர் தளபதி கெட்டப் மாத்தும் படமாக சுறா விளங்கப்போகிறது.

விஜய் வேணாம் ஒரே சிரிப்பா இருக்கு .
சுறா நிச்சயம் வெற்றி பெரும் என்று அவரின் ரசிகன் சொன்னார் ஏன் என்று கேட்டேன்
அதற்கு அவர் சொன்ன காரணம் இதோ விஜய்க்கு சொந்த கதை தான் சறுக்கும் ஏற்கனவே ஹிட்டான பட ரீ-மேக் படம் எல்லாம் ஹிட் என்று சொன்னார்
என்னதை சொல்ல ?

தமிழ் குமார் said...

அதெப்டி வேட்டைக்காரன் நல்லா போகலன்னு உங்களால எழுத முடியுது.வலைபூ வைச்சுருந்தா உங்க தனிப்பட்ட விருப்பு வெறுப்புல எழுதாதீங்க.கொஞ்சம் உண்மையும் எழுதுங்க.

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு :-).

வெப் தமிழன் said...

@தமிழ் குமார்
அப்ப வேட்டைக்காரன் நல்லா போச்சுன்னு சொல்றீங்களா?
Vijay படத்தோட அவரோட தொண்டரடி பொடிங்க பண்ற காமெடி தாங்க முடியலபா
நாராயணா, இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா....

அமர பாரதி said...

இப்படி கெட்டப்ப மாத்துனா அப்புறம் அடையாளம் தெரியாம விஜய்க்கு பதிலா வேற யாரோ நடிச்சிருக்காங்கன்னு சொல்லிடப் போறாங்க.

சரவணகுமரன் said...

:-))

அ.ஜீவதர்ஷன் said...

இரா.சுரேஷ் பாபு

//மிக நன்று.... //

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

................................

ஹாலிவுட் பாலா

//வித்தியாசமான முயற்சிகளை வரவேற்போம்!! ;)//


நல்லமுடிவு நல்லமுடிவு -:)

....................................


arumbavur

//சுறா நிச்சயம் வெற்றி பெரும் என்று அவரின் ரசிகன் சொன்னார் ஏன் என்று கேட்டேன்

அதற்கு அவர் சொன்ன காரணம் "இதோ விஜய்க்கு சொந்த கதை தான் சறுக்கும் ஏற்கனவே ஹிட்டான பட ரீ-மேக் படம் எல்லாம் ஹிட்" என்று சொன்னார்
என்னதை சொல்ல ?//

அபப 'ஆதி' ? ஹி ஹி ஹி

........................................

தமிழ் குமார்

//அதெப்டி வேட்டைக்காரன் நல்லா போகலன்னு உங்களால எழுத முடியுது//


ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு குசும்பு கூடாது, சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குதுங்க. இதையே சந்திரசேகர் கிட்டயும் சன் பிக்ஸர் கிட்டயும் சொன்னா உங்களை நன்னா கவனிப்பாங்க.

........................................

சிங்கக்குட்டி

//நல்ல பகிர்வு :-).//

நன்றி சிங்கக்குட்டி

.......................................


Fname


//@தமிழ் குமார்

அப்ப வேட்டைக்காரன் நல்லா போச்சுன்னு சொல்றீங்களா?//

விஜய்க்கும் சன் டிவிக்கும் மட்டும் நல்லா போச்சின்னு சொல்லுவாறேன்று நினைக்கிறேன்.


.......................................

அமர பாரதி

//இப்படி கெட்டப்ப மாத்துனா அப்புறம் அடையாளம் தெரியாம விஜய்க்கு பதிலா வேற யாரோ நடிச்சிருக்காங்கன்னு சொல்லிடப் போறாங்க.//


இது புதுசா எல்ல இருக்கு -:)

அ.ஜீவதர்ஷன் said...

சரவணகுமரன்

//:-))//

உங்கள் வருகைக்கு நன்றி சரவணக்குமரன்.

ஞானப்பழம் said...

சுட்டிக் காட்ட நினைத்த punch வரிகளை ஏற்க்கனவே நிறைய பேர் சுட்டிக்காட்டிவிட்டார்கள்!! வேற என்ன நம்ம தலையோட கெட்டப்பு மாற்றம்தான்!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//சுட்டிக் காட்ட நினைத்த punch வரிகளை ஏற்க்கனவே நிறைய பேர் சுட்டிக்காட்டிவிட்டார்கள்!! வேற என்ன நம்ம தலையோட கெட்டப்பு மாற்றம்தான்!//

சப்பா.... இப்பவே கண்ணை கட்டுதே.

பிரசாத் said...

என்ந சொன்னாலும் விஜய் வழி தனி வழி
நீகள் தான் நம்ம தல இன் விளமபர தரர்
எலோ றுக்கும் நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

Kp

//என்ந சொன்னாலும் விஜய் வழி தனி வழி
நீகள் தான் நம்ம தல இன் விளமபர தரர்
எலோ றுக்கும் நன்றி//

தவறுதலாக புரிந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

chosenone said...

ஆனாலும் விஜய் மாதிரி ஒருத்தர் இல்லைன்னு வெச்சுகொங்களேன் ;எங்களுக்கு பொழுதே போகாது இல்ல ???
சிக்கிடாண்டா !!!!!!!!!!..... நமக்கொரு அடிமை சிக்கிடாண்டா!!!!!

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)