Wednesday, January 27, 2010

கோலிவூட் ரவுண்டப் ( 27/01/2010)
 நான் கடவுள் பாலா
நான் கடவுளுக்காக தேசியவிருது பெற்ற பாலா அடுத்த படத்துக்கு மும்முரமாக தயாராகிவிட்டார்.ஆர்யா மற்றும் விஷால் கதையின் நாயகர்களாக நடிக்கும் இப்படத்திற்கு "அவன் இவன்" என பெயரிடப்பட்டுள்ளது.வரலக்ஸ்மி கதாநாயகியென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இப்போது அவருக்குப் பதில் புதுமுகம் ஜனனி ஐயர் நடிக்கிறார்.நந்தாவிட்குப் பிறகு யுவனுடன் கை கோர்க்கிறார் பாலா,மீதிப் படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா என்பது தெரிந்ததே.ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் படத் தொகுப்பு செய்கிறார்,வசனம் ராமகிருஷ்ணன்.பாபா,உன்னாலே உன்னாலே,பீமா போன்ற படங்களுக்கும் வசனம் இவர்தான்.

பாலா தனது முந்தைய படங்களிலிருந்து வித்யாசமாக ஜாலியானவொரு படமாக இருக்குமென்றார் .பாலா என்றாலே வித்தியாசம்.ஆனாலும் வித்யாசத்திலேயே வித்தியாசம் காட்டுவார் என நம்பலாம்.படத்தில் ஆரியாவும் விஷாலும் சகோதரர்களாம் என்பது கூடுதல் தகவல்.ஆறு மாதங்களில் வெள்ளித்திரையில் "அவன் இவன்" வருவான் என்று சத்தியமே செய்திருக்கிறார் பாலா.அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம் .கோவாவும் ,தமிழ்படமும் வரும் வெள்ளி கோவா மற்றும் தமிழ்படம் என்பன திரைக்கு வருகின்றன.முன்னையது ரஜினியின் வாரிசின் தயாரிப்பிலும் பின்னையது அழகிரியின் வாரிசின் தயாரிப்பிலும் உருவானவை.இரண்டு படங்களும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் நகைச்சுவை.கிராமத்திலிருந்து கிளம்பி கோவா செல்லும் வயசுப்பையன்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாக கொண்டதுதான் கோவா.இதனை தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார் வெங்கட்.யுவனின் இசையில் பாடல்களும் ஹிட்டான நிலையில் காமடி களேபரத்துக்கு தயாராகிடலாம்.தணிக்கைக் குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியிருப்பது சிறிது பின்னடைவேயானாலும் ஜாலியான படமாக எல்லோரையும் கவரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வரும் காட்சிகள் வசனங்களை மையப்படுத்தி கதையமைக்கப்பட்ட படம்தான் தமிழ்படம்.இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார்.சென்னை சரோஜா போன்ற படங்களில் கலக்கிய இவர் முதன்முதல் தனி நாயகனாக வருகிறார்.பாடல்களும் ஹிட்டாகி ட்ரைலரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த வாரம் ரிலீசாகும் இருபடங்களும் ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைக்குமென நம்பலாம்.


பத்மபூசன் விருதுஇளையராஜாவுக்கும் ரஹுமானுக்கும் பத்ம பூசன் விருது கொடுத்ததும் கொடுத்தார்கள் குட்டையை கலக்குபவர் கைகளில் குச்சி கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. விருதுகிடைத்த கையேடு இருவரையும் சந்தித்த நம்ம பத்திரிக்கை குலவிளக்குகள் அவங்கவங்க விருதுகளை பற்றி பேசாமல் இளையராஜாவிடம் ரகுமானை பற்றியும் , ரகுமானிடம் இளையராஜாவை பற்றியும் குசலம் விசாரித்திருக்கிறார்கள். ரஹுமான் வழமைபோல அடக்கமாக இளையராஜாவுடன் விருது பெற்றது சந்தோசம் , நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று கூறியுள்ளார். ராஜாவும் வழமைபோல இதைப்பற்றி அவரிடமே போய் கேளுங்க என்று கூறிவிட்டார்.

இங்குதான் இளையராஜா எதிர்ப்பலையை கிளறத் தொடங்கினார்கள், ரகுமானை ரொம்ப நல்லவராகவும் இளையராஜாவை வில்லனாகவும் வைத்து பிரச்சாரம் ஆரம்பித்து விட்டார்கள். ரஹுமான் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார், ஆனால் இளையராஜா எடுத்தெறிந்து பேசுகிறார் என விமர்சனங்கள் ஆரம்பித்துவிட்டன. ரஹுமான் கூறியது அவரது பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் தனக்கு பிடிக்காத விடயத்தை பிடித்திருக்கிறது என்று ஒப்புக்கு கூறுவதிலும் பார்க்க அந்த விடயத்தை பற்றி பேசாமல் விடுவது எவ்வளவோ மேல். அதைத்தான் இளையராஜா செய்துள்ளார், எனக்கு ரகுமானுக்கு விருது கிடைத்தது பிடிக்கவில்லை என்றா கூறினார் ? அவருக்கு கிடைத்த விருதை பற்றி அவரிடமே கேளுங்கள் என்று கூறியதில் அப்படி என்ன தவறு இருக்கிறது ? அது அவரது சுபாவம் ,கிராமத்தில் பிறந்து வளர்ந்த வறுமையின் பிடியில் வாடிய உலகமே தெரியாமல் இசையே உலகமாக வாழ்ந்த இளையராஜா என்னும் கிராமவாசி மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இளையராஜா என்றால் இப்படித்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது , இளையராஜாவுக்கு சரியாக பேசத்தெரியாவிட்டால் அது அவர் தப்பில்லை. அவரது வளர்ந்த சூழல், மற்றும் அவரது ஆரம்பகால சினிமா அனுபவங்களே அவரை அப்படி பேசவைக்கிறது. இன்று சந்தர்ப்பம் கிடைத்ததென்று இளையராஜாவை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள், நீங்கள் எப்படித்தான் விமர்சித்தாலும் இளையராஜா என்னும் மாமேதையின் புகழையோ அல்லது அவரது இசையையோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது . தமிழ் இருக்கும் வரை இளையராஜா இசை இருக்கும், இன்று நவீனத்தை நோக்கி ஓடுபவகள் ஒருநாள் தமிழனின் பாரம்பரியத்திற்கு திரும்ப வரும்போது அவர்களை வரவேற்கப்போவது இளையராஜாவின் இசைதான், இளையராஜாவின் இசை மட்டும்தான்.

15 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

இன்று வரை யாரும் இளையராஜா இசை பற்றி தவறாக பேச வில்லை .அவர் போது இடங்களில் பேசும் பேச்சு பற்றிதான் அனைவரும் குறை கூருகின்றனர்.
அனுபவம் கூட கூட அமைதி சாந்தம் உண்டாகும் இவர் தன்னிடம் பணி புரிந்த கலைஞன் விருது பெரும் போது விருது பெற்ற அவரை விட இவர் சந்தோச பட்டு அறிக்கை விட வேண்டும் அதுதான் அனைவரும் எதிர்பார்ப்பதும் கூட சாதாரண பாராட்டை கூட தர மனம் இல்லை என்றால் என்ன சொல்வது .
"ராஜாவும் வழமை போல் அவரிடம் போய் கேளுங்கள் என்று கூறி விட்டார் "
நிச்சயம் ஒரு அனுபவம் முதிர்ச்சி இல்லாத புது நபர் சொல்லி இருந்தால் இந்த வார்த்தை ஒன்றும் இல்லை இத்தனை வருடம் திரை உலகில் போராடி உண்மையான திறமை மூலம் வெற்றி கொடி நாட்டிய இளைய ராஜா சொன்னது
ஒரு அனுபவம் உள்ளவரின் வார்தை இல்லை
இது என் தாழ்மையான கருத்து

வெற்றி said...

என்ன இருந்தாலும் தன்னடக்கதுல ராஜா வ விட ரஹ்மான் ஒரு படி அல்ல ஓர் ஆயிரம்படிகள் மேலே இருக்கிறார்..

ஸ்ரீநி said...

தல
அரம்பவூராரை வழி மொழிகிறேன்
நீங்கள் கவனிதீர்கள என்று தெரியாது
ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்த அடுத்த சில நாட்களில் இளையராஜாவின் ஒரு பாடல் வெளியானது " உழகம் இப்போ எங்க போகுது
என்னக்கு இந்த அன்னை பூமி போதும்
இங்கு பிறந்தரவும் எங்கை போகிறார்
என்னக்கு இந்த சொந்த நாடு போதும்
இந்த மண்ணை விட்டு நான் எங்கை செலவின் " என்ற வரிகளுடன் படம் அழகர் மலையில் அதுவரை இல்லாத இளையராஜாவின் வீடியோவுடன் வந்தது

ஒரு ஞானியின் மடக்குறை என்று வேண்டுமானால் விட்டுவிடலாம். மற்ற படி. . . . . . . .

கிரி said...

//புதுமுகம் ஜனனி ஐயர் நடிக்கிறார்.//

அழகாக உள்ளார் :-)

தமிழ்படம் வந்தால் பதிவர்கள் பலருக்கு கொண்டாட்டம் என்று நினைக்கிறேன் ;-)

இளையராஜா திறமையை மதித்தாலும் அவர் பேச்சுகள் ஏனோ என்னை கவரவில்லை.. பார்வைகள் பல விதம் :-)

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//அனுபவம் கூட கூட அமைதி சாந்தம் உண்டாகும் இவர் தன்னிடம் பணி புரிந்த கலைஞன் விருது பெரும் போது விருது பெற்ற அவரை விட இவர் சந்தோச பட்டு அறிக்கை விட வேண்டும் அதுதான் அனைவரும் எதிர்பார்ப்பதும் கூட சாதாரண பாராட்டை கூட தர மனம் இல்லை என்றால் என்ன சொல்வது .//

கூட இருந்தவர்களும் ராஜாவால் வளர்த்து விடப்பட்டவர்களும் ராஜாவை விட்டு பிரிந்தபோது ரகுமானும் சந்தர்ப்பம் கிடைத்ததென்று ராஜாவை உதறிவிட்டு அந்த எதிரணியில் இணைந்தார். ஒரு மாணவனாக அன்று ரகுமான் செய்தது மட்டும் சரியா?

முடிந்துபோன கதைகளை பற்றி பேசி பயனில்லை ,ஆனால் ராஜாவுக்கு ரகுமானை பிடிக்காதென்பது ரகுமானுக்கே தெரியும்.அப்படி இருக்க திரும்ப திரும்ப ரகுமானை பற்றி ராஜாவிடம் கேட்கும்போது அவர் நன்றாக சொன்னால்தான் ஆச்சரியம்,அப்படிசொன்னால் ராஜா நடிக்கிறார் என்று சிறு குழந்தைக்கும் புரியும்.

எதற்காக மீண்டும் மீண்டும் ரகுமானை பற்றி கேட்டு ராஜாவை சீண்டவேண்டும் ? ராஜா m.s.v பற்றியும் R.D. பர்மன் பற்றியும் பெருமையாகத்தான் பேசுவது வழக்கம். அவர்களோடு ராஜாவை ஒப்பிடும் சந்தர்ப்பங்களில் கூட ராஜா அவர்களுக்கு சமமாக தன்னை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை , இது அவரது குருமரியாதை . அதேபோல ரகுமானுக்கு இளையராஜா மீது குரு மரியாதை (?) இருப்பதில் ஆச்சரியமில்லை.


இனிவரும் காலங்களிலும் ரகுமான் சம்பந்தமான கேள்விகளுக்கு ராஜா இப்படித்தான் பதில் கூறப்போகின்றார் , அவர் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதால் அது தப்பாகத்தான் இருக்கும். நிச்சயம் அந்த வித்தகர்வம் பிடித்த மனிதர் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்.முடிந்தால் நீங்கள் அவரிடம் ரகுமானை பற்றி கேட்பதை தவிர்க்கலாம்.

இது எனது தாழ்மையான கருத்து.

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//என்ன இருந்தாலும் தன்னடக்கதுல ராஜா வ விட ரஹ்மான் ஒரு படி அல்ல ஓர் ஆயிரம்படிகள் மேலே இருக்கிறார்..//


உண்மைதான், தமது மதிப்பை உயர்த்த தம்மை தாழ்த்தி எதிராளியை உயர்த்தி தன்னடக்கத்துடன் பேசும் பட்டணத்து கலாச்சாரம் பவம் அந்த பண்ணயபுரத்து முதியவருக்கு இல்லைதான்.

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீநி சொன்னது…


//ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்த அடுத்த சில நாட்களில் இளையராஜாவின் ஒரு பாடல் வெளியானது " உழகம் இப்போ எங்க போகுது
என்னக்கு இந்த அன்னை பூமி போதும்
இங்கு பிறந்தரவும் எங்கை போகிறார்
என்னக்கு இந்த சொந்த நாடு போதும்
இந்த மண்ணை விட்டு நான் எங்கை செலவின் " என்ற வரிகளுடன் படம் அழகர் மலையில் அதுவரை இல்லாத இளையராஜாவின் வீடியோவுடன் வந்தது//


எனக்கும் அது சங்கடமாகத்தான் இருந்தது,அது ராஜாவின் தாழ்வு மனப்பான்மையால் உருவானது என்றே எனக்கும் தோன்றியது.இது ஒருவித வெறுப்பால் (frustration) உருவான விடயம், இது மனோதத்துவ ரீதியாக ஆராயப்படவேண்டியது. ஒருவேளை ராஜாவின் இடத்தில் அவரது மனநிலையில் இருந்திருந்தால் நீங்களும் இதைத்தான் செய்திருப்பீர்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

கிரி சொன்னது…//அழகாக உள்ளார் :-)//


ஆனால் பால அழுக்காகத்தானே காட்டுவார்.//தமிழ்படம் வந்தால் பதிவர்கள் பலருக்கு கொண்டாட்டம் என்று நினைக்கிறேன் ;-)//

உண்மைதான், நாங்களும் ரெடியாயிட்டமில்ல.


//இளையராஜா திறமையை மதித்தாலும் அவர் பேச்சுகள் ஏனோ என்னை கவரவில்லை.. //

ராஜா தன்னை மாற்றிக்கொள்ள போவதில்லை, நாம்தான் அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும், இல்லாவிட்டால் மனோவியலாக ராஜாவின் பாடல்களையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.


//பார்வைகள் பல விதம் :-)//


நிச்சயமாக, அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

கிரி said...

//மனோவியலாக ராஜாவின் பாடல்களையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.//

அப்படி தோன்றவில்லை.. இன்றும் அவரது பழைய பாடல்களை விருப்பமுடன் கேட்டு வருகின்றேன்..புதிய பாடல்களில் ஒரு சிலர் இயக்கத்தில் (குறிப்பா கமல்) மட்டுமே நன்றாக உள்ளது

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//அப்படி தோன்றவில்லை.. இன்றும் அவரது பழைய பாடல்களை விருப்பமுடன் கேட்டு வருகின்றேன்//

உங்களைபோல எல்லோரும் இருந்துவிட்டால் நல்லது.

ராமகிருஷ்ணன் த said...

அவரரவர் வாழ்வில் அமைந்தது அப்படி! அதற்காக ஒரு குணத்தை மட்டும் குறை சொல்லுவது தவறு. சிலருக்கு குணத்தை மாற்றுவதோ அல்லது நடிப்பதோ முடியாது அப்படிபட்டவர் இளையராஜா. எனக்கு பிடித்தவர்.

ஞானப்பழம் said...

பல நேரங்களில் introvert-ஆக இருக்கும் ரகுமானைவிட தன மனதில் பட்ட விடயத்தை வெளிப்படையாகவும் அதே நேரம் பிறர் மனதை நேரடியாக தாக்காதவாரும் பேசும் இளையராஜா குணத்தில் பல மடங்கு சிறந்தவரே... இது 'என்' தாழ்மையான கருத்து!

///இன்று சந்தர்ப்பம் கிடைத்ததென்று இளையராஜாவை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள், நீங்கள் எப்படித்தான் விமர்சித்தாலும் இளையராஜா என்னும் மாமேதையின் புகழையோ அல்லது அவரது இசையையோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது . தமிழ் இருக்கும் வரை இளையராஜா இசை இருக்கும், இன்று நவீனத்தை நோக்கி ஓடுபவகள் ஒருநாள் தமிழனின் பாரம்பரியத்திற்கு திரும்ப வரும்போது அவர்களை வரவேற்கப்போவது இளையராஜாவின் இசைதான், இளையராஜாவின் இசை மட்டும்தான்///
எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.. நம் தமிழ் பண்பாடும் நாட்டுபுற கலாச்சாரமும் இளையராஜாவின் இசையில்தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.. எம்.எஸ்.வீ யின் இசையிலோ ரகுமானின் இசையிலோ இது ஒரு பெரும் குறை.. தாள ஞானத்திலும் மெட்டு ஞானத்திலும் இளையராஜாவை விட சிறந்த்ததொரு இசையமைப்பாலனை இதுவரை நான் கண்டதில்லை இனிமேலும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை.. இளையராஜாவைப் போல் lively-யாக இசையமப்பதர்க்கு யார் இருக்கிறார்? முன்னேற்றம் என்ற பெயரில் அந்நியனின் பாணியில் இசையமைத்துக் கொண்டிருந்தால் நமது பண்பாடு அழிந்துவிடாதா? தமிழன் ஆஸ்கார் வாங்காலாம் ஆனால் அவனிடம் தமிழின் வாடை சிறிதளவும் இல்லையென்றால் அது கேவலம் இல்லையா? இப்படிப் பார்த்தால் ரகுமான் ஆஸ்கார் வாங்கியதைவிட இளையராஜாவின்
" உழகம் இப்போ எங்க போகுது
என்னக்கு இந்த அன்னை பூமி போதும்" என்ற பாடலைக் கேட்டு நான் பெருமிதம் கொண்டேன்.. இன்னொரு வரியும் நினைவிற்கு வருகிறது : "கன்றைவிட்டுத் தாய் பிரிஞ்சு காணும் இன்பம் ஏதுமில்லே..."

அ.ஜீவதர்ஷன் said...

ராமகிருஷ்ணன் த

//அவரரவர் வாழ்வில் அமைந்தது அப்படி! அதற்காக ஒரு குணத்தை மட்டும் குறை சொல்லுவது தவறு. சிலருக்கு குணத்தை மாற்றுவதோ அல்லது நடிப்பதோ முடியாது அப்படிபட்டவர் இளையராஜா. எனக்கு பிடித்தவர்.//

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் .


....................................

ஞானப்பழம்

//எம்.எஸ்.வீ யின் இசையிலோ ரகுமானின் இசையிலோ இது ஒரு பெரும் குறை//


உண்மைதான், முதலில் msv தான் மேற்கத்தைய பாணியை தமிழுக்கு கொண்டுவந்தவர். அபோதைய எமது மக்களுக்கு அது புரியாததால் அவர்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் ரகுமான் மீண்டும் அதே மேற்கத்தேய இசையை கொண்டு வரும்போது நம்மவர்களும் மேற்கத்தைய இசையை கேட்கத் தொடக்கிவிட்டதனால் மேற்கத்தைய இசையை கேட்பதுதான் கவுரவம் என்று கருதினார்கள், இன்றும் கருதுகிறார்கள், அதனால்தான் இவர்கள் இளையராஜாவை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் திட்டிதீர்க்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு நாம் யார் ,நமது உண்மை வாழ்க்கை எது என்பது ஒருநாள் விளங்கும், அப்போது இவர்களை ராஜாவின் இசை அரவணைக்கும்.

ஞானப்பழம் said...

மேற்கத்தைய இசையை கேட்பதுதான் கவுரவம் என்று கருதினார்கள், ////

கவுரவமா? பிக்காரித்தனம்னு சொல்லுங்க.. கடல்போல் இசை அலைகளைகொண்டு நம்மை தேகட்டச் செய்தவர்கள் அந்த இசை மேதைகள்.. எப்போது மொழிக்கும் வரிகளுக்கும் முக்கியத்துவம் குறைந்ததோ அப்பவே இசையின் அழகு குறைந்துவிடும்... தமிழ் நாட்டைவிட்டு வேறேந்தப்பக்கம் சென்றாலும் இப்படியொரு வழமையான இசை கலாச்சாரம் இருக்குமா? நம் மண்ணில் பிறந்தோர் பிற நாட்டவரின் அரைகுறை இசையை நக்குவதும்(அதை ரசிப்பவர்களும்) இழிவு ஏற்படுத்துகின்றது..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்


//கவுரவமா? பிக்காரித்தனம்னு சொல்லுங்க.. கடல்போல் இசை அலைகளைகொண்டு நம்மை தேகட்டச் செய்தவர்கள் அந்த இசை மேதைகள்.. எப்போது மொழிக்கும் வரிகளுக்கும் முக்கியத்துவம் குறைந்ததோ அப்பவே இசையின் அழகு குறைந்துவிடும்... தமிழ் நாட்டைவிட்டு வேறேந்தப்பக்கம் சென்றாலும் இப்படியொரு வழமையான இசை கலாச்சாரம் இருக்குமா? நம் மண்ணில் பிறந்தோர் பிற நாட்டவரின் அரைகுறை இசையை நக்குவதும்(அதை ரசிப்பவர்களும்) இழிவு ஏற்படுத்துகின்றது..//

நெத்தியடி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)