Saturday, January 23, 2010

பாலாவின் நெத்தியடி


தேசியவிருது பெற்ற பாலாவுக்கு நான்கடவுளை தோற்கடித்த குற்ற உணர்ச்சியுடன் வாழ்த்துக்கள்.
கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காதது கிடைக்காது, இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை, நம்ம தலைவர் பன்ச். இது இப்ப சரியாய் பொருந்தியிருக்கிறது நம்ம பாலாவுக்குதான். பாலாவுக்கு நான்கடவுளுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதென்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமே இல்லை. இதற்கு முன்னர் மூன்று தடவை கிடைக்க வேண்டியது கொஞ்சம் லேட்டாக கிடைத்துள்ளது. தேசிய விருதுகளை எதோ மளிகைசரக்கு மாதிரி வாங்கி வைத்திருக்கும் பாலுமகேந்திராவின் சிஷ்யனுக்கு இது ஒன்றும் பெரிய விடயமாக இல்லாவிட்டாலும் தனது படைப்பை தூக்கியெறிந்தவர்களுக்கும் , விமர்சித்தவர்களுக்கும் கொடுக்கும் பதிலடியாக இந்த விருது அவருக்கு சிறப்பானதே.சேதுவிற்கு முதல் எனக்கு விக்ரமை தெரியாது ஆனால் சேதுவுக்கு பின்னர் எனக்கு ரஜினிக்கு அடுத்து பிடித்த நடிகராக விக்ரம் விளங்குகிறார் என்றால் அதற்கு முழுக்காரணமும் பாலாதான். விக்ரம் , சூர்யா இருவரும் பாலாவின் படத்தில் நடிப்பதற்கு முன்னரும் , நடித்த பின்னரும் இருக்கும் உடல் மொழி(body language ) , வசன உச்சரிப்பு (Dialog delivery) என்பவற்றில் உள்ள வித்தியாசம்தான் பாலாவின் ஆளுமைக்கு சிறந்த உதாரணம்.சேது, பிதாமகன் இரண்டிலும் தவறவிட்டதை பாலா நான்கடவுளில் பெற்றுள்ளார் என்பதை விட சேது, பிதாமகனில் பாலாவை கௌரவிக்க தவறிய மத்திய தெரிவுக்குழு இந்தத்தடவை பாலாவுக்கு தேசிய விருதைக்கொடுத்து தங்களை உயர்த்தியுள்ளதென்றால் சரியாக இருக்கும். பாலா போன்ற கலைஞனுக்கு இந்த விருதுகளையும் தாண்டி மக்கள் கொடுக்கும் வரவேற்பே பெரிய விடயமாக இருக்கும், ஆனால் எம்மால் நான்கடவுளுக்கு போதிய வரவேற்பை கொடுக்க இயலாமல் போனது துரதிஸ்டமே. பாலாவின் தனிப்பட்ட பண்பு சிலவேளைகளில் தவறாக இருக்கலாம், அதற்காக அவரது கலைப்படைப்புகளை வேண்டுமென்றே மோசமாக விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தவர்களுக்கு கிடைத்துள்ள முதலடிதான் இந்த தேசியவிருது.ஆனால் ஆரியாவிற்கு எதிர்பார்க்காவிட்டாலும் பூஜாவிற்கும் , இளையராஜாவிற்கும் தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே.சாதாரண ஒரு நடிகன்,நடிகையை வைத்து படமெடுப்பவர்களே ஒரு காட்சி சரியாகவர எத்தனை தடவை றீ டேக் எடுக்கிறார்கள், ஒரு சில கேரக்டர்கள் தவிர மிகுதி அனைவரும் ஊனமுற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தான் நினைத்ததை கொண்டுவர பாலா என்ன பாடுபட்டிருப்பார்.அந்த ஒவ்வொரு கேரக்டர்களையும் பாலா தேடிக்கண்டு பிடிக்க என்ன பாடுபட்டிருப்பார், கதை என்னமோ ஒன் லைன் ஸ்டோரிதான் ஆனால் காட்சியமைப்புகளில் ஒவ்வொரு பிரேமிலும் பலாவின் ஆளுமை தெரிந்ததை யாரும் மறுக்க முடியுமா ? யாராவது பூஜாவும் சிறந்த நடிகைதான் என நான்கடவுளுக்கு முன்னர் கூறினால் நம்பியிருப்பார்களா?


படத்தில் ஐந்து பாடல்கள் வைக்கவில்லை, குறிப்பாக குத்துப்பாடல்கள் இல்லை,ஐந்து சண்டைக்காட்சிகள் வைக்கவில்லை,காதல்காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை, காமடிக்கென்று தனி ட்ராக் அமைக்கவில்லை, கிளைமாச்சில் டிவிஸ்ட் வைக்கவில்லை , பன்ச் டயலாக் இல்லை, அழகான காஸ்டியூம் இல்லை , திரைக்கதையில் மின்னல் வேகம் இல்லை, சென்டிமென்ட் காட்சிகள் இல்லை. இப்படியாக நம்ம மக்கள் எதிர்பார்க்கும் வர்த்தக ரீதியான விடயங்கள் எதுவுமில்லாமல் படமெடுத்தால் எப்படி நம்ம மக்கள் வரவேற்பார்கள் . பாலா இயக்கிய முதல் மூன்று படங்களிலும் இவற்றில் சில விடயங்கள் இருந்ததால்தான் அவற்றை வரவேற்றவர்கள் நாங்கள். முழுமையான கலைப்படைப்புக்களை வரவேற்கும் நிலைக்கு நாங்கள் வரவில்லை என்பது எமக்கு அவமானமே அன்றி பாலாவுக்கல்ல.

பாலா அவர்களே ,

இன்று மத்திய தெரிவுக்குழுவுக்கு தெரிந்தது நாளை எமது மரமண்டைகளுக்கும் புரியும், எங்களுக்காக உங்கள் பாதையை மாற்றமால் உங்கள் பாதைக்கு எங்களை மாற்றும்படியான படங்களை தொடர்ந்தும் தரவேண்டுமென்பது எமது தாழ்மையான வேண்டுகள்.


இதையும் பாருங்கள் ....

பகுதி -1பகுதி -2பகுதி -3பகுதி -414 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

hats-off to bala!
and best of luck for his forthcoming ventures !!!

ஹாய் அரும்பாவூர் said...

உங்கள் எழுத்து பணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
பாலாவின் படைப்புகள் எல்லாம் சிறப்பானதே .அதை விருது கொடுக்காவிட்டால் கூட அவரின் படைப்பு தரம் தாளாது .பாலாவை பற்றி சிறப்பான பதிவு

அஹோரி said...

பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

ஞானப்பழம் said...

///படத்தில் ஐந்து பாடல்கள் வைக்கவில்லை, குறிப்பாக குத்துப்பாடல்கள் இல்லை,ஐந்து சண்டைக்காட்சிகள் வைக்கவில்லை,காதல்காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை, காமடிக்கென்று தனி ட்ராக் அமைக்கவில்லை, கிளைமாச்சில் டிவிஸ்ட் வைக்கவில்லை , பன்ச் டயலாக் இல்லை, அழகான காஸ்டியூம் இல்லை , திரைக்கதையில் மின்னல் வேகம் இல்லை, சென்டிமென்ட் காட்சிகள் இல்லை. இப்படியாக நம்ம மக்கள் எதிர்பார்க்கும் வர்த்தக ரீதியான விடயங்கள் எதுவுமில்லாமல் படமெடுத்தால் எப்படி நம்ம மக்கள் வரவேற்பார்கள் .///

பாலாவின் மற்ற படங்களைவிட நான் கடவுள் மிகவும் வேறுபட்டிருந்தது என்பது உண்மையே.. இன்னொரு விடயமும் சொல்ல மறந்துவிட்டீர்கள்: உடல்/மனம் ஊனமுற்றவர்களை வைத்து படம் செய்யும்போது அவர்கள்மீது பரிதாபம் வரும் வகையிலேயே அமைப்பார்கள்.. இப்படத்தில் மாறாக அவர்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காட்டியிருப்பார்கள்.. வளர்ந்துவரும் குழுமங்களில் இருந்து மறக்கப்பட்ட ஒரு சார மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை அவர்கள்மீது அனுதாபம் மட்டும் வராதவாறு காட்டியிருப்பார்.. தமிழ் நாட்டில் இப்படியும் நடக்கின்றது என்பதை 'நான் கடவுள்' மூலம்தான் தெரிந்துகொண்டேன்...

ஞானப்பழம் said...

நான் மேல்கூரியவாறு பார்த்தால், பாலா தகவல் சாதனங்களை கையாளுவதில் நீதி செய்துள்ளார் என்றும் புலப்படுகிறது..

நான் கடவுளை நான் பார்க்கும்போது, மக்களுக்கு அது பிடிக்கும் என எதிர்பார்க்கவில்லை.. ஆனால், முதல் இருபது நிமிடங்களிலேயே அவர் இப்படத்தை தயரிக்கும்முன் செய்த உழைப்பு எனக்கு புரிந்தது...

ஸ்ரீநி said...

சூப்பர் பதிவு = மனநிறைவு

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி.

.....................

arumbavur

//உங்கள் எழுத்து பணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்//

நன்றி

//பாலாவின் படைப்புகள் எல்லாம் சிறப்பானதே .அதை விருது கொடுக்காவிட்டால் கூட அவரின் படைப்பு தரம் தாளாது .//

சரியான கூற்று

............................

ஞானப்பழம்

//இன்னொரு விடயமும் சொல்ல மறந்துவிட்டீர்கள்: உடல்/மனம் ஊனமுற்றவர்களை வைத்து படம் செய்யும்போது அவர்கள்மீது பரிதாபம் வரும் வகையிலேயே அமைப்பார்கள்.. இப்படத்தில் மாறாக அவர்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் காட்டியிருப்பார்கள்.. வளர்ந்துவரும் குழுமங்களில் இருந்து மறக்கப்பட்ட ஒரு சார மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை அவர்கள்மீது அனுதாபம் மட்டும் வராதவாறு காட்டியிருப்பார்//

நிச்சயமாக உங்கள் கூற்று சரியானதே , இதனை நான் முதலில் சிந்திக்கவில்லை.


//நான் மேல்கூரியவாறு பார்த்தால், பாலா தகவல் சாதனங்களை கையாளுவதில் நீதி செய்துள்ளார் என்றும் புலப்படுகிறது..//


உண்மைதான்


...........................

ஸ்ரீநி சொன்னது…

//சூப்பர் பதிவு = மனநிறைவு//


நன்றி ஸ்ரீநி

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு வாழ்த்துகள்...

கிரி said...

நான் கடவுள் ஒரு மிகச்சிறந்த படம்... பாலாவால் தமிழ் திரையுலகிற்க்கே பெருமை!

அ.ஜீவதர்ஷன் said...

அஹோரி @

Sangkavi @

கிரி @

வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

ராஷா said...

எல்லா டைரக்டரும் பாலா கிட்ட கத்துக்க வேண்டியது..

கதாநாயகிய கவர்ச்சி பொருளா கான்பிக்காத, சிறு துளிகூட ஆபாசம் இல்லாத சினிமா எனக்கு தெரிஞ்ச ஒரே டைரக்டர் அது பாலா மட்டுமே.

தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

மாயாவி said...

படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கு விருது கிடக்குமென எதிர்பார்த்தேன். கிடக்கவில்லை, ஏமாற்றம்தான்.

balavasakan said...

நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி ஜீவன் பாலா மிகச்சிறந்த இயக்குனர் அதில் எந்த வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை ஆனால் நான் கடவுளை ரசிக்கும் அளவுக்கு மன தைரியம் ரசிகரகளிடம் என்னிடம் இருக்கவில்லை. அதுதான், தோலவி என்று சொல்ல முடியாது படம் வெற்றிப்படம்தான் ஆனால் வசூலில் சாதிக்கவில்லை...

அ.ஜீவதர்ஷன் said...

ராஷா

//கதாநாயகிய கவர்ச்சி பொருளா கான்பிக்காத, சிறு துளிகூட ஆபாசம் இல்லாத சினிமா எனக்கு தெரிஞ்ச ஒரே டைரக்டர் அது பாலா மட்டுமே.//

நிச்சயமாக , சரியாக கூறினீர்கள்.

..........................................

மாயாவி

//படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கு விருது கிடக்குமென எதிர்பார்த்தேன். கிடக்கவில்லை, ஏமாற்றம்தான்.//

நான் அன்பே சிவத்திலேஆர்தர் வில்சனுக்கு விருது கிடைக்குமென்று எதிர்பார்த்தேன்.

................................................

Balavasakan சொன்னது…

//தோலவி என்று சொல்ல முடியாது படம் வெற்றிப்படம்தான் ஆனால் வசூலில் சாதிக்கவில்லை...//

வசூலிலும் சாதித்திருக்கும் ஆனால் மோசமான விமர்சனங்களால் வசூலிக்க முடியவில்லை.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)