Monday, January 11, 2010

இதுதான் அஜித்குமார் ....

இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்

ரஜினி,கமல் என்ற இரு சாதனை சிகரங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கடும்போட்டி நிலவியது.அப்போது முன்னணியிலிருந்த பிரஷாந்த்,விஜய்,அஜித் ஆகியோருக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பிரஷாந்த் பின்னடைவைச் சந்திக்க விக்ரம்,சூர்யா என்போர் போட்டியில் இணைய இன்றுவரை ரஜினி கமல் தங்களிடத்தில் இன்னும் சிம்மாசனமிட்டுள்ளனர் என்பது வேறுகதை.

ஆனால் சினிமாவின் எந்தவொரு பின்னணியில்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்தும் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்திருப்பது சாதாரணவிடயமல்ல,அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் அஜித்.காதல்நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த அஜித் ஆரம்பகாலங்களில் அதிகமான பெண்ரசிகைகளைக் கொண்டவராகவிருந்ததால் காதல்,குடும்ப படங்களிலேயே நடித்திருந்தார்,அதன்பின்னர் சரணின் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், முருகதாசின் தீனா போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன்ஹீரோவாக புதிய பரிமாணம் எடுத்து அதிலும் வெற்றிபெற்றார்.இன்றுவரை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னணியிலிருப்பதுடன் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ஓபனிங் உள்ள நடிகராகவும் விளங்குகிறார்.

இப்போது நான் கூறவந்தது அஜித்திற்கும் மிடியாக்களுக்கும் இடையிலான உறவு பற்றி,இது அனைத்து மிடியாக்கள் பற்றியுமல்ல,தொப்பி பொருத்தமானவர்களுக்கே......இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் என்பன இப்போதுதான் பிரசித்தம்,முன்னர் பிரிண்ட் மிடியாக்களும் தொலைக்காட்சிக்களும்தான் எல்லாமும்.அந்தக் கால கட்டத்தில் அஜித் வார இதழொன்றுக்கு வழங்கிய தனது "சூப்பர் ஸ்டார்" பற்றிய பேட்டி மூலம் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளானார், அஜித் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறினாலும் மீடியாக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. சரி அஜித் அப்படித்தான் முதலில் கூறியிருந்தாலும் பின்னர் அப்படி கூறவில்லை என்று சொன்ன பின்பாவது விட்டிருக்கலாமல்லவா? ஆனால் தொடர்ந்தும் ரஜினி ரசிகர்களிடமிருந்து அஜித்தை பிரிக்க இதை ஒரு துரும்புச்சீட்டாக சில ஊடகங்கள் பயன்படுத்திவந்துள்ளன.

அதன் பின்னர் அவர் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்,இதனால் ஆளாளுக்கு தாங்கள் விரும்பியதை எழுத ஆரம்பித்தனர்,அஜித்தான் எந்த பதிலோ மறுப்போ சொல்லமாட்டாரே இது போதாதா இவர்களுக்கு? அஜித் எங்காவது ஏதாவது கூறினால் உடனே அதனை திரிபுபடுத்தி புதுஅர்த்தம் கற்பிக்க ஒரு கூட்டமே ஆயத்தமாயிருந்தது. இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் ஆதிக்கம் அதிகமானபின் ஒவ்வொரு நடிகர்களுக்கும் சார்பானவையாக இவை செயல்பட ஆரம்பித்தன.அஜித்தின் போட்டி நாயகர்களின் சார்பு ஊடகங்கள் இதில் முன்னணி வகித்ததென்றால் அது மிகையல்ல,குறிப்பாக ஒரு தொலைக்காட்சி குடும்பமும்,அவர்களது பத்திரிகைகளும் அஜித்தின்படங்கள் நன்றாக ஓடினாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் ஒருசில நடிகர்களின் தோல்வி படங்களைக்கூட வெற்றிப்படங்களாக சித்தரித்திருந்தன.

அண்மையில் அஜித் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் "எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை" இது நூற்றுக்கு நூறு உண்மை,தமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை.மற்றைய நடிகர்கள் போல படத்தை வெளியிட்டுவிட்டு கூவி விற்க இவர் தொலைக்காட்சிகளுக்கு ஓடித் திரிவதில்லை.பில்லா படம் வெளிவருவதற்கு முன் பல ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்,அதற்காக வஞ்சகமின்றி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு பேட்டி வீதம் கொடுத்திருந்தார்,அதன்பின் இன்னமும் சின்னத்திரைப்பக்கம் அஜித் 'தல'காட்டவில்லை.

ஆனாலும் ஒரு முன்னணித் தொலைக்காட்சி அஜித் படங்களை தோல்வி ஆக்க கடுமையாக உழைக்கும்.டாப் டென் படங்கள்,பாடல்கள் என்பவற்றில் இயலுமானவரை அஜித் படங்களை பின் வரிசையில் போட்டு படத்தின் மீதான பார்வையைக் குறைத்துவிடுவதோடு விமர்சனம் என்ற பெயரில் ஏதேதோ கூறி படத்தை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார்கள். அஜித் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இவர்களின் கலையகத்துக்கு வந்து பேட்டி கொடுத்திருந்தாலோ,இவர்களின் தொலைக்காட்சிக்கு நன்றி கூறியிருந்தாலோ டாப் டென்னில் முதலிடம் கிடைத்திருக்கும்.அல்லது தனது படத்தின் ஒளிபரப்பு உரிமையை இவர்களுக்குக் கொடுத்திருந்தாலோ அஜித் புராணம் பாடப்பட்டிருக்கும்.

இவற்றில் எதுவுமே அஜித் செய்யாததுதான் இவர்களுக்கு அஜித் பிடிக்காமல் போனகாரணம்.அதுவும் இவர்கள் அதற்குப் பயன்படுத்தும் டெக்னிக் இருக்கிறதே,போட்டி நடிகரின் படமொன்றுடன் அஜித் படம் ரிலிஸ் ஆகினால் அஜித் படத்திற்கு கண்டிப்பாக மூன்றாவதிடம்தான்.கூடவந்த ஒரு டப்பா படத்திற்கு இரண்டாமிடம்,அல்லது ஏலவேவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் இரண்டாமிடத்தை பிடிக்கும்,இதை உண்மையென்று நம்பி ஞாயிறுகாலை தொலைக்காட்சிக்கு முன்னிருந்த காலங்களுமுண்டு.இப்போதான் இவர்களின் டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கே....அந்த முக்கிய தொலைக்காட்சி இப்போது கடைசியாக விஷாலின் படமொன்றை வாங்கி அசலுடன் போட்டிக்கு இறக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சு,என்னதான் விளம்பரம் செய்தாலும் ஒரு படத்தின் ஒபநின்கை அதிகரிக்க முடியுமேயன்றி படத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியாது.அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் இரண்டாம் வாரத்துடன் குப்புற விழுந்தது இதற்கு சான்று.ஆனாலும் கிங் ஒப் ஒபெநிங்(King Of Opening ) அஜித்திற்கு முன் இவர்களின் விளம்பரம் எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை,அதன் பின் இவ்விரண்டு படங்களின் தரத்தை பொறுத்தது இவற்றின் வெற்றி.

இதனைத் தான் அசல் ஆடியோ ரிலிசிலும் அஜித் கூறியிருந்தார் "நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை" என்று .ஆனால் மறுநாள் ஒரு இணையத்தளத்தில் செய்தி வந்திருந்தது."என் படங்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை " என்று.இப்படித்தான் அஜித் கூறும் அனைத்துக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

இதே போன்றே அண்மையில் தனது பெயருக்கு முன்னால் வரும் பட்டப்பெயரை (அல்டிமேர் ஸ்டார் ) போடவேண்டாம் என்று அஜித் கூறியதை ஒரு முக்கிய சினிமா இணையத்தளம் "அஜித் ஜோதிடரின் பேச்சை கேட்டே இவ்வாறு கூறியுள்ளார்" என்றும்,முன்பு அஜித் பட்டப்பெயர் போடாத காலங்களில் அதிக வெற்றி கிடைத்ததால் மீண்டும் பட்டப்பெயரை போடாமல் விடப்போகின்றார் என்றும் பிளேற்ரை மாற்றிப்போட்டன. நம் தலைவலி ரசிக சிகாமணிகளுக்கு  இது போதாதா? உடனே சித்து வேலையே ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடமிருக்கும் கெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே...

எது எப்படியோ மனதில் பட்டதை கூறிவிட்டு,நடிப்பு என்பதை தொழிலாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் 'தலை'க்கு ஒரு சல்யுட்...

65 வாசகர் எண்ணங்கள்:

velanaiTamilan said...

Well said.... They can't hide the truth always, one day everyone realize that !!!!

arumbavur said...

இப்போ இருக்கும் நடிகர் அனைவரிடம் இருந்தும் விதியசப்பட்டவர் அஜீத .மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி வம்பில் மாட்டுவது அவர் வாடிக்கை .அதே போல் அவர் தன் நடிக்கும் படத்தின் கதை மட்டும் கேட்டு அந்த இயக்குனரை நம்பி அதற்க்கு பின் உள்ள விசயதில் கருத்து கூறாததால் அவரின் படம் தோல்வி படமாக மாறி விடுகிறது எனவே ரசிகர் ரசிக்கும் நல்ல கதை நல்ல பாடல்கள் தரவேண்டும் அதுவே எல்லா ரசிகனின் ஆசை என் ஆசை கூட
விண்ணை தாண்டி வருவாயா பாடல் எப்படி எப்புடி கூறினால் நன்றாக இருக்கும்

negamam said...

நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை"

சிவகாசி ராம்குமார் said...

very nice points. keep it up

லோகு said...

அட்டகாசமான இடுகை. அஜித் ரசிகர்களாகிய எங்கள் மனக்குமுறலை நடுநிலையான பார்வையோடு எழுதி இருக்கிறீர்கள் நன்றி..

Vinoth said...

Thanks a lot!! Thala pola varuma?

damildumil said...

நல்ல பதிவு. வாழ்த்துகள்.

ஞானப்பழம் said...

'விஜய்', 'அஜித்' இவர்கள் இருவரின் பெயரில் உள்ள "ஜ"வை நீக்கிவிட்டால், இவர்களை நான் தமிழ் பட நடிகர்கள் என ஒப்புக்கொள்கிறேன்!! ஏனென்றால், இரண்டுபேருக்குமே நடிப்பு வராது என்பது உறுதி.. குறைந்தபட்சம் இதை செய்யலாம்!!

ரஜினி விதிவிலக்கு, ஏனென்றால் அவர் பூர்வீகம் தமிழ் இல்லை... ஆனால் தற்போது அவர் நடிப்புத் திறனை மேலும் வளர்த்துள்ளார் என்பது 'சிவாஜி'யிலேயே தெரிந்தது..

tvmalai said...

Great blog, very nice.
thanks to you.

மகா said...

Really genuine post ..... keep it UP...

Kamal said...

very good post

harini said...

Thatz nice article / grt thala /

கடைக்குட்டி said...

நல்ல அலசல்.. எந்த சார்புமில்லாமல் நடுநிலையாக ஒரு அலசல்..

உங்க அலசல்..
அ-ச-ல் :-)

கடைக்குட்டி said...

எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை"

///

ச்சே.. செமங்க... அஜித் ரசிகரா மாத்திடுவீங்க போல.. ..

//அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் //

சன் பிக்சர்ஸ்ன்னு சொல்லி இருக்கலாமே.. அந்த முக்கியத் தொலைக்காட்சின்னு போட்டுட்டு.. அயன்னு சொல்லிட்டீங்களே~!!!

இங்ஙனம்,

எவ்ளோ நல்லா எழுதுனாலும் ஏதாவது ஒரு மொக்கை பாயிண்டை ஊதிப் பெரிதாக்கும் சங்கம்..

ஷாஜி said...

மிக்க நன்றி நண்பரே...

ஓர்குட்டில் இதைப்பற்றிய அலசல் இங்கே...

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=476887&tid=5425605780294904366

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=476887&tid=5425472013460181429

அணைத்து அஜித் பான்ஸ் சார்பாக எனது நன்றிகள்

ஷாஜி said...

மிக்க நன்றி நண்பரே...

ஓர்குட்டில் இதைப்பற்றிய அலசல் இங்கே...

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=476887&tid=5425605780294904366

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=476887&tid=5425472013460181429

அணைத்து அஜித் பான்ஸ் சார்பாக எனது நன்றிகள்...

Thinks Why Not - Wonders How said...

/*
இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்
*/
நல்லவங்களை பாராட்ட மனசு இருந்தா காணும் பலருக்கு புரிவதில்லை...

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

நேற்று வந்த காமாசோமாக்களெல்லாம், இளைய சூப்பர் ஸ்டார், குழந்தை சூப்பர் ஸ்டார், தளபதி, புரட்சி என்றெல்லாம் அடை மொழியோடு திரிகிறார்கள். பட்டம் முக்கியமில்லை, படம் (கதை)தான் முக்கியம் என்னும் அஜித்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நிறைகுடம் தழும்பாது பாஸ். நல்ல அலசல்.

கலையரசன் said...

அந்த போட்டோவுல இருக்குறவருதான் அசீத்குமாரா??
தகவலுக்கு நன்றி பாஸ்...

sivaram said...

அப்பா போதும்பா உங்க சுய விளம்பரம் எவ்ளோ வாங்கின அவன்கிட்ட இருந்து

sivaram said...

போதும் நிறுத்து ரொம்ப ஜால்ரா தட்டாத நாங்கலாம் கமென்ட் சொன்ன அத போட மாட்டிங்களே . இதும் வராதுன்னு எனக்கு தெரியும் பரவாஇல்ல இப்ப சொல்லறேன் அசல் மொக்கயா இருந்தாலும் சூப்பர்னுதான் சொல்லுவ

jd said...

arumai alasal!!! Thalai-in Asal-aana vaalkaiyai arumaiyaga thanthatharku nandrigal pala!!!!!!!! Thala rocksssssssssssssssss

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

ஊடகன் said...

இது தான் அசல் பதிவு.........

ரொம்ப அழகான நடுநிலையான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இடுகை....

sudhakar said...

நீங்க உங்க மனதில் பட்டதை நல்ல சொல்லி இருகேங்க.......


கெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே...

Yoganathan.N said...

வழக்கம் போல, அசத்தல் பதிவு... கடைசி சில வாக்கியங்களில் பிற நடிகர்களைப் பற்றி பேசியதைத் தவிர்திருக்கலாம், என்பது எனது கருத்து...
ஒரு அஜித் சார் வெறியனாய், இந்த அசல் வார்த்தைகள்/பதிவு என்னைக் கவர்ந்தது. அனைத்து அஜித் ரசிகர்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த கோடி நன்றிகள் :)

//இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம் //

பீரங்கியோ இல்லையோ... உங்களது இந்த பதிவு மய்யம், ஓர்குட் மற்றும் அஜித்பேன்ஸ் யாஹு குருப் என எல்லா இடங்களிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது... பிரபலம் ஆகிட்டீங்க போல... ஹி ஹி ஹி...
வாழ்த்துகள் __/\__

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்ல இடுகை.

சும்மா தேவை இல்லாத இடத்தில எல்லாம் ரஜினியை காப்பி அடிக்கும் சிம்பு, விஜய் போல மொக்கைகளுக்கு நடுவில் "அஜித்" தேவலாம்.

குறிப்பாக ரஜினி இடத்தில பில்லாவில் நடித்தபோது கூட அவர் கொஞ்சம் கூட ரஜினியின் ஜாடை வராமல் நடித்தது எனக்கும் ரொம்ப பிடித்து.

Thinks Why Not said...

/*... மொக்கயா இருந்தாலும் சூப்பர்னுதான் சொல்லுவ...*/

மொக்க படத்த நல்ல படம்னு சொல்லுற நல்ல பழக்கம் இன்னும் எங்களுக்கு வரல பாஸ்... அது பெரிய்ய்யயய தொலைக்காட்சிக்கும் தலைவலி ரசிகர்களுக்கும் தான் இருக்கிறதா கேள்விப்பட்டம்...

நடுவுநிலையை கூட கோணக் கண்ணால பார்த்து சரிஞ்சு இருக்கு சொல்லலாம் என்று இப்பதான் தெரிஞ்சுகிட்டன்....

Thinks Why Not said...

/*...
பீரங்கியோ இல்லையோ... உங்களது இந்த பதிவு மய்யம், ஓர்குட் மற்றும் அஜித்பேன்ஸ் யாஹு குருப் என எல்லா இடங்களிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது... பிரபலம் ஆகிட்டீங்க போல... ஹி ஹி ஹி...
வாழ்த்துகள்
...*/

ஹா ஹா... அடப்பாவி மக்கா.. ஹிட்ஸ் பின்னூட்டமும் கூடிக்கிடக்கிறப்பவே தெரிஞ்சிருக்கணும்...
இப்புட்டு நாளும் தெரியாம போச்சே...

அப்ப பேசாம, விஜய் பற்றியும் இப்படி ஒரு பதிவ போட்டுருங்க.. அப்புறம் இந்த பிளாக் முக்கிய தொலைக்காட்சியின் ஆதரவு இல்லாமலேயே, "பிளாக்பஸ்டர்" ஆகிடும்.... என்ன நான் சொல்லுறது.. :D

இரா.சுரேஷ் பாபு said...

Nice post....
anaithu Ajith rasigargalin sarbaga nanri

VINCENT said...

நல்ல ஒரு விமரசனம்.
ஒரு சில ஊடகங்கள் பொய்யான
விமர்சனம் எடுபடாது.
படம் பாருக்கும் ரசிகனே போல்
செய்யும் விளம்பரம் போல
இருந்தது உங்கள் விமர்சனம் .
வாழ்த்துக்கள் .......சன் டிவி க்கு சரியாய்
பாடம்.... எடுத்துக்காட்டுக்கு வேட்டைக்காரன் ஒரு சான்று ......
ரஜினி யின் இந்திரன் க்கும் இது ஒரு சவால்

எப்பூடி ... said...

velanaiTamilan

//Well said.... They can't hide the truth always, one day everyone realize that !!!!//

thanks
........................................

arumbavur

//இப்போ இருக்கும் நடிகர் அனைவரிடம் இருந்தும் விதியசப்பட்டவர் அஜீத .மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி வம்பில் மாட்டுவது அவர் வாடிக்கை .அதே போல் அவர் தன் நடிக்கும் படத்தின் கதை மட்டும் கேட்டு அந்த இயக்குனரை நம்பி அதற்க்கு பின் உள்ள விசயதில் கருத்து கூறாததால் அவரின் படம் தோல்வி படமாக மாறி விடுகிறது எனவே ரசிகர் ரசிக்கும் நல்ல கதை நல்ல பாடல்கள் தரவேண்டும் அதுவே எல்லா ரசிகனின் ஆசை என் ஆசை கூட//

உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் .

//விண்ணை தாண்டி வருவாயா பாடல் எப்படி எப்புடி கூறினால் நன்றாக இருக்கும்//

உங்கள் தளத்திற்கு வருகிறேன் பொறுங்கள்....

...............................................

negamam

//நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை"//

சரியாகச்சொன்னீர்கள்....

எப்பூடி ... said...

சிவகாசி ராம்குமார்

//very nice points. keep it up//

thanks
............................................
லோகு

// அட்டகாசமான இடுகை. அஜித் ரசிகர்களாகிய எங்கள் மனக்குமுறலை நடுநிலையான பார்வையோடு எழுதி இருக்கிறீர்கள் நன்றி..//

நீங்கள் ஓர்குட்டில் பகிர்ந்ததற்கும் நன்றிகள்.

.....................................................

Vinoth

//Thanks a lot!! Thala pola varuma?//

thanks, welcome

.............................................

எப்பூடி ... said...

damildumil

//நல்ல பதிவு. வாழ்த்துகள்.//

நன்றி

................................

ஞானப்பழம்

//'விஜய்', 'அஜித்' இவர்கள் இருவரின் பெயரில் உள்ள "ஜ"வை நீக்கிவிட்டால், இவர்களை நான் தமிழ் பட நடிகர்கள் என ஒப்புக்கொள்கிறேன்!! //

உங்கள் தரப்பு கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் விஜய் ஒரு கிறிஸ்தவர், மற்றும் அஜித்தின் தாயார் வேறொரு மதத்தை சேர்ந்தவர் இவர்களது பெயரில் ஜ வருவது ஓரளவு பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இவர்களுக்கு முன்னாள் தமிழ்ப்பெயர்தான் திரைப்படங்களுக்கு வைக்கவேண்டும் என்றும், தம்மைத்தான் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக்கொள்ளும் சிலரும் மாற்றினால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்

பாரதிராஜா மற்றும் அவரது புதல்வன் மனோஜ் , T.ராஜேந்தர் , சத்தியராஜ் மற்றும் புதல்வர் சிபிராஜ், மருத்துவர் ராமதாஸ், கலைஞரின் புதல்வன் ஸ்டாலின் போன்றவர்களே அவர்களாவார்கள். இது எனது சிறிய அபிப்பிராயம்....சரியானதா என்று நீங்கள்தான் கூறவேண்டும் ......

குறிப்பு

சார் என் பெயரின் முதல் எழுத்தும் ஜீ யில்தான் ஆரம்பிக்குது , அப்பா அம்மா வைத்தது நான் என்ன பண்ணமுடியும்...ஹி ஹி ஹி

...................................

tvmalai

//Great blog, very nice.
thanks to you.//

thanks

எப்பூடி ... said...

மகா

//Really genuine post ..... keep it UP...//

thanks
.............................Kamal

//very good post //

thanks

..........................................

harini

//Thatz nice article / grt thala /

thanks

.........................................

கடைக்குட்டி

//நல்ல அலசல்.. எந்த சார்புமில்லாமல் நடுநிலையாக ஒரு அலசல்..//

நன்றி

//எவ்ளோ நல்லா எழுதுனாலும் ஏதாவது ஒரு மொக்கை பாயிண்டை ஊதிப் பெரிதாக்கும் சங்கம்..//

சங்கம் அபராதத்தில போகாட்டிச்சரி, ஹி ஹி ஹி

....................................

ஷாஜி

//மிக்க நன்றி நண்பரே...

ஓர்குட்டில் இதைப்பற்றிய அலசல் இங்கே...//

நன்றி...

.......................................

Thinks Why Not - Wonders How

//நல்லவங்களை பாராட்ட மனசு இருந்தா காணும் பலருக்கு புரிவதில்லை...//

உங்கள் வரவேற்ப்பிற்கு நன்றி....

.......................

செந்தாரப்பட்டி பெத்துசாமி

// நேற்று வந்த காமாசோமாக்களெல்லாம், இளைய சூப்பர் ஸ்டார், குழந்தை சூப்பர் ஸ்டார், தளபதி, புரட்சி என்றெல்லாம் அடை மொழியோடு திரிகிறார்கள். பட்டம் முக்கியமில்லை, படம் (கதை)தான் முக்கியம் என்னும் அஜித்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நிறைகுடம் தழும்பாது பாஸ். நல்ல அலசல்.//

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

எப்பூடி ... said...

கலையரசன்

//அந்த போட்டோவுல இருக்குறவருதான் அசீத்குமாரா??//

நீங்க என்ன அவர் 'விசய'குமார் என்று நினைத்துவிட்டீர்களோ ?

..............................

sivaram

//அப்பா போதும்பா உங்க சுய விளம்பரம் எவ்ளோ வாங்கின அவன்கிட்ட இருந்து//

தயவு செய்து உண்மையை சொல்லுங்க சிவராம் என்கின்ற பெயரில் பின்னூட்டம் போடும் நீங்கள் நடிகர் விஜய்தானே ?

//அசல் மொக்கயா இருந்தாலும் சூப்பர்னுதான் சொல்லுவ//

ஆகா நீங்க நல்ல படங்களில நடிக்க மாட்டீங்க , மத்தவன் படம் மொக்கையா போகணுமென்று அய்யப்ப சுவாமிக்கு விரதமிருந்து மலை ஏறுவீங்கபோல...
.

எப்பூடி ... said...

jd

//arumai alasal!!! Thalai-in Asal-aana vaalkaiyai arumaiyaga thanthatharku nandrigal pala!!!!!!!! Thala rocksssssssssssssssss//

thanks , wait and see ....

........................................

ஊடகன்

//இது தான் அசல் பதிவு.........//

நன்றி.

...........................................
sudhakar

//நீங்க உங்க மனதில் பட்டதை நல்ல சொல்லி இருகேங்க.......//

புரிதலுக்கு நன்றி

.........................................

Yoganathan.N

//பீரங்கியோ இல்லையோ... உங்களது இந்த பதிவு மய்யம், ஓர்குட் மற்றும் அஜித்பேன்ஸ் யாஹு குருப் என எல்லா இடங்களிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது... பிரபலம் ஆகிட்டீங்க போல... ஹி ஹி ஹி...
வாழ்த்துகள் __/\__//

அதுதாங்க எனக்கும் புரியல...

.........................

சிங்கக்குட்டி

//குறிப்பாக ரஜினி இடத்தில பில்லாவில் நடித்தபோது கூட அவர் கொஞ்சம் கூட ரஜினியின் ஜாடை வராமல் நடித்தது எனக்கும் ரொம்ப பிடித்து.//

சரியாகச் சொன்னீர்கள், உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம்

............................

Thinks Why Not

// நடுவுநிலையை கூட கோணக் கண்ணால பார்த்து சரிஞ்சு இருக்கு சொல்லலாம் என்று இப்பதான் தெரிஞ்சுகிட்டன்....//

நன்றிங்க but நல்ல வசனம் , பாத்துங்க பேரரசு சுட்டிடப்போராறு ஹி ஹி ஹி.....

//அப்ப பேசாம, விஜய் பற்றியும் இப்படி ஒரு பதிவ போட்டுருங்க.. அப்புறம் இந்த பிளாக் முக்கிய தொலைக்காட்சியின் ஆதரவு இல்லாமலேயே, "பிளாக்பஸ்டர்" ஆகிடும்.... என்ன நான் சொல்லுறது.. :த//

ஒருநாள் இல்ல ஒருநாள் விஜய் அவாட் படங்களில் நடிக்கும்போது நன்றாக எழுதுவோம். ஹி ஹி ஹி ....

.......................
இரா.சுரேஷ் பாபு

// Nice post....
anaithu Ajith rasigargalin sarbaga nanri //

wel come

............................

வினோத்கெளதம் said...

Thala nice post

எப்பூடி ... said...

VINCENT சொன்னது//
"நல்ல ஒரு விமரசனம்.
ஒரு சில ஊடகங்கள் பொய்யான
விமர்சனம் எடுபடாது.
படம் பாருக்கும் ரசிகனே போல்
செய்யும் விளம்பரம் போல
இருந்தது உங்கள் விமர்சனம் .
வாழ்த்துக்கள்"
நன்றி
"சன் டிவி க்கு சரியாய்
பாடம்.... எடுத்துக்காட்டுக்கு வேட்டைக்காரன் ஒரு சான்று ......
ரஜினி யின் இந்திரன் க்கும் இது ஒரு சவால்"
சூரியனுக்கு எதுக்கு சார் டாச்சு.

எப்பூடி ... said...

வினோத்கெளதம்

//Thala nice post//


thanks

Ramankg2000 said...

அந்த போட்டோவுல இருக்குறவருதான் அசீத்குமாரா??
தகவலுக்கு நன்றி பாஸ்...asal flop yai noki kondairukum..................mokkai mannan ajith

ஞானப்பழம் said...

சார் என் பெயரின் முதல் எழுத்தும் ஜீ யில்தான் ஆரம்பிக்குது , அப்பா அம்மா வைத்தது நான் என்ன பண்ணமுடியும்...ஹி ஹி ஹி
//////

இங்க மட்டும் என்ன வாழுதாம்? என் பெயர் ஹரிஷ்... இதை நான் எப்படி தமிழ் பெயர் என்று கூற முடியும்.. எனது தனிப்பட்ட அபிப்ராயம்/இச்சை, இந்த 'ஹ' 'ஜ' 'ஷா' 'ஸ' என்ற சொற்க்கலேல்லாம் தமிழில் சேர்த்துக்கொள்ளலாம்.. ஆனால் இதனால் வரும் அவலங்கள் என்னவென்றால், தமிழில் பல வட இந்திய சொற்கள் வழக்கில் உள்ளது... இதனால், தனியாக நமக்குன்னு இருக்கிற பூர்வீகத்தை கண்டுகொள்ளாமல், நம் மொழியை 'பிற மொழி சார்ந்தது' (derived language) எனக் கூறும் அபாயம் உள்ளது!! "கல்தோன்றி மண்தோன்றா காலங்களிலும் மூத்த மொழி" என்ற கூற்று பொய்த்துப் போய்விடுமே!!

ஒன்று தெரியுமா? 'ஆயுத எழுத்து'கூட தமிழ் இல்லையாம்!!

ஞானப்பழம் said...

ஆனால் இவர்களுக்கு முன்னாள் தமிழ்ப்பெயர்தான் திரைப்படங்களுக்கு வைக்கவேண்டும் என்றும், தம்மைத்தான் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக்கொள்ளும் சிலரும் மாற்றினால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்///

அநேகமாக இந்த list-இல் நானும் சேர்ந்துவிடுவேன் என நினைக்கிறேன்!! முடிந்த அளவு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்... :P

ஆனால் தமித்தன்மை வாய்ந்த தாய்மொழியை வேற்று மொழி சார்ந்தது என்று சொன்னால் யார்நால்தான் தாங்க முடியும்?

Senthu said...

போங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.

Senthu said...

போங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.

Senthu said...

போங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.

"ராஜா" from புலியூரான் said...

தல கலக்கிட்டீங்க.... நல்ல மனிதர்களுக்காக பிரச்சாரம் பண்றதுல தப்பு இல்லா தல..

எப்பூடி ... said...

Ramankg2000

//asal flop yai noki kondairukum..................mokkai mannan ajith//

உங்கள் இயலாமையை பார்க்கும் போது பாவமாக உள்ளது.

..........................................

Senthu

//போங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.//

நல்ல காமடி அதயேன் மூணுதடவை சொல்றீங்க ?

.................................

"ராஜா" from புலியூரான்

//தல கலக்கிட்டீங்க.... நல்ல மனிதர்களுக்காக பிரச்சாரம் பண்றதுல தப்பு இல்லா தல..//

உண்மையை சொன்னன், அவளவுதான்.

எப்பூடி ... said...

ஞானப்பழம்

// எனது தனிப்பட்ட அபிப்ராயம்/இச்சை, இந்த 'ஹ' 'ஜ' 'ஷா' 'ஸ' என்ற சொற்க்கலேல்லாம் தமிழில் சேர்த்துக்கொள்ளலாம்.. ஆனால் இதனால் வரும் அவலங்கள் என்னவென்றால், தமிழில் பல வட இந்திய சொற்கள் வழக்கில் உள்ளது... இதனால், தனியாக நமக்குன்னு இருக்கிற பூர்வீகத்தை கண்டுகொள்ளாமல், நம் மொழியை 'பிற மொழி சார்ந்தது' (derived language) எனக் கூறும் அபாயம் உள்ளது!! "கல்தோன்றி மண்தோன்றா காலங்களிலும் மூத்த மொழி" என்ற கூற்று பொய்த்துப் போய்விடுமே!! //


சூப்பர், முடிந்தால் இது சம்பந்தமான எனது கருத்தை ஒரு பதிவாக தர முயற்சிக்கின்றேன்//ஆனால் தமித்தன்மை வாய்ந்த தாய்மொழியை வேற்று மொழி சார்ந்தது என்று சொன்னால் யார்நால்தான் தாங்க முடியும்?//

நியாயமான கோபம் ...

ஞானப்பழம் said...

சூப்பர், முடிந்தால் இது சம்பந்தமான எனது கருத்தை ஒரு பதிவாக தர முயற்சிக்கின்றேன்///

கண்டிப்பாக... மொழி மிகவும் முக்கியம் அமைச்சரே!!:P

எப்பூடி ... said...

ஞானப்பழம்

//கண்டிப்பாக... மொழி மிகவும் முக்கியம் அமைச்சரே!!:p//

சரி மன்னா....

Desert Eagle said...

தமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை.

First of all,i like to say u all:
நான் உண்மையில் ஒரு விஜய் பைத்தியம் , நான் இந்த போஸ்ட் பாத்ததும்
how can i say: I lke Ajith too:

எப்பூடி ... said...

Desert Eagle

//First of all,i like to say u all:
நான் உண்மையில் ஒரு விஜய் பைத்தியம் , நான் இந்த போஸ்ட் பாத்ததும்
how can i say: I lke Ajith too://

நான் கூட ரஜினி ரசிகன்தான், but அஜித்கிட்ட அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

karmegaraja said...

////ரஜினி விதிவிலக்கு, ஏனென்றால் அவர் பூர்வீகம் தமிழ் இல்லை... ஆனால் தற்போது அவர் நடிப்புத் திறனை மேலும் வளர்த்துள்ளார் என்பது 'சிவாஜி'யிலேயே தெரிந்தது..//////

ஹிஹிஹி. ரஜினிக்கு நடிக்கத்தெரியும் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. :-). ஆனால் அவரது கதை தேர்வு எனக்கு பிடிக்கும் (அல்லது அவருக்காக தனிக்கதையை உருவாக்க செயத அவரது மாஸ்).

Karthik said...

அல்டிமேட் ஸ்டார் டைட்டில் தேவையில்லைன்னு சொன்னது பிடிச்சிருந்தது.:)

எப்பூடி ... said...

karmegaraja//ஹிஹிஹி. ரஜினிக்கு நடிக்கத்தெரியும் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. :-). ஆனால் அவரது கதை தேர்வு எனக்கு பிடிக்கும் (அல்லது அவருக்காக தனிக்கதையை உருவாக்க செயத அவரது மாஸ்).//

முடிஞ்சா நெற்றிக்கண், பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, ஸ்ரீ ராகவேந்திரா , ஆறிலிருந்து அறுபது வயது வரை, எங்கேயோ கேட்ட குரல், தப்பு தாளங்கள், பொல்லாதவன், தளபதி படங்களை பாருங்கள்.

..........................

Karthik

//அல்டிமேட் ஸ்டார் டைட்டில் தேவையில்லைன்னு சொன்னது பிடிச்சிருந்தது.:)//

cool...

Yoganathan.N said...

//முடிஞ்சா நெற்றிக்கண், பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, ஸ்ரீ ராகவேந்திரா , ஆறிலிருந்து அறுபது வயது வரை, எங்கேயோ கேட்ட குரல், தப்பு தாளங்கள், பொல்லாதவன், தளபதி படங்களை பாருங்கள். //
முள்ளும் மலரும் மற்றும் மூன்று முகம் இந்த பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்...

Rajkumar said...

தல தலதான்

G-world said...

பைரவி கூட கொஞ்சம் ஓவர் ஆக்ட் மாதிரி தெரியும்... அவர்கள் படத்த சேர்த்துககோங்கோ.. இயல்பான காமெடி, ஹீரோயின் கிட்ட கொளையறது எல்லாம் எளிதாக யாருக்கும் வராது...மன்னன் படத்துல தியேட்டர் வாட்ச்மேன் காலில் விழும் எளிமையை யாரும் மறக்கமுடியதுல ....
www.starajith.com ல கலைஞர் பாராட்டு விழால தல பேசினத பாருங்க ...யாராக இருந்தாலும் தல பின் ஆகிடுவிங்க ...தலையின் பேச்சிக்கு ரஜினியின் ஆதரவையும் பாருங்க ...

எப்பூடி ... said...

@ Rajkumar

வருகைக்கு நன்றி ..

....................................

G-world சொன்னது…

//பைரவி கூட கொஞ்சம் ஓவர் ஆக்ட் மாதிரி தெரியும்... அவர்கள் படத்த சேர்த்துககோங்கோ.. இயல்பான காமெடி, ஹீரோயின் கிட்ட கொளையறது எல்லாம் எளிதாக யாருக்கும் வராது...மன்னன் படத்துல தியேட்டர் வாட்ச்மேன் காலில் விழும் எளிமையை யாரும் மறக்கமுடியதுல ....//

உண்மைதான், அவர்களை விட்டுவிட்டேன்.இன்றும் வடிவேலும், விவேக்கும் கூட ரஜினியை நீ, போ, வா என்றுதான் படங்களில் அழைக்கிறார்கள்.


//www.starajith.com ல கலைஞர் பாராட்டு விழால தல பேசினத பாருங்க ...யாராக இருந்தாலும் தல பின் ஆகிடுவிங்க ...தலையின் பேச்சிக்கு ரஜினியின் ஆதரவையும் பாருங்க ...//

நிச்சயமா..

எப்பூடி ... said...

Yoganathan.N


//முள்ளும் மலரும் மற்றும் மூன்று முகம் இந்த பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்..//


சப்பா..... நான் மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல, நன்றி நன்றி....

ela said...

NALLA PADATHUKKU AJITHE THEVA ILLAI.............

எப்பூடி.. said...

ela

//NALLA PADATHUKKU AJITHE THEVA ILLAI.............//


அப்டியா :-)

edwin ajith said...

super i love u thlaaaaaaaaaaaaaa

edwin ajith said...

super i love u thala mmmmmmmmqaaaaaaaaa

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)